Wednesday, February 21, 2007

216. தமிழைக் காப்பாற்றிய தாத்தா-2

திரு எம்கே அவர்கள் நான் தமிழ்த்தாத்தாவைப் பற்றி எழுதி இருந்ததில் அவர் வாழ்நாள் பூராவும் தமிழுக்காக உழைத்தார் என்பது தப்பு என்று சொன்னதோடு அல்லாமல், அவர் நன்கொடை பெற்றுப் புத்தகங்கள்
வெளியிட்டதாயும் கூறுகிறார். அவர் தன்னோட வாழ்நாள் பூராவும் தமிழுக்குத்
தான் உழைத்தார். நன்கொடை பெற்றுப் புத்தகம் வெளியிட்டார் என்பதில் இருந்தே அவர் புத்தகங்களைத் தனியாய் வெளியிடும் அளவுக்குப் பணவசதி
படைத்தவர் இல்லை என்பதை திரு எம்கே தன்னை அறியாமல் ஒத்துக்
கொண்டிருக்கிறார். மேலும் சென்னையில் அவருக்குச் சொந்த வீடு இருப்பதாயும் சொல்லி இருக்கிறார். இருக்கிறதா இன்னும்னு தெரியாது. இருந்தது. "தியாகராஜவிலாசம்' என்ற பேரில், திருவட்டீஸ்வரன் பேட்டையில் இருந்தது. அவருடைய பிள்ளையால் கட்டப் பட்டதாய்ச் சொல்லுவார்கள். அவருடைய சொந்தக் கிராமத்திலும் சொந்த வீடுதான் இருந்தது. சொந்த வீடு இருந்ததினாலேயே ஒருத்தர் பண வசதி படைத்தவர் என்று நினைப்பது தவறு என்று என்னோட தனிப்பட்ட அபிப்பிராயம்.

கும்பகோணம் காலேஜில் வேலை செய்த சமயம் மணிமேகலை வெளியிடவும் உழைத்து வந்தார். அதற்காக மூலப்பிரதிக்குப் பல இடங்களில் அலைந்து சேலம் ராமஸ்வாமி முதலியார் என்பவர் கொடுத்த மூலப்பிரதியை வைத்து மேலும் பிரதிகளுக்கு அலைந்து, அவற்றைக் காகிதத்தில் பிரதி எடுத்துக் கொள்கிறார். இதனுடன் கூடவே "சிந்தாமணி"க்காகவும் வேலை நடக்கிறது. சிந்தாமணியில் மணிமேகலையைப் பற்றிய குறிப்புக்களும்,
ஒரு இடத்தில் மணிமேகலையில் இருந்தே மேற்கோளும் காட்டப் பட்டிருக்கிறதைக் காண்கிறார். மணிமேகலையில் சில இடங்களில் உள்ள வார்த்தைகள் புரியாமல் என்ன மதம், என்ன கதை என்று தெரியாமல் குழம்பி இருக்கிறார். இந்தக் குழப்பத்தினூடேயே பத்துப்பாட்டு ஆராய்ச்சியும் தொடர்கிறது. கல்லூரியின் ஓய்வு நேரங்களில் கையெழுத்துப் பிரதியும்,
குறிப்புப் புத்தகமுமாய் இருக்கும் அவர் ஒரு நாள் மணிமேகலையைக் கையில் வைத்துக் கொண்டு குழப்பத்துடன் உட்கார்ந்து இருப்பதைச் சக ஆசிரியர் கணிதம் கற்பிக்கும் ஸ்ரீசக்கரவர்த்தி என்பவர் கவனிக்கிறார்.

விஷயம் என்னவென்று கேட்க மணிமேகலை என்னவென்றே புரியவில்லை எனச் சொல்கிறார் தமிழ்த் தாத்தா.

என்ன புரியவில்லை?" கணித ஆசிரியர் கேட்கிறார்.

தமிழ்த்தாத்தா: "எவ்வளவோ புதிய வார்த்தைகள், இவை மற்றப் புஸ்தகங்களிலே காணவில்லை. ஜைனம், சைவம், வைஷ்ணவம் இவற்றில் இல்லை. இதோ பாருங்கள், இந்த வார்த்தையை, அரூபப் பிடமராம், உரூபப் பிடமராம். பிடமரென்ற வார்த்தையை நான் இதுவரை கேட்டதில்லை."

அப்போது அசரீரி எழுகிறது. "அதைப் பிரமரென்று சொல்லலாமோ?"

திகைத்த தாத்தா திரும்பிப் பார்க்கிறார். கூட வேலை செய்யும் ஆசிரியர் ராவ்பகதூர் மளூர் ரங்காச்சாரியார் என்பவர் தான் பேசியது. உடனேயே அவரிடம் செல்கிறார் தாத்தா. இவ்விடத்தில் ரங்காச்சாரியாரைப் பற்றித்
தமிழ்த்தாத்தா கூறுவது: எப்போதும் படித்த வண்ணம் இருப்பார். நேரத்தை வீணாக்க மாட்டார்." என்று புகழ்கிறார். தமிழ்த்தாத்தாவின் சந்தேகத்தைக் கேட்ட ரங்காச்சாரியார் அந்தக் குறிப்பிட்ட செய்யுளைப் படிக்கச் சொல்கிறார்.
தாத்தாவும் படிக்கிறார்.

"நால்வகை மரபி னரூபப் பிடமரும்
நானால் வகையி னுரூபப் பிடமரும்
இருவகைச் சுடரு மிருமூ வகையிற்
பெருவப் பெய்திய தெய்வத கணங்களும்"என்று வாசிக்கிறார் தாத்தா. கேட்கும்
ரங்காச்சாரியார் முகத்தில் ஒளி உண்டாகிறது. மெதுவாய்ச் சொல்கிறார்
ரங்காச்சாரியார், "இது பெளத்த சமயத்தைச் சேர்ந்த வார்த்தை," என்று. எப்படி என்று தாத்தா கேட்டதற்கு அவர் பெளத்தர்களிலே தான் இவ்வார்த்தையை
அதிகம் கையாளுவதாய்ச் சொல்கிறார். இது அவர்கள் லோகக் கணக்கு, அது
சம்மந்தமான ஏற்பாடுகள் எல்லாம் தனி என்றும் சொல்கிறார். அன்றில் இருந்து காலையும், மாலையும் பாடம் கேட்கப் போவதைப் போல் ரங்காச்சாரியார் வீட்டிற்குப் போய் அவர் உதவியோடு பெளத்த சமய சம்மந்தமான விஷயங்களைத் தெளிவு படுத்திக் கொள்கிறார். அந்த அறிவோடு ஆய்ந்ததுதான் மணிமேகலை என்கிறார் தமிழ்த் தாத்தா.

தமிழ்நாட்டுப் பெளத்தர்களின் நிலையும், பெளத்தப் பரிபாஷையும் விளங்கியதாய்ச் சொல்லும் தமிழ்த்தாத்தா தம்மிடம் இருந்த நீலகேசித் திரட்டின் உரை, வீர சோழிய உரை, சிவஞான சித்தியார்-பரபக்கம்,
ஞானப் பிரகாசர் உரை என்பவற்றில் வந்துள்ள பெளத்த சமய சம்மந்தமான
செய்யுட்களையும், செய்திகளையும் தொகுத்து வைத்துக் கொண்டு மணிமேகலை ஆராய்ச்சியில் ஈடுபடுகிறார். ரங்காச்சாரியார் ஏற்கெனவே படித்த புத்தகங்கள் போதாது என ஐயரவர்களும் சில ஆங்கிலப் புத்தகங்களைத் தம் சொந்த செலவில் வரவழைத்து அவருக்குப் படிக்கக்
கொடுத்துச் சொல்லச் செய்கிறார். மானியர் வில்லியம்ஸ், மாக்ஸ்முல்லர், ஓல்டன்பர்க், ரைஸ் டேவிட்ஸ் போன்றவர்களின் புத்தகங்களில் இருந்து படித்து ரங்காச்சாரியார் சொல்லக் கேட்டுக் கொள்கிறார். ஒன்றரை வருடம் நடந்த இந்தப் பாடம் ரங்காச்சாரியார் சென்னைக்கு மாறிப் போனதில் சற்றுத்
தாமதம் ஆகி ஐயரவர்கள் தம் விடுமுறைக் காலத்தில் இரண்டு மாதம் சென்னையில் வந்து தங்கி அவரிடம் பாடம் கேட்கிறார். இம்மாதிரி 5, 6 வருடங்கள் பெளத்த சமயம் பற்றிப் பாடம் கேட்டு அறிந்த பின்னே மணிமேகலையை வெளியிடும் துணிவு உண்டானதாய்ச் சொல்கிறார்.

அதற்குப் பழைய உரை இல்லாததால் தாமே உரை எழுதியதாயும், அதனோடு
பெளத்த சமயத்தைச் சேர்ந்த மும்மணிகளாகிய புத்தன், பெளத்த தர்மம்,
பெளத்த சங்கம் போன்றவற்றைப் பற்றிய வரலாற்றையும் எழுதிச் சேர்க்கச்
சொல்கிறார் ரங்காச்சாரியார். அப்படியே செய்கிறார் ஐயரவர்கள். இடை இடையே பழைய தமிழ்ச் செய்யுட்களையும் சேர்த்து எழுதியதைப்பார்த்து மகிழும் ரங்காச்சாரியார், "அந்தக் காலத்திலே இவ்வளவு பிரசித்தமான விஷயங்கள் அழிந்து போனதே!" என்று வருந்தியதாயும் சொல்கிறார். ரங்காச்சாரியார் இல்லாவிட்டால் மணிமேகலை வெளியிட முடியாது என அறுதி இட்டுக் கூறும் ஐயரவர்கள் அவருக்கு நன்றி கூறி முகவுரையில் எழுதி இருக்கிறார்.

தமிழ்த்தாத்தாவுக்கு உதவியவர்களில் முக்கியமானவர் மதுரை சுப்பிரமணிய ஐயர் என்னும் நீதிபதி ஆவார். இவர் பேரில் திருவல்லிக்கேணியில் மணி ஐயர் ஹால் என்னும் மண்டபம் இருந்ததாய்ச் சொல்கிறார் தமிழ்த்தாத்தா. அடுத்து ராமநாதபுரம் சேதுபதி ராஜராஜேஸ்வர ராஜா, வி. கிருஷ்ணசாமி ஐயர், ஜட்ஜ் முத்துசாமி ஐயர் போன்றோர். இன்னும் சிலர் விட்டுப் போயிருக்கிறது. ஒவ்வொன்றாகத் திரட்டுகிறேன்.

33 comments:

  1. எத்தனை ஈடுபாடு அவருக்கு, 5-6 வருடங்கள் உழைத்து, தெளிவாகி பின்னர் பதிப்பாக்கி இருக்கிறார்....அதிலும் தனக்கு உதவியவர்களை உளமார குறிப்பிட்டுச் சொல்லியுள்ளார். இன்றைய எழுத்தாளர்கள் அறியவேண்டிய ஒன்று.

    ReplyDelete
  2. WOW!இவ்வளவு விஷயங்களா???!!!

    ReplyDelete
  3. மறுபடி மறுபடி யாரும் வர்றதில்லைனு சொல்றீங்க, நல்லதுக்கு இல்ல சொல்லிட்டேன்! :)

    எல்லாரும் வந்துட்டு தான் இருக்கோம், மொக்கைனா தானே வம்பு இழுக்க முடியும்? கருத்துள்ள பதிவுகள படிச்சிட்டு ரசிச்சுட்டு வாயை மூடிட்டு தான் போக முடியும். இது கூட புரியலையா பாட்டி, என்ன இப்படி சொல்லிட்டீங்க. :(

    ReplyDelete
  4. அதுவும் இவ்ளோ வேகமா தலைவியும் தொண்டனும்(மு.கா தான்) பதிவு போட்டா? கொஞ்சம் டைம் குடுங்கப்பா மக்கள் வந்து கமெண்ட்ட... :)

    ReplyDelete
  5. இவ்ளோ நல்லது சொல்றேன், ஆனா நான் போர்கொடி, இருக்கட்டும், நாளைக்கே டை(தலைச்சாயம்) பாட்டில ஒளிச்சு வெக்கறேன்.

    ReplyDelete
  6. இவ்ளோ நல்லது சொல்றேன், ஆனா நான் போர்கொடி, இருக்கட்டும், நாளைக்கே உங்க டை(தலைச்சாயம்) பாட்டில ஒளிச்சு வெக்கறேன். :)

    ReplyDelete
  7. ஓ! கீழ இருக்கற பால் வடியும் முகம் பதிவு என்னை நினைச்சு தானே?? :) இல்லை அம்பியும் சேர்த்தா? :))

    ReplyDelete
  8. இதோ இந்த போஸ்ட்ட பத்தி என்னத்த சொல்லுவேன் இந்த
    அறியா குழந்தை? :)

    ReplyDelete
  9. மணிமேகலை ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றுனு தேர்வுக்கு படித்தோட சரி.

    ஏன் மணிமேகலை பெளத்தத்தினை தழுவினாள் என்று எல்லாம் ஆராய்ந்தது இல்ல. ஆனா இத எல்லாம் கண்டுபிடிச்சு எழுதின தாத்தா வின் பெருமை போற்றுதலுக்குரியதுதான்..


    அப்ப இப்ப படிக்கிறது எல்லாம் தாத்தா எழுதி வைச்சதுதான?

    ReplyDelete
  10. /நன்கொடை பெற்றுப் புத்தகம் வெளியிட்டார் என்பதில் இருந்தே அவர் புத்தகங்களைத் தனியாய் வெளியிடும் அளவுக்குப் பணவசதி
    படைத்தவர் இல்லை என்பதை திரு எம்கே தன்னை அறியாமல் ஒத்துக்
    கொண்டிருக்கிறார்.//

    அட! வக்கீல் மாதிரி எப்படி பாயிண்டை புடுச்சு பேசுறீங்க தலைவியே

    ReplyDelete
  11. மிகவும் நல்ல பதிவுங்க மேடம்!

    ReplyDelete
  12. //இந்த செய்திகளையெல்லாம் எங்கிருந்து திரட்டினீர்கள்.
    //
    @veda, கூடவே இருந்து பார்த்து இருக்காங்களாம்! :)

    //இவ்ளோ வேகமா தலைவியும் தொண்டனும்(மு.கா தான்) பதிவு போட்டா? கொஞ்சம் டைம் குடுங்கப்பா மக்கள் வந்து கமெண்ட்ட//
    i also repeating this statement.

    //பால் வடியும் முகம் பதிவு என்னை நினைச்சு தானே?? :) இல்லை அம்பியும் சேர்த்தா?//
    @kodi, அப்படி போடுமா அருவாள! :)

    //இருக்கட்டும், நாளைக்கே டை(தலைச்சாயம்) பாட்டில ஒளிச்சு வெக்கறேன்.
    //
    பல்செட்ட விட்டுடியே கொடி?

    ReplyDelete
  13. அம்பி, பல்செட் ஒளிச்சு வெக்கறது உங்க வேலை :)

    கீது பாட்டி, உங்களுக்கு இந்த தகவல் எல்லாம் எங்கேருந்து கிடைக்குது? லைப்ரரியா? அதை எப்படி ஒரு பிஹெச்டி ஆராய்ச்சி மாதிரி குறிப்பு எல்லாம் எடுத்து பதிவா போடுறீங்களா?!

    ReplyDelete
  14. இது வேற முந்தின கமெண்ட் வந்துதா?! :(

    ReplyDelete
  15. //பல்செட்ட விட்டுடியே கொடி//

    :))
    enna irunthalum talaviyoda unmaiya ellam veliya solla koodathu...

    ReplyDelete
  16. மதுரையம்பதி, நீங்க சொல்றது உண்மைதான். இன்னிக்கு யாருமே இப்படி நினைக்கிறது இல்லை, நான் உட்பட.

    @அம்பி, நன்றி

    @வேதா, கூகிளிலேயே தமிழ்த்தாத்தாவைப் பற்றி நிறையக் கிடைக்கிறது. நான் என்னிடம் உள்ள அவரே எழுதிய "நினவு மஞ்சரி" புத்தகத்தில் இருந்து தொகுத்துப் போட்டேன். அதனால் அவருக்குத் தான் புகழே தவிர எனக்கு ஒண்ணும் இல்லை.

    ReplyDelete
  17. @போர்க்கொடி, வரவுக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.
    @எஸ்.கே.எம். உடம்பு தேவலையா?
    @மணிப்ரகாஷ், நிறைய விஷயங்கள் இப்படித்தான் வெளியே வராமலே போகிறது. பேராசிரியர் ஞானசம்மந்தன் என்று ஒரு பெரியவர். தமிழுக்கு அவர் உழைத்த மாதிரி இன்றைய தமிழ் ஆர்வலர்கள் யாரும் உழைக்கவில்லை. ஆனால் அவர் 2 வருடங்கள் முன்னால் இறந்தபோது பத்திரிகைகளில் கூட சின்னப் பெட்டிச் செய்தியாகத் தான் போட்டிருந்தார்கள். இன்றைய தமிழ் ஆர்வலர்கள் அனுதாபக் கூடத் தெரிவிக்கவில்லை. எழுத்தாளர் "திருப்பூர் கிருஷ்ணனை"க் கேட்டால் அவரைப் பற்றி நிறையத் தகவல்கள் கொடுப்பார்.

    ReplyDelete
  18. @கார்த்திக், ஒரு வீடு கட்டினார் என்பதற்காகவே அவரோட கஷ்டம் எல்லாம் இல்லைன்னு ஆகாது இல்லையா? அவரோட "என் கதை" படிச்சாத் தெரியும் எப்படி எல்லாம் படிச்சு வந்திருக்கார்னு.

    ReplyDelete
  19. @அம்பி,
    உங்களுக்குப் படிக்க முடியலை, அல்லது நல்ல பதிவுகளைப் படிக்கப் பிடிக்கலைன்னா நான் பதிவு போடாமல் இருக்கணுமா என்ன? நீங்க தான் கண்ணு போட்டுட்டீங்கன்னு நினைக்கிறேன். இப்போ கொஞ்ச நாளா சரியாவே எழுத முடியலை என்னாலே. :D

    @மணிப்ரகாஷ், ம்ம்ம்ம்ம்ம், இருக்கட்டும், உங்க கிட்டே இருந்து அமைச்சர் பதவியைப் பிடுங்கச் சொல்றேன், கார்த்திக் கிட்டே. :D

    ReplyDelete
  20. என்னுடைய இந்தப் பதிவையும் பார்க்கவும். உவேசா அவர்கள் தனது பதிப்புலக வாழ்க்கையை 23 வயதில் துவங்கி, 87 வயது வரை நடத்தியுள்ளார்.

    http://simulationpadaippugal.blogspot.com/2006/02/blog-post_19.html

    - சிமுலேஷன்

    ReplyDelete
  21. தமிழின் அருங்காப்பியங்களை மீட்ட்க் கொடுத்த வித்தகருக்கு நாம் செய்யும் மிகக் குறைந்த நன்றி அவரை குறை சொல்லாத்ிருப்பதே :(
    நல்ல பதிவு.

    ReplyDelete
  22. //அவருடைய சொந்தக் கிராமத்திலும் சொந்த வீடுதான் இருந்தது//

    ரொம்ப சரியா சொன்னீங்க...எங்களூக்கும் தான் எங்கள் ஊர்ல சொந்த வீடு இருக்கு...விக்கனும்னா வாங்கரவங்களுக்கு நான் தான் காசு குடுக்கனும்... :-)

    ReplyDelete
  23. இவளோ கஷ்டப்பட்டு எழுதி இருக்கீங்க...இந்த கட்டுறைய நீங்க ஏன் விக்கிபீடியால போட கூடாது...:-)

    ReplyDelete
  24. சிமுலேஷன், உங்க பதிவிலே ஆர்க்கைவ்ஸிலே போய்த் தேடினேன். வரலை. மறுபடி முயற்சி செய்யறேன். உங்க புதிருக்கு பதில் சொல்லறதுக்குள் வேறே வேலை வந்துடுச்சு. பார்க்கிறேன்.

    ReplyDelete
  25. ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கீங்க மணியன், ரொம்பவே நன்றி, உங்களோட கருத்துக்களுக்கு.

    ச்யாம், உங்களுடைய மனப்பூர்வமான பதில்களுக்கு என்னோட நன்றிகள். இது இன்னும் முடியலை. முடிஞ்சதும் இ.கொ.வைக் கேட்டுட்டு விக்கிப்பசங்க ஏத்துக்கறாங்கன்னா போடறேன்.

    ReplyDelete
  26. //ச்யாம், உங்களுடைய மனப்பூர்வமான பதில்களுக்கு என்னோட நன்றிகள். இது இன்னும் முடியலை. முடிஞ்சதும் இ.கொ.வைக் கேட்டுட்டு விக்கிப்பசங்க ஏத்துக்கறாங்கன்னா போடறேன்//

    தலைவி
    நாட்டாமை சொன்னது தமிழ் விக்கிபிடியா னு நினைக்கிறேன்..


    அது இதுதுதான்..


    விக்கிபீடியா (http://www.wikipedia.org/) உலகளாவிய ரீதியில் தன்னார்வலர்களால் விடுதலை மனப்பாங்குடன் உருவாக்கப்படும் ஒர் இணைய பன்மொழிக் கலைக்களஞ்சியத் திட்டமாகும். விக்கி என்று சொல்லும் encyclopedia என்ற சொல்லில் வரும் பீடியா என்ற சொல்லும் சேர்த்து விக்கிபீடியா என்ற சொல் உருவாக்கப்பட்டது. விக்கி விரைவு என்பதைக் குறிக்கும் ஹவாய் மொழிச் சொல். விரைவாக இணையத்தில் தொகுக்க கூடிய மென்பொருள் தொழில்நுட்பத்தை இப்பொழுது விக்கி குறிக்கின்றது. பீடியா என்பது 'அறிவுக் கோர்ப்புக் காப்பகம்' எனப் பொருள் தரவல்லது. விக்கிபீடியா என்பது விரைவாக தொகுக்க கூடிய அறிவு அல்லது கலைக் களஞ்சியம் என்று பொருள்படுகின்றது.//
    இ.கொ வோட விக்கி பசங்க கேட்டா பதில் சொல்ற மாதிரி தனியா ஒரு வலைப்பக்கம் போட்டாங்க..

    நீங்கள் அங்கேயும் போடலாம் தமிழ்.விக்கிபிடியாவிலயும் இணைக்கலாம்..

    நான் அங்கு நிறைய தமிழ் புத்தகங்களை பார்த்தேன்.. தமிழ் விக்கிபிடியா , மற்றும் இன்னும் சில தமிழ் இணையங்கள் உள்ளன..அதைப் பற்றி நான் பதிவு போடலாம் என்று எண்ணியிருந்தேன்..இருக்கிறேன்.இருப்பேன்..

    ReplyDelete
  27. அடுத்த பதிவு போடுறேன் என்று சொன்னீர்கள் இன்னும் போடவில்லையா

    ReplyDelete
  28. மணிப்ரகாஷ், விக்கி பீடியாவுக்கு நானும் போயிருக்கேன், சில தகவல்களுக்கு. அதிலே எல்லாம் என்னோட பதிவு வரணும்கிறது கொஞ்சம் இல்லை நிறையவே ஓவரா இல்லை? அதான் விக்கிபசங்க கிட்டே சொல்றேன்னு சொன்னேன்.FYI என்னோட "ரத்தத்தின் ரத்தமே" பதிவு விக்கி பசங்களுக்காகவே எழுதிக் கொடுத்தேன். நமக்கு அதே அதிகம். அதனால் தான் புரிந்தும் புரியாத மாதிரி பதில் கொடுத்தேன்.

    ReplyDelete
  29. போடணும் சிவா, உடம்பும் முடியலை கொஞ்சம், வேலையும் அதிகமா இருக்கு, அதனால் அதிகமாய் இணையத்தில் உட்கார முடியலை. ஆஃப்லைனில் கூட எழுத முடியலை சில நாள். சரியாகும்னு நம்பறேன்.

    ReplyDelete
  30. //போடணும் சிவா, உடம்பும் முடியலை கொஞ்சம், வேலையும் அதிகமா இருக்கு, அதனால் அதிகமாய் இணையத்தில் உட்கார முடியலை. ஆஃப்லைனில் கூட எழுத முடியலை சில நாள். சரியாகும்னு நம்பறேன்//

    உடம்பு சரியில்லையா? தலைவி என்ன ஆச்சு.. உடம்ப பார்த்துக்கங்க முதலில். பிறகு எழுதலாம்...

    //என்னோட "ரத்தத்தின் ரத்தமே" பதிவு விக்கி பசங்களுக்காகவே எழுதிக் கொடுத்தேன்//

    நான் அந்த பதிவையும் வாசித்து இருக்கிறேன்..

    //அதிலே எல்லாம் என்னோட பதிவு வரணும்கிறது கொஞ்சம் இல்லை நிறையவே ஓவரா இல்லை//

    ஓவரா எல்லாம் இல்லை தலைவி..

    உண்மையாத்தான். நீங்கள் தெரியாத பல விசயங்களை சொல்லும்போது அது எங்களுக்கு மட்டும் ஒரு சின்னதா வட்டத்துகுள்ளே இருந்திட கூடாதுனு நினைக்கிறேன்..

    நீங்க அங்கயும் இணைக்க வேண்டும் . இதுவே என் விருப்பம்..

    ReplyDelete
  31. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
    பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் நான் அச்சில் வெளியிட்ட
    'தமிழ்த் தாத்தா' என்னும் நீள்கட்டுரையை ஸ்கேன் செய்து
    ஜியோஸிட்டீஸில் வலையகம் செய்து அதில் மின்புத்தகமாகப்
    போட்டிருந்தேன்.
    அதைக் கீழேயுள்ள இலக்கில் காணலாம் -

    http://www.geocities.com/visvaamithra/menu.html

    அதன் பின்னர் என்னுடைய அகத்தியர் மடல் குழுவில்
    அந்த நீள்கட்டுரையை இன்னும் விரிவாக்கி நாற்பது
    பாகங்கள் கொண்டதாக எழுதினேன்.
    இன்னும் அது முடிவடையவில்லை.

    அகத்தியர் மடற்குழுவின் ஆவணமாகிய
    TreasureHouseOfAgathiyar.net என்னும் வலையகத்தில்
    அந்த நாற்பது மடல்களையும் காணலாம்.

    பார்த்துவிட்டு உங்கள் கருத்தை எழுதுங்கள்.

    ReplyDelete