Friday, September 25, 2009

மண் சுமக்காமலேயே சாப்பிடச் செய்யும் புட்டு இது!


புட்டு செய்முறை:

நவராத்திரி வெள்ளி அல்லது செவ்வாய்க்கிழமைகளில் அல்லது சரஸ்வதி ஆவாஹனம் செய்யும் தினத்தன்று புட்டு நிவேதனம் செய்வார்கள். அதற்குத் தேவை நல்ல மாவு வரும் அரிசி ஐ ஆர் இருபது அரிசி கால் கிலோ. இந்த அளவிற்கு ஏற்றாற்போல் கூடுதலாய்ச் செய்பவர்கள் கூட்டிக் கொள்ளலாம்.
அரிசி கால் கிலோ
பாகு வெல்லம் கால் கிலோ
தேங்காய் துருவல் இரண்டு டேபிள் ஸ்பூன்
முந்திரிப்பருப்பு, ஏலக்காய், பொட்டுக் கடலை, அல்லது வேக வைத்த துவரம் பருப்பு. இரண்டு டேபிள் ஸ்பூன்.
உப்பு ஒரு சிட்டிகை

முதல் முறை: இது ரொம்பவே ஆசாரம் பார்க்கிறவங்களுக்கானது என்பதோடு அதிகம் வேலையும் இல்லை. அரிசியைக் களைந்து ஒரு மணி நேரம் ஊற வைத்து விட்டுப் பின்னர் ஜலத்தை வடித்துவிட்டுச் சிறிது நேரம் வைக்கவும். இரும்பு வாணலியில் அரிசியைப் போட்டு நன்கு சிவப்பாகப் பொரியும் வரை வறுக்கவும். ஆறியதும் மிக்சியில் போட்டு மாவாக்கிக் கொள்ளவும். இரண்டு கப் தண்ணீரைக் கொதிக்க வைத்து அதிலேயே ஒரு சிட்டிகை உப்பு, மஞ்சள் தூள் சேர்க்கவும். கொதிக்கும் தண்ணீரைக் கொஞ்சம் கொஞ்சமாய் மாவில் விட்டுக் கலக்கவும். மாவு கலக்கும்போது நீரைக் கொஞ்சம் கொஞ்சமாய்த் தான் சேர்க்கவேண்டும். மாவு எல்லாவற்றிலும் நீரைச் சேர்த்ததும், மாவைக் கையால் உருட்டினால் உருட்டும் பதமும், உதிர்த்தால் மாவாகவும் ஆகவேண்டும். ஆகவே இதை நிதானமாய்ச் செய்யவும். நீர் கலந்த மாவை இரண்டு மணி நேரம் அப்படியே மூடி வைக்கவும்.

பின்னர் உருளி அல்லது வாணலியில் பொடி செய்த வெல்லத்தைப் போட்டுச் சுத்தம் செய்துவிட்டுப் பாகு காய்ச்ச வேண்டும். ஒரு கிண்ணத்தில் தண்ணீரை வைத்துக் கொண்டு பாகை அதில் விட்டால் நன்கு உருட்ட வரவேண்டும். அந்த உருண்டையை எடுத்து ஒரு தட்டில் போட்டால் "டங்"கென்று சத்தம் வரவேண்டும். இந்தப் பாகைக் கொஞ்சம் கொஞ்சமாய்க் கலந்து வைத்திருக்கும் மாவில் சேர்க்க வேண்டும். தேவையான பாகைச் சேர்த்ததும்,கீழேயே வைத்து நன்கு கலக்க வேண்டும். மாவும், பாகும் நன்கு கலந்ததும், நெய்யில் முந்திரிப் பருப்பு, பொட்டுக் கடலை, (இதற்குப் பொட்டுக்கடலையே ஏற்றது.), தேங்காய் வறுத்துச் சேர்த்து, ஏலப் பொடியும் சேர்க்கலாம்.

மற்றொரு முறை:
அரிசியை ஊற வைக்கவும். நீரை வடிக்கவும். மிக்ஸியில் போட்டு நன்கு மாவாக்கிச் சலித்து வைத்துக் கொள்ளவும். மாவை வெறும் வாணலியில் போட்டு நன்கு வறுத்துக் கொள்ளவேண்டும். வறுத்த மாவில் முன்னர் கூறி இருக்கும்படியாக வெந்நீரில் உப்பு, மஞ்சள் பொடி சேர்த்துக் கொண்டு கலக்கவேண்டும். இது ஈர மாவு என்பதால் நீரைக் கொஞ்சமாகவே கலக்கவேண்டும். சிறிது நேரம் வைத்துவிட்டு ஒரு வெள்ளைத் துணியில் மாவைப் பரப்பி, இட்லிப் பானையிலோ, அல்லது குக்கரிலோ ஐந்து நிமிஷம் வைக்க வேண்டும். மாவை ஒரு குச்சியால் கிளறினால் ஒட்டாமல் வரும் என்பதோடு முன்னர் சொன்ன பதத்துக்கும் வரும். கையில் பிடித்தால் பிடிக்கவும், உதிர்த்தால் உதிர்க்கவும் வரவேண்டும். பின்னர் பாகு வைப்பது, கலப்பது எல்லாம் மேலே சொன்னபடி தான். இதற்கு ஊற வைத்த துவரம்பருப்பை மாவில் வெந்நீர் கலக்கும்போதே சேர்த்துவிட்டுப் பின்னர் இட்லிப் பானையில் வேகவைக்கும்போதும் வைத்துவிட்டால் பருப்பு நன்கு வெந்துவிடும். இதன் சுவை தனியாக இருக்கும். முதலில் சொன்ன புட்டு ஒருவாரம் ஆனாலும் கெடாது. இது சீக்கிரம் பயன்படுத்த வேண்டும்.


டிஸ்கி: மண் சுமக்காமலே சாப்பிடும்னு போடறதுக்குப் பதிலா செய்யும் னு போட்டிருக்கேன் தலைப்பிலே. திருத்திட்டேன்.விளக்கெண்ணெய் ஊத்திட்டுக் கவனிச்சுச் சொல்லாமல் விட்ட நல்ல உள்ளங்கள் வாழ்க! வளர்க! :))))))))))))))))

8 comments:

  1. ஸ்வாமி!!! ஐ ஆர் 20 , 21 க்கு நான் எங்க போவேன் அய்யா?:( பொன்னி, ஜீரா தேவலையா? இருக்கவே இருக்கு தாய் லாங்க் க்ரெய்ன். இவர், ஒனக்கு இதெல்லாம் பண்ண வருமா நு கேக்கற் த்வனியே பயத்தை காட்டற மாதிரி இருக்கு. துர்கைக்கு நாளை இருக்கு சங்கதி:))ஆத்தாவ விட்டுடுவோமாக்கும் சாப்பிடவைக்காம? ஏன் இருக்கேன் இந்த இசக்கி ( தொழிலின் தயவாக சகோதரபாசத்தால்!! எனக்கு சூட்டப்பட்ட ஒரு பெயர்)தங்கைக்கும் ஃபோன் பண்ணிடுவேன்:))

    ReplyDelete
  2. sari, sari, irukkira arisiyileye seyyunga. இட்லிப் பானையிலே வேக வைக்கிற முறைனா கொஞ்சம் அனுபவப்பட்டவங்களைக் கூப்பிட்டுக்குங்க.

    Happy Puttu!

    ReplyDelete
  3. புட்டு செய்முறை அருமை.


    நான் இன்று அவல் புட்டு செய்தேன்.


    மண் சுமந்த பெருமான் நமக்கு எல்லா நலங்களும் அருளட்டும்.

    ReplyDelete
  4. Mrs Shivam
    Guess what!!!:-)
    பிட்டஹாசம். hurray!!

    ReplyDelete
  5. வாங்க கோமதி அரசு, அவல் புட்டு மிகவும் சீக்கிரமாய்ச் செய்யலாம், நல்ல அரிசி கிடைக்காதப்போ வசதியும் கூட. தினமும் வருவதற்கு நன்றி. எனக்கு வரமுடியலையேனு வெட்கமாவும் இருக்கு. இன்னிக்காவது முயல்கிறேன்.

    ReplyDelete
  6. ஹிஹிஹி, ஜெயஸ்ரீ, நிஜமாவா??? நல்லவேளை, பிழைச்சேன், உங்க ரங்குவுக்கும்(இணைய மொழியில் கணவருக்கு ரங்கமணி, மனைவி தங்கமணி) பிடிச்சது இல்லை??? தாங்கீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

    ReplyDelete
  7. பிடிச்சதா வா. அப்பா பையன் (ர் உங்க பாஷைல)ரெண்டு பேரும் ரசிச்சு சாப்பிட்டார்கள். நாம தான் பயத்தில் 3 பிடிச்சபிடிக்கு மேல போடல.அப்பாவுக்கு முந்திரிபருப்பு , தேங்காய் கண்ணில் காட்டாம டபாய்கலாம் நு பாத்தா, இவர் ப்லொக் ஐ படிச்சிட்டு தேங்காய், முந்திரி பருப்பெல்லாம் மிஸஸ் சிவம் போடசொல்லி இருக்காங்க ஒண்ணையும் என் ஷேர் லஇல்லைனு கொஞ்சம் ஒலம் விட்டு வணயமா வாங்கி சாப்பிட்டாச்சு!! என்ன கொஞ்சம் எலபொரேட் ப்ரொஸஸ்.but it's all worth the trouble in the end.எதிர் பார்க்காம கர்பா/ டாண்டியாக்கு போயிண்டு இருந்த சின்ன பொண்கள் 4 பேரும் வந்து சாபிட்டுட்டு போனா. a BIG THANKS FROM ALL OF US MRS SHIVAM .GOD BLESS:-))

    ReplyDelete
  8. புட்டு சாப்பிட்டேன்... :)

    ReplyDelete