Thursday, December 11, 2008

பாரதி கண்ட கண்ணன் - கண்ணன் என் சேவகன்!

இன்று மகாகவியின் பிறந்த நாள். அவரை நினைவு கூரும் வகையில் கண்ணனைப் பற்றி பாரதி எழுதி இருப்பதை இங்கே பகிர்ந்து கொள்கின்றேன்.
கண்ணனைத் தாயாக, தோழனாக, தந்தையாக, சேவகனாய், அரசனாய், சீடனாய், சற்குருவாய், குழந்தையாய், விளையாட்டுப் பிள்ளையாய், காதலனாய், காதலியாய், குலதெய்வமாய், கண்ணனையே ஆண்டாளாய்க் கண்டவன் பாரதி. இதிலே எனக்குப் பிடிச்சது கண்ணனை சேவகனாய்க் கண்டதுவே.

"எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான்
மாடு, கன்று மேய்த்திடுவேன், மக்களை நான் காத்திடுவேன்

சொன்னபடி கேட்பேன்:துணிமணிகள் காத்திடுவேன்
சின்னக் குழந்தைக்குச் சிங்காரப் பாட்டிசைத்தே
ஆட்டங்கள் காட்டி அழாதபடி பார்த்திடுவேன்
காட்டுவழியானாலும் கள்ளர் பயமானாலும்

இரவிற் பகலிலே எந்நேரமானாலும்
சிரமத்தைப் பார்ப்பதில்லை, தேவரீர் தம்முடனே
சுற்றுவேன் தங்களுக்கோர் துன்பமுறாமற்காப்பேன்
கற்ற வித்தை யேதுமில்லை காட்டு மனிதன்: ஐயே!
ஆனபொழுதுங்கோலடி குத்துப்போர் மற்போர்

நானறிவேன்: சற்றும் நயவஞ்சனை புரியேன்
என்று பல சொல்லி நின்றான். ஏது பெயர்? சொல் என்றேன்
ஒன்றுமில்லை: கண்ணனென்பார் ஊரிலுள்ளோர் என்னை என்றான்
கட்டுறுதியுள்ள உடல் கண்ணிலே நல்லகுணம்
ஒட்டுறவே நன்றா உரைத்திடுஞ்சொல்-ஈங்கிவற்றால்
...........................................
............................
................................
நண்பனாய், மந்திரியாய், நல்லாசிரியனுமாய்
பண்பிலே தெய்வமாய் பார்வையிலே சேவகனாய்
எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி யென்று சொன்னான்

இங்கிவனை யான் பெறவே என்ன தவஞ்செய்துவிட்டேன்
கண்ணன் எனதகத்தே கால் வைத்த நாளாய்
எண்ணம், விசாரம் ஏதுமவன் பொறுப்பாய்ச்
செல்வம், இளமாண்பு, சீர், சிறப்பு, நற்கீர்த்தி
கல்வி, அறிவு, கவிதை, சிவயோகம்

தெளிவே வடிவாம், சிவஞானம் என்னும்
ஒளிசேர் நலமனைத்தும் ஓங்கி வருகின்றன காண்!
கண்ணனை நான் ஆட்கொண்டேன்! கண் கொண்டேன்! கண் கொண்டேன்!
கண்ணனை ஆட்கொள்ளக் காரணமும் உள்ளனவே!

7 comments:

  1. அருமையான பதிவு...நன்றி தலைவி ;)

    ReplyDelete
  2. எனக்கும் பிடித்த பாடல் கீதாம்மா. பகிர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  3. சிவயோகம்

    தெளிவே வடிவாம், சிவஞானம் என்னும்
    ஒளிசேர் நலமனைத்தும் ஓங்கி வருகின்றன காண்!//

    கண்ணன் வந்து இந்த சிவபக்தியை இவருக்கு போதித்தாரா? ஏன் அதற்கு கண்ணன் வரவேண்டும் இவர் வீட்டிற்கு?

    பாரதி என்ன சொல்ல வருகிறார்?

    ReplyDelete
  4. கரிகுலம்:
    சிவம்+யோகம்=சிவயோகம்

    சிவம்+ஞானம்=சிவஞானம்


    சிவம்:செம்மையான, எல்லாவற்றிலும் உயர்வான என்கிற பொருள். சிவனும் அப்படியே இருப்பதால், சிவம் = சிவன் எனவும் சொல்லலாம்.

    எனவே, இங்கே பாரதி சொல்லுவது : உயர்ந்த யோகம், ஞானம் போன்ற நலம் அனைத்தும், கைகூடுவதாக, கண்ணன் கண் கண்ட தெய்வமாக இருப்பதாக போற்றுகிறார்.

    ReplyDelete
  5. ஒகோ அப்படியா! சிவன் என்றால் வேறு பதங்களும் உண்டோ!!

    நன்றி.

    ReplyDelete
  6. @கோபிநாத், ரொம்ப நன்றி,

    @கவிநயா, கருத்துக்கு நன்றி,

    @மெளலி, ஆச்சரியமா இருக்கே உங்க வருகை???

    @கரிகுலம், சிவம் என்ற சொல்லுக்கு வேறு அர்த்தங்களும் உண்டு. முடிந்தால் தனிப்பதிவாய் எழுதுகின்றேன். நன்றி.

    @ஜீவா, உங்கள் விளக்கத்துக்கு ரொம்பவே நன்றி.

    ReplyDelete