Monday, March 05, 2012
ஆயிரத்தில் ஒருத்தியம்மா நானு!
தில் தோ பாகல் ஹை படத்தைப் பத்தி ரொம்பச் சொன்னாங்களேனு பார்த்தேன். அறுவை; மகா இழுவை. என்னதான் டான்ஸ் ட்ராமாவா இருந்தாலும் கதை கொஞ்சம் வலுவானதா இருந்திருக்கலாம். இதுக்குப் போய் ஏகப்பட்ட அவார்டாமே! சகிக்கலை! :)))))
ஆயிரத்தில் ஒருவன்: ஹிஹி, எம்ஜிஆரோடது இல்லைங்க. செல்வராகவனோடதாம். நேத்திக்குப் பையர் பார்த்துட்டு இருந்தார். கணினியிலே நம்ம ரங்க்ஸ் ஆக்கிரமிப்பு. ஆகவே சரினு உட்கார்ந்தேன். தலை சுத்தல். இந்தப் படத்துக்கு ஏகப்பட்ட எதிர்ப்பாம்; விவாதங்களாம். திரு ராமச்சந்திரன் (சமூக வரலாற்று ஆய்வு நிறுவனர்) வசனங்களாம். சேர, சோழ, பாண்டியரில் சோழர்களைப் பழிவாங்க பாண்டிய நாட்டு இளவரசி (ரிமா சென்) கிளம்பிப் போறாங்களாம். பாண்டிய இளவரசிக்கு ஒரு பாண்டிய நாட்டுப் பெண் கிடைக்கலையா? இல்லை தமிழ்ப் பெண்ணே கிடைக்கலையா? அந்தக் காலத்துச் சோழ நாட்டு வசனங்களை எழுதினது திரு ராமச்சந்திரன்னு சொன்னாங்க. உதட்டசைவுக்குச் சில இடங்களில் வசனங்கள் பொருந்தவே இல்லை. என்றாலும் ராமச்சந்திரன் அவர்களின் உழைப்பைப் பாராட்டலாம்.
சோழர்களை இழிவு படுத்தியதாகச் சிலருக்கு வருத்தம் எனவும் கேள்விப் பட்டேன். வேடிக்கை என்னவென்றால் இத்தனை சர்ச்சைகளுக்கு இந்தப் படம் உள்ளாகி இருக்கிறது. ஆனால் எனக்கு இந்த மாதிரி ஒரு படம் வந்ததே தெரியாது. நேத்திக்குப் படத்தைப் பார்க்கிறச்சே தான் முதன்முதல் கேள்விப் பட்டேன். எம்ஜிஆர் படம்னு தான் நினைச்சேன். அப்புறம் தான் சூர்யா தம்பி கார்த்தி அல்லது கார்த்திக் நடிச்சதாம். ஆனால் அவரோட பங்கைத் தேடிப் பிடிக்க வேண்டி இருக்கு. பார்த்திபன் பாடும் பாட்டு, சொந்த ஊரை நினைச்சு கல்லாடிய இடம் எங்கேயோ என்னமோ அதன் ராகம் நல்லா இருக்கு. ஏற்கெனவே நடக்கப் போறதை முன் கூட்டி வரையப்பட்ட ஓவியங்கள் சொல்வதும் நல்லா இருக்கு. பாண்டியர் குலதெய்வம் அது இதுனு ஒரே சென்டிமென்டல்! :)))))
மொத்தத்தில் காது நிறையப் பூ சுத்திவிட்டாங்க. வாசம் இருந்தாலாவது பொறுத்துக்கலாம். காகிதப் பூ.
க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் பத்தி பிரிச்சு எழுதினா அப்படி வரவே இல்லையே! :(
ReplyDeleteநானும் இந்தப் படத்தைப் பார்த்திருக்கிறேன். கவர்ச்சி, காதுல பூ என்று சரி விகிதத்துல கலந்த கலவை! செம நீளம் படம்!
ReplyDeleteஇம்புட்டு சின்னதாக விமர்சனம் வருமுன்னு எதிர்பார்கல தலைவி ;-)
ReplyDeleteசோழகர்கள் பத்தி ஒரு பிடி பிடிப்பிங்கன்னு எதிர்பார்த்தேன் ;-))
நல்ல வேளை இந்தப் படத்தினை தியேட்டரில் சென்று பார்க்கலை நான்....
ReplyDelete”உலகத் தொலைகாட்சிகளில் முதல் முறையாக” போடும்போது தான் பார்த்தேன்... உங்களுக்குத் தோன்றிய அதே எண்ணங்கள் எனக்கும்....
இந்தப்படத்தோட ட்ரெய்லர்லாம் டி.வி.ல வரும்போது பாத்திருக்கேன் அந்தப்படம் பார்க்கனுமென்கிர ஆசையே போச்சு
ReplyDeleteபழைய படத்தோட பெயரை வைச்சு புதுப் படங்கள் நிறைய வருது போலிருக்கு. நான் கூட இப்படி ஏமாந்தேன். பழைய படத்தை எடுத்தாங்களானு பாத்தா அதுவும் இல்லை.
ReplyDeleteவாங்க ஶ்ரீராம், நல்ல வேளையா முழுப் படமும் பார்க்கலை. :))))
ReplyDeleteகோபி, என்னத்தைப்பிடிக்கிறது போங்க! எல்லாரும் cannibal மாதிரி இல்லை இருந்தாங்க. சோழர்கள் மாதிரித் தெரியலையே! :))))
ReplyDeleteவாங்க வெங்கட் நாகராஜ், தொலைக்காட்சியிலே பார்த்ததே அதிகம். :))))
ReplyDeleteநல்லவேளை லக்ஷ்மி, பிழைச்சீங்க.
ReplyDeleteவாங்க அப்பாதுரை, ஆமாம், பழைய எம்ஜிஆர், ரஜினி படங்களோட பேரிலே புதுசாப் படங்கள் வந்திருக்காமே!
ReplyDeleteநல்ல வேளை தப்பிச்சீங்க.. இல்லாட்டி வரலாறு மறந்து போயிருக்கும். இப்ப இது ஒரு பாணியாகி வருது. கொஞ்சம் பழைய கால கதை / இல்லை நாவல் எடுத்துக்க வேண்டியது... கொஞ்சம் வரலாறு அப்புறம் நெறைய பூச் சுத்தல் (நம்ம காதுலதான் ) இது தமிழரின் வரலாறு ஆதரிக்க வேண்டியது உங்கள் கடமை அப்படி இப்படின்னு ஒரு பிட் போட வேண்டியது இதே பொழப்பு
ReplyDeleteஇந்த வரிசையில் சமீபத்தில் அரவான் அதுக்கு ரெண்டு மாசத்துக்கு முன்னாடி ஒரு படம், பேரு மறந்து போச்சு
antha innoru padam Palai
ReplyDelete