Thursday, June 21, 2012

தங்கையை நலம் விசாரிக்கச் சொன்ன அண்ணா!

அண்ணாக்காரரைப் பார்க்கிறது கஷ்டமா இருந்தாலும் எப்படியோ பார்த்துட முடியுது. 2007-இல் தங்கையைப் பார்க்கப்போயிட்டுப் பார்க்க முடியாம, ரூ.50/- டிக்கெட் அப்போவே. அது வாங்கியும் பார்க்க முடியாமல் கூட்டத்தில் மூச்சுத் திணற ஆரம்பிக்கவே வெளியே வரவே காவல்துறை பாதுகாப்பு தேவைப்பட்டது. :( அதுக்கப்புறமா வெறுத்துப் போய் அந்தப் பக்கமே தலை வச்சுக்கூடப்படுக்கலை.  சென்ற வருடம் செப்டம்பரில் ஒரு கல்யாணம் . தவிர்க்க முடியாத கல்யாணம். போனேன்.  ஆனால் தங்கைக்காரியைப் பார்க்கப் போகமுடியலை.  நம்ம ரங்க்ஸ் வந்திருந்தால் ஒருவேளை போயிருப்பேன்.  ஆனால் அவர் கல்யாணத்துக்கு என்னை மட்டும் அனுப்பிச்சு வைச்சுட்டுத் தப்பிச்சுட்டார்.  துணைக்கு ஆளில்லாமலும், தனியாய்ப் போய் வரும் அளவுக்கு உடல் நலமில்லாமையும் சேர்ந்து போகவே இல்லை. வந்ததும் ரங்க்ஸ் திட்டினார்.  அவ்வளவு தூரம் போயிட்டுப் பார்க்காமல் வந்துட்டியேனு. அவ கிட்டே எனக்குக் கோபம்; உன்னைப் பார்க்க வரலைனு சொல்லிட்டேன் போனதரமேனு சொல்லிட்டேன்.

இப்போ இங்கே ஶ்ரீரங்கம் வந்ததும் மறுபடி நேத்துத் திடீர்ப் பயணம்; போகலாமா, வேண்டாமானு ஒத்தையா, ரெட்டையா விளையாடிட்டு இருந்தோம்.  கடைசியில் போய்த் தான் பார்ப்போமே, ஒண்ணுக்கு ரெண்டு கல்யாணம்னு முடிவு பண்ணினோம்.  அப்படியும் நேத்துக் காலம்பர வரைக்கும் கொஞ்சம் யோசனை தான். சமைச்சுச் சாப்பிட்டுவிட்டு ஒன்பதரை மணி போல வீட்டை விட்டுக் கிளம்பினோம். பத்து மணிக்குப் பேருந்தில் ஏறி இருந்திருப்போம்.  பனிரண்டரைக்கு மதுரையில் கல்யாணச்  சத்திரம் போயாச்சு.  அங்கே சாப்பாட்டுக் கடை முடியலை; சாப்பிடுன்னாங்க. வேண்டாம், காப்பி, டிபன் சாப்பிட்டுக்கறோம் 3 மணிக்கு.  அப்புறமா அண்ணாச்சி தங்கையைப் பார்த்துட்டு வானு சொல்லி இருக்கார்.  எப்போப் போனால் நிம்மதியாப் பார்க்கலாம்னு கேட்டோம்.  சாயரட்சை முடிஞ்சு போங்க; பார்க்கலாம்னு சொன்னாங்க.  சரினு டிபன், காப்பி முடிச்சு நாலரை மணி போல ஆட்டோ வைச்சுண்டு கிளம்பினோம்.

தெற்கு கோபுர வாசல்லே இறக்கி விட்டார் ஆட்டோக்காரர்.  அங்கிருந்து ஆடி வீதி சுத்தாமல் நேரே போயிடலாம்; அப்புறமாக் கூட்டம் வந்துடும்னு காவல்துறை ஆலோசனை வழங்க சரினு அங்கே உள்ளே இறங்கறச்சே வாசல்லேயே 100ரூ டிக்கெட் வாங்கிக்கோங்க, தங்கையை மட்டுமில்லாமல் அவள் கணவன் வீட்டோடு மாப்பிள்ளையையும் பார்த்துட்டு வரலாம்னு சொன்னாங்க.  அப்படியே செய்தோம்.  கொலு மண்டபத்தில் இருக்கும் வாசல் வழியாக உள்ளே விட்டாங்க.  அர்த்த மண்டபத்திலோ, அர்த்த மண்டப வாசல்லேயே உட்கார்த்தி வைக்கிறதை நிறுத்திட்டாங்க போல! ஆனாலும் பத்து நிமிஷம் யாருமே விரட்டாமல் திரும்பத்திரும்பத்திரும்பத் திரும்பத்திரும்பத்திரும்பப் பார்த்தோம்.  சண்டை போட்டேன்.   ஒரு காலத்தில்  சல்லிக்காசு கொடுக்காமல் உன்னை வந்து பார்த்திருக்கேன்.  எங்க வீட்டுப் பொண்ணு நீ.  இப்போ உன்னைப் பார்க்கக் காசு கொடுத்துக் கூடப் போனதரம் முடியலை.  இந்தத் தரம் நீ உங்க அண்ணா சொன்னதுக்காக எங்களுக்கு தரிசனம் கொடுத்திருக்கே போல. இப்படி எல்லாம் செய்யாதே.  எப்போவும் தரிசனம் கொடுக்கிறாப்போல் இந்த மானிடர்கள் மனதில் புகுந்து வேலை செய். விரைவில் உன்னைப் பார்க்கக் காசே இல்லைங்கற நிலைமை வரணும் னு வேண்டிக் கொண்டேன்.  வெளியே வரச்சே  இடப்பக்கமா வரணுமாம்;  அது தெரியாமச் சுத்திண்டு போகப் போனோம், பழைய வழக்கப் படி. அப்படிப் போங்கனு சொன்னதிலே மறுபடி ஒரு ஐந்து நிமிட தரிசனம்.  ராணியாச்சே! ராஜபோகமா இருக்கா.

அப்புறமா சுவாமி சந்நிதிக்கும் குறுக்கு வழியிலேயே போனோம். அப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பா அந்தச் சிந்தூர ஆஞ்சநேயர் எவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வளவு பெரியவரா ஆயிட்டார்.  தொட்டுப் பார்த்து உறுதி செய்து கொண்டு வந்தேன்.  சுவாமி சந்நிதியிலும் கூட்டம் தான். என்றாலும் அர்த்த மண்டபத்துக்குள்ளே போய்ப் பார்க்க முடிஞ்சது.  அடுத்தடுத்து தீப ஆராதனை எடுத்துட்டே இருந்தாங்க.  நின்னு நிதானமாப் பார்த்துட்டு வந்தோம்.

அப்பாடி , நிஜம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மாவே மதுரைக்குப் போன திருப்தி பல வருடங்கள் கழிச்சு இம்முறைதான்.  எல்லாம் அண்ணா தயவு. மதுரை குறித்த மற்ற விபரங்கள் பின்னர்.


29 comments:

  1. பணம் கொடுத்தா மட்டுமே கோவிலுக்குப் போக முடியுமா இல்லை கூட்டம் குறைந்த வரிசையில் தரிசனம் செய்யப் பணம் கொடுக்கணுமா?

    ReplyDelete
  2. வாங்க அப்பாதுரை, நினைச்சேன். வந்துட்டீங்க. இலவச தரிசனமும் இருக்கு. கூட்டம் இல்லை. ஆனால் உள்ளே போய்ப் பார்க்காமல் வெளியேவே டிக்கெட் வாங்கிட்டோம். நிக்க முடியறதில்லை இப்போல்லாம். என்னோட கால் வீங்கிடும். :))))) ஒரு மணி நேரம் நின்னால் இலவச தரிசனம். நாங்க பணம் கொடுத்துத் தான் போனோம். :( பணம் கொடுத்துப் பார்க்க முடியாதுனு தான் போகாமலேயே இருந்தேன். வேறே வழியில்லாமல் போயிடுச்சு இந்தத் தரம். பார்க்கலாம். இதுக்கு ஒரு வழி பண்ணியே ஆகணும். :(

    ReplyDelete
  3. மதுரைப் பயணமா..... நீங்கள் சொல்வதைப் பார்த்தால் பழைய மாதிரி இலகுவாக உள்ளே சென்று திரும்ப முடியாது போலத் தோன்றுகிறது. எனக்கும் சீக்கிரம் அந்தப் பக்கம் போக வேண்டிய வேலை இருக்கிறது. பொற்றாமரைக் குளம் எனக்குப் பிடித்த இடம்.

    ReplyDelete
  4. அண்ணன் கோவிலிலும் இதே நிலை தான். பணம் கொடுத்துப் பார்ப்பதில்லை என்ற முடிவோடு, நானும் உள்ளே செல்வதேயில்லை. உள்ளே நுழைந்தாலும் தாயாரைப் பார்த்துவிட்டு, ”உங்கூட்டுக்காரர்ட்ட சொல்லிடும்மா!” என அட்டெண்டன்ஸ் போட்டு வந்துடுவேன்.... :)

    மதுரை பற்றிய மற்ற பதிவுகளுக்கு வெயிட்டிங்.

    ReplyDelete
  5. இப்படில்லாம் அவஸ்தைப்பட்டு தரிசனம் செய்தால்தான் அது மறக்கமுடியாத தரிசனமாக இருக்கும் போல இருக்கு.எதுவும் ஈசியா கிடச்சுட்டா அதன் அருமை பெருமைல்லாம் தெரியாதே இல்லியா?

    ReplyDelete
  6. // எங்க வீட்டுப் பொண்ணு நீ. இப்போ உன்னைப் பார்க்க.. //

    இதைத் தான் பதிவைப் படிக்க ஆரம்பிச்ச போதே நினைச்சேன்.
    சொந்த தாய் வீட்டுக்குப் போகறத்துக்கு இவங்க இவ்வளவு...

    (எப்படி வேண்டுமானாலும் உங்கள் இஷ்டம் போல் இட்டு நிரப்பிக் கொள்ளுங்கள்)

    ReplyDelete
  7. இலவச தரிசனமும் டிகெட் தரிசனமும் ஒரே பாதை தானா?

    ஒரு தடவை அம்மாவுடன் திருப்பதி போனப்போ லைனைப் பார்த்து அலறிட்டேன்! அதுவும் டிகெட் வாங்கி நிக்கற லைன்னதும் இன்னும் நடுங்கிப் போனேன்! இலவச லைன்ல உள்ளே போய்ப் பாக்க ரெண்டு நாளாகும்னாங்க - உண்மையா தெரியாது. கடைசில ஒரு contact பிடிச்சு (read நிறைய பணம் கொடுத்து) உள்ளே போனோம்.
    ஒரு சபரிமலைப் பயணமும் அப்படித்தான். அவ்வளவு தூரம் மாலை போட்டு முடிதூக்கி வந்தவங்க அடிபட்டு நாசமாறப்போ, நான் ஒரு டோலில போய், கோவில் மேனெஜ்மெந்ட் ஒருத்தரோட ரூம்ல தங்கி, ஸ்பெஷல் சாப்பாடோட தரிசனம் பண்ணினது இன்னும் உறுத்தினாலும்... பணம் கொடுத்தா கோவில்களில் எல்லாம் கிடைக்குது/நடக்குது என்பதை என்னால மறக்க முடியலே.
    நம்ம ஊர் என்றில்லை, வேடிகனிலும் இதே கதை. ஹஜ்ஜிலும் இது போல் உண்டு என்கிறான் என் நண்பன்.

    இன்னும் கொஞ்ச நாள்ல பாருங்க - இந்டெர்நெட் தர்சன் புக்கிங் சிஸ்டம்னு வரும். நூறு ரூபாய் (கம்மியா ஜாஸ்தியா?) கட்டி, ஒரு நாள் நேரம் தேர்ந்தெடுத்துப் போய் தரிசனம் செஞ்சுட்டு வந்துறலாம்.
    இன்னும் வரலேன்னா கோர்பரெட் தரிசனம்னு வரும் பாருங்க கொஞ்ச நாள்ல. தை வெள்ளிக்கிழமை சாயந்திரம் கோவில் பிரகாரத்தை ஒரு விப்ரோ நெஸ்லே மாதிரி கம்பெனி வாடகைக்கு எடுத்துட்டதாலே பொதுமக்களுக்கு தரிசனம் தடைவிதிக்கப்படும். கோவிலுக்கு அமோகப் பணம், கம்பெனிக்கு employee benefit.

    still, வசதி இருக்குறப்ப பணம் கட்டிப் போறதுல தவறில்லேனு தோணுது..
    (
    நான்:
    அம்மா: சாமிக்குத் தானேடா போறது
    நான்:
    அம்மா: ஏழைக்கும் குடுக்கறது, சாமிக்கும் குடுக்கறது, என்ன இப்போ?
    நான்:
    அம்மா: ஒண்ணும் திருந்த வேண்டியதில்லை.
    )

    இருந்தாலும் 'இப்பல்லாம் நிக்க முடியலே'னு நீங்க சொல்றது வருத்தமா இருக்கு. எத்தனை பேருக்கு இது மாதிரி நிலையிருக்கும் - 60%+ பெண்களுக்கு நிச்சயம் இந்த நிலை இருக்கும் என்றே நினைக்கிறேன். கூட்டத்துல நின்னுதான் பாக்கணும்னு வச்சுட்டாங்களே!!

    ReplyDelete
  8. //சண்டை போட்டேன். ஒரு காலத்தில் சல்லிக்காசு கொடுக்காமல் உன்னை வந்து பார்த்திருக்கேன். எங்க வீட்டுப் பொண்ணு...
    மெய்யாலுமே டச்சிங்கு.

    ReplyDelete
  9. இன்டர்நெட் புக்கிங் மற்றும் குறித்த நாளில் குறித்த நேரத்தில் ரிசர்வ் செய்து கொள்வது திருப்பதியைப் பொறுத்தவரை நீண்ட நாட்களாகவே நடந்து வரும் ஒரு நடைமுறை அப்பாஜி....

    ReplyDelete
  10. @அப்பாதுரை, நான் சொல்ல நினைச்சதை ஸ்ரீராம் சொல்லிட்டார். :))))

    ReplyDelete
  11. வாங்க ஸ்ரீராம், முன்னெல்லாம் மதுரை போனால் இலவச தரிசனம் பார்ப்பது காலை பத்திலிருந்து பனிரண்டு வரையும், மாலை நாலில் இருந்து ஐந்து வரையும் இரவு எட்டரையிலிருந்து ஒன்பதரை வரையும் வெகு எளிதாக இருந்தது. அந்த நேரங்களில் தான் போய்ப் பார்த்து வழக்கம். அதுக்கும் முன்னர் எழுபதுகளில் கூட்டம் இருந்தாலும் அர்த்த மண்டபம் போய்ப் பார்ப்பது அவ்வளவெல்லாம் கஷ்டமாக இல்லை. அது பாட்டுக்கு ஒருபக்கம் போயிட்டே இருப்பாங்க. வெளியே நின்னு தரிசிக்கிறவங்களும் தரிசிப்பாங்க. தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் லேசாக ஆரம்பித்த பிரச்னை பின்னர்........... மீனாக்ஷிக்கு கர்வம் வந்துவிட்டதோ, பணக்காரங்களையும், விஐபிக்களையும் தான் பார்ப்பாளோனு நினைச்சேன். :(((((

    ReplyDelete
  12. அண்ணன் கோயிலில் குறிப்பிட்ட நாள் பார்த்துப் போனால் எளிதாக தரிசனம் கிடைக்கும். தங்கச்சியையும் அப்படித் தான். நாங்க போனது புதன் கிழமை. விசேஷ நாட்கள், வெள்ளி, சனி, ஞாயிறுகளில் எந்தக் கோயிலுக்கும், முக்கியமாய்ப் பிரபலக் கோயில்கள் எதுக்கும் போகக் கூடாது என்பதை நாங்கள் கட்டாயமாய்க் கடைப்பிடிக்கிறோம்.

    ReplyDelete
  13. வாங்க லக்ஷ்மி,உபநயனம் நல்லபடியா நடந்ததா? வருகைக்கு நன்றி. இல்லை, நீங்க சொல்வது ஒரு வகையில் சரின்னாலும், கடவுள் விஷயத்தில் அரசுச் சட்டதிட்டங்கள் போட்டு பக்தர்களுக்கும், கடவுளுக்கும் குறுக்கே நிற்பது சரியில்லை. கோயிலின் வருமானத்தைப் பெருக்க வேண்டும் என்ற வியாபார நோக்கோடு செயல்படுகின்றனர் என்பது வருந்தத் தக்க உண்மை. மற்ற மாநிலங்களில் இப்படி எல்லாம் இல்லை என்பதையும் சொல்ல வேண்டும்.

    ReplyDelete
  14. வாங்க ஜீவி சார்,

    இதைத் தான் பதிவைப் படிக்க ஆரம்பிச்ச போதே நினைச்சேன்.
    சொந்த தாய் வீட்டுக்குப் போகறத்துக்கு இவங்க இவ்வளவு.....///

    கோடிட்ட இடத்தைப் பூர்த்தி செய்யலை. அப்படியே சாய்ஸில் விட்டுட்டேன். :)))))))))))

    ReplyDelete
  15. அப்பாதுரை, மீனாக்ஷியும் ஏழை இல்லை, வசதியானவளே, மேலும் இந்த மாதிரிச் சட்டங்களெல்லாம் போடணும்னு எந்த சாமியும் சொல்லவும் இல்லை. இது அறுபதுகளின் கடைசியில் ஆரம்பித்த ஒன்று. பின்னர் நாளாவட்டத்தில் இதில் தான் முனைப்புக் காட்டுகின்றனர். :((((( மக்களின் வசதிக்கும், இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

    கோயிலில் தரிசனம் செய்வதன் புனிதமும், பிரசாதங்கள் விநியோகம் செய்யப்படுவதன் அர்த்தமும், அதன் புனிதமும் இன்று வியாபாரம் ஆக்கப்பட்டுவிட்டது.

    ஏழுமலையான் எப்போவோ கார்ப்பரேட் கடவுள் ஆகிவிட்டாரே! நாங்க கிழமை, நாள், மாதம் பார்த்துப் போவோம். பொதுவாக பெப்ரவரி, மார்ச் மாதங்களில் கூட்டம் குறைவாக இருக்கும். சுதர்சன தரிசனச் சீட்டிலேயே ஒரு மணி நேரத்தில் தரிசிக்கலாம். ஆனால் உள்ளே போகையில் ஒன்றாகத் தான் திருப்பதியில் அனுப்புவாங்க. :( நெரித்துத் தள்ளும். அங்கே போனாலும் ஜரிகண்டி, ஜரிகண்டி எனப் பிடித்துத் தள்ளுவார்கள். பிடித்துத் தள்ளியதில் ஒரு முறை கீழே விழுந்துவிட்டேன். :( தேளுக்கு மணியம் கொடுத்த கதை தான். :((((((

    ReplyDelete
  16. இருந்தாலும் 'இப்பல்லாம் நிக்க முடியலே'னு நீங்க சொல்றது வருத்தமா இருக்கு. எத்தனை பேருக்கு இது மாதிரி நிலையிருக்கும் - 60%+ பெண்களுக்கு நிச்சயம் இந்த நிலை இருக்கும் என்றே நினைக்கிறேன். கூட்டத்துல நின்னுதான் பாக்கணும்னு வச்சுட்டாங்களே!!//

    அநியாயமா இல்லையோ? நான் இன்னும் பிறக்கவே இல்லைனு மின் தமிழில் சொல்லிட்டு இருக்கேன். நீங்க பாட்டுக்கு வயசை ஏத்தினால் என்ன அர்த்தம்? :P:P:P:P

    ReplyDelete
  17. கால் பிரச்னை எனக்குச் சின்ன வயசிலே இருந்தே இருக்கு. :))))) அதோட வெரிகோஸ் வெயினும் சேர்ந்து கொண்டு ஒரு வழி பண்ணிட்டு இருக்கு. நானும் விடறதில்லை; உனக்காச்சு, எனக்காச்சுனு சொல்லிட்டேன். அதுக்காக எதையும் நிறுத்தறதில்லை. :))))))

    ReplyDelete
  18. என்னுடைய நண்பர்கள் இருவர் தீபாவளி அன்று திருப்பதி செல்வார்கள். கூட்டமே இருக்காது என்று சொல்வார்கள்.

    நிறைய கோவில்களில் இந்த கம்பி கட்டி வளைந்து வளைந்து சாமியைப் பார்க்க கியூ அமைக்கும் வழக்கம் இப்போ ரொம்ப வழக்கமாகி விட்டது.... .சென்னைத் திருவொற்றியூர் வடிவுடை அம்மன் கோவில் பார்த்திருப்பீர்கள். அங்கு அம்மனுக்கு மட்டும் திருப்பதி போல கம்பி கட்டி, பாட்டு போட்டு ஆர்ப்பாட்டம் எல்லாம் இருக்கும். சுவாமி அம்போ என்று தனியாக இருப்பார். எங்கு கூட்டம் வருகிறதோ, எந்த சாமிக்கு மார்க்கெட் இருக்கோ அங்க வியாபாரம் செய்வது நம் மக்களுக்கு வழக்கமாகி விட்டது.

    திருவண்ணாமலைக்குக் கூடப் பவுர்ணமி அன்று போகக் கூடாது. எந்தக் கோவிலிலுமே என்று கூட்டம் இல்லாத நாள் அதாவது விசேஷம் இல்லாத நாள் என்று தெரிந்து கொண்டு அன்று அங்கு போவது உத்தமம்!

    ReplyDelete
  19. ஷிர்டி சாய்பாபா கோவிலிலும் இந்த ஆன்லைன் தர்ஷன் புக்கிங் வந்துவிட்டது! :(

    ReplyDelete
  20. '60 சதவிகிதத்துக்கு மேற்பட்ட' என்று தானே எழுதியிருந்தேன்?

    ReplyDelete
  21. இதனால்தான் அண்ணனையும் பாக்கமாட்டேன் தங்கையையும் பார்க்க மாட்டேன். தங்கை ஆத்துக்காரர்தான் சுலபமா தரிசனம் தருவார் ,,,,

    ReplyDelete
  22. @அப்பாதுரை,60 சதவிகிதத்துக்கு மேற்பட்ட' //

    அந்த % இப்போத் தான் கவனிக்கிறேன். ஓகே, ஓகே, வாபஸ் வாங்கியாச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்! :)))))))))))))

    ReplyDelete
  23. தீபாவளி அன்று நான் வீட்டை விட்டு வெளியேயே வருவதில்லை. இன்னும் சொல்லணும்னா ஜன்னல் கதவுகளைக் கூட மூடிண்டு உட்கார்ந்திருக்க வேண்டி இருக்கும். இந்தப் பட்டாசுப் புகை, மத்தாப்புப் புகை கொஞ்சம் கூட ஒத்துக்காது. எங்கேனு காத்துட்டு இருக்கும் என்னோட ஆஸ்த்மா! :))))))சாதாரணமாவே நான் தீபாவளியை எண்ணெய் தேய்த்துக் குளித்துக் கொண்டாடிய வருடங்களை விரல் விட்டு எண்ணிடலாம். அநேகமா லொக்,லொக், லொக் தான். இதிலே எங்கே கோயில்! சான்ஸே இல்லை! :)))))

    ReplyDelete
  24. @வெங்கட் நாகராஜ்,

    ஆமாம், அதுவும் தெரியும். அநேகமா எல்லாக் கோயில்களும் இனிமே இப்படி ஆயிடுமோ என்னமோ! :(

    ReplyDelete
  25. எல்கே, வருகைக்கு நன்றி. தங்கை கணவருக்கும் இப்போக் கூட்டம் ஜாஸ்தியா இருக்கு. நாங்க போனப்போ இலவச தரிசனத்துக்கு 3 வரிசை நின்னுட்டு இருந்தாங்க.

    ReplyDelete
  26. Paravallai 100roopa thane:) Sami kariyaththula nalla kariyaththukkuththaan pokum. Pandurangan kovilil free tharisanam than koottaththula onnonnum maththavan thalaiyai thoonil modha Kooda thayanga mattengara .pandarpoor koota visesham appadi !

    ReplyDelete
  27. இந்த சிரமக்களுக்கெல்லாம் காரணம்
    திடீர் திடீரென மொத்தமாக மதுரைவரும்
    டூரிஸ்டு கூட்டம்தான். அதிலும் கார்த்திகை மாததில் வரும் சபரிமலை
    யாத்திரைக்கூட்டமே அலாதிதான். யாரைத்தான் நோக முடியும்?உள்ளூர்காரனான நானே எத்தனையோமுறை பயங்கர க்யூவில்
    நிற்க முடியாமல் கொடிக்கம்பத்தருகே
    நின்று கன்னத்தில் போட்டுக்கொண்டு
    தலைவரைப்பார்க்கச் சென்றுவிடுவேன்
    இப்போதெல்லாம் வடநாட்டு யாத்ரிகர்களால் அவருக்கும் டிமாண்ட்தான்.ஆன்மிகம் பெருகுவதன்
    அடையாளமாக இதைஎடுத்துக்கொண்டு அமைதியடையவேண்டியதுதான்

    ReplyDelete
  28. தங்கையை நலன் விசாரிக்கச் சென்றீர்களா. :)

    இப்பொழுது சிரமமாகிவிட்டதே.

    அண்ணா தங்கையை இரண்டு மூன்று தடவை தர்சிக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது.

    ReplyDelete