Friday, June 16, 2006

முந்தா நாள் நல்ல மழை.

திடீரென்று வந்தது. தமிழ்மணம்

பார்த்து ரொம்ப நாளாகிவிட்டது

என்று பார்க்கலாம் என்று

கணினியைப் போட்டால் மின்

விநியோகம் இல்லை.

இப்போதெல்லாம் இது ஒரு

தொடர்கதை ஆக இருக்கிறது.

அறிவிக்கப்படாத பவர்கட். சற்று

நேரத்துக்கு எல்லாம் மழை

ஆரம்பித்தது. மழை என்றால்

எப்படிப்பட்ட மழை? ஒரே காற்று.

விர் விர் விர் விர் என்று சுற்றிச்

சுழல்கிறது. மழையும்

அதற்கேற்பச் சுற்றிச் சுழல்கிறது.

பெரிய பெரிய தாரையாகத்

தண்ணீர் கொட்டுகிறது. காற்றில்

மரங்கள் எல்லாம் ஆடும் வேகமும்,

காற்றின் வேகமும், மழையின்

வேகமும் சேர்ந்து அந்த மத்தியான

வேளையை ஒரு சுவர்க்கமாக

மாற்றியது. காற்று அடிக்கும்

திசையில் எல்லாம் போய்ச் சுழன்று

சுழன்று அடிக்கிறது மழை.

எனக்கு மழை ரொம்பப் பிடிக்கும்.

ஆனால் நனைய முடியாது. உடனே

ராத்திரி என்னோட இணைபிரியா

ஆஸ்த்மாவிற்குக் கோபம் வந்து

விடும் அதனாலேயே மழையில்

நனைய முடியாமல் போகிறது.

இன்னும் எத்தனையோ தொந்திரவு

இதனால். ஊட்டியில் இருக்கும்

போது எப்போது மழை வரும்

என்றே சொல்ல முடியாது.

மத்தியானங்களில் சாப்பாட்டிற்குப்

பின்னர், கணவர் அலுவலகம்

சென்றதும், வீட்டிற்கு வெளியில்

வந்து உலாத்திக் கொண்டு

இருப்பேன். 18டிகிரி A/C

குளிரிலேயே வியர்க்கும் எனக்கு

ஊட்டியில் ரொம்பவும் ஆனந்தமாக

இருக்கும். (இந்த விசித்திரமான

உடல் அமைப்பைப் பற்றி

மருத்துவர்கள் சொல்வது, ஈரப்பதம்

இருக்கும் இடம் என் உடல்

வாகிற்கு ஒத்துக் கொள்ளாது

என்பது தான்.) அந்த மாதிரி

நிற்கும் போது திடீரென எதிரே

வெலிங்டன் மலையில் மேகங்கள்

குவியும். அங்கே மழை பெய்யப்

போகிறது என்று நினைக்கும்

சமயம் அந்த மேகங்கள் எப்படி

வரும் என்று தெரியாது அத்தனை

வேகமாக நான் இருக்கும் இடம்

வந்து விடும். மேகம் அப்படியே

நம்மைக் கடந்து போகும்போது,

ஆஹா, அனுபவித்தால்தான்

தெரியும். மேகம் நம்மை ஊடுருவிக்

கொண்டு போகும்போது அப்படியே

உடம்பைச் சிலிர்க்கும். அந்த

அனுபவம் ஆஹா திரும்பத் திரும்ப

அலுக்காது. சமயத்தில்

சமைக்கும்போதில் கூட சமையல்

அறைப் பக்கம் வரும் மேகங்கள்

"என்ன, எப்படி இருக்கிறாய்"

என்று கேட்டு விட்டுப் போகும்.

பார்க்கவே அழகு கொஞ்சும்.

அங்கே எல்லாம் சமையல் அறை

தனியாக இருக்கும். அதில்

இருந்து வெளியே வந்தால்

திறந்தவெளி முற்றம், தோட்டம்

வரும். அங்கே இருக்கும் மேகம்

பார்த்ததுமே தெரியும் மழை

வரப்போகிறது என்று. உடனே

இடி, மின்னல், மழை ஆரம்பிக்கும்.

இந்த மாதிரிக் காற்று ஜாஸ்தி

பார்க்கவில்லை. ஒருவேளை

மழைக்கால மழையில் இருக்குமோ

என்னமோ தெரியாது. மஞ்சூர்

ராஜாவைத்தான் கேட்கவேண்டும்.

அந்த மழையில் நனைந்து

கொண்டுதான் பாத்ரூமுக்கு

எல்லாம் போக வேண்டு. பாத்ரூம்

மெயின் வீட்டில் இருந்து

கிட்டத்தட்ட 1/2 கி.மீ போகும்படி

இருக்கும். மழை முடிந்ததும் மழை

பெய்த சுவடே இருக்காது.

அதிசயம், ஆனால் உண்மை,

ஊட்டியில் பெய்யும் அத்தனை

மழைக்கும் கொசுவே கிடையாது.

இங்கே மழை அப்படி இல்லை.

ஒரே ஆரவாரம் தான். பெரிய

பெரிய இடி, கண்ணைப் பறிக்கும்

மின்னல் என்று மழை தாளம்

போட்டது. எனக்கு நினைவு

வந்தது பாரதியின் மழையைப்

பற்றிய இந்தப் பாடல் தான்.
$$$$$$$$$

திக்குகள் எட்டும் சிதறி-தக்கத்
தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட

தீம்தரிகிட
பக்க மலைகள்

உடைந்து-வெள்ளம் பாயுது பாயுது

பாயுது-தாம்தரிகிட
தக்கத் ததுங்கிடத்

தித்தோம்-அண்டம் சாயுது சாயுது

சாயுது-பேய் கொண்டு தக்கை

அடிக்குது காற்று-தக்கத்

தாம்தரிகிட தாம்தரிகிட

தாம்தரிகிட

வெட்டியடிக்குது மின்னல்-கடல்
வீரத்திரை கொண்டு விண்ணை

இடிக்குது
கொட்டி இடிக்குது மேகம்-கூ

கூவென்று விண்ணைக் குடையுது

காற்று.
சட்டச்சட சட்டச்சட

டட்டா-என்று
தாளங்கள் கொட்டிக் கனைக்குது

வானம்
எட்டுத் திசையும் இடிய-மழை
எங்ஙனம் வந்ததடா தம்பி வீரா!

அண்டம் குலுங்குது தம்பி-தலை

ஆயிரந்தூக்கிய சேடனும் பேய்

போல்
மிண்டிக் குதித்திடுகின்றான்

-திசை
வெற்புக் குதிக்குது வானத்துத்

தேவர்
செண்டு புடைத்திடுகின்றார்;

-என்ன
தெய்வீகக் காட்சியைக் கண்முன்பு

கண்டோம்!
கண்டோம், கண்டோம்,

கண்டோம்-இந்தக்
காலத்தின் கூத்தினைக் கண்முன்பு

கண்டோம்.!
கிட்டத் தட்ட இந்த மாதிரிதான்

இருந்தது. பாரதியின் இந்த

அனுபவம் எப்படி அவருக்கு

இருந்திருக்கும் என்றும் புரிந்தது.
*********

இதை மூன்று நாளாக

எழுதுகிறேன். ஒவ்வொரு நாளும்

ஒவ்வொரு தொந்திரவு.

விக்கிரமாதித்தனுக்கு ஒரு

வேதாளம் தான் இருந்தது.

எனக்கோ மூன்று வேதாளங்கள்.

முதல் வேதாளம்: மின் தடை.

எப்போ போகும் எப்போ வரும்,

சொல்ல முடியாது.
இரண்டாவது வேதாளம்:TATA

INDICOM BROADBAND

Connection.: இதுவும்

இஷ்டத்துக்குத் தான் வேலை

செய்யும். யாரோடவாவது

முத்தமிழ்க் குழுமத்தில் விவாதம்

நடைபெறும் சமயம் அதற்குக்

கண்டிப்பாகத் தெரிந்து விடும். Re

connection Pending: Remote

computer not responding:

என்றெல்லாம் செய்தி

கொடுத்துவிடும். மறுபடி

கனெகஷன் வாங்கறதுக்குள்ளே

போதும் போதும்னு ஆயிடுறது.

புகார் கொடுத்தால் அவங்க

ஃபோனை எடுக்கவே 1/2 மணி

நேரம் ஆகிறது.
மூன்றாவது வேதாளம்: ப்ளாக்கர்:
முதல் இரண்டையும் எப்படியோ

சமாளிச்சு வந்தால் இது ரொம்ப

பிகு பண்ணும். நெருப்பு நரியில்

போனால் இதுக்கு ஆகவே ஆகாது.

எக்ஸ்ப்ளோரெரில் கொஞ்சம்

சமத்தாக இருந்தது. இப்போ 10

நாளாக அதுவும் தகராறு. போடவே

மாட்டேன் என்கிறது. என் கிட்ட

இடமே இல்லை என்று

கைவிரிக்கும். இன்னிக்கு என்ன

பண்ணுமோ தெரியாது. வெட்டித்

தான் ஒட்டப் போகிறேன். சரியா

வந்தால் என் அதிர்ஷ்டம். (trc Sir,

எதுக்கும் உமாமகேஸ்வரியிடம்

(மனைவியா,பெண்ணா) சொல்லி

மாத்திரை வாங்கி வச்சுக்குங்க.

இன்னிக்குச் சரியா வந்தா

தொடர்ச்சி, இல்லாட்டா இல்லை,

ஆந்திராவிலேயேதான்).
தன் முயற்சியில் சற்றும் மனம்

தளராத விக்கிரமாதித்தன் மாதிரி

நானும் மனம் தளராமல் மூன்று

வேதாளங்களையும்

சமாளிக்கிறேன். அப்புறம் என்ன
ஈஸ்வரோ ரக்ஷது.

12 comments:

  1. கடவுளே, பழி வாங்கி விட்டது, இந்த ப்ளாக்கர். நான் அதைத்திட்டி எழுதினது எப்படியோ தெரிஞ்சு போச்சு போலிருக்கு. நான் லெட்டர் ஃபார்மட் கொடுத்தால் கவிதையாக வருகிறதே! என்ன செய்தால் என்ன? நாகை சிவா, உங்க கண்ணுதான் பட்டுடுச்சோ? தலைப்பு வேறே வரலை.

    ReplyDelete
  2. நன்றாகத்தான் சமாளித்து இருக்கிறீர்கள் இந்த மழையிலும்.எனக்கு பிடித்தது ரொம்பவும் மழைதான் அதிலும் எருமை மாதிரி நனைந்து கொண்டு அனுபவிப்பதில். சரியாண பாட்டு இந்த பாரதியார் மழைப்பாட்டு.உமா என்பது என் மனைவிதான். ஆனால் படபடப்பு குறைந்து விட்டது பிறறிடம் எதிபார்ப்புகளை குரைத்துக்கொண்டு விட்டதால்.அடுத்த பதிவிற்கு காத்திருக்கிறோம். தி ரா.ச

    ReplyDelete
  3. கீதா ! பாரதியை முழுவதும் படிச்சவரா நீங்கள்?
    என்ன ஒரு அற்புதமான பதிவு.எந்த ஊரில் இருக்கிறிர்கள்/ மழை எப்போது வந்தது?

    ReplyDelete
  4. hahaa, ungalukku thaan ippadi ellam varuthu.
    as you blogged bharathi's kavithai, blogger also understood and gave in this format.. :))))

    oru 15(reversela illa poguthu age) aged women (girlnu pls sollitaatheenga) mazhai vanthaa,
    "megam karukuthu! takku chikku takku chikku"
    minnal adiguthu, saraal adiguthu"nu paatu paada vendaamoo?

    ReplyDelete
  5. ஒரு வித்யாசமான மழை நாளை அனுபவித்தேன் உங்கள் எழுத்தில். நானும் என்னுடைய ஊரில், சென்னையில் என எல்லா பக்கமும் அனுபவித்ததை எழுதினால் நாலு குயர் நோட்டு தீர்ந்துவிடும்..அதுவும் இல்லாமல் தமிழில் டைப் வேற செய்யனும்..:-)) ஒரு சிறுகதையை போல செல்கிரது உங்கள் நடை.. வாழ்த்துக்கள் கீதா..

    ReplyDelete
  6. பெரிய போராட்டம் தான் போல??

    எல்லோரும்
    மழை பிடிக்குமென்று தான் சொல்கிறார்கள்
    குடையையும் பிடித்துக்கொண்டு.

    ReplyDelete
  7. trc Sir,
    படபடப்பு குறைந்தது பற்றி சந்தோஷம். இனிமேல் கொஞ்சம் TATA INIDICOM தகராறு செய்யாதுனு நினைக்கிறேன். அவங்களுடன் சமாதான உடன்படிக்கைக் கையெழுத்தாகி விட்டது. பார்ப்போம், உங்க மனைவியைக் கேட்டதாச் சொல்லுங்க.
    நான் மத்த 2 வேதாளங்களைச் சமாளிக்கிற வழி பார்க்கணும்.

    ReplyDelete
  8. வள்ளி,
    சென்னையில்தான் மழை பெய்தது. உங்கள் பக்கம் பெய்யவில்லை, பார்த்தேன்.
    அப்புறம் சின்ன வயசில் இருந்து எனக்கு பாரதிதான் பிடிக்கும், பழக்கமும் கூட. மனசு சரியில்லைனால் பாரதிதான் கை கொடுப்பார்.

    ReplyDelete
  9. அம்பி, சிரிப்பா இருக்கா?
    உர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்பரவாயில்லை, 15 வயசுனு சொன்னதாலே மன்னிக்கிறேன். கரண்ட் இருந்தால்ல "மேகம் கருக்குது " போடறதுக்கு.

    ReplyDelete
  10. கார்த்திக்,
    இந்த மழை மட்டுமில்லாமல் ப்ளாக்கர் வேறே பழி வாங்குது, நானும் தலைப்பைத் தேடுறேன், கிடைக்க மாட்டேங்குதே, ஒட்டிடலாம்னு பார்த்தேன், எங்கே போச்சோ, தெரியலை.

    ReplyDelete
  11. கார்த்திக்,
    இந்த மழை மட்டுமில்லாமல் ப்ளாக்கர் வேறே பழி வாங்குது, நானும் தலைப்பைத் தேடுறேன், கிடைக்க மாட்டேங்குதே, ஒட்டிடலாம்னு பார்த்தேன், எங்கே போச்சோ, தெரியலை.

    ReplyDelete
  12. வாங்க மனசு,
    நொம்ப நாள் கழிச்சு வரீங்க போலிருக்கே, நான் குடை பிடிக்காமல் தான் போக ஆசைப்படுவேன், ஆனால் முடியாது. மழை வந்தால் நடமாட்டம் கூடக் கட்டுப்பாட்டில்தான் இருக்க வேண்டி இருக்கு.

    ReplyDelete