Sunday, March 16, 2008

இதுக்கு என்ன செய்யலாம்?

கடந்த 2 மாதமாய்த் தொடர்ந்து பல பெயர்களில் எனக்கு இந்தச் செய்தி பின்னூட்டம் என்ற பெயரில் வந்து கொண்டே இருக்கிறது. warning! see here! என்று சொல்லிப் பலமுறைகள் பின்னூட்டங்கள் தொடர்ந்து வருகின்றன. இது ஒரு மறை முக மிரட்டலோ? எப்படி நிறுத்துவது என்று புரியவில்லை. புரியாத, தெரியாத பெயர்களில் வரும் பின்னூட்டத்தை மட்டுறுத்தி விடுவேன் என்றாலும் ஏன் இப்படிச் செய்கிறார்கள் எனப் புரியவில்லை. இன்னும் சிலருக்கும் வருகிறது என்று புரிந்தாலும் தடுத்து நிறுத்தும் வழி யாருக்காவது தெரியுமா? கொஞ்சம் தெரிஞ்சால் சொல்லுங்களேன். அவங்க பார்க்கச் சொல்லும் தளத்துக்குள் நான் போவதே இல்லை, என்பதோடு மெயிலில் பார்த்த உடனேயே அதை மட்டுறுத்தியும் விடுகின்றேன், என்றாலும் தொல்லை தாங்க முடியலை! என்ன செய்யலாம்??????????????

3 comments:

  1. ஹாய் தலவி,

    இதுக்கெல்லாம் போயி கவலை படலாமா? எனக்கு கூடத்தான் தினமும் வருது, ஆனா நான் கூலா REJECT னு சொல்லிடுவேன். அவ்ளோதான், முடிஞ்சுது. ஹிஹிஹிஹி...நீங்களும் இதயே பண்ணுங்களேன்.

    ReplyDelete
  2. இது கவலைப்படக்கூடிய விஷயம் இல்லதான் என்றாலும் சில சமயம் எரிச்சலூட்டும் என்பது உண்மைதான். நீங்க உங்க மெயில் ஐடில இந்த மாதிரியான இமெயில் ஐடிகள பிளாக் பண்ணமுடியும்னு நினைக்கிறேன். அதை முயற்சி செய்து பாருங்க.

    ReplyDelete
  3. @மின்னல், என்ன செய்யறது? நானும் ரிஜெக்ட் தான் செய்யறேன், இருந்தாலும் தினம் தினம் பார்க்கிறப்போ எரிச்சல் வருது இல்லை/ க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    @கிருத்திகா, நன்றி, ப்ளாக் செய்து பார்க்கிறேன்.

    ReplyDelete