Monday, August 20, 2007

நான் எழுதலை, ஆனாலும் கவிதை தான்!

உன் இதயத்தில் இருந்து வரும் கீதத்தின் அற்புதத் தன்மையால்,
அதன் ராகத்தால், என் அந்தராத்மா விம்மிப் போய்த் திகைத்து விடுகிறதே!
அப்போது நான் உன் பக்கம் என் பார்வையைத் திருப்பினால்,
இது என்ன? ஏன் என் கண்கள் குளமாகின்றன!

அகங்காரமும், சுருதி இல்லாமலும் பாடிக் கொண்டிருந்த என் ஆன்மா,
இது என்ன? இப்போது லயத்துடன் பாடுகிறதே?
உன்னை நான் உபாசனை செய்ததாலோ இது?
என் ஆன்மா அகண்ட சமுத்திரத்தைக்
கடக்கும் பட்சியைப் போல் சிறகடித்துப் பறக்கத்
தொடங்கி விட்டதே!

நான் நன்கு அறிவேன்: நீ என் பாடல்களால் ஆனந்தம் அடைந்தாய்!
அந்தச் சமயம் நான் உன் காலடியில் வெறும் பாடகனாய் மட்டுமே!

உன்னுடைய காலடித் தடங்களில் நான் உணர்ந்தேன்
என் கீதத்தின் இனிய நாதம் ஒரு பறவைச் சிறகு போலே
உன் பாதங்களை வந்து மெல்லத் தொட்டது.

என் இதய நாதனே! நான் இந்தப் பாடலில் உன்மத்தம் பிடித்தேன்
எனக்குள் நானே ஆச்சரியம் அடைந்தேன்,
உன்னை உணர்ந்தேன், நீ தான் என் இனிய தோழன் என அறிந்தேன்.

7 comments:

  1. ஹா ஹா படிச்சுட்டு என்னால சிரிப்பை அடக்க முடியலை. :p

    நீங்க சாம்பு மாமாவை பாத்து சொல்ற மாதிரியும், அதுக்கு அவர் என்ன மாதிரி பதில் குடுத்து இருப்பார்?னும் நினைச்சு பார்த்தேன். ஹா ஹா!
    சிரிப்பை அடக்க முடியலை.
    :)))))

    Read rest of your all mokkais. (except subhash post)

    ReplyDelete
  2. புதிய முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள். நம்முடைய எண்ணங்கள் தான் முக்கியமே தவிர வடிவம் முக்கியம் இல்லை என்பது என் கருத்து

    ReplyDelete
  3. @அம்பி, கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை?

    @மணிப்பயல், உங்கள் ஊக்கத்திற்கு நன்றி. மார்க்கெட் எகானமியில் இருந்து இப்போக் கீழே இறங்கியாச்சா? :)))))))))) உங்க பிழைப்பே அதை நம்பித் தானே இல்லையா? :P

    ReplyDelete
  4. @அம்பி, அதான் சுபாஷ் பத்தின போஸ்ட் படிக்கலைன்னதுமே தெரியுதே! :P :P :P

    ReplyDelete
  5. மார்கெட் இறங்கினாலும் எனக்கு சந்தோஷம்தான். நான் அப்பவும் பணம் பண்ணுவேன். ஆனால் என் வேலை சவுதியில் அந்த மார்கெட்டில் சரிவு இல்லை

    ReplyDelete
  6. //அதான் சுபாஷ் பத்தின போஸ்ட் படிக்கலைன்னதுமே தெரியுதே//

    அந்த பதிவு மட்டும் தான் உருப்படி, மொக்கை இல்லை!னு சொல்லி இருக்கேன். அவ்வையே தீர்ந்ததா சந்தேகம்? :p

    இப்ப கழுதைக்கு தெரிஞ்சு என்ன ஆவ போகுது? :)

    ReplyDelete
  7. அட, அட, தொண்டர் தம் வருகை சொல்லவும் பெரிதே! தொண்டர்கள் எல்லாம் நம்ம வருகைக்கும், பதிலுக்கும் காத்திருக்காங்கன்னு இப்போத் தான் புரியுது! :P

    @மணிப்பயல், வாங்க, வாங்க, புதுசா எழுதி இருக்கீங்களான்னு இப்போத் தான் போய்ப் பார்த்தேன். இது கண்ணில் பட்டது. ஹிஹிஹி, நமக்கு எதுக்கு வெட்டி வேலைன்னு பின்னூட்டம் போடலை. கோவிச்சுக்கிட்டீங்க போலிருக்கு! :P

    @அம்பி, கழுதைனு ஒத்துக்கிட்டதிலே ரொம்ப சந்தோஷம், குப்புற விழுந்தாலும் மீசையிலே மண் ஒட்டலைனு சொல்லுவாங்களே ஒரு பழமொழி, அர்த்தம் புரியுமா? க்ர்ர்ர்ர்ர்ர்ர்

    ReplyDelete