தலைவி அவர்கள் யு.எஸ்.விஜயம் செய்ய இருப்பது அனைவரும் அறிந்ததே! அதற்கான ஏற்பாடுகளில் தலைவி அவர்கள் முழிச்சுட்டு இருக்கிறபடியால், சீச்சீ மூழ்கி இருக்கிறபடியால், தலைவியின் எண்ணங்களைத் தெரிந்து கொள்ளாமல் தொண்டர்கள் தவிக்கிற செய்தி அறிந்து தலைவி இன்று ஓர் அறிக்கையைச் சமர்ப்பிக்கிறார். அதாகப் பட்டது:
"தொண்டர்களின் சேவை மனப்பான்மையால் தலைவி அவர்கள் பூரித்துப் போய் உள்ளார். பாசத்தைப் பார்த்துப் புல்லரித்துப் போய் உள்ளார். (ஒரே அரிப்புத் தாங்கலையாம். வெயில் வேறே ஜாஸ்தியா இருக்கா? அதுவும் காரணமா இருக்கும்.) அப்புறம் துபாய் ரசிகர் மன்றம் வேறே தவியாய்த் தவிக்குதாம். செய்திகள் கசிகின்றன. கூடிய சீக்கிரம் எல்லார் மனமும் குளிரும் வகையில் தலைவி தோன்றி தொண்டர்களை வாழ வைப்பார் எனத் தெரிவித்துக் கொள்கிறார்."
ஹிஹிஹி, இது நல்லா இருக்கா? அப்புறம் கோபிநாத், அந்த 3 கோடி, 4 கோடி இல்லை, கணக்கே தெரியலை, சீரியலை ஒழுங்காப் பார்த்தால் தானே!! அபி அப்பாக் கொடுக்காட்டிப் போகுது! உங்க கிட்டே கலெக்ஷன் ஆன பணத்துக்கு ஒழுங்காக் கணக்குக் கொடுங்க. அது சரி, என்ன இந்த பரணி நிதி அமைச்சர்னு போட்டு இருக்கீங்க? வாயை மூடிட்டுப் பேசாமல் இருந்தா எப்படி? வேதா அனுப்பிச்ச பெட்டியில் உள்ளது என்ன ஆச்சு? எல்லாக் கணக்கும் ஒழுங்காக் கொடுக்கணும். கார்த்திக், கவனிச்சுக்குங்க எல்லாத்தையும், வரவேற்பு ஏற்பாடுகள் சிறப்பா இருக்கணும், சொல்லிட்டேன். எனக்கு ஆடம்பரமே பிடிக்காதுன்னுதான் தெரியுமே உங்க எல்லாருக்கும்.
அதனாலே சும்மா டிஜிட்டல் விளம்பர பேனர் வைச்சாப் போதும். அப்புறம் இந்த ஸ்கூல் பையங்க, பொண்ணுங்க, மாலை, மரியாதை இருந்தாப் போதும். அப்புறம் இந்தப் போர்க்கொடி என்னமோ ஹையா ஜாலி, எனக்கு வேலை ஏதும் இல்லைனு கும்மாளம் போடற மாதிரி தெரியுது. அது மேலே ஒரு கண் இல்லை, இரண்டு கண்ணும் வச்சுட்டு வேலை ஏதும், ரொம்பவே கஷ்டமாக் கொடுங்க. சீக்கிரம் முடிக்க முடியாமல் என் கிட்டே மாட்டிக்கிறமாதிரி இருக்கணும். இந்தியாவில் நான் இல்லாதப்போ உ.பி.ச. பருப்பு, ச்சீச்சீ, பொறுப்பு ஏத்துக்குவாங்க. இந்தியத் தொண்டர்கள் அவங்க சொல்படி கேட்டு நடக்கணும். முக்கியமா அம்பி. அப்புறம் இந்த பாலராஜன்கீதா வேறே "புஷ்"க்குத் தனியாச் செய்தி கொடுத்திருக்காங்க. (சார், உங்க பேரையும் இழுத்தாச்சு இதிலே). அப்புறமாய்த் திராச. சார் ஃபோன் செய்து அம்பி யாருக்குமே பின்னூட்டம் கொடுக்கக் கூடாதுன்னு சொல்றதாய்ச் சொல்லி வருத்தப் பட்டுக்கிட்டு என்ன செய்யறதுன்னு கேட்டார். அதுவும் தவிர, வலைஉலகில் உள்ள எல்லாக் கட்டைப் பிரம்மச்சாரிப் பையன்களும் அவர் வீட்டுக்குப் படை எடுக்கிறதாவும், அதனால் வீட்டை மாத்தலாமா? அல்லது எங்கேயாவது போய் ஒளிஞ்சுக்கலாமான்னு யோசிக்கிறதாயும் சொல்றார். எல்லாம் இந்த அம்பியும், போர்க்கொடியும் அவர் வீட்டுக்குப் போயிட்டு வந்ததுக்கு அப்புறம் இரண்டு பேருக்கும் கல்யாணம் நிச்சயம் ஆயிட்டதாய்ச் சொன்னதால் வந்த தொல்லை. வேறே என்ன? சார், நீங்க ஃபோனில் சொன்ன மாதிரியே சொல்லிட்டேன், சரியா இருக்கா, வந்து பார்த்துக்குங்க.
அப்புறம் இந்தச் சிங்கங்களுக்கு ஏதோ ஆபத்தாமே? ஹிஹிஹி, வல்லி, உங்க வீட்டு நரசிங்கம் இல்லை, இது நிஜச் சிங்கம். அப்பாடி, ஒரு வழியா யோசிச்சு, யோசிச்சு உங்களையும் இழுத்தாச்சு. இன்னும் யார் பாக்கி? தெரியலை! இந்தச் சிங்கங்களுக்காக ஏதோ திட்டம் போடறாங்க. அதையும் பார்க்கணும். அப்புறமாய் எஸ்.கே.எம். உங்களுக்கு இப்போ மெயிலமுடியலை. அப்புறமா மெயிலறேன். மதுரையம்பதி, நீங்களும் ஆட்டத்தில் உண்டு. அதான் மாற்றுக் கட்சியினரின் அணியில் சேர்ந்துட்டீங்களே? நறநறநறநற :)))))))))))))) உடனே வந்து என்னாலே பார்க்க முடியாது. பின்னூட்டம் போடறவங்களோ, திட்டறவங்களோ வந்து திட்டிட்டுப் போங்க. நான் மெதுவா வந்து பார்த்துக்கறேன். வர்ட்டா????
@அம்பி, கம்பர் "அம்பி"யைப் பாடினாரா? இருங்க, இன்னிக்கு எழுத ஆரம்பிச்சேன். அப்புறம் வேணாம்னு விட்டுட்டேன். தமிழ் முதலிலே ஒழுங்காப் படிங்க. :P
இந்திய வலைஉலகிலே முதல் முறையாகத் தலைவி வெளிநாடு விஜயம்!!!!!!
என்ன?, எதிர்கட்சியா?...எங்க இருக்கு அது....
ReplyDeleteஅம்பி தாய்கழகத்தில் இணைந்துவிட்டதாக ஒரு அறிக்கை விட்டாரே?....பார்க்கவில்லையா?.
yerakanave 20 suitcase anupiyaachinga....but adhu fulla biriyaani potlam irukuudhunu yaaro vadhanthi kelapi vitutaanga...adheyellam nambatheenga......oru thani runway katra yerpaadugal nadanthukitte iruku :)
ReplyDelete//இந்திய வலைஉலகிலே முதல் முறையாகத் தலைவி வெளிநாடு விஜயம்!!!!!!//......Vaazhthukal :)
ReplyDeleteஇது மொக்கை பதிவுன்னு அமைச்சரவையை கூட்டாமல் தன்னிச்சையாக முடிவெடுத்த தலைவியை கண்டிக்கிரேன்:-)) இது "மகா மொக்கை பதிவு" என்பது என் கருத்து:-))
ReplyDeleteவாங்க கீதா. எங்க வீட்டு சிங்கத்துக்குத் தமிழ் வராது.
ReplyDeleteஅதனாலே பயமில்ல.
உங்களுக்கு 60 கூடை ஆப்பிள் அனுப்பி இருக்கேன்.
போதுமா?
பயணம் இனிதே அமைய வாழ்த்துக்கள்.
தலைவியின் அமெரிக்க பி.ஆர்.ஓ. யாரோ?
ReplyDeleteஒண்ணுமில்லை நம்ம ஊருல ஒரு வரவேற்பு கொடுக்கலாம்னு.
அதெல்லாம் சூட்கேஸெல்லாம் ரெடி பண்ணிடலாங்க!
//வேறே என்ன? சார், நீங்க ஃபோனில் சொன்ன மாதிரியே சொல்லிட்டேன், சரியா இருக்கா, வந்து பார்த்துக்குங்க.//
ReplyDeleteசிண்டு முடியற வேலை எல்லாம் இங்கே வேண்டாம். மதுரையம்பதியும் இப்போ எங்க பக்கம், போன்ல சொன்னார்! :p
//@அம்பி, கம்பர் "அம்பி"யைப் பாடினாரா? இருங்க, இன்னிக்கு எழுத ஆரம்பிச்சேன். அப்புறம் வேணாம்னு விட்டுட்டேன். தமிழ் முதலிலே ஒழுங்காப் படிங்க//
வல்லி மேடம் பதிவுல(சூடாமணி பதிவு) போயி பாருங்க. :p
//உங்களுக்கு 60 கூடை ஆப்பிள் அனுப்பி இருக்கேன்.
//
அச்சோ! வயசான காலத்துல ஆப்பிள் சாப்ட முடியுமோ? ஆரஞ்சு வேணா அனுப்புங்க. :)
//சொல்லிட்டேன். எனக்கு ஆடம்பரமே பிடிக்காதுன்னுதான் தெரியுமே உங்க எல்லாருக்கும்.
ReplyDelete///
நீங்க சொல்லி நாங்க மறுப்போமா.. ஒரே ஒரு ஓற்றை ரோஜா தான் உங்களுக்கு பூங்கொத்து..
அதுவும் இல்லாம நம்ம மாப்ள வேற புது ரன்வேன்னு வேற சொல்லிட்டான்..
இனிமே அமெரிக்காவும் களைகட்ட போகுது!
வருக வருக என்று உங்களை அன்புடன் வரவேற்கிறோம் தலைவியே
idhu vera peria thollaiya pochu!
ReplyDeletechi chi paati ungala illa, kosuva sonnen! ungala poi solliduvoma?? :)
வேறே என்ன? சார், நீங்க ஃபோனில் சொன்ன மாதிரியே சொல்லிட்டேன், சரியா இருக்கா, வந்து பார்த்துக்குங்க
ReplyDeleteஎல்லாம் கரெக்டா இருக்கு ஆனா இந்தமாதிரி நீங்க சொன்னதா நான் போட்டுகிறேன் நீங்க கண்டுக்காம இருங்கோன்னு சொன்னதை எழுதவேஇல்லையே