Saturday, January 22, 2011

கேசரியோட வாழ்த்துகிறோம்.

 
 போன வாரம் ஜெயஸ்ரீ வந்தப்போ கேசரி பண்ணினேன். அவங்களுக்குத் தான் சாப்பிடக் கொடுத்து வைக்கலை. அதிக அலைச்சலிலே உடல்நலமில்லாமல் இருந்தாங்க. என்றாலும் இந்தக் கேசரியை இன்னிக்கு எல்கேவின் திருமண நாளுக்காகப் போடறேன், அதோட அம்பிக்குக் காட்டவேண்டாமா?? சுபாஷிணி வந்தப்போ படம் எடுக்க மறந்துட்டேன். அப்புறம், அப்புறம்னு கடைசியிலே கூகிளாரைக் கேட்டு வாங்க வேண்டி இருந்தது. அதான் இப்போ அம்பிக்குக் காட்டறதுக்காகவும் போடறேன். கேசரியைப்பார்த்துட்டு அம்பி ஓடி வரமாட்டாரா? அதான்! :P மு.ப. போட்டிருக்கேன் திவா. தி.ப. இல்லை. தீர்ந்து போச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்! :D
 
Posted by Picasa
அம்பி வந்தா கேசரி என்னமோ கொடுக்கப் போறதில்லை. படத்திலேயானும் பார்த்துக்கட்டுமே!

எல்கேவுக்கும், அவர் மனைவிக்கும் திருமணநாள் வாழ்த்துகள், கொஞ்சம் தாமதமாய். வெளியே போயிட்டேன், இப்போத் தான் வந்தோம். அதான் தாமதம்!

21 comments:

  1. கீதாஜி.
    அதுக்கு அல்வாவே செஞ்சிருக்கலாம். :))))

    அல்வா குடுத்தாலும் குடுக்கலேன்னாலும் சமயத்துக்கு ஏத்த மாதிரி ப்ரஸ்தாபிச்சுக்கலாம் இல்லையா? :))))

    எண்ண கேசரி என்று உங்களுக்கு பட்டம் வழங்குகிறேன்.

    எண்ணை.... ச்சீ என்ன இருந்தாலும் வரலாறு முக்கியமில்லையா அமைச்சரே. :))))))

    ReplyDelete
  2. இங்கையும் வாழ்த்துக்கள் சொல்லிக்கிறேன் ;))

    கேசரி எங்களுக்காச்சும் உண்டா தலைவி ;))

    ReplyDelete
  3. வாங்க அஷ்வின் ஜி,
    முதல்லே என்னை அமைச்சர் என்பதை வன்மையாகக்கண்டிக்க்க்க்க்க்க்க்க்க்க்க்கிறேன். இந்த வன்மை போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா? :))))) தலைவி எப்படி அமைச்சராகலாம்??? அதுக்காகவே உங்களுக்குக் கொஞ்ச நாட்கள் தலைவின்னா என்னனு படிச்சுத்தேர்வு எழுதணும்னு தண்டனை கொடுக்கிறேன்.

    ம்ம்ம்ம் அல்வா கொடுக்கலாம் தான். முதல் காரணம் அவங்க வரவு திடீர் வரவு. அல்வா எல்லாம் திடீர்னு கொடுக்க முடியாது! அதோட அல்வா பண்ணி இருந்தால் நம்ம ரங்க்ஸ் கிட்டே இருந்து காப்பாத்தறது கஷ்டம். அவரோட ஃபேவரிட்! ஏற்கெனவே சர்க்கரை இருக்கு! இதுன்னா கண்ணிலே காட்டிட்டு எடுத்து விநியோகம் பண்ணிடுவேன்! :))))))))))))

    ReplyDelete
  4. வாங்க கோபி, எங்கே நீங்கதான் தலையையே காட்டறதில்லையே! அதுக்கு வேறே நான் கொழுக்கட்டையைக் காட்டிப்பயமுறுத்திட்டதாச்சொல்லிட்டு இருக்கார்! என்னனு சொல்றது போங்க! :P

    ReplyDelete
  5. சாப்பிட்டேனே மிஸஸ் ஷிவம் . நன்னா இருந்தது.அது எப்படி glossy யா texture ஓட பண்ணறேள்?எனக்கு இப்படி பண்ண வரதில்லை. அதனால பண்ணறதே இல்லை!!! ஆனாலும் என்னிக்குமே பிடிச்ச சேவொரி பஜ்ஜி தான் ரொம்ப பிடிச்சது . விட்ட ரெண்டையும் சாப்பிட்டிருக்கலாம்.இனிமே படம் பாத்து தான் ஆறுதல் ஒரு வருஷத்துக்கு :((

    ReplyDelete
  6. பாட்டி ஏன் கேசரி போடி போட்டிருக்கீங்க ...? அந்த பொடி உடல்நலத்திற்கு கேடு...

    சரி சரி செஞ்சது தான் செஞ்சுடீங்க... அப்படியே அத பொட்டலம் கட்டி இங்க அனுப்புங்க... எனக்கு கேசரினா ரொம்ப பிடிக்கும்...

    @அஷ்வின்ஜி உங்கள் கருத்தை நான் வன்மையாக கண்டிக்கின்றேன் .... எப்படி நீங்க பாட்டிய, தானை தலைவியை அமைச்சர்னு நீங்க எப்படி சொல்லலாம் ....

    ReplyDelete
  7. திருமணநாள் வாழ்த்துக்கள் எல்.கே அவர்களுக்கு.

    கேசரி எங்களுக்கு பார்வைக்கு மட்டுமா?

    ReplyDelete
  8. கீதா மாமி உங்கள் வாழ்த்துக்கு நன்றி. இப்பதான் வீட்டுக்கு வந்தேன் :)

    ReplyDelete
  9. நன்றி கோபி , கோமதி மேடம்

    ReplyDelete
  10. மு.ப. போட்டிருக்கேன் திவா. தி.ப. இல்லை. தீர்ந்து போச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்! :D//
    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!

    ReplyDelete
  11. வாழ்த்துகள் எல்கே!

    ReplyDelete
  12. நன்றி திவா அண்ணா

    ReplyDelete
  13. மாமி பஜ்ஜி துணை இல்லாமல் கேசரி மட்டும் தனியாக.
    அம்பி அவர்கள் வரும்பொழுது பஜ்ஜி /பக்கோடாவும் உண்டா

    ReplyDelete
  14. வாங்க ஜெயஸ்ரீ, back to pavilion?? உடல் நலம் பரவாயில்லையா இப்போ?? நீங்க வந்துட்டுப் போனதே கனவாட்டமா இருக்கு! இன்னிக்கு அதான் பேசிண்டிருந்தோம்! :)

    ReplyDelete
  15. அப்புறமா பளபளப்பு எல்லாம் நெய்யிலே இருந்து வந்திருக்கும்!:) சுத்தமான பசுநெய்! நிஜம்மாவே!

    ReplyDelete
  16. பாலாஜி, அதெல்லாம் இந்தக் கேசரிப்பவுடர் தீங்கு விளைவிக்காததுனு பார்த்துத்தான் வாங்கறோம். ஒருமுறைக்கு இரு முறை செக் பண்ணிக்குவோம். நீங்க சொல்றாப்போல் சில தயாரிப்பு இருக்கு.

    ஹிஹிஹி, ஆதரவுக்கு நன்னி ஹை!

    ReplyDelete
  17. வாங்க கோமதி அரசு, கேசரி எங்க வீட்டுக்கு வந்தால் உண்டு! இல்லைனா பார்வைக்கு மட்டும் தான்! :)))))) எப்போ வரீங்க??

    ReplyDelete
  18. நன்றி எல்கே.

    ReplyDelete
  19. @திவா, முதல்நாள் பொங்கல்லே இருந்த தி.ப. எல்லாத்தையும் போட்டுட்டேனே! அப்புறம் எங்கே போறது?? நீங்க என்னைப்பார்க்க வாங்க, கேசரியிலே மு.ப.தி.ப. எல்லாம் போட்டுப்பண்ணி வைக்கிறேன். செரியா??????? :)))))))))))))

    ReplyDelete
  20. ராம்ஜி யாஹூ, பஜ்ஜியும் பண்ணினேன், அன்னிக்குக் கனுங்கறதாலே வாழைக்காயும், உருளையும் மட்டும் போட்டுப் பண்ணினேன். ம்ம்ம்ம்ம்ம்???? அதையும் படம் எடுத்துப் போட்டிருக்கணும் இல்லை?? தோணலை! :))))))

    ReplyDelete
  21. ஆஹா.... கேசரி... நான் நேத்து தான் செய்தேன்... ஒரு பிரெண்ட் வந்து இருந்தாங்கன்னு... இன்னும் கூட fridge ல இருக்கு கொஞ்சம்... இல்லேனாலும் இப்படி படம் பாத்ததுக்கு செஞ்சுருப்பேன்...
    (காத கொண்டாங்க ஒரு ரகசியமான கேள்வி கேக்கணும்... இதெல்லாமும் பக்கத்து டீ கடைல வாங்கினதாமே? தோஹால இருந்து வந்த செய்தி... அப்படியா மாமி? சும்மா கேட்டேன்... நான் ஒண்ணும் சொல்லலை... :)))))

    ReplyDelete