எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, February 04, 2007

201. வாமனன் பூஜித்த சிவனார்

மஹாபலிக்கு மோட்சம் கொடுத்த வாமனன் அந்த அவதாரத்துடனேயே சிவனையும்

பூஜித்தார். அதுவும் எப்படி? ஐயனும், அம்மையும் சேர்ந்து இருக்கும் கோலத்தில்

பூஜித்தார். இந்தத் தலத்தில் வாமன அவதாரமும், மஹாபலிக்கு மோட்சமும்,

மஹாவிஷ்ணுவின் திரிவிக்கிரம அவதாரமும் ஏற்பட்டு மீண்டும் குறளன் ஆன மஹாவிஷ்ணு சிவனைப் பூஜித்ததால் அதுவும் தினமும் பூஜித்து வருவதாயும்

ஐதீகம். ஆகையால் இங்கே இறைவனை நேரிடையாகத் தரிசிக்க இயலாது. திருஞான சம்மந்தரால் திருப்பதிகம் பாடப் பெற்ற இந்தத் தலம் மூர்த்தி, தீர்த்தம், வனம், கிரி, நதி, சங்கமம், ஆரண்யம், பதிகம் போன்றவைகளால் பிரசித்தி பெற்றதாகும். இங்கே கோயில் வந்த பின் தான் மற்றைய தலங்களில் வந்ததாக வரலாறு கூறுகிறது. இக்கோவிலில் மற்றக்

கோவில்களில் உள்ளது போல் போகசக்தி அம்பாள், பள்ளியறை போன்றவை இல்லை. ஏனெனில் இறைவன் சதாகாலமும் இறைவியோடு ஒன்றி இருப்பதாய் வரலாறு.

தேவர்களுக்கு ஞானத்தைப் புகட்டி அஞ்ஞானத்தை விலக்குவதற்கும், அசுரனாய் இருந்தாலும் தர்ம நெறி பிறழாமல் இருந்தால் அழியாத்தன்மையும், இம்மையிலும், மறுமையிலும் அருளைப் பெறலாம் என நிரூபித்ததும் இந்தத் தலமே.உயிர்களை உய்விக்கும் இறைவனின்

திருநாமம் உதவி நாயகன் என்பதாகும். இவ்வூரின் பெயரும் "உதவி திருமாணிக்குழி" என்பதாகும். மஹாலட்சுமி தவம் செய்த நதியாகக் கிருஷ்ணை என்ற பெயருடன் கெடில நதி விளங்குகிறது. கருடனின் பேராலும் இந்நதி விளங்குவதாய்க் கூறுவர்.சரஸ்வதியானவள்

ஸ்வேத நதியாக வடக்கு முகமாய்க் கெடிலத்தில் சங்கமம் ஆகிறாள். நான்காவது பிரம்ம க்ஷேத்திரமான இது "வாம பிரம்ம க்ஷேத்திர"மாக விளங்குகிறது. அதாவது வாமனன் பூஜித்ததாலும், பிரம்மாவின் மனைவி நதியாக சங்கமம் ஆவதாலும் இப்பெயர் பெற்றது.

திருக்கார்த்திகை மாதம் திருவண்ணாமலையில் இறைவன் ஜோதிரூபமாய்த் தரிசனம் தருவது போல் இங்கேயும் தருகிறார்.வாமனனாய்த் தோன்றித் திருவிக்கிரமனாய்க் காட்சி கொடுத்து,

மீண்டும் வாமனனாய்ச் சுருக்கிக்கொண்டு,ஐம்புலன்களையும் கட்டுப் படுத்தி இறைவனை இடைவிடாது பூஜித்த வாமனருக்குக் காவலாக இறைவன் தன் ருத்ர கணங்களில் ஒருவரான "குபேர பீம சங்கரர்"ஐக் காவல் வைக்கிறார். கோவிலுக்குள் நுழைந்ததும்

நந்திஎம்பெருமான் தரிசனம் ஆனதும் கர்ப்பக் கிரஹத்தில் ஒரு நீலவண்ணத் திரை ஓவியமாய் ருத்திரரை வரையப்பட்டது தொங்குகிறது. நாங்கள் போனபோது மதியம் நடுப்பகல் ஆகிவிட்ட படியால் உச்சிக்காலத் தீப ஆராதனைக்குத் திரை போட்டிருக்கிறது என்று

எண்ணினோம். கர்ப்பக் கிரஹத்துக்குள் நுழையும் முன் வலது பக்கமாய்ச் சில சிற்பங்கள் கண்ணையும் கருத்தையும் கவர்ந்தன. அவற்றைப் பார்த்துக் கொண்டே உள்ளே சென்றோம். அர்ச்சகர் வந்து தீப ஆராதனை காட்டவா என்றதும் நாங்கள் நேரம் ஆகுமோ, உச்சிக்காலம் ஆகணுமே என்று கேட்டோம். அதற்குப் பின் அவர் மேற்கூறிய கதையைச் சொன்னார். காவல் காக்கும் பீம சங்கரருக்கு வழிபாடுகள் நடத்தி, அவரின் அனுமதி பெற்றே இறைவனை இங்கே காண முடியும். அதுவும் சில நொடிகளே திரையை விலக்கி இறைவனைக் காட்டுகிறார்கள். கண்கொள்ளாக் காட்சியான அதைக் காண நாம் தயாராக இருக்க வேண்டும்.

17 comments:

  1. ஹும்ம்ம்ம்ம்ம்... :)

    ReplyDelete
  2. life just good

    ReplyDelete
  3. அனானி? பேரு என்ன?

    ReplyDelete
  4. Kinldy let us know the place near by. Thanks

    ReplyDelete
  5. mudhal anony naan thaan. rendaavadhu yaaro teliyaledhu :)

    ReplyDelete
  6. mudhal anony naan thaan. rendavadhu yaaro teliyaledhu :)

    ReplyDelete
  7. மேடம், இந்த பதிவுக்கு வருகை பதிவு மட்டுமே..

    இன்றைக்கு,மிகப் பெரிய வாஷிங்டன் திடலில் "200 அடிச்ச அறுபது"ன்னு எங்க தலைவி உங்களுக்காக நடக்கும் மாநாட்டிற்கு செல்லனும்.. வர்ர்ட்டா?

    ReplyDelete
  8. ஆமா?...எந்த ஊரில் இது?.....

    ReplyDelete
  9. பெருமூச்சு விடறதிலே இருந்தே நினைச்சேன், போர்க்கொடியாத் தான் இருக்கணும்னு,

    2வது அனானி யாரு?

    @புகழேந்தி, கடலூரில் இருக்கிறது. முன்னால் எழுதிய பதிவுகளைப் பார்க்கவும். திருமாணிக்குழி என்னும் ஊர் இது.

    ReplyDelete
  10. கார்த்திக், என்னைப் பார்த்து அறுபதுன்னு சொல்றீங்களே? போகுது போங்க, உண்மைத் தொண்டர்ங்கிறதாலே பேசாம விடறேன்.
    @மதுரையம்பதி, மத்ததும் படிச்சதும் புரிஞ்சிருக்கும்.

    @வேதா(ள்), மத்த ப்ளாக் திறந்தால் தானே பிரச்னை, இங்கே அது எல்லாம் வரதே இல்லை,. இப்போக் கூட ச்யாம் ப்ளாகுக்குப் போக முயற்சி செய்துட்டுத் திரும்பி வந்தேன்.

    ReplyDelete
  11. keetha
    //திருமாணிக்குழி" என்பதாகும். மஹாலட்சுமி தவம் செய்த நதியாகக் கிருஷ்ணை என்ற பெயருடன் கெடில நதி விளங்குகிறது//
    where about this temple in Tamilnaadu?

    ReplyDelete
  12. செல்லி, என் பேர் Geethaன்னு வரும். கடலூரில் திருவஹிந்திபுரத்தில் இருந்து திரும்பக் கடலூர் ஊருக்குள் வரும் வழியில் இந்தத் திருமாணிக்குழி என்னும் சிறிய ஊரில் இந்தக் கோவில் இருக்கிறது. திருவஹிந்திபுரம், திருமாணிக்குழி, மற்றும் முன்னர் எழுதிய குடிசைக் கோவில் (அகஸ்தியர் பூஜித்த லிங்கம்னு எழுதி இருக்கேன்.) எல்லாமே கெடில நதிக்கரையில் வருகிறது. எனக்கு என்ன நினைப்பு வந்ததுன்னா "பொன்னியின் செல்வன்" 4-ம் பாகத்தில் முதல் அத்தியாயத்தில் "கெடில நதிக்கரையில்" உட்கார்ந்து பேசும் ஆதித்த கரிகாலன், பார்த்திபேந்திரப் பல்லவன், மலையமான் ஆகியவர்கள் உட்கார்ந்து இங்கே தானே பேசி இருப்பாங்கன்னு நினைச்சுக் கிட்டேன். உண்மையில் அதை நினைக்கும்போது மனதை என்னவோ செய்தது.

    ReplyDelete
  13. கொஞ்சம் நம்ம பதிவை போய் பாருங்கள் தலைவியே

    ReplyDelete
  14. வேதா(ள்), நிஜமாவே புரியலையா? குறள் என்றால் குறுகிய என்று அர்த்தம் இல்லையா? நெடியோன் ஆகிய திருமால் குறுகி குறளன் ஆகிறான். இந்தக் "குறளன்" என்ற வார்த்தையை திருஞானசம்மந்தர் தேவாரத்தில் கூட ஒரு இடத்தில் உப்யோகிப்பதாய்ச் சொல்கிறார்கள். எனக்கு அந்தத் தேவாரப் பாடல் தெரியாது.

    ReplyDelete
  15. vaathukal 201'ku..
    came thru edhir katchi veda blog...


    vaazhga engal katchi
    valarga engal katchi matttum....

    ReplyDelete
  16. Next post?
    nalla pala thagavalgaL maami.
    Thanks.

    ReplyDelete