Thursday, January 05, 2012

ஓட்டுப் போடுங்கப்பா! எல்லாரும்!

எங்கள் ப்ளாக் கின் இடப்பக்க மூலையில் இருக்கும் ஓட்டுப்பெட்டியிலே போய் எல்லாரும் உங்க வாக்குகளை எனக்கே, எனக்கு மட்டுமே அளிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். ஒருத்தர் எத்தனை ஓட்டு வேணாப் போடலாம்னு சொன்ன எங்கள் ப்ளாக் என்னை ஒரு ஓட்டுக்கு மேல்(ஹிஹிஹி, எனக்குத்தான் அந்த ஒரு ஓட்டையும் போட்டேன், இன்னொரு ஓட்டும்போட்டுக்கலாம்னு பார்த்தா விடலை, அல்பம்)போட அனுமதிக்கவில்லை. இந்தப் பாரபட்சத்தை வன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்மையாகக் கண்டிக்கிறேன்.

வோட் ஃபார் எனக்கே!

சீக்கிரமாப் போய் வரிசையிலே நின்னு ஓட்டுப் போடுங்க!


லேட்டஸ்ட் வாக்குப்பதிவு நிலவரப்படி கீதா சந்தானம் 2% வாக்குகள் அதிகம் பெற்று முன்னணியில் நிற்கிறார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். யாரோ துரோகி அவங்க பெயருக்கும், என் பெயருக்கும் உள்ள ஒற்றுமையைப் பார்த்துட்டு எனக்குப் போட வேண்டிய ஓட்டை எல்லாம் அவங்களுக்குப் போட்டுட்டாங்களோ?? என்ன போங்க! விறுவிறுப்பா கான்வாசிங் எல்லாம் செய்தும் கூட இப்படி ஆயிடுதே! இலவசம் அறிவிக்க வேண்டியது தான்! :)))))))

விரைவில் வருகிறது அறிவிப்பு.

இலவசம் அறிவிச்சு மெயில் அனுப்பியும் எங்கள் ப்ளாக் தூங்கிட்டு இருக்கு போல. அதுக்குள்ளே மீனாக்ஷி எல்லாரையும் டெபாசிட் இழக்க வைச்சுடுவாங்க போலிருக்கு. கான்வாசிங்கே ஆரம்பிச்சிருக்க வேண்டாமோ? சொ.செ.சூ??????????????????????????

26 comments:

  1. கீதாம்மா... பாத்து... அங்கே ரெண்டு கீதாக்கள் இருக்காங்க. மக்கள் மாத்தி ஓட்டு போட்டுடப் போறாங்க. தெளிவா சொல்லுங்க. ஏற்கனவே நெறைய பேரு மாத்திப் போட்டுட்டாங்க போலிருக்கு. :-)

    ReplyDelete
  2. என்னையும் ஒரு ஓட்டுக்கு மேல் போட விடமாட்டேங்குதுங்க உங்க பிளாக்கு. யாருகிட்ட கம்ப்ளெய்ன்ட் பண்ணோணுமுங்க?

    ReplyDelete
  3. என்னருமை நண்பர்களே... கீதா மேடத்துக்கு நல்ல வோட்டு எல்லாம் போட்டிங்கன்னா, எனக்கு நிறைய கள்ள வோட்டுப் போட்டுட்டு வரும்படி கேட்டுக்கறேன். ஹி... ஹி...

    ReplyDelete
  4. நீங்களே உங்க ஓட்டை இன்னும் போடலே போல இருக்கே? புத்திமதி எல்லாம் அடுத்தவங்களுக்கு மட்டும்தானா?

    ReplyDelete
  5. நல்ல வேளை கூட்டம் சேரும் முன்
    ஓட்டு போட்டுவிட்டேன்
    காசுதராமலே ஒட்டு கேட்கிற மாதிரி
    பதிவு தராமலே ஓட்டு கேட்ட உங்க
    நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு
    தொடர்ந்து வருகிறேன்
    தொடர வாழ்த்துக்கள்
    த.ம 2

    ReplyDelete
  6. முதல்ல இந்தப் பதிவுக்கு ஒரு ஓட்டுப் போட்டுட்டேன்:))!

    தங்கத் தவளைகளை வாசித்து விட்டு அங்கேயும் போடறேன்.

    வெற்றிக்கு வாழ்த்துகள்:)!

    ReplyDelete
  7. ஒட்டுப்போட்டேங்க வரிசைலாம் இல்லியே nநான் மட்டும்தான் இருந்தேன்.

    ReplyDelete
  8. கீதா மாமி, நான் நேத்திக்கே உங்க பெரிய கதைக்கு, ஓட்டு போட்டுட்டேன். இன்னைக்கும் போட்டு விடுகிறேன்.

    ReplyDelete
  9. வாங்க குமரன், சொல்றச்சேயே வயித்தைக் கலக்குது! :))))))
    அதுவேறே அவங்க பேரிலேயும் முதல்லே "ச"விலே தான் ஆரம்பிக்குது! என்ன ஒரு பிரச்னை போங்க! :))))))

    அது சரி, உங்க ஓட்டை எனக்குத்தானே போட்டீங்க??

    ReplyDelete
  10. அட? பழனி. கந்தசாமி சார், உங்க ஓட்டை எனக்காக எங்கள் ப்ளாகிலே போய்ப் போடுங்க சார், நீங்க தமிழ்மணத்திலே போட்டிருக்கீங்க போல! :))))))
    ஹிஹீஹி, அங்கே கள்ள ஓட்டெல்லாம் அனுமதிக்கிறதில்லை! :))))) எங்கள் ப்ளாக் சுட்டி இந்தப் பதிவிலேயே கொடுத்திருக்கேன் பாருங்க.

    ReplyDelete
  11. @கணேஷ்,

    ஆஹா, எதிர்க்கட்சியின் வளையத்துக்குள்ளேயே துணிச்சலாக நுழைந்து பிரசாரத்தையும் ஆரம்பிச்சாச்சா? இதிலே கள்ள ஓட்டுக்குப் பிரசாரம் வேறேயா? வன்ன்ன்ன்ன்ன்ன்ன்மையாகக் கண்டிக்கிறேன்.

    தோழர்களே/தோழிகளே, பொங்கி எழுந்து இந்த அராஜகத்தைக் கண்டித்து நீங்க போட்ட ஓட்டை எல்லாம் மறுபடி எனக்கே போடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    ReplyDelete
  12. பழனி கந்தசாமி சார், தமிழ்மணம் ஓட்டுப்பெட்டியிலே நான் ஓட்டே போடறதில்லைனு சபதமே எடுத்திருக்கேனாக்கும்! :))))))))

    ReplyDelete
  13. ரமணி சார், நீங்களுமா? கடவுளே, தலை சுத்துதே. பதிவிலே சுட்டி கொடுத்திருக்கேனே, ஒரு நிமிஷம் போய்ப் பார்த்திருக்கக் கூடாதோ?

    இருங்க பிரசாரத்துக்குப் போஸ்டர், டிஜிடல் பானரோடு வரேன்.

    ReplyDelete
  14. ரா.ல. அப்பாடா, ஒரு ஆறுதலான விஷயம்! நன்றியோ நன்றி

    ReplyDelete
  15. வாங்க லக்ஷ்மி, எங்கே போட்டீங்க? இங்கே அதைத் தான் எல்லாரும் குழப்பிட்டு இருக்காங்க. :))))

    ReplyDelete
  16. ராம்வி, நன்றியோ நன்றி. முடிஞ்சா கள்ள ஓட்டையும் போட்டுடுங்க!:)))))))

    ReplyDelete
  17. ராம்வி, நன்றியோ நன்றி. முடிஞ்சா கள்ள ஓட்டையும் போட்டுடுங்க!:)))))))

    ReplyDelete
  18. ஶ்ரீராம், க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    ReplyDelete
  19. தலைவி காலையில முதல்ல வரிசையில நின்னு ஓட்டு போட்டாச்சி ;-))

    ReplyDelete
  20. ஆ! இதை நான் க&பே பண்ணி உங்க பிளாக்குல போடலாம்னு வந்தா... முந்திக்கிட்டீங்களே, நியாயமா?

    ReplyDelete
  21. கோபி, நன்றிப்பா.

    @அப்பாதுரை, விட்டுடுவோமா என்ன? :P

    ReplyDelete
  22. பார்த்தீங்களா ;கடைசியா தான் எனக்கு தெரிவிக்கறீங்க
    என்னாலே முடிஞ்ச அளவு ஓட்டு போட்டு உங்களை 18 ல இருந்து 21 க்கு கொண்டாந்து உங்களையும் முதல் இடத்திற்கு கொண்டு வந்துட்டோம் :)

    இன்னும் வெகுமதி கொடுத்தால் இன்னும் ஓட்டு போடப்படும் கீதாம்மா :)

    ReplyDelete
  23. இந்த ரகசியம் நமக்குள்ளே இருக்கட்டும்! நீங்க கடத்தி வைத்து இட்லி செய்முறையை சொல்லி ஆயிரம் தடவை இம்போசிசன் எழுத வைத்து கொண்டு இருக்கும் அப்பாவிக்கு தெரிய வேண்டாம் :)

    ReplyDelete
  24. அம்மா, நீங்கதானே (23) முன்னணியில் இருக்கீங்க!

    ReplyDelete