Saturday, December 05, 2009

கனவு கலைந்தது!

ஆறு மாசமா ஏதோ ஒரு கனவிலே மூழ்கி இருந்தாச்சு. இப்போக் கனவு கலைந்தது. யதார்த்தத்துக்கு வந்தாச்சு. அநேகமாய் இனி பதிவுகள் ஒழுங்காய் வரும்னு நம்பறேன். பின்னூட்டங்களில் யாரும் கேட்காவிட்டாலும், தனி மடல்களிலும், தொலைபேசியிலும் நண்பர்கள் பதிவுகள் எப்போவோ ஒரு முறை போடுவதைப் பற்றி விசாரித்தார்கள். அவர்களுக்கு என் நன்றி. அதே போலப்பலர் பதிவுகளுக்கும் என்னால் போகவும் முடியலை. தனி மடல் அனுப்பிக் கூப்பிடறவங்க பதிவுகளே நிறைய இருப்பதால் எல்லார் பதிவுக்கும் போகவும் முடியலை. பல்வேறு தவிர்க்கமுடியாத காரணங்களால் ஆன இந்தத் தாமதங்கள் இனி இருக்காது என நம்புகிறேன். கூடிய வரையிலும் மூன்று நாளைக்கு ஒரு பதிவாவது போட முயல்கிறேன். நன்றி. கண்ணன் அடுத்த முக்கியமான நடவடிக்கையை ஆரம்பிக்கப் போகிறான். தெரிந்த கதை எனப் பலரும் சொன்னாலும் எப்படி நடந்திருக்கும், அதில் உள்ள சாத்தியக் கூறுகள், மேலும் என்ன நடந்திருக்கும் என்பதை இளைய தலைமுறைக்குப் புரிய வைப்பதற்காக எழுதும் இந்தக் கதைக்கு ஆதரவு கொடுக்கும் பலருக்கும் நன்றி.

7 comments:

  1. மிக்க மகிழ்ச்சி அம்மா. உங்க வருகையோடு கண்ணன் வருகையும் எதிர்பார்த்து... :)

    ReplyDelete
  2. என்ன ஆச்சு? எதுக்கு இப்படி ஒரு பதிவு!!!!

    ரைட்டு பதிவு வந்தா சரி ;)

    ReplyDelete
  3. நன்றி கவிநயா!

    கோபி, இத்தனைநாட்கள் பெண், பையர் எல்லாரும் வந்துட்டுப் போனது எனக்கு ஒரு கனவு மாதிரி இருக்கு. இப்போ அவங்க எல்லாரும் ஊருக்குப் போயாச்சு, இனிமேல் எப்படியும் இரண்டு வருஷங்கள் வரமுடியாது. அதான்! :((((( கனவிலே மிதந்துட்டு இருந்தேன், அது கலைஞ்சு போச்சு!

    ReplyDelete
  4. //மூன்று நாளைக்கு ஒரு பதிவாவது போட முயல்கிறேன்//

    எதுக்கு இந்த பில்டப்பு? :p

    ஒன்னும் அவசரமேயில்லை. சமையல் எல்லாம்(இப்பவாவது) முடிச்சுட்டு நிதானமா நேரம் இருந்தா பதிவு போடவும். :))

    ReplyDelete
  5. எதுக்கு இந்த பில்டப்பு? :p//

    அம்பி, வம்பி???? :P:P:P:P:P ரொம்ப ஆடாதீங்க, கணேசன் கிட்ட இப்போத் தான் சொல்லி வச்சேன் அடக்கச் சொல்லி! :P

    ReplyDelete