Tuesday, December 11, 2007

126 வது பிறந்த நாள்


அநேகமா எல்லாருக்கும் புரிஞ்சிருக்கும் இன்னிக்கு ஏன் வரச் சொன்னேன் என்று. இருக்கும்வரை யாருமே சீந்தாமல் இருந்த பாரதியார், இறந்த பின்னர் "தேசீயக் கவி" ஆனார். அவர் பாடல்களைப் பாடத் தடை விதித்திருந்தது ஆங்கில அரசு. ஆனால் இப்போது எல்லாவற்றுக்கும் அவர் பாடல், அல்லது கட்டுரை தான் உதாரணம் காட்டப் படுகிறது. காலத்தை வென்ற அந்த "அமரகவி"க்கு ஒரு சின்ன அஞ்சலி!


டிசம்பர் 11 பாரதியார் பிறந்தநாள். அவர் இருக்கும்போது யாரும் அவரையோ, அவர் கவி
உள்ளத்தையோ கொண்டாடவில்லை. வறுமையில் தான் தவிக்க விட்டார்கள். கிட்டத்
தட்ட பத்து வருஷங்களுக்கு மேல் பிரஞ்சு நாட்டுப் பகுதியான புதுச்சேரியில் வாழ்க்கை
நடத்திவிட்டுப் பின்னர், மனைவியும், குழந்தைகளும் கடையம் சென்ற பின்னர், தனியாகப் புதுச்சேரி வாசம் சலித்துப் போய் அவரும் இந்தியப்பகுதியான கடலூருக்கு வந்த போது அவரை ஆங்கில அரசு கைது செய்து ரிமாண்டில் வைக்கிறது. உடனே கடையம் போயாகவேண்டும். ஆனால் அவரை நிர்ப்பந்திக்கும் அரசு ஒரு பக்கம், மறுபக்கம் குடும்பச் சூழல் எனத் தவிக்கின்றார். முடிவில் ஆங்கில அரசு கடையத்தை விட்டு வரக் கூடாது என்று சொன்ன நிபந்தனைக்கு உட்பட்டு வெளியே வந்து கடையம் செல்கின்றார். பாரதியின் உணர்ச்சி செறிந்த கவிதைகளுக்கு ஆங்கில அரசு அவ்வளவு கவலைப்பட்டதோடு அல்லாமல், கிரிமினல் குற்றவாளி போலவும் நடத்தியது. பாரதியின் "இந்தியா" பத்திரிகையையே தடை செய்தவர்கள் அல்லவா!

கடையம் சென்ற பாரதி, சாப்பாட்டுக்கு வழியில்லாமல் எட்டயபுரம், திருவனந்தபுரம், கானாடுகாத்தான், காரைக்குடி போன்ற ஊர்களில் உதவி தேடுகின்றார். எட்டயபுரம்
அரசருக்குச் சீட்டுக்கவிகள் அனுப்புகின்றார். நோபல் பரிசுக்காகத் தன் கவிதைகளை
அனுப்பவும் விருப்பப்படுகின்றார். வறுமை காரணமாக எதுவுமே நடக்கவில்லை. பாரதி இந்த
மாதிரிக் கஷ்டப் பட்டுக் கொண்டிருந்த சமயம் தான் மதுரையில் டவுன்ஹாலில் நோபல்
பரிசு பெற்ற தாகூருக்குப் பாராட்டு விழாவும், வரவேற்பும் நடைபெற்றது. 1913-ல் நோபல்
பரிசு வாங்கிய தாகூருக்கு கிட்டத் தட்ட ஆறு வருடங்கள் கழித்துப் பாராட்டு விழா எடுத்த தமிழர்களில் யாருமே பாரதி சோற்றுக்குக் கஷ்டப் பட்டுக் கொண்டிருப்பதை நினைவு கூரவில்லை. தன்னுடைய 11-ம் வயதில் பாரதிக்குக் கிடைத்த பட்டம் "பாரதி" என்பது. அதன் பின்னர் உயிர் உள்ளவரை எந்தப் பட்டமும் யாரும் பாரதிக்கு அளிக்கவில்லை.


1919 மார்ச்சுக்குப் பின்னர் மெல்ல மெல்ல கொஞ்சம் கொஞ்சமாய்த் தன் பிடிகளைத்
தளர்த்திக் கொள்கிறது ஆங்கில அரசு. அதன் பேரில் ஊரை விட்டுக் கிளம்பி சென்னை வருகின்றார். இந்தச் சமயம் தான் காந்திஜியின் தென்னாட்டு விஜயம் நடைபெற்றதால் ராஜாஜியின் வீட்டில் காந்தியுடன் சந்திப்பு நடைபெறுகிறது. என்றாலும் வாழ வழி எதுவும் கிடைக்காததால் மறுபடி கடையம் செல்கின்றார். பல முயற்சிகளுக்குப் பின்னர் 1920
டிசம்பரில் தான் சுதேசமித்திரன் பத்திரிகையில் வேலை கிடைத்துச் சென்னை வருகிறார். என்றாலும் அவர் அதன் பின்னர் 7,8 மாதங்கள் தான் உயிர் வாழ்ந்தார். செப்டம்பரில் 12-ம் தேதி தன்னுடைய 39-ம் வயது நடக்கையிலேயே உயிர் துறக்கிறார். இந்த வயதுக்குள்ளேயே அவர் கண்ட கனவுகள், எழுத்து வடிவம் பெற்று விட்டிருந்தாலும் பாரதியை ஒரு கவி என்றே பின்னர் பல வருஷங்களுக்குப் பின்னர் தான் ஒப்புக் கொள்ளப் பட்டிருப்பது
துயரமான விஷயம். பாரதி யுகம் என்பது பாரதியோடு முடியவில்லை. இன்னும் தொடரும், ஏனெனில் பாரதியின் கனவுகள் எதுவும் நனவாகவில்லை. கீழே உள்ள கவிதை பாரதி வாழ்வு என்ற கவிதைத் தொகுப்பில் உள்ளதின் ஒரு பகுதி. எப்போது எழுதினார் என்பதை நிச்சயப்படுத்திக் கொள்ள முடியவில்லை. சீனி.விஸ்வநாதனின் புத்தகங்களில் இருக்கலாம். எனக்கு அது இன்னும் எட்டாக்கனி தான். விலையும் சரி, நூலகத்திலும் சரி கிடைப்பதில்லை!

""மற்றையக் கல்லுரு மாறிடப் பின்னு
மானிடன் தான் என மனத்திடை அறி போழ்து
எத்தனை இன்பமுறு எந்நிலை நிற்பன்?
அத்தகைய நிலையினை அளியனேன் எய்தினன்
வெம்போர் விழையும் வீரனிங்கொருவன்

சிறையிடை நெடுநாட் சிறுமை பெற்றிருந்த பின்
வெளியுறப் பெற்றவ் வேளையே தனக்கோர்
அறப்போர் கிடைப்பின் அவன் எது படுவன்?
அஃதியான் பட்டனன், அணியியற்குயிலே,
நின்முக நகையும் நின் விழி யாழ்மையும்

நின்னுதல் தெளிவும் நின் சொல்லினிமையும்
நின்பர் சத்தே நிகழ்ந்திடு புளகமும்
ஈதெலாம் பின்னரு மெண்ணிடைத் தோன்றப்
பின்னுமோர் முறையான் பெருமையோய் நின்னைச்
சரணென அடைந்தேன், தமியெனைக் காத்தி!"

16 comments:

  1. மனதை உருக்கும் பதிவாக அமைந்திருக்கிறது. ஒரு கவிஞன் எப்படி எழுத வேண்டும்! என்பதறக்கு பாரதி உதாரணம்.
    ஒரு கவிஞன் எப்படி வெகுளியாக இருக்க கூடாது? என்பதறக்கும் பாரதியே உதாரணம்.

    இல்லாட்டி கள்ளி காட்டு இதிகாசம் எழுதும் இன்றைய கவிஞர்கள் மசாலா பாடல்களும் எழுதி சிறிது வயிற்றுக்கும் ஈயபடும்! என நிரூபிக்கிறார்கள்.

    ReplyDelete
  2. சாலை ஜெயராமன் அவர்களின் இரண்டாம் பாகம் மிக அருமை. :P

    பேசாம அவரோட உபிசாவா நீங்களே பதவி ஏத்துக்கங்க. :p

    ReplyDelete
  3. @ambi,அட, உங்களுக்குக் கூடப் புரிஞ்சுடுச்சா??? ஆச்சரியம் தான்! :P
    பைதிபை, சாலை ஜெயராமனின் பதிவுகள் உங்களுக்குப் புரியாததில் ஆச்சரியமே இல்லை! மண்டையிலே மசாலா இல்லைனு தெரியுமே? :P

    அவர் நிஜமாவே எனக்கு உ.பி.ச. தான், இப்போத் தான் தெரிஞ்சது! :))))))))))

    ReplyDelete
  4. கீதா ..பதிவு நன்றாக இருந்தது..பாரதி பற்றிப் பெருமைப்படவேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன..

    நேற்றைய என்னுடைய பதிவு இது..

    http://pettagam.blogspot.com/2007/12/blog-post_10.html

    படித்துப் பாருங்கள்..

    ReplyDelete
  5. @வேதா, உங்கள் கருத்துக்கு நன்றி. தாகூர் ஏற்க மறுத்ததாய்த் தான் நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். அது பற்றிய மேலதிகத் தகவல்கள் தெரியலை!

    @மதுரையம்பதி, வார்த்தைகளை மாத்திட்டீங்க போலிருக்கு!! :))))

    @பாசமலர், இதோ வந்துட்டேன், அங்கே தான் வரப் போறேன்.

    ReplyDelete
  6. //சாலை ஜெயராமன் அவர்களின் இரண்டாம் பாகம் மிக அருமை//

    //பேசாம அவரோட உபிசாவா நீங்களே பதவி ஏத்துக்கங்க//

    இது என்னோட கமண்ட்.

    //சாலை ஜெயராமனின் பதிவுகள் உங்களுக்குப் புரியாததில் ஆச்சரியமே இல்லை! //

    //அவர் நிஜமாவே எனக்கு உ.பி.ச. தான், //

    இது உங்க பதில்.

    என்ன கமண்ட் வந்ருக்கு?னு கூட பார்க்காம பதில் போடுவீங்களோ? :p

    ReplyDelete
  7. ஆக மொத்தத்தில் பரதியார் மீது ஆங்கிலேயர் வைத்திருந்த பார்வையைக்கூட தமிழர்கள் வைக்கவில்லை :((

    ReplyDelete
  8. ambi,சரியாத் தான் சொல்லி இருக்கேன்,வழக்கம்போல் மரமண்டை, அல்லது நமீதா நினைப்பு, அல்லது இப்போ புதுசா இந்து! :P எல்லாம் ஹெட் லெட்டர், நீங்க பதவி ஏத்துக்கச் சொன்னீங்க, அது இல்லாமலேயே நான் உபிச தான் அப்படினு சொல்லி இருக்கேனே, புரியலை? :P படிச்சுப் பார்க்காமல் கமெண்டறது நீங்கன்னா, நானுமா அப்படி? நறநறநறநறநறநற

    @மாயா, ரொம்பவே நன்றிம்மா, உங்கள் கருத்துக்கு, உண்மையில் ஆங்கிலேயர் அவர் கவிதையில் நாட்டு மக்களுக்கு எழுச்சி உண்டாகுமோன்னு பயந்த அளவுக்குக் கூட மற்றவர் யாரும் அவர் கவிதைகளுக்கு மதிப்புக் கொடுக்கவில்லை, அவர் இருந்த காலத்தில் என்பது தான் உண்மை!

    ReplyDelete
  9. சூப்பரான பதிவு.

    முண்டாசு கவிஞன் இறந்த தான் புகழை அடைய வேண்டும் என்று இருந்து இருக்கிறது. யாரை குற்றம் சொல்ல :(

    ReplyDelete
  10. நன்றி தலைவி ;))

    ReplyDelete
  11. அந்த அமரகவிக்கு என் அஞ்ஜலிகள்

    ReplyDelete
  12. @புலி, கோபிநாத், மற்றும் மணிப்பயலுக்கு என் நன்றி.

    ReplyDelete
  13. லிங்க் கொடுத்தது யாருனு போய்ப் பார்த்தால் பெரிய இடத்து லிங்கா இருக்கே? ம்ம்ம்ம்ம்ம்? யார் போட்டுக் கொடுத்திருக்காங்கனு தெரியலையே? :P

    ReplyDelete
  14. தன்னுடைய 11-ம் வயதில் பாரதிக்குக் கிடைத்த பட்டம் "பாரதி" என்பது. அதன் பின்னர் உயிர் உள்ளவரை எந்தப் பட்டமும் யாரும் பாரதிக்கு அளிக்கவில்லை.

    பாரதி பட்டம் பதவி பெற பாடவில்லை தங்க பதக்கங்களும் அவனுக்கு தேவை இல்லை.அவன் பாடியதெல்லாம், செல்லாமாளுக்கும் தங்கமாளுக்கும், சிட்டு குருவிக்கும்தான்.
    மிக நல்ல பதிவு. ஒருவேளை வறுமையில்லா விட்டால் அவரால் இந்த அளவுக்கு பாடியிருக்கமுடியுமோ என்னவோ

    ReplyDelete
  15. பட்டம் பெறப் பாடலைனாலும், வயிறு ஒண்ணு இருக்கே சார், அது எப்படி ரொம்பும், பைசா இல்லாமல், அது ரொம்பக் கொடுமை இல்லை? சாப்பாட்டுக்குக் கூட வழியில்லாமல் தவிச்சது? :(((((((((((((((((

    ReplyDelete