ஒரு மாதிரியா இன்னிக்குக் காலம்பரக் கிடைத்த தேங்காய், வெற்றிலை, பாக்கு, வாழைப்பழங்களோடு கொஞ்சமாய்க் கொழுக்கட்டையும், வடை, அப்பமும் செய்து பிள்ளையாரைக் கொண்டாடியாச்சு. பிள்ளையாரோடு ஏகத்துக்குச் சண்டை போடணும்னு நினைச்சேன். ஆனால் இந்தமட்டில் நல்லபடியாகக் கொண்டாடும்படி வைச்சதும் அவரால் தானேனு தோணித்து. அதனால் சண்டையை கான்சல் பண்ணிட்டேன். என்னிக்கு எதிலே டிக்கெட் கிடைக்கிறதோ அன்னிக்குக் கிளம்பறோம். இப்போக் கொஞ்சம் தேவலைனு கொஞ்சம் நேரம் முன்னாடி தொலைபேசிச் செய்தி வந்தது. என்றாலும் நாங்க இப்போ இருக்கவேண்டிய இடம் அங்கே தான்.
Wednesday, September 19, 2012
பிள்ளையாரே காப்பாத்துப்பா!
ஒரு மாதிரியா இன்னிக்குக் காலம்பரக் கிடைத்த தேங்காய், வெற்றிலை, பாக்கு, வாழைப்பழங்களோடு கொஞ்சமாய்க் கொழுக்கட்டையும், வடை, அப்பமும் செய்து பிள்ளையாரைக் கொண்டாடியாச்சு. பிள்ளையாரோடு ஏகத்துக்குச் சண்டை போடணும்னு நினைச்சேன். ஆனால் இந்தமட்டில் நல்லபடியாகக் கொண்டாடும்படி வைச்சதும் அவரால் தானேனு தோணித்து. அதனால் சண்டையை கான்சல் பண்ணிட்டேன். என்னிக்கு எதிலே டிக்கெட் கிடைக்கிறதோ அன்னிக்குக் கிளம்பறோம். இப்போக் கொஞ்சம் தேவலைனு கொஞ்சம் நேரம் முன்னாடி தொலைபேசிச் செய்தி வந்தது. என்றாலும் நாங்க இப்போ இருக்கவேண்டிய இடம் அங்கே தான்.
// சண்டையை கான்சல் பண்ணிட்டேன்//
ReplyDeleteபோச் போச்!
இனிய பிள்ளையார் சதுர்த்தி தலைவி ;)
ReplyDelete
ReplyDeleteஉங்க மைத்துனர் நன்னா ஆயிட்டு, நாளே நாள்லே அகத்துக்கு வந்துவிடுவார்.
கவலைப்படாதேங்கோ..
சுப்பு தாத்தா.
எப்படியோ எல்லாத்தையும் நெனச்சபடி விட்டுக்குடுக்காம செஞ்சுடறீங்க.. கத்துக்கணும்.
ReplyDeletePillayar will cure him
ReplyDeleteतथास्थु !
ReplyDeleteमाली .
பிள்ளையார் அனைவரையும் காக்கட்டும்.
ReplyDeleteமைத்துனர் நலன்பெற வேண்டுகின்றேன்.
இனிய பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துக்கள்
ReplyDeleteகொழுக்கட்டை நாள் வாழ்த்துகள்.
ReplyDeleteமைத்துனர் சீக்கிரம் உடல்நலம் பெற இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
கரண்ட் கஷ்டம், மைத்துனர்க் கவலைகள் பற்றியெல்லாம் தெரியாமல் எங்கள் பக்கம் உங்களைக் காணோமே என்று தேடிக் கொண்டிருந்தேன்!
பிள்ளையாரின் அருள் உண்டு. அவர் காப்பாற்றுவார்.
ReplyDeleteபிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துகள்.
ReplyDeleteமைத்துனர் அவர்கள் நலமாய் இருப்பார்.
ReplyDeleteவிநாயகர் நல்ல ஆரோக்கியத்தைக் கொடுப்பார்.
வாங்க வா.தி. பிள்ளையார் உங்களைக்கூட இந்தப் பக்கம்வர வைச்சுட்டாரே! :)
ReplyDeleteகோபி, நன்றிப்பா. ஒரு பிள்ளையார் சதுர்த்தி அன்னிக்கு நீங்க எங்க வீட்டுக்கு வந்ததை ஒவ்வொரு வருஷமும் நினைச்சுப்போம். :)
ReplyDeleteசுப்புத்தாத்தாவுக்கு நன்றி. கொஞ்சம் தேவலை எனத் தொலைபேசிச்செய்தி வந்திருக்கிறது. மெல்ல மெல்ல முன்னேற்றம் இருக்கிறது என்றார்கள்.
ReplyDeleteஅப்பாதுரை, பல கஷ்டமான நேரங்களிலும் புத்தகப்படிப்பும், வீட்டு வேலைகளுமே என்னை நிலைப்படுத்தி இருந்திருக்கிறது. இரண்டிலுமே நான் ஒருமித்துப் போவதால் வேதனைகளின் தாக்கம் இராது! இதை ஒரு பழக்கமாகவே வைச்சிருக்கேன்.
ReplyDeleteநன்றி எல்கே.
ReplyDeleteநன்றி திரு மாலி. விலாசம் மாதங்கிக்கு அனுப்பி இருக்கேன். இந்த வாரமும் அடுத்தவாரமும் ஸ்ரீரங்கத்தில் தான் இருப்போம். ஆகவே தாராளமாக வரலாம். யோசிக்க வேண்டாம். :)
ReplyDeleteநன்றி மாதேவி, அனைவரின் பிரார்த்தனையால் உடல்நிலை மெல்ல மெல்ல முன்னேற்றம் காண்கிறது.
ReplyDeleteநன்றி சமுத்ரா அவர்களே.
ReplyDeleteவாங்க ஸ்ரீராம், மத்தியான நேரம் தான் மூன்று மணி நேரமாவது கணினியில் உட்கார இயலும். அந்த நேரம் மின்சாரம் இருப்பதில்லை. அதிலும் நேற்றுப் பதினைந்து மணி நேரம் மின் தடை. :(((
ReplyDeleteமேலும், "உங்கள் ப்ளாக்" ஹிஹி, எங்கள் ப்ளாக் எனக்கு அப்டேட் ஆகவும் ஒரு நாள் ஆகிவிடுகிறது. எப்போதாவது நானாக வந்து பார்ப்பேன். :)))))கொழுக்கட்டை செய்ய எதிர் வீட்டுப் பெண்மணிக்குச் சொல்லிக் கொடுத்தேன். அப்போ உங்களைத் தான் நினைச்சுண்டேன்.
பேசாமல் கொழுக்கட்டை பிசினஸ் ஆரம்பிச்சுடுனு ரங்க்ஸ் ஆலோசனை கொடுத்திருக்கார். நம்ம கொழுக்கட்டைக்கு நூறு சதவீத காரண்டியும் உண்டு. ஆகையால் மூன்று கொழுக்கட்டை பத்து ரூபாய்னு கொடுக்கலாமானு யோசனை! :))))))
நன்றி ஜீவி சார்.
ReplyDeleteநன்றி லக்ஷ்மி.
ReplyDeleteநன்றி கோமதி அரசு.பல்வேறு வேலைகளுக்கிடையிலும் நீங்கள் வந்துவிட்டுப் போவது எனக்குக் கொஞ்சம் ஆச்சரியமாகவே இருக்கும் எப்போதும். :)))) என்னால் பல பதிவுகளுக்கும் போக முடியறதில்லை. :(
ReplyDeleteவிநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள் அம்மா. மைத்துனர் விரைவில் நலம் பெற பிரார்த்தனைகளும்.
ReplyDelete