Wednesday, April 19, 2006

My thoughts

My thoughts ஒரு முக்கிய அறிவிப்பு

இதனால் வ.வா. சங்கத்தைச் சேர்ந்த முக்கிய உறுப்பினர்களுக்குத் தெரிவிப்பது என்னவென்றால், சங்கத்தின் நிரந்தர உறுப்பினரும், மகளிர் அணியின் ஒப்பற்ற தலைவியும் ஆகிய நான்( எவ்வளவு தன்னடக்கம் பார்த்தீங்களா) 10 நாட்கள் சுற்றுலா செல்லவிருப்பதால் சங்கத்தின் முக்கிய பருப்பு சீச்சீ, (இந்த பார்த்திபன் எழுதியதைப் படித்த விளைவு) பொறுப்பு செல்வி.பொன்ஸ் அவர்களிடம் ஒப்படைக்க அருள் கூர்ந்து இசைந்துள்ளேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.(அப்பாடா) யாருங்க அங்கே நிம்மதிப் பெருமூச்சு விடுவது? தேவும், சிபியுமா?இனிமேல் குமார காவியம் தடையின்றித் தொடரும் என்று சிபியும், சங்க வேலைகளுக்கு இடையூறு இல்லை எனப் பார்த்திபன்களும், கட்ட துரைகளும், சரளாக்காவும் விடும் பட்டாசுச்சத்தமும் கேட்கிறது. எல்லாம் ஒரு 10 நாளுக்குத்தான் என்று பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். தொகுதி பிரிக்கும் வேலைக்குத் தடை நீங்கியது என்று தேவ் பிள்ளையாருக்குத் தேங்காய் உடைக்கத் தொடங்கிவிட்டதாக அறிகிறேன்.

3 comments:

  1. ம்ம்ம். சுற்றுலாவா? சென்று வருக...
    இனிய, பாதுகாப்பான பயணத்துக்கு என் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. Thank you Ambi. See you after 30th.

    ReplyDelete
  3. மேடம்,
    தங்கள் பின்னூட்டம் பார்த்தேன். உங்கள் பிரார்த்தனைக்கு நன்றி.

    எனது மின்னஞ்சல் முகவரி

    n_r_jaganmohan@yahoo.com

    ReplyDelete