Thursday, July 27, 2006
97. மனசுக்குள்ளே மத்தாப்பு
ஹி,ஹி,ஹி, ஹி, எனக்கு இல்லை. உங்க எல்லாருக்கும் தான் மனசுக்குள்ளே மத்தாப்பு மாதிரி இருக்கும். அது என்னன்னா நான் 30-ம் தேதியில் இருந்து ஒரு பத்து நாளைக்கு லீவில் போகிறேன். எல்லாரும் பட்டாசு வெடிச்சுக் கொண்டாடத் திட்டம் போடறது எனக்கு நல்லாப் புரியுது. இருந்தாலும் வலை உலகின் ஒரு ஒப்பற்ற படைப்பாளியின் படைப்புக்களைப் படிக்க முடியாமல் போவது உங்கள் துரதிருஷ்டம் என்று சொல்லிக் கொள்ளும் அதே வேளையில், என்னோட ரம்பம் தாங்க முடியாமல் இந்தப் பதிவுப் பக்கமே எட்டிப் பார்க்காமல் இருப்பவர்களும் வேறு வழியில்லாமல் வருபவர்களும் (அம்மா, கை வலிக்குது, எப்படித்தான் எல்லா அரசியல் வாதிகளும் பேசறாங்களோ), என்ன வேணா பண்ணிக்குங்க. இப்போப் போகும்போது பங்களூரில் அம்பியுடன் ஒரு முக்கிய சந்திப்பு, மற்றும் சமாதான உடன்படிக்கைக் கையெழுத்திடுதல் எல்லாம் நடைபெறும் எனத் தெரிய வருகிறது. அம்பி என் கணவர் ஃபோனில் பேசுவது பற்றிக் கூறி இருப்பதை யாரும் கவனம் கொள்ள வேண்டாம் என்று கூறிக் கொள்கிறேன். நான் படுக்கப் போனதும் இரண்டு பேரும் சேர்ந்து ஏதோ சதித் திட்டம் தீட்டி இருப்பதாகச் சந்தேகம். நான் தினமும் 9-30-க்குள் படுக்கப் போய் விடும் விஷயம் அம்பிக்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம். நான் சின்னப் பொண்ணு, சீக்கிரம் தாச்சிப்பேன் என்று அவருக்குத் தெரியுமே! அதனால் இதன் உள் நோக்கம் என்ன என்று கண்டு பிடிக்கும் வரை யாரும் இந்தச் செய்தியை நம்வ வேண்டாம். அம்பியுடனான சந்திப்புப் பற்றிய தகவல்கள் நான் வந்து கொடுப்பேன். அதற்குள் அம்பி கொடுக்கும் தகவல்களை நிஜம் என்று நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப் படுகிறது.
நான் ஏதோ சினிமா தலைப்பு என்று வந்தேன். உங்க மனசுக்குள் தான் மத்தாப்பா
ReplyDelete10 நாள் ஊருக்கு போறதுக்குள்ள 100 அடிச்சிட்டு போயிடனும்னு நீங்களும் ரொம்ப முயற்சி பண்னறீங்க போல இருக்கு...இன்னும் 3 மொக்கை போஸ்ட் படிக்கனும்னு எங்க தலைல எழுதி இருந்தா யாரு மாத்த முடியும்... :-)
ReplyDeleteசிவா,
ReplyDeleteஎன் மனசுக்குள் இல்லை, உங்க எல்லார் மனசுலேயும் தான்.:-)
ஹி,ஹி,ஹி, ச்யாம்
ReplyDeleteஇதெல்லாம் கண்டுக்காதீங்க. வந்து வாழ்த்துங்க தொண்டரே! உங்களை புதரகத்தின் நிரந்தரத் தொண்டராப் போடலாம்னு யோசனை.
:-), :-), :-), :-), :-), :-), :-), :-), :-), :-), :-(( ..............
ReplyDelete