Tuesday, October 16, 2012

நவராத்திரி நினைவுகள். nostalgia

கல்யாணம் ஆகி வந்ததும் முதல் முறையாக் கொலு மூணு வருஷங்களுக்குப் பின்னர் எங்க பொண்ணு பிறந்து அவளுக்கு ஒரு வயசு ஆனதும் தான் வைச்சோம்.  அப்பா மதுரையிலிருந்து பொம்மைகளை, அனுப்பி இருந்தார்.  எல்லாம் எங்க வீட்டுக் கொலுவுக்கு என் தம்பி பிறந்தப்போ வாங்கினது.  புதுசா பொம்மையே வாங்கித் தரலைனு என் தம்பி அப்போத் தான் புதுச்ச்ச்சா வேலையிலே சேர்ந்திருந்தான்.  ஒரு கோபுரம் பொம்மை, இரண்டடி உயரத்துக்கு வாங்கிக் கொடுத்தான். அந்த பொம்மையை வாங்கறச்சே பேரம் பேசத் தெரியாம நானும், தம்பியும் (ஹிஹிஹி, நாங்க சின்னப் பசங்க தானே) நூறு ரூபாய் சொன்ன பொம்மையை சாமர்த்தியமாக ஐம்பது ரூபாய்னு பேசி வாங்கினோம்.  

க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் மறுநாளே தி.நகர் ரங்கநாதன் தெருவின் கொலுப் படிகளில் அந்த பொம்மை பதினைந்து ரூபாய்க்குக் கிடைத்தது தெரிய வந்தது.  அப்போத் தெருவிலே எல்லாரும் கூப்பிட்ட உடனே வருவாங்க. அதோட இந்த ஆண் குழந்தைகள் எல்லாம் வாசல்லே வந்து நின்னுட்டு, மாமி, சுண்டல், அக்கா, சுண்டல்னு கூப்பாடு போடுவாங்க.  அவங்களுக்குக் கட்டாயமா ஏதேனும் தந்தே ஆகணும்.  இல்லைனா மெயின் ஸ்விட்சை அணைச்சுட்டுப் போயிடுவாங்க. ஆகவே பயந்துட்டுக் கொடுத்துடுவேன். அப்போல்லாம் கீழே பார்க், தெப்பக்குளம், மலை, மிருகக் காட்சி சாலைனு அலங்காரங்கள் செய்வோம்.  நிறைய பொம்மைகள் அதற்கேற்றாற்போல் இருந்தன.  போதாதுக்குச் சங்குகள், சிப்பிகள், சோழிகள்னு இருந்தன.  இப்போ எல்லாம் எங்கே போச்சு? தெரியலை! அப்புறமா ராஜஸ்தானுக்குப் போகும்படி ஆச்சு.  அங்கே எல்லா பொம்மைகளையும் தூக்கிட்டுப் போக முடியாதுனு நம்ம சர்வாதிகாரி சொல்லிட்டு எல்லாத்தையும் சென்னையிலேயே எங்க அண்ணா வீட்டிலே போட்டுட்டுப் போயிட்டோம்.  ஆனாலும் கொலு வைத்தே ஆகணும்னு எனக்கு. என்ன செய்யலாம்?

5 comments:

  1. //ஆனாலும் கொலு வைத்தே ஆகணும்னு எனக்கு. என்ன செய்யலாம்?//

    என்னதான் செய்தீர்கள்?! குறைந்த பொம்மைகளுடன் வைத்தாகி விட்டது அல்லவா? அதுதான் சுண்டல் செய்து காலியாகி விட்டதே இல்லையா! ப.ப சுண்டல் நான் ஒரு பிடி எடுத்துக் கொண்டேன்!

    ReplyDelete
  2. இனிய நினைவுகள். தொடருங்கள்.

    ஊரிலிருந்தபோது அழகாக கொலுவைப்போம். இப்போது இங்கு கடவுளர் சிலைகள் சிலதான் இருக்கின்றன.
    பொம்மைகள் புதிதாக வாங்கவில்லை.வேண்டாம் என விட்டுவிட்டேன்.
    வழிபாட்டுடன் முடித்துவிடுவேன்.

    ReplyDelete
  3. வாங்க ஸ்ரீராம், குறைந்த பொம்மைகளோடயா? சான்ஸே இல்லை. ஏன்னா ஒரு சின்ன ஒரு அங்குலம் பொம்மை கூட எடுத்துட்டுப் போகலை. :))))

    ReplyDelete
  4. வாங்க மாதேவி, கொலுவுக்கு உடனே வந்ததுக்கு ரொம்ப நன்றிம்மா. :)))) இங்கேயும் புது பொம்மைகள் வாங்கறதை நிறுத்திப் பத்து வருஷம் ஆச்சு. :)))

    ReplyDelete

  5. அப்போல்லாம் கீழே பார்க், தெப்பக்குளம், மலை, மிருகக் காட்சி சாலைனு அலங்காரங்கள் செய்வோம். நிறைய பொம்மைகள் அதற்கேற்றாற்போல் இருந்தன

    நவராத்திரி இனிய நினைவுகள் !

    ReplyDelete