Sunday, April 08, 2012

கோஸ்லாவின் கூடு!

Khosla ka Ghosla அப்படினு ஒரு படம் வந்திருக்கு.  இன்னிக்கு மத்தியானம் வழக்கம் போல் தொலைக்காட்சியில் ஒவ்வொரு சானலாத் திருப்பிட்டு வந்தப்போ  தூர்தர்ஷன் லோக்சபா சானலில் அனுபம் கேர் ரொம்பவே சீரியஸாப் பேசிட்டு இருந்தார்.  என்னனு பார்த்தா ஏதோ வீட்டைப் பத்தின படம்னு தெரிய வந்தது.  உடனே மண்டையை உடைக்கப் படத்தை முழுசும் பார்த்தேன்.  தன்னோட சேமிப்பை எல்லாம் போட்டு அனுபம் கேர் வாங்கின நிலத்தை உள்ளூர் தாதா குரானா அபகரித்துவிட்டு அனுபம் கேரிடமே ஹிஹி படத்திலே கோஸ்லா, கோஸ்லாவிடமே அந்த நிலம் திரும்ப வேணும்னா 15 லக்ஷம் கொடுக்கச் சொல்றான்.  போலீஸில் ஆரம்பிச்சு எல்லா இடத்திலும் முட்டி மோதியும் பலனில்லாமல் கோஸ்லாவின் பெரிய பிள்ளை தனக்குத் தெரிந்த அடியாட்கள் மூலம் நிலத்தைத் திரும்பக் கைப்பற்ற, பெரிய கோஸ்லா, அதாங்க அனுபம் கேர், போலீஸ் லாக்கப்பில்.

குரானா போலீஸைக் கையில் போட்டுக் கொண்டு தன்னைப் பயமுறுத்த இதைச் செய்தது புரிய வருகிறது.  குரானாவும் இப்போக் கொஞ்சம் இறங்கி வந்து 12 லக்ஷம் கொடு; நிலத்தைத் திருப்பித் தரேன்னு சொல்றான்.  கோஸ்லா அவமானப் பட்டது போதும்னு முடிவுக்கு வரார்.  ஆனால் அமெரிக்கா செல்ல இருந்த 2-ஆம் பிள்ளைக்கு இதை விட மனசில்லை.  தனக்கு அமெரிக்கா செல்ல உதவி செய்த ஏஜெண்டிடம் இது குறித்துப் பேச ஒரு திட்டம் உருவாகிறது.  அதைச் செயல்படுத்திக் குரானாவிடமிருந்தே மூன்றரைக் கோடி பணமாக வாங்கிக் கொண்டு அதில் இருந்து 12 லக்ஷத்தைக் குரானாவிடம் கொடுத்துவிட்டு நிலத்தை மீட்கின்றனர்.  மிச்சப் பணம் இந்தத் திட்டத்துக்கு உதவின நண்பர்களுக்குள்ளே பிரிச்சுக்கறாங்க.

படம் வெகு இயல்பான நடிப்போடு நல்லாவே இருந்தது.  நல்லவேளையா இரண்டாவது பிள்ளையும், அவன் காதலிக்கும் பெண்ணும் டூயட் எல்லாம் பாடலை.  சாதாரணமாகவே வீட்டில் நடக்கும் நிகழ்வுகளாகவே போகிறது. என்ன ஒண்ணே ஒண்ணு, ஏமாத்திப் பணம் பிடுங்குவதை முதலில் ஒப்புக்காத அனுபம் கேர் பணம் வந்ததும் மாறிப் போகிறார்.  எனக்கு இன்னும் ஒத்துக்க முடியலை.

அதனால் என்ன?  படத்துக்கு தேசீய விருது கிடைச்சதாம்.  அதோடு நல்ல வசூலும் இருந்ததாம். கூகிளாண்டவர் தயவிலே இந்தத் தகவல்கள் கிடைச்சன.  படம் பெயரே தெரியாமல் பார்த்துட்டு இருந்தேனா! என்ன பேர்னு தெரிஞ்சுக்க கூகிளாண்டவரைக் கேட்டால் முழு வரலாற்றையும் சொல்லிட்டார்.



பகுத்தறிவோட முருங்கைக்காய், வாஸ்து போஸ்டில் கமென்டவே முடியலை;  அந்தக் கமென்ட் இங்கே.

வீட்டுக் "கொள்ளை"= வீட்டுக் கொல்லை.  முதலில் தனி வீடுகளே இருக்குமானு பார்க்கணும். எல்லாரும் வீடுகளை இடிச்சு அடுக்குமாடிக் குடியிருப்புக் கட்ட ஆரம்பிச்சாச்சு.  அதுவும் பக்கத்து வீடுகளை முட்டும்படியான தூரத்தில் கட்டறாங்க.  இங்கே இருந்து அங்கே ஒருத்தருக்கொருத்தர் தொட்டுக் கொள்ளலாம். :((((

7 comments:

  1. அனுபம் கேர் சிறந்த நடிகர்தான். எந்த பாத்திரம் ஏற்று நடித்தாலும் சிறப்பாகச்செய்வார். அவருக்காக வேனும்னா இந்தப்படம் பாக்கலாம்

    ReplyDelete
  2. படம் சுவாரஸ்யமா இருந்க்கும் போலவே....!

    ReplyDelete
  3. பணம் வந்தால் எல்லோரும் மாறிடுவாங்கன்னு கூட மெசேஜ் ஆக சொல்ல விரும்பியிருக்கலாம்!

    ReplyDelete
  4. அனுபம் கேர் மிகச்சிறந்த நடிகர்... பல பாத்திரங்களில் சிறப்பாக நடித்திருக்கிறார்.

    இப்போதெல்லாம் படமே பார்ப்பதில்லை! விருப்பம் இல்லை என்பதை விட நேரம் இல்லை என்பதே உண்மை. :)

    ReplyDelete
  5. வாங்க லக்ஷ்மி, அனுபம் கேர் தியேட்டர் ஆர்டிஸ்ட் என்பதால் கூடுதல் அனுபவமும். :))))

    ReplyDelete
  6. வாங்க ஸ்ரீராம், படம் தொய்வில்லாமல் சென்றது. பொதுவாய் வீடு குறித்த உணர்வுகளை எழுத்திலும், படங்களிலும் பார்க்கையில் இனம் புரியாததொரு உணர்வு என்னைச் சூழும். அப்படித் தான் இந்தப் படமும் கவர்ந்தது. ஆனால் இந்தப் படத்தில் வீடு இல்லை; நிலம் மட்டுமே அபகரிக்கப் பட்டது.

    ReplyDelete
  7. வாங்க வெங்கட், எப்போதாவது நேரம் கிடைக்கையில் பார்க்கலாம். :)))))

    ReplyDelete