Monday, July 24, 2006

94, நட்பின் இழப்பு

"உடுக்கை இழந்தவன் கை போலே ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு."

வள்ளுவர் வாக்கு. எனக்குச் சில நண்பர்கள் இடுக்கண் களைந்திருக்கிறார்கள். இந்த வலை உலகிற்கு வந்ததில் நான் பெற்ற பெரும் பயன் இது.
"அழைக்கும் பொழுதினில் போக்குச் சொல்லாமல் அரை நொடிக்குள் வருவான்" என்று முண்டாசுக் கவிஞன் சொன்னது போல எல்லாரும் வந்திருக்கிறார்கள். "புதிய நட்பைப் பெறாத ஒவ்வொரு நாளையும் நான் இழந்ததாகக் கருதுகிறேன்." என்று சாமுவேல் ஜான்ஸன் என்ற அறிஞர் கூறிய மாதிரி ஒவ்வொரு நாளும் புதுப் புது நண்பர்கள். அதற்காக பழைய நண்பர்களை விட முடியுமா? முடியாது. நாம் போனாலும் அவர்கள் பார்க்காத மாதிரி இருந்தால் என்ன செய்வது? புரியவில்லை. பொறுத்துப் பார்ப்பது ஒன்று தான் வழி. நட்பு நீடிக்க வேண்டும் என்பது தான் நாம் விரும்புவது.

"வெற்றி வடிவேலன் அவனுடை வீரத்தினைப் புகழ்வோம்,
சுற்றி நில்லாதே போ பகையே-துள்ளி வருகுது வேல்" என்று முண்டாசுக் கவிஞன் பாடியது போலப் பகையை வெல்ல அந்த ஆறுமுகன் உதவுவான். என்றாலும் நட்பை இழந்து விட்டோமோ என்று நினைக்கும்போது கஷ்டமாக இருக்கும். மனம் மிகவும் வலிக்கும்.

எனக்கு வலிக்கிறது.

8 comments:

  1. கீதா, இந்த பதிவு யாரையும் குத்திக் காட்டும் பதிவா?
    நல்லதே நினைப்போம்! நல்லதே நடக்கும்!

    பிரச்சனை என்னவென்று தெரியாமல் ஏதும் சொல்ல விரும்பவில்லை. ஆனால் மனதில் பட்டு விட்டால் அது யாராக இருந்தாலும் நேரே சொல்லி விடுங்க(அவர்களிடம் மட்டுமாவது). இல்லாவிட்டால் அது நம்மளை போட்டு படுத்தி எடுக்கும். இது என் அனுபவத்தில் நான் கண்ட உண்மை.
    உங்களுக்கு அறிவுரை சொல்வதாக தவறாக எண்ண வேண்டாம். மனதில் தோன்றியது சொல்கின்றேன்.

    ReplyDelete
  2. புரிந்துணர்வு இல்லாததே !!!!!


    காலம் அனைத்து வலியையும் மறக்கடிக்கும்.

    இலக்கை நோக்குங்கள் அது இழுத்துச்செல்லும் மனதை லேசாக.....

    ReplyDelete
  3. என்ன நடந்ததுனு தெரியல..இருந்தாலும் நீங்க சொன்ன மாதிரி நட்பை இழக்கும் போது மனசு வலிக்கும்...எந்த பிரச்சனையா இருந்தாலும் பேசி சரி பன்னிக்கலாம்..

    ReplyDelete
  4. ஒரு ரெண்டு நாள் வார விடுமுறைக்கு போய்டு வரதுக்குள்ள பதிவு போட்டு தள்ளீட்டீங்க...

    ReplyDelete
  5. இது என்னங்க ஒரே பீளிங்ஸா எழுதிட்டீங்க. அவங்க பார்க்காத மாதிரி இருந்தா என்ன, நீங்க போய் பேசிட்டு வந்தா பாரம் கொறஞ்சா மாதிரி இருக்காது.

    ReplyDelete
  6. சிவா சரியா சொன்னீங்க.. கீதா, சிவா சொல்ற மாதிரி எதையும் மனசுல வச்சுக்காதீங்க.. ஆமா..யாரை பத்தி இப்படியொரு பதிவு..

    உண்மையில் சொல்லப் போனால் இந்த மாதிரி அனுபவங்கள் எல்லோருக்கும் ஏற்படுவதுண்டு.. சில நமக்கே தெரியாமல் நாமும் மற்றவர்க்கு ஏற்படுத்துவதுண்டு..

    யாருன்னு சொல்லிடுங்க கீதா..

    ReplyDelete
  7. கீதா,

    பெரும்பாலான நேரங்களில் அவன் வந்து "முதலில்" ஸாரி சொல்லட்டும் என்பது மாதிரியான உணர்வுகளால் காலம் தாழ்த்தத் தாழ்த்த அந்த நட்பு நீர்த்துப் போய்விடுகிறது.

    மெல்ல நீ இல்லாமல் என்னால் இருக்க முடியாதா என்று மருவும்.

    "முதலில்" வந்து ஸாரி கேட்கட்டும் என்பதான ஈகோவுக்கும் ஆற்றலுக்கான விதி பொருந்தும். ஆற்றல் அழிவதே இல்லை அது வேறுவகை ஆற்றலாக வெளிப்படும் (உ.ம் நிலையாற்றல் இயக்க ஆற்றலாக vice versa etc..)

    நட்புமாதிரி சிறப்பானது எதுவும் இல்லை. ஒரு தோட்டக்காரன் மாதிரி ஈகோவை வெட்டிப் பராமரித்துக் கொண்டே இருக்கவேண்டும்.

    நடைமுறையில் சில நட்புக்களை சிலநேரம் இழந்துதான் இம்மாதிரி பாடம் கற்கவேண்டியிருக்கும்.

    நட்பு ஒரு volatile phenomenon சரியாக கவனிக்காவிடில் அது இருந்ததே தெரியாமல் evaporate ஆகக்கூடும்.

    நீங்கள் சரியாக இருந்தும் நட்பு குழப்பமடைகிறது எனில் அது இறைவனின் திருவிளையாடல். இறைவனிடம் பிரார்த்தனைப் பஞ்சாயத்து வைத்தால் சரியாகும்.

    ReplyDelete
  8. ரொம்ப நன்றி, ஹரிஹரன்,
    நம் வரை சரியாக இருந்தால் போதும் என்று சில சமயம் தோன்றும் அல்லவா? மற்றபடி எல்லாம் அந்த ஆண்டவன் செயல்.

    ReplyDelete