Monday, November 12, 2012

"ஒளி"மயமான எதிர்காலத்துக்கு வாழ்த்துகள்!

கடும் மின்வெட்டையும் மீறி தீபாவளிக் கொண்டாட்டங்கள் ஆரம்பித்திருக்கின்றன.  இன்று இங்கே ஒரு மணிக்கு ஒரு முறை மின்சாரம் போயிடுது. ஆகவே ஒரு பின்னூட்டத்துக்கு பதில் சொன்னாலோ அல்லது ஒரு பதிவு படிக்க ஆரம்பித்தாலோ அதை முடிக்க முடியறதில்லை.  இப்போ ஒன்றேகால் மணி நேரமாக மின்சாரம் இருக்கு.  எப்போப் போகும்னு தெரியலை. :(  சென்னையில் தி.நகரில் மற்றும் உள்ள கடைத்தெருக்களில் மின்சாரம் எப்படி ஜகஜ்ஜோதியாக இருக்கிறது என்பதை நண்பர் ஒருத்தர் சுட்டிக் காட்டி இருந்தார்.  அதை எல்லாம் கொஞ்சம் குறைச்சிருந்தாலே சேலம், ஈரோடு, திருப்பூர்ப் பகுதி நெசவாளிகளுக்கு ஐந்து மணி நேரமாவது மின்சாரம் கொடுத்திருக்கலாம்.  மின்சாரமே இல்லாமல் விலையில்லா மிக்சி, கிரைண்டர் எதுக்குக் கொடுக்கிறாங்கனும் புரியலை. :(((

இவ்வளவு மோசமானதொரு நிலைமையை இது வரை பார்த்ததில்லை.  நேற்று தினசரியில் மின் வெட்டு இன்னும் அதிகம் ஆகும் என்கிறார்கள்.  அதோடு காற்றாலை மின்சாரம் வெளிமாநிலங்கள் கூடுதல் விலை தருவதால் அங்கே விற்று விடுகிறார்களாம்.  தமிழக அரசு அந்த விலை கொடுக்க மறுக்கிறது போலிருக்கு. :(((  போர்க்கால நடவடிக்கையாக ஏதேனும் செய்ய வேண்டும்.  அதற்குக் கடவுள் தான் ஆள்பவர்களின் உள்ளங்களில் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும்.  இந்த மின்சாரக் கொடுமையால் வருமானம் இல்லாமல் தவிக்கும் மக்களுக்கு நம்மால் இயன்ற உதவிகளைச் செய்வோம்.  எல்லாருக்கும் கொடுக்கிறது என்பதெல்லாம் நம்மால் நிச்சயம் இயலாது.  நம் அருகே இருப்பவர்களில் மிகக் கஷ்டப்படுபவர்களைத் தேர்ந்தெடுத்து உதவி செய்வோம்.

இந்த மின்வெட்டுப் புராணம் இனி தொடராமல் இருக்க எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

அனைவருக்கும் இனிய ஒளி வீசும்  எப்போதும் ஒளிமயாக  இருக்கும்படி பிரார்த்தித்துக்கொண்டு தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

14 comments:

  1. / தமிழக அரசு அந்த விலை கொடுக்க மறுக்கிறது போலிருக்கு//
    அப்படி இல்லை. விலையே கொடுக்க மறுக்கிறது. எக்கச்சக்கமா கட்டணம் பாக்கி! பின்ன எபப்டி தருவாங்க?
    தீபாவளி வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. வாழ்த்துகளுக்கு நன்றி. தீபாவளி வாழ்த்துகள். ஜூன் 2013 வரை பொறுங்கள் சரியாகி விடும் என்கிறார் முதல்வர். சென்னையில் இன்னும் ஒருமணி நேரமோ இரண்டு மணி நேரமோ அதிகமாக்கி விட்டு மற்ற ஊர்களில் மின்சாரம் கொடுக்கலாம்.

    ReplyDelete
  3. வாங்க ராஜராஜேஸ்வரி, உங்களுக்கும் தீபாவளி வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. வாங்க வா.தி. என்னத்தைச் சொல்ல! இலவசம் கொடுக்கிறதை நிறுத்திட்டு அந்தப் பணத்திலே மின்சாரக் கடனை அடைச்சிருக்கலாமோ! மின்சாரமாவது இருக்கும். மின்சாரம் இல்லாமல் எதுக்கு இலவசம்? :((((

    ReplyDelete
  5. வாங்க ஸ்ரீராம், நெசவாளர்களின் உண்மையான நிலைமை யாருக்கும் புரியலை. ஜூன் வரைபொறுங்கன்னா என்ன அர்த்தம்னு புரியலை. :((( இலவசமே வேண்டாமே. அதை நிறுத்திட்டு மின்சாரத்தை வாங்கிக் கொடுக்கலாம். வயித்துக்காவது கிடைக்கும். :(((((

    ReplyDelete
  6. ...ம்... இங்கும் பதினாறு மணி நேரம் மின்வெட்டு...

    குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  7. //அதற்குக் கடவுள் தான் ஆள்பவர்களின் உள்ளங்களில் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும்.

    ஆள்பவர்களின் உள்ளத்துக்குக் காரணம் யாருனு நினைக்கறீங்க?

    ReplyDelete
  8. ஜூன் 2013க்குப் பிறகு இலவச மின்சாரம்.

    ReplyDelete
  9. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எங்கள் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்!....

    ReplyDelete
  10. வாங்க டிடி, அங்கேயும் மின்வெட்டுனு தெரியும். பொதுவாகத் தமிழ்நாட்டில் சென்னையை விட்டால் மற்ற மாவட்டங்கள் கஷ்டத்தை அனுபவிக்கின்றன. சென்னைக்கு அருகே இருக்கும் திருவள்ளூர், திருநின்றவூர், பட்டாபிராம் போன்ற ஊர்களில்கூடக் கடும் மின் வெட்டு. ஆவடி வரை பரவாயில்லை. இந்தப்பக்கம் தாம்பரம் வரை பரவாயில்லை. தாம்பரம் தாண்டினால் மின் வெட்டு.

    ReplyDelete
  11. ஆள்பவர்களின் உள்ளத்துக்குக் காரணம் யாருனு நினைக்கறீங்க?//

    அப்பாதுரை, அதனால் தானே கடவுளை வேண்டுகிறேன். அவங்க மனதில் மாற்றம் ஏற்படவேண்டும். :(((

    ReplyDelete
  12. ஜூன் 2013க்குப் பிறகு இலவச மின்சாரம்.//

    ஹாஹா, சிரிச்சு மாளலை. :)))))

    ReplyDelete
  13. வாங்க அம்பாளடியாள், முதல் வரவு இல்லைனு நம்பறேன். முன்னேயே பார்த்த நினைவு. உங்களுக்கும் எங்கள் அன்பான தீபாவளி வாழ்த்துகள்.

    ReplyDelete
  14. ஏதோ இன்று காலையிலிருந்தே மின்வெட்டு இல்லை! :)

    ReplyDelete