Friday, September 14, 2007

விநாயகர் இன்னும் வருவார்!




விநாயகர் பற்றி இன்னும் சில கதைகள் இருக்கின்றன. முதலில் நாம் பார்த்தது ஒரு புராணத்தில் உள்ளது என்றால் "பார்கவ புராணத்தில்" வேறு விதமாய் சொல்கிறார்கள். ஒவ்வொரு யுகத்திலும் ஒவ்வொரு மாதிரியாக விநாயகர் பற்றிக் கூறப் படுகிறது. பார்கவ புராணம் என்னும் விநாயக புராணத்தின் படி விநாயகரே முழு முதல் கடவுள். இந்த உலகை மட்டுமல்லாது மும்மூர்த்திகளையும் படைத்து அவர்களுக்குப் படைத்தல், காத்தல், அழித்தல் போன்ற தொழில்களை செய்யுமாறு கட்டளை இட்டவரும் விநாயகரே ஆவார். ஒவ்வொரு கல்பத்திலும் இவ்வுலகம் அழிந்து மறுமுறை சிருஷ்டி ஆரம்பிக்கும் முன் அண்ட சராசரங்களிலும் உள்ள எல்லா ஜீவன்களும் விநாயகருக்குள்ளேயே ஒடுங்கும் என்று பார்கவ புராணம் சொல்லுகிறது. பிரளயத்துக்குப் பின் விநாயகர் வக்ரதுண்ட விநாயகராக அவதரித்து மும்மூர்த்திகளையும் படைத்தார். பின் அவர்களைத் தங்கள் தொழில் செய்யுமாறு கூறி மறைந்தார். இந்த பார்கவ புராணத்தின்படி ஒரு முறை என்ன நடந்தது என்றால்:

பிரம்மா ஒரு சமயம் கொட்டாவி விடவே அதில் இருந்து ஓர் அரக்கன் தோன்றினான். அவன் பெயர் சிந்தூரனன் ஆகும். ஏனெனெனில் அவன் சிந்தூர வண்ணத்தில் இருந்தான். அவனுடைய செக்கச் சிவந்த நிறத்தால் பயந்து போன பிரம்மா அவன் கேட்காமலேயே அவனுக்கு சில வரங்களைத் தந்தார். சும்மாவே அரக்கன். அவனுக்கு வரம் வேறே இலவசமாய் வந்தால் கேட்கவேணுமா? மூவுலகையும் ஆட்டிப் படைத்தான். யாவரும் செய்வதறியாமல் திகைக்க மும்மூர்த்திகளும் கணபதியைப் பணிந்தனர். விநாயகர் உடனே தோன்றி, "கவலை வேண்டாம். நான் உமா தேவியாரின் திரு வயிற்றில் அவதரிப்பேன்." எனக் கூறி மறைந்தார். அது போலவே கருவுற்று உமாதேவியாரின் திருவயிற்றில் , காற்று வடிவில் நுழைந்த சிந்தூரானன் குழந்தையின் தலையைத் திருகி எடுத்துக் கொண்டு போய் விட்டான். குழந்தை பிறந்தது தலையே இல்லாமல். அனைவரும் பதறவே கலங்காதே என்று சொன்ன சிவபெருமான் முன்பொரு சமயம் கஜமுகாசுரன் கேட்டுக் கொண்டபடி அவனுடைய தலையைத் தன் குழந்தையின் தலை இருக்கும் இடத்தில் பொருத்தினார். அன்று முதல் அந்தத் தெய்வக் குழந்தை "கஜானனன்" என்ற பெயர் பெற்றான்.

உமாதேவியாரிடம் வளர்ந்து வந்த கஜானனன் உரிய காலம் வந்ததும் சிந்தூரனனை அழிக்கப் புறப்பட்டார். சிந்தூரனனைத் தூக்கி எடுத்துத் தன் துதிக்கையால் ஓங்கி அடித்து அவன் ரத்தத்தைத் தன் உடம்பில் பூசிக் கொண்டார். செந்நிறமான விநாயகர் அன்று முதல் "சிந்தூர விநாயகர்" என்ற பெயரும் பெற்றார்.


செப்டெம்பர் திங்கள் 15-ம் தேதி பிறந்த நாள் கொண்டாடும் அருமை நண்பருக்குப் பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

7 comments:

  1. விநாயகரை பற்றி மேலும் தெரிந்துகொண்டேன்!! நன்றி

    ReplyDelete
  2. Yaarunga andha nanbar sept15th bday, peru sonna , naangalum serndhu vaazhthuvomeh...

    ReplyDelete
  3. @இசக்கி முத்து, ரொம்ப நன்றி வருகைக்கும், பாராட்டுக்கும்.

    @ஆணி, என்ன மும்முரமாக் கிளம்பிட்டீங்க போலிருக்கு? ம்ம்ம்ம் "ஆணி' கொஞ்சம இருக்குனு தான் ஏற்கெனவே சொல்லிட்டீங்க! அதான், இப்படி வேண்டாத கேள்வி எல்லாம் வருது! :P :P செய்ங்க செய்ங்க!

    ReplyDelete
  4. மூன்று பதிவுமே இந்தத்தடைவை நல்லா வந்திருக்கு. அம்பி இதெல்லாம் படிக்க நேரம் இரூக்காதே
    கேரளத்துக் கிளி, பஞ்சாப் குதிரை,ஆந்திரா பசு ன்னுபோட்டா முதல்லே வந்து மீ பஷ்டு ன்னு கேசரி கேக்க வந்துடுவார்

    ReplyDelete
  5. படம் அருமை. வித்தியாசமாக இருக்கிறது..எங்கே சுட்டீர்கள்?...

    ReplyDelete
  6. படமும் அருமை.. நீங்கள் சொன்ன கதையும் புதிதாக இருக்கிறது.. எங்கேயிருந்து தேடிப் பிடிக்கிறீர்கள்.. இதெல்லாம் பத்திரிகைல வர வேண்டியது. நான் இப்போதுதான் இண்டர்நெட்டில் இது பற்றித் தெரிந்த வந்திருக்கிறேன்.. நன்றாகவே உள்ளது.. இனி பக்தியாக எழுதுபவர்களாகப் பார்த்துப் படிக்க வேண்டியதுதான்..

    ReplyDelete
  7. தி.ரா.ச. சார், கணேசனுக்கு இப்போ வேலை இருந்திருக்கும், அதான் அம்பிக்கு எதுவும் எழுதவோ, பின்னூட்டம் போடவோ முடிந்திருக்காது. "" இல்லாம அம்பிக்கு எழுதத் தெரியாதே! :P


    @ஹிஹி, நல்லாச் சுட வ்ந்திருக்கு இல்லை, தி.ரா.ச. சார் வீட்டிலே போய்ப் பாருங்க, கொழுக்கட்டை கொடுக்கலைனாலும் நல்ல அருமையா டான்ஸ் ஆடற பிள்ளையார் கொடுத்துட்டார். :P

    @இரண்டாம் சாணக்கியன், வாங்க, புதுசுன்னாலும் என்ன, நல்லாத் தானே எழுதறீங்க, நாங்க ஒண்ணும் பழம் பெருச்சாளின்னு நினைக்காதீங்க, ஏதோ ஒப்பேத்திட்டு இருக்கோம், அவ்வளவு தான்.

    ReplyDelete