Wednesday, April 28, 2010

தமிழ்த்தாத்தாவுக்கு அஞ்சலி ஏப்ரல் 28


பெரிய உத்தியோகத்தில் இருந்தால் ஆங்கில நூல்களைப் படிப்பது, ஆங்கிலங்கற்றவர்களை வியப்பது, இங்கிலீஷ் நூலிலுள்ள கருத்து எந்தப்பாஷையிலும் இல்லையென்று சொல்வது முதலியவற்றைப் பெருமையாகக் கொள்பவர்கள் எந்தக் காலத்திலும் உண்டு. ஆனால் இப்போது அத்தகையவர்களது தொகை குறந்து வருகிறது. கிருஷ்ணசாமி ஐயர்ர் காலத்தில் ஆங்கிலமோகம் உச்சநிலையை அடைந்திருந்தது.

அவர் ஆங்கில அறிவில் சிறந்தவர்; அவருடைய தந்தையாரும் தமையனாரும் அவரும் வடமொழிப்பயிற்சியும் அந்த மொழ்யினிடத்தில் அன்பும் உடையவர்கள். இந்த இரண்டு பாஷைகளிலும் கிருஷ்ணசாம் இஐயருக்கு இருந்த அறிவும் அபிமானமும் மற்றப் பாஷைகளை வெறுக்கச் செய்யவில்லை. தமிழினிடத்தில் அவருக்கு இருந்த அபிமானத்தை நான் அனுபவத்தில் பல சமயங்களில் உணர்ந்திருக்கிறேன்.

வடமொழியில் அன்பிருந்தால் தமிழினிடத்தில் அபிமானம் உண்டாவது அந்தக் காலத்தில் அருமை. அறிவுக்கு உண்மையான மதிப்பை அளிக்கும் பெரியார்கள் ஒவ்வொன்றின்பெருமையையும் நன்கு அறிந்து பாராட்டி வருவார்கள்.

"எந்தப் பாஷையாக இருந்தால் என்ன? மனத்திற் பதியும்படியான நல்ல விஷயம் எங்கே இருக்கின்றதோ அதைத் தேடி அறிந்துகொள்ளவேண்டும்" என்பது கிருஷ்ணசாமி ஐயரது கொள்கை.

ஒருநாள் சென்ன இராசதானிக்கலாசாலைத் தமிழ் மாணவர் சங்கக் கூட்டத்திற்கு அவர் த்லைமை வகித்தார். காலஞ்சென்ற ஜி.ஏ. வைத்தியராமையர் அன்று "தமிழின் பெருமை" என்னும் விஷயத்தைப் பற்றிப் பேசினார். கிருஷ்ணசாமி ஐயர் தலைமை வகிப்பது தெரிந்து பலர் கூட்டத்திற்கு வந்திருந்தனர். ஸ்ரீசுப்பிரமணிய பாரதியாரும் வந்திருந்தனர்.

கிருஷ்ணசாமி ஐயர் என்ன பேசுவாரோ என்று யாவரும் ஆவலோடு எதிர்நோக்கி யிருந்தனர். சிலர், 'இவர் தமிழைப் பற்றி என்ன பேசப் போகிறார்? ஸம்ஸ்கிருதத்தைப் பற்றி வேண்டுமானாற் பேசுவார்." என்று நினைத்தார்கள்.

உபந்நியாசகர் பேசியபின்பு கிருஷ்ணசாமி ஐயர் பேசத் தொடங்கியபோது எல்லோரும் அவர் வாயையே பார்த்துக்கொண்டிருந்தனர். அவர் பேசலானார்.

"தமிழில் எத்தனை நூல்கள் இருக்கின்றன! திருவள்ளுவர் திருக்குறள் செய்த பாஷை இது; கம்பன் இராமாயணம் இயற்றியது இந்தப் பாஷையிலே; நாயன்மார் தேவாரம் பாடிய பாஷை; மாணிக்கவாசகர் திருவாசகம் அருளிய பாஷை; ஆழ்வார்கள் திவ்யப் ப்ரபந்தம் பாடியதும் இதிலேதான் என்று தொடங்கி வரிசையாகக் கூறிக்கொண்டே சென்றார். ஸ்ரீ சுப்பிரமணிய பாரதியார் அன்று அந்தப் பிரசங்கத்தைக் கேட்டுக் குதூகலத்தை அடைந்தார். அந்தப் பேச்சு அவர் உள்ளத்திலே ஒரு கிளர்ச்சியை உண்டாக்கியது; அதிலிருந்து ஒரு பாட்டுக்குரிய பொருளைக் கிரகித்துக்கொண்டார். தமிழ்நாட்டைப் பற்றி அந்த முறையிலே பாடவேண்டுமென்று அவருக்கு அன்று ஒரு கருத்து உண்டாயிற்றென்றே தோற்றுகின்றது. பாரதியாருடைய காதில் கிருஷ்ணசாமி ஐயருடைய பிரசங்கம் ஒலித்துக்கொண்டே இருந்தது. அவர் தமிழ்ப்பஷையைப் பற்றிச் சொன்னதைத் தழுவிப் பாரதியார் நாட்டைப் பற்றிப் பாடத் தொடங்கினார்.

"செந்தமிழ் நாடென்னும் போதினிலே இன்பத்
தேன் வந்து பாயுது காதினிலே" என்று தொடங்கும் பாடல் அது.
***************************************************************

ஒரு நாள் கிருஷ்ணசாமி ஐயரவர்கள் என்னுடைய விருப்பத்தின்படி சில அன்பர்களுடன் என் வீட்டுக்கு வந்திருந்தார். என்னுடைய புத்தகங்களையும், ஏட்டுச் சுவடிகளை வைத்திருக்கும் இடத்தையும், படிக்குமிடத்தையும், கையெழுத்துப் பிரதிகளையும் பார்க்கச் செய்தேன். "வெள்ளைகாரராக இருந்தால் தனியே பங்களா இருக்கும்; புஸ்தகசாலைக்குத் தனியிடம் இருக்கும்; வேலைக்காரகள் இருப்பார்கள். பலர் பாராட்டி ஆதரிப்பார்கள். நீங்க இந்தத் தேசத்திலே இருப்பதனால் இதற்கேற்றபடி வறிய நிலையில் சுருக்கமாக வைத்துக்கொண்டிருக்கிறீர்கள்; நீங்கள் தனியே சகாயமின்றி யிருப்பது எனக்கு வருத்தத்தைத் தருகின்றது.' என்று அவர் சொன்னார்.

அவர் வாயளவில் புகழ்ந்து பேசிவிட்டுச் செல்பவரல்லர்; எவ்வளவோ வித்துவான்களுக்கு எத்தனையோ விதமான உபகாரங்களைச் செய்திருக்கிறார். மகாமகோபாத்தியாயப் பட்டம் பெற்றவர்களுக்கு வருஷந்தோறும் துரைத்தனத்தார் நூறு ரூபாய் அளிப்பதற்கு அவர் முயற்சியே முக்கிய காரணம்.


தமிழ்த்தாத்தாவின் நினைவு மஞ்சரி முதற்பாகம் 10. வி. கிருஷ்ணசாமி ஐயர் என்ற கட்டுரையில் இருந்து சில பகுதிகள். நினைவு மஞ்சரி இரண்டாம் பதிப்பான இது வெளிவந்த ஆண்டு 1945, பார்த்திப வருஷம் ஐப்பசி மாதம். இன்று தமிழ்த்தாத்தாவை நினைவு கூர்வோம்.

டிஸ்கி: வேறொரு பதிவுக்காக வைத்திருந்த திரு மு.ராகவையங்கார் படம் தாத்தாவுக்குப் பதிலாக வந்துவிட்டது. ஜெயஸ்ரீக்குக் குழப்பம். ஹிஹிஹி. அ.வ.சி. மன்னிக்கணும் அனைவரும்.

7 comments:

  1. தமிழ்த்தாத்தா உ.வே.சா, தள்ளாத வயதிலும் தளராமல் தமிழ்த்தொண்டாற்றியவர்.துள்ளித்திரியும் தேனீ என்று அவரைப்பற்றி படித்ததாக நினைவு. இவ்வளவு தகவல்களை தொகுத்தமைக்கு நன்றிகள் பல!

    ReplyDelete
  2. Tamizh thaththa vu. vae swaminathar nu naan ninaiththaen. Ivar yarnu theriyallaiyae?

    ReplyDelete
  3. என்னுடைய அஞ்சலியும் செலுத்துகிறேன்

    ReplyDelete
  4. வாங்க அநன்யா, கருத்துக்கு நன்றி, தாத்தாவைப் பற்றிய ஏராளமான தகவல்கள் இருக்கின்றன. நேரம் கிடைக்கும்போது ஒண்ணொண்ணாப் போடறேன். நன்றி.

    ReplyDelete
  5. ஜெயஸ்ரீ, தாத்தாவின் நினைவுகள் அவை. அவருடைய நினைவு மஞ்சரியில் வக்கீல் வி. கிருஷ்ண ஐயர்(நம்ம சமைத்துப்பார் மீனாக்ஷி அம்மாளின் சித்தப்பா இவர், ஹிஹிஹி, மதுரைக்காரராச்சே! :P) அவர்கள் தமிழ்த் தாத்தாவையும், மஹாகவியையும் ஆதரித்த நினைவுகளில் சிலவற்றை எழுதி இருக்கிறார். அதிலிருந்து சில பகுதிகளைக் கொடுத்தேன், கட்டுரை ரொம்பப் பெரிசாகையால் முழுதும் கொடுக்கலை, அதனால் உங்களுக்குக் குழப்பம். நன்றி.

    ReplyDelete
  6. தாத்தாவே தாத்தாவுக்கு அஞ்சலியா?? நடத்துங்க தாத்தா!:))))))

    ReplyDelete
  7. ஜெயஸ்ரீ, படத்தைப் பார்த்ததும் தான் தவறு புரிந்தது. மாத்திட்டேன், நன்றிங்க! :)))))))))

    ReplyDelete