Saturday, September 08, 2007

என்ன தவம் செய்தேன்!- 2

வேளை வந்து விட்டது


சரியா ஜெய்சங்கர் வில்லத் தனமா (அம்பி மாதிரி?) சிரிக்கும்போது அலார்ம் அடிக்கத் தொடங்கினதும் ஒரு நிமிஷம் நான் சினிமாவிலோன்னு நினைச்சேன். ஆனால் பஞ்சவர்ணக் கிளி படத்தில் அப்படி எல்லாம் காட்சி இல்லையேனு நினைப்பும் வந்து முதலில் இது ஸ்மோக் அலார்ம் இல்லையேனு உறுதிப் படுத்திக் கொண்டேன். அதுக்குள்ளே பையனும், என்னோட மறுபாதியும் வீட்டில் எல்லா இடமும் சுத்திப் பார்த்தாங்க. எல்லாக் கதவும் சாத்தினபடியே தான் இருக்கு. ஒண்ணும் திறக்கவும் இல்லை, மூடவும் இல்லை. அதுக்குள்ளே எனக்கு ஒரு எண்ணம். ஒருவேளை இது ஏதானும் பயிற்சிக்காக இங்கே அபார்ட்மென்ட் நிர்வாகம் ஏற்பாடு செய்ததோன்னும் தோணிச்சு. அபார்ட்மென்டுக்கு வெளியே போனோம். மு.ஜ. முத்தக்காவான நான், ஒருவேளை போலீஸ் வந்து என்ன ஏது, நீங்க யாருனு கேட்டால் என்ன செய்யறதுனு பாஸ்போர்ட், டிக்கெட் அடங்கிய பையைக் கையில் எடுத்து வைத்துக் கொண்டேன்.

வெளியே போய்ப் பார்த்தால் மேலே 2-வது மாடியில், (இங்கே அது 3வது மாடி, அந்தக் குழப்பம் தனி) இருந்தும், எதிர் ஃப்ளாட்டில் இருந்தும் குடியிருப்போர் வந்து என்ன, ஏது என விசாரிக்க ஆரம்பித்தனர். ஒருத்தர் "barbeque" போட்டீர்களா எனக் கேட்க இன்னொருத்தர், மின் அடுப்பை அணைக்கவில்லையா எனக் கேட்க, நாங்கள் இது ஸ்மோக் அலார்ம் இல்லை, செக்யூரிட்டி கால் எனச் சொல்லவும், எதிர் ஃப்ளாட் பெண்மணி வீட்டுக்கு உள்ளே போய் எல்லாக் கதவுகளையும் நன்றாகச் சார்த்திவிட்டால் பின்னர் அது தானாக நிற்கலாம் எனச் சொன்னார். ஏற்கெனவே சாத்திய வீட்டுக்குள் தானே இருந்தோம். இதை நிறுத்தவெனத் தனியாகக் கடவுச் சொல், அல்லது எண் உண்டு. அதையும் எங்கேயோ மறந்து வச்சாச்சு. அன்று தொழிலாளர் தின விடுமுறை என்றாலும் நிர்வாக அலுவலகத்துக்குத் தொலை பேச வேண்டியது தான் எனத் தொலை பேசினோம். அவங்க கொடுத்த நம்பரில் இருந்த பணியாளர் வீட்டுக்குப் போய்விட்டதால் அன்று அவரைப் பிடிக்கவே முடியலை.

பல முயற்சிகளுக்குப் பின்னர் அவர் மாலை 7- 30 மணிக்குத் தொலைபேசியில் கிடைத்தார். அவரிடம் தொடர்பு கொண்டு பேசியதில் அவர் சொன்ன மாதிரி இணைப்பை எல்லாம் நீக்கினோம். இது முன்னரே தெரியும் என்றாலும், நிர்வாகத்தின் அனுமதி பெறாமல் நாமாகச் செய்வது முறை இல்லை என்பதால் செய்யவில்லை. இணைப்பை நீக்கியும் கூட சிவப்பு விளக்கு ஒளிர்வதும், சின்னக் குரலில் அலார்ம் கூப்பிடுவதும் நிற்கவே இல்லை. அவரிடம் சொன்னதில், தான் நேரே 1/2 மணி நேரத்துக்குள் வருவதாய்ச் சொல்லிவிட்டு அது போலவே வந்தார். அவர் வந்ததும் கடவு எண்ணைக் கொடுத்து அதை நிறுத்தி விட்டுப் பின்னர் எங்களிடமும் கடவு எண்ணைக் குறித்துக் கொள்ளச் சொல்லிவிட்டுப் போனார். இவ்வளவு அமர்க்களத்துக்கும் காரணம் யாருனு நினைக்கிறீங்க? ஒரு வெட்டுக் கிளி தான். அது போய் அலாரத்தினுள் புகுந்து கொண்டு எப்படியோ வெளியே வர முடியாமல் அதை "ஆன்" செய்திருக்கிறது. 2மணி நேரம் ஸ்தம்பித்துப் போனோம், செய்வது அறியாமல்!

இந்த வாரம் பார்த்த சினிமா ஒண்ணே ஒண்ணுதான். இந்த ஐகாரஸ் கண்ணு போட்டதாலேயோ? :P

"மாயாவி" - சூர்யா, ஜோதிகா நடிச்ச படம். நல்லா எடுத்திருக்காங்க. சூரியா நடிப்பு நல்லா இருந்தது. ரொம்பவே இயல்பா இருக்கு. கடைசியில் அவங்க ஒருத்தருக்கு ஒருத்தர் பாசமும், நட்பும் கொண்ட நண்பர்களாய் மாறுவது மிகவும் அழகாய்ச் சொல்லப் படுகிறது. நட்பையும் அதனால் வரும் பாசத்தையும் கொச்சைப் படுத்தவில்லை. சிவப்பியாக நடிக்கு பெண் யாருனு தெரியலை! அவங்களும் ரொம்பவே இயல்பா தான் எப்போவும் இருக்கிற படியே வந்துட்டுப் போறாங்க! படம் ஏன் வெற்றி பெறவில்லைனு புரியலை!

படித்த புத்தகங்கள்: இந்திரா செளந்திர ராஜன் - காற்று, காற்று, உயிர், -பேத்தல்!

ரா.கி.ரங்கராஜன் : நான் கிருஷ்ண தேவ ராயன் -முதல் பாகம். விகடனில் வந்தப்போவே படிச்சது தான், என்றாலும் திரும்பவும் படிக்கிற பழக்கம் உண்டே! 2-ம் பாகம் கிடைக்கலை.
சின்னக் கமலா - கிட்டத் தட்ட "நிஷ்ஷப்த்" படத்தின் கதைக் கரு என்றாலும் வேறு விதமான முடிவு இந்தக் கதைக்குத் தர முடியுமா? யோசிக்கணும்!

தேவன் - கோமதியின் காதலன் - ஹிஹிஹி பையனுக்கு வாசித்துக் கொண்டிருக்கிறேன்.
ராஜத்தின் மனோரதம் - மீண்டும்
ராஜியின் பிள்ளை
மாலதி
மிஸ்டர் வேதாந்தம் 1&2

பச்சை மண் - பி.வி.ஆர்.
எம்.வி.வெங்கட்ராமின் சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு.

இப்போ படிக்கிறது "கல்லுக்குள் ஈரம்" கல்கியில் வெளி வந்தபோது அதில் நீக்கப் பட்டிருந்த சில விஷயங்களையும் சேர்த்து திரு ர.சு. நல்ல பெருமள் அவர்கள் மீண்டும் பதிப்பித்த காப்பி, இன்னும் முடிக்கலை.

ராஜம் கிருஷ்ணனின் "வேருக்கு நீர்" இன்னும் ஆரம்பிக்கணும். நேரம் கிடைக்கலை. :((((

5 comments:

  1. இது நல்லாயிருக்கு.......மேன்மேலும் அனுபவங்கள் கிடைக்க வாழ்த்துக்கள் :-)

    ReplyDelete
  2. \\நீங்க யாருனு கேட்டால் என்ன செய்யறதுனு பாஸ்போர்ட், டிக்கெட் அடங்கிய பையைக் கையில் எடுத்து வைத்துக் கொண்டேன்.\\

    :-))))))))))))))))))))))))

    \\"மாயாவி" - சூர்யா, ஜோதிகா நடிச்ச படம். நல்லா எடுத்திருக்காங்க.\\\

    அவுங்க ரெண்டு பேருக்கும் குழந்தையே பிறந்துடுச்சி இப்பதான் படமே பார்க்கிறிங்களா :)))

    ReplyDelete
  3. நான் என்ன நினைக்கிறேனா, அந்த வெட்டுகிளி உங்க பதிவை படிச்சு தலைல அடிச்சுண்டு இருக்கும். அதான் அலாரம் அடிச்சு இருக்கு. :p

    சரி, வேலை வந்து விட்டதா? தப்பியது அமெரிக்கா. பாவம் சென்னை. :)))

    ReplyDelete
  4. Ahaa.. VettukkiLiye
    vettuppatiyaanu oru paatup paadalaamaa:))

    labor day annikk inthak kooththaa?????
    iththanai books padichachaa. great pa.

    ReplyDelete
  5. நான் கிருஷ்ண தேவராயன் ‍ இரண்டாம் பகுதி போனமுறை இந்தியா வந்தப்ப தேடினேன். எனக்கும் கிடைக்கல. உங்களுக்கு கிடைச்சா சொல்லுங்க‌
    மாயாவி ‍ எவ்வளவு பழசு!! இப்பத்தான் பாக்கறீங்களா

    ReplyDelete