Friday, January 12, 2007

182. ஒளி படைத்த கண்ணினாய் வா, வா, வா!!!!

ஒளி படைத்த கண்ணினாய் வா, வா, வா!
உறுதி கொண்ட நெஞ்சினாய் வா, வா, வா!

"எவனுடைய இதயம் ஏழைகளுக்காக ரத்தம் வடிக்கிறதோ, அவனையே நான் "மகாத்மா" என்பேன். மற்றவர்கள் துராத்மாக்களேயாவர்.

ஆண்டவனைத் தேடி நீங்கள் எங்கே போகிறீர்கள்? துன்பப் பட்டவர்கள்,ஏழைகள், பலவீரக்ள் இவர்கள் எல்லாரும் அத்தனி தெய்வ வடிவங்களே அல்லவா? ஏன் முதலில் இவர்களை ஆராதிக்கக் கூடாது? கங்கைக் கரையில் கிணறு வெட்டப் போவது உண்டா? இந்த ஏழைகளையே உங்கள் கடவுளாய்க் கொள்ளுங்கள், அவர்களைப் பற்றிச் சிந்தியுங்கள், அவர்களுக்கு ஊழியம் புரியுங்கள், அவர்களுக்காக இடைவிடாது பிரார்த்தனை செய்யுங்கள், அப்போது ஆண்டவன் உங்களுக்கு வழி காட்டுவார்.

நம்புங்கள், உறுதியாக நம்புங்கள், இந்தியர் கண்விழித்து எழுந்திருக்கும் வேளை வந்து விட்டதென்று ஆண்டவன் கட்டளை பிறந்து விட்டது.
எழுங்கள், எழுங்கள் நீளிரவு கழிந்தது. பொழுது புலர்ந்தது, கடல் புரண்டு வருகிறது. அதன் உத்வேகத்தைத் தடுக்க எவராலும் இயலாது."

மேற்குறிப்பிட்டவை "ஸ்வாமி விவேகானந்தர்" அன்றைய இளைஞர்களுக்குக் கூறியவை, இன்றும் இன்றைய இளைஞர்களுக்கும் பொருந்து கிறது. இன்றைய இளைஞர்கள் இன்னும் அறிவாற்றலிலும், தெளிவான முடிவெடுப்பதிலும் சிறந்து விளங்குகிறார்கள். எல்லாச் சக்தியும் ஒன்று சேர்ந்து இந்த நாட்டையும், அதன் பாரம்பரியத்தையும் காப்பாற்ற எல்லாம் வல்ல அந்த ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன். விவேகானந்தர் சொன்னதுக்கு மேல் நான் ஒன்றும் சொல்வதற்கு இல்லை.

இன்று "ஸ்வாமி விவேகானந்தர்"இன் பிறந்த நாள். எல்லா இளைஞர்களுக்கும் இளைஞர் தின வாழ்த்துக்களையும் இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.

வந்தே மாதரம்! ஜெய்ஹிந்த்!

9 comments:

  1. நன்றி மாமி.....நானும் அவர் பாதம் பணிகிறேன்.

    ReplyDelete
  2. ரொம்பவே நன்றி, மதுரையம்பதி, உங்களோட இன்னொரு கமெண்ட் எங்கே போச்சுன்னு பார்க்கணும்.

    ReplyDelete
  3. Thanks for rememberance!

    Same to U! manasaala neenga ennikum 16 vayasu balagi thaane! :p

    ReplyDelete
  4. //இன்று "ஸ்வாமி விவேகானந்தர்"இன் பிறந்த நாள். எல்லா இளைஞர்களுக்கும் இளைஞர் தின வாழ்த்துக்களையும் இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.//

    நீ என்னவாக நினைக்கிறாயோ, அப்படியே நீயாகிறாய்.. வலிமை உள்ளவன் என்று நீ நினைத்தால், நீ வலிமை உள்ளவனாகவே ஆகிறாய்.

    அவரின் கருத்துக்கள் என் உள்ளக் கிடங்கில் இருந்து கொண்டு வாழ்க்கை படகில் பயணிக்க உதவுகிறது மேடம்..

    நினைவு படுத்தியதற்கு நன்றி

    ReplyDelete
  5. அம்பி, தங்கமணி நினைப்பிலே நீங்க இப்போ இருக்கிறதாலே சும்மா விடறேன் கொஞ்ச நாளைக்கு. அப்புறம் தங்கமணியோட சேர்ந்து கூட்டு வச்சுக்கிட்டு, என்ன செய்யறேன் பாருங்க! :D

    ReplyDelete
  6. ரொம்பவே நன்றி, கார்த்திக். நான் ஒவ்வொரு முறையும் இந்த மாதிரி விசேஷ நாட்களில் பதிவு எழுதவே முடியாமல் ஏதாவது தொந்திரவு வந்து சேரும். அல்லது வீட்டில் வேலை ஜாஸ்தி இருக்கும். இப்போத் தான் முதல்முறையாக ஒரு நல்ல பதிவை அந்த நாளிலேயே போட்டிருக்கேன். அதுவும் ரொம்பவே கஷ்டப்பட்டு.

    ReplyDelete
  7. அப்பாடா ஒரு 16 வயசு பொண்ணு விவேகாநந்தரை நினைவு கூர்ந்தது இளையதலைமுறைக்கு எல்லாம் ஒரு எடுத்துக்காட்டாக உள்ளது.
    ஒரு சந்தேகம் பின்னுட்டத்திலே அம்பின்னு ஒருத்தர் போட்டு இருக்காரே அவர் யாரு?

    ReplyDelete
  8. வந்தே மாதரம்! ஜெய்ஹிந்த்!

    ReplyDelete
  9. தாமதமாய் வருகை ..

    இளைஞர்தின வாழ்த்துகளுக்கு நன்றி...

    அறிவு சுடருடன் என்றும் நம் இளைஞர்கள்...

    ReplyDelete