Saturday, December 11, 2010

அக்னிக்குஞ்சின் பிறந்த நாள்

அக்னிக்குஞ்சொன்று கண்டேன், ஆங்கோர் காட்டிடை பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு-தழல்
வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ??
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்!

பாரதியின் மேற்கண்ட பாடல் பலருக்கும் பலவிதமான பொருளைக் கொடுக்கிறது. எனக்குத் தோன்றிய பொருள்:

சக்தி உபாசகன் ஆன பாரதி தன்னுள்ளே தோன்றிய ஒரு சிறு பொறியைக் கண்டு விடுகிறான். கண்டு ஆனந்திக்கிறான். அந்தச் சின்னஞ்சிறு பொறியே அவன் உள்ளத்து மாசுகளை அழித்து உள்ளமெனும் காட்டைச் சீர் செய்கிறது. அந்தப் பொறிதான் அவன் சக்தி என்று உணர்ந்து அவன் அமைதியும் அடைகிறான். தன்னுள்ளே தோன்றிய உள்ளொளியைக் கண்டு கொண்ட பாரதி அந்த ஆநந்தத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் தத்தரிகிட தத்தரிகிட தித்தோம் எனக் குதித்துக்கொண்டு தன் உணர்வுகளை மேற்கண்ட பாடல் ஆக்குகிறான். இது என்னுடைய மூளையில் பல வருடங்களாய்த் தோன்றிய பொருள். தவறாயும் இருக்கலாம். அவரவர் கருத்தையும் சொல்லலாம்.

10 comments:

  1. மகாக்கவிக்கு வணக்கங்கள்!

    ReplyDelete
  2. பெண்களின்மேல் கட்டுப்பாடுகள் நிறைந்த‌ அந்தக் காலத்தில, ஒரு சிறுமி சைக்கிள் ஓட்டிட்டு போகிறதைப் பார்த்து ஒரு மனஎழுச்சியில் இந்த பாடலை எழுதினார்ங்கறாங்க, நிசமான்னு தெரியலை.

    தணியாத தழல்களில் நானும் ஒருத்தி. நினைவூட்டலுக்கு நன்றி.

    ReplyDelete
  3. என்னுடய அஞ்சலியும் கூட!!

    ReplyDelete
  4. செல்லம்மாள் பாரதி அவர்கள் ஒரு நாற்காலியில் உட்கார்ந்திருக்கிற மாதிரியும் பக்கத்தில் பாரதியார் நின்று கொண்டிருக்கிற மாதிரியும் ஒரு புகைப்படம் இருக்கும். இது தான் பாரதியின் படங்களில் என்னால் மறக்க முடியாதாத படம். அவரைப் பற்றி நினைவு கொண்டாலே இந்தப் படம் நினைவுக்கு வந்து விடும்.

    கெக்கேபிக்குணி அவர்கள் குறிப்பிட்டிருப்பது போல பெண்களின் மேல் கட்டுப்பாடுகள் நிறைந்த அந்தக் காலத்தில் பாரதி சொல்லிலும் பாட்டிலும் சொன்னது போலவே நடைமுறை வாழ்க்கையிலும் பெண்ணுக்கு அவ்வளவு மரியாதையும் மதிப்பும் கொடுப்பவராய் வாழ்ந்து காட்டியிருக்கிறார்.

    மஹாகவியை நினைவு கொண்டதில் பங்கு கொள்வதில் மனம் நிறைவு கொள்கிறது.

    மிக்க நன்றி.

    ReplyDelete
  5. வாங்க ரா.ல. நன்றி.

    ReplyDelete
  6. கெபி, எதிலே படிச்சீங்க இப்படி ஒரு தகவலைனு தெரியாது. ஆனால் அது சரியில்லையோனு நினைக்கிறேன். பெண்கள் முன்னேற்றத்தை பாரதி விரும்பினார்தான். இந்தப் பாடல் அதைச் சொல்லுவதாய்த் தோன்றவில்லையே! :(

    தணியாத தழல்களில் நானும் ஒருத்தி.//

    ம்ம்ம்ம்ம்ம்????? :))))))

    ReplyDelete
  7. வாங்க ஜெயஸ்ரீ, உங்க பாட்டி கிட்டே இருந்த கையெழுத்துப் பிரதிகள் மட்டும் கிடைச்சால்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் பெருமூச்சு விடறேன். நன்றிங்க.

    ReplyDelete
  8. ஜீவி சார், அந்தப் படத்தை நானும் பார்த்திருக்கேன். எல்லாத்தையும் விட "ஆர்யா" வரைஞ்ச பாரதி தான் என்னைக் கவர்ந்தவர்.

    நீங்க பாரதியைப் பத்திச் சொன்னதுசரியே. ஆனால் இந்தப் பாடல்?? சரி, அதுக்கு அர்த்தம் னு எனக்குத் தோணியதை இந்தப் பதிவிலேயே சேர்த்துடறனே!

    ReplyDelete
  9. நல்ல பதிவு !நினைவூட்டியதற்கு நன்றி கீதாம்மா

    ஜெயஸ்ரீ மேடத்திற்கு செல்லம்மாள் பாரதி அவர்கள் உறவா !ஆங்கில ஆதிக்கத்தை விரட்ட எதிர்ப்பை எழுத்து என்கிற அக்னி பொறியாக

    காண்பித்து அது எல்லார் மனதிலும் பற்றி கொண்டு எரிந்து ஆங்கிலேய ஆதிக்கம்

    அழியட்டும் என்று அதன் உட்பொரு ளாக எனக்கு தோன்றுகிறது

    ReplyDelete