Sunday, January 30, 2011

எல்லாரையும் பயமுறுத்த வரும் சீனாச்சட்டி!

தொண்டரடிப் பொடிங்களெல்லாம் மொக்கை போட்டாத் தான் கண்டுக்கறாங்க! அநியாயமா இல்லை?? அது போகட்டும். இப்போது என்னுடைய மண்டையை உடைக்கும் சந்தேகம் ஒருத்தரைப் பார்க்கமலேயே பிடிக்காமல் போகுமா?? இந்த வலை உலகிலேயே பலரும் பலரைப் பார்த்தது கூடக் கிடையாது. ஆனாலும் சிலருக்கு சிலரைக் கண்டால் அவங்க ஒதுங்கியே இருந்தாலும், ஏதோ ஒரு சின்னக் காரணம் கிடைச்சால் அதைப்பிடித்துக்கொண்டு அவங்களை வெறுப்பது ஏன்?? குழப்பமோ குழப்பம்! 2009-ம் வருஷம் பிறந்தப்போவும் கொஞ்சம் மனசு கஷ்டப்படும்படியான நிகழ்வுகள். அதுக்கப்புறம் இப்போவும். ஒருத்தருக்குவாழ்த்துச் சொன்னதுக்கு பதில் சொன்னால் அவங்களுக்குப்பிடிக்கலை! இத்தனைக்கும் அவங்களைப் பார்த்ததே இல்லை! ஏன் இப்படி?? போகட்டும். இதெல்லாம் சீரியஸான விஷயங்கள். நமக்கும் அதுக்கும் ரொம்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப தூரமாச்சே. அடுத்து உங்களைப் பயமுறுத்த வருது சீனாச்சட்டியும், இட்லித் தட்டும். அப்புறமா வெண்கலப்பானை(என்னனு தெரியுமா?) வெண்கல உருளி, (இதிலே அரிசி உப்புமா சூப்பரா இருக்கும்) எல்லாம் வரிசையா வரும். இட்லித் தட்டுனதும் அங்கே பாருங்க, ஏடிஎம் ஓடறாங்க! அட, ஏடிஎம், ஏடிஎம், எங்கே ஓடறீங்க??? வாங்க, வாங்க, உங்களுக்குத் தான் இந்தப் பதிவே போடப் போறேனாக்கும். வெயிட்டுங்க, படங்களை வலை ஏத்திட்டுப் போடறேன்.

22 comments:

  1. என்ன குழப்பம்?

    எதுக்கு இப்படிப் பயப்படுத்தறீங்க?

    போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும்...........னு விடுங்க.

    ReplyDelete
  2. சூப்பர் ட்ரெய்லர்!!

    படத்தை ஆவலோடு எதிர்பார்த்திருக்கும் காத்திருக்கும் பழமை-ரசிகை!!

    (இலவசங்கள் ஏதும் கிடையாதா?) :-))))))

    ReplyDelete
  3. //அப்புறமா வெண்கலப்பானை(என்னனு தெரியுமா?) வெண்கல உருளி,//

    aha theriyum

    ReplyDelete
  4. என்ன ஆச்சு ?? எப்பவும் எதை பற்றியும் கவலைபடதா நீங்களா இப்படி. விடுங்கள்

    ReplyDelete
  5. பயப்படுத்தலை துளசி! :)))) இதுக்கெல்லாம் அஞ்சுவோமா?? சும்ம்ம்மா ஒரு சத்தமான சிந்தனை1 அம்புடுதேன்!!!!!!

    ReplyDelete
  6. வாங்க ஹூஸைனம்மா, இலவசம் தானே உண்டு, உண்டு. ஈயச் செம்பைப் போட்டுடலாம் இலவசமா! என்ன சொல்றீங்க?? அப்புறம் அது அழும் இல்ல??

    ReplyDelete
  7. ம்ம்ம் எல்கே உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும், சிலருக்குத் தெரியலை! :(

    ReplyDelete
  8. கவலை எல்லாம் இல்லை எல்கே, வருத்தம் தான்! :(

    ReplyDelete
  9. என்னாச்சு கீதா. யாருமேல உங்களுக்கு வருத்தம்.
    விட்டுடுங்கோ. போனாப் போகிறார்கள். சீனாச் சட்டி எங்கே.

    ReplyDelete
  10. என்னம்மா இது? ஒண்ணுமே புரியலை. கவலையும் பட வேண்டாம், வருத்தமும் பட வேண்டாம். சந்தோஷம் மட்டும் போதும். :)

    ReplyDelete
  11. அதெல்லாம் சரியாப் போச்சு வல்லி, எல்லாவற்றையும் கடந்து தானே வரணும்! நேத்திக்கு இருந்த மனநிலை! :)))))) இன்னிக்கு வெளியே வந்தாச்ச்ச்ச்ச்சு! :D

    ReplyDelete
  12. சந்தோஷம் தான் கவிநயா, வரவுக்கும், கருத்துக்கும் நன்றி. :D

    ReplyDelete
  13. சரி ஆடி கழிஞ்சு அஞ்சாம் நாள் கோழி அடிச்சு கும்பிட்டாளாம் னு எங்க தாயம்மா சொல்லுவா அத மாதிரி இப்போ எனக்கு என்ன doubt நா... இந்த கல் சட்டி மாக்கல்லா கருங்கல்லா?? சீனா சட்டி தானே நம்ப பழைய இரும்பு இலுப்ப சட்டி?இதுல கல்கத்தா மொட்டை இலுப்ப சட்டினு ஒண்ணு உண்டோ?? சரி சரி வரட்டும் பாக்கறேன்:))

    ReplyDelete
  14. வாங்க ஜெயஸ்ரீ, இரும்புச் சட்டி வேறே, சீனாச் சட்டி வேறே இல்லையோ?? நான் சொல்றது இரும்புச் சட்டி இல்லை. சீனாச் சட்டி, வார்ப்பிரும்பில் செய்தது. :)))))) சட்டி இதோ வந்துடுத்து, விளக்கங்கள் சேர்க்கணும்! பாருங்க! :D

    ReplyDelete
  15. //ரி ஆடி கழிஞ்சு அஞ்சாம் நாள் கோழி அடிச்சு கும்பிட்டாளாம் னு எங்க தாயம்மா சொல்லுவா அத மாதிரி இப்போ எனக்கு என்ன doubt நா... இந்த கல் சட்டி மாக்கல்லா கருங்கல்லா?? சீனா சட்டி தானே நம்ப பழைய இரும்பு இலுப்ப சட்டி?இதுல கல்கத்தா மொட்டை இலுப்ப சட்டினு ஒண்ணு உண்டோ?? சரி சரி வரட்டும் பாக்கறேன்:))//

    சுத்தமா குழம்பிட்டேன்! பதிவு வரட்டும் பார்க்காலாம். :-))

    ReplyDelete
  16. //ஏதோ ஒரு சின்னக் காரணம் கிடைச்சால் அதைப்பிடித்துக்கொண்டு அவங்களை வெறுப்பது ஏன்?? //

    இந்த குழப்பம் எனக்கும் ரெம்ப நாளா இருக்கு மாமி... பதில் தான் காணோம்... ஹ்ம்ம் ..... (ஒருவேள என் இட்லி கதை அவங்க காதுக்கும் போயடுச்சோனு நெனச்சுப்பேன்... :)))

    ReplyDelete
  17. //இட்லித் தட்டுனதும் அங்கே பாருங்க, ஏடிஎம் ஓடறாங்க! அட, ஏடிஎம், ஏடிஎம், எங்கே ஓடறீங்க??? வாங்க, வாங்க, உங்களுக்குத் தான் இந்தப் பதிவே போடப் போறேனாக்கும்//

    ஆஹா... எனக்கே எனக்கா? இப்படி சொல்லிட்டு கடைசீல ஆப்பு வெப்பீங்கனு நான் நெனச்சது போலவே ஆகி போச்சு... ஹ்ம்ம்... :))))

    ReplyDelete
  18. //இப்போது என்னுடைய மண்டையை உடைக்கும் சந்தேகம் ஒருத்தரைப் பார்க்கமலேயே பிடிக்காமல் போகுமா?? இந்த வலை உலகிலேயே பலரும் பலரைப் பார்த்தது கூடக் கிடையாது. ஆனாலும் சிலருக்கு சிலரைக் கண்டால் அவங்க ஒதுங்கியே இருந்தாலும், ஏதோ ஒரு சின்னக் காரணம் கிடைச்சால் அதைப்பிடித்துக்கொண்டு அவங்களை வெறுப்பது ஏன்?? //

    சிலரை பார்க்காமலேயே பிடிக்குதே! அது போல ஏன் பார்க்காமலே பிடிக்காம இருக்கக்கூடாது? எல்லாம் ஜாதக விசேஷம்! நெடு நாள் ப்ரென்ட்ஸ் கூட திடீர்ன்னு பிரிஞ்சுடுவாங்க. அல்லது நட்பு தீவிரமில்லாம போகும். இதை ஜாதகத்தால் எக்ஸ்ப்லெய்ன் பண்ணாலாம்ன்னு அஸ்ட்ராலஜி மாகஜின் லே படிச்சேன்.

    ReplyDelete
  19. ஜெயஸ்ரீ, ஒரே சட்டியா வந்ததிலே கல்சட்டி பற்றிய உங்க சந்தேகத்தைக் கவனிக்கலை, மாக்கல் சட்டிதான். இதிலே டூப்ளிகேட் உண்டு, பார்த்து வாங்கணும்! :)

    ReplyDelete
  20. சுத்தமா குழம்பிட்டேன்! பதிவு வரட்டும் பார்க்காலாம். :-))//

    ஹிஹிஹிஹி, சந்தோஷமா இருக்கு! :P

    ReplyDelete
  21. ஏடிஎம், அதான் புரியலை! என்னவோ போங்க! :( ஆனா உங்க விஷயத்திலே இட்லியோட சதி இருந்திருக்க சான்ஸ் இருக்கு! :P

    ஹிஹிஹி, ஆப்பு வச்சாச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்! :D

    ReplyDelete
  22. @திவா,
    நெடு நாள் ப்ரென்ட்ஸ் கூட திடீர்ன்னு பிரிஞ்சுடுவாங்க. அல்லது நட்பு தீவிரமில்லாம போகும்.//

    :(((((((((((((( ஓனு வாய் விட்டு அழுதால் சரியாகுமா என்ன?? ம்ஹும்! நோ சான்ஸ்! :((((((((
    என்னாலே நினைக்கவே கஷ்டமா இருக்கு! :((((

    ReplyDelete