Wednesday, November 07, 2012

மின்சாரத்தைக் கண்டு பிடித்துக் கொடுங்கள்!

மின்சாரம் என்பது எழுதிப் பார்க்க வேண்டிய ஒன்றாக ஆகிவிட்டது கடந்த இரண்டு, மூன்று நாட்களாக.  காலை மூன்று மணி நேரம், மதியம் மூன்று மணி நேரம் போக இரவில் ஒரு மணிக்கொருதரம் என்றிருந்தபோது எப்படியோ சமாளித்தாயிற்று.  இப்போ நாளில் ஒன்றரை மணி நேரமே மின்சாரம் கிடைக்கிறது.  இரவில் கேட்கவே வேண்டாம். இந்த அழகில் என்னத்தை எழுத! இப்போ இரண்டே கால் மணிக்கு வந்திருக்கு.  எத்தனை நிமிஷமோ!  அதுக்குள்ளே வீட்டுக்கு வேண்டியதையும் செய்துக்கணும். எல்லாம் கடந்து போகும் தான்.  ஆனால் இது?? எப்போக் கடக்கும்? புரியலை. மேலே உள்ளவன் தான் பதில் சொல்லணும். நாங்களாவது பரவாயில்லை.  இன்வெர்டர் இருக்கு.  குறைந்த பக்ஷமாக விளக்கும், மின்விசிறியும் போட்டுக்கலாம்.  எல்லா நடுத்தர வர்க்கத்தினராலும் இன்வெர்டர் வாங்க முடியுமா?  இப்போன்னு அதுக்கு விலையும் அதிகம் வைத்து விற்கின்றனர்.  ஏழை ஜனங்கள்? சின்னச் சின்னத் தொழிற்கூடங்கள் வைத்திருப்பவர்கள்? அதில் வேலை பார்ப்பவர்கள்? அவங்கல்லாம் என்ன செய்வாங்க?  இன்வெர்டரும் சார்ஜ் ஆக மின்சாரம் வேண்டும்.  இப்படியே இருந்தால் இன்வெர்டரும் தகராறு செய்ய ஆரம்பிக்கும்.  என்னதான் நடக்கப் போகிறதோ, ஒண்ணும் புரியலை!

இன்னிக்குக் காலம்பர கையிலே ப்ளேடால் வெட்டிக் கொண்டதில் தட்டச்ச முடியலை.  நடுவிரலில் ஆழமான வெட்டு.  பான்ட் எய்ட் போட்டிருக்கேன். எல்லாம் இந்த மின்சாரக் குழப்பம் தான். :))))) 

21 comments:

  1. அடப்பாவமே மின்சரம் இல்லாவிட்டால் ப்ளேடை வைத்துக் கொண்டு என்ன செய்தீர்கள் கீதா. மின் வெட்டுக் கொடுமை அடுத்த வருஷம் இல்லாமப் போயிடுமாம்.

    ReplyDelete
  2. சுண்டைக்காய் வற்ற்ல் எனக்கும் வைத்துவைங்க. நான் வரும்போது எடுத்துக்கறேன்:)

    ReplyDelete
  3. நிலமையைப் பற்றி எழுதியிருப்பது படிப்பதற்கே சிரமமாக இருக்கிறது. கவனமாக இருங்கள்.

    ReplyDelete
  4. இப்படித் தொடர்ந்தால் திருட்டு மற்றும் நிழல் குற்றங்கள் வளர வாய்ப்பிருக்கிறது.

    ReplyDelete
  5. // ஆனால் இது?? எப்போக் கடக்கும்? புரியலை. மேலே உள்ளவன் தான் பதில் சொல்லணும்//

    நீங்க அபார்ட்மென்ட்லதானே குடியிருக்கீங்க? மேல யாரு இருக்கா?

    சீக்கிரம் மின்சார நிலை சீராக இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

    ReplyDelete
  6. கையை வெட்டிவிட்டீர்களா :(.
    எப்போது மின்சாரக் குழப்பம் தீரப்போகிறதோ.

    ReplyDelete
  7. மின்சாரத்தை பற்றி ஒண்ணும் சொல்லுவதற்கில்லை மாமி. இல்லாது இருக்கும் நேரத்தை விட, மின்சாரம் இருக்கும் நேரம் தான் மிகவும் குறைவு.

    மழையும் இல்லை. வெயில் அடித்தால் தான் இங்குள்ளோர் சந்தோஷப்படுகிறார்கள்....:)

    பார்க்கலாம்...என்ன நடக்கிறது என...

    விரலை கவனித்து கொள்ளவும்.

    ReplyDelete
  8. வாங்க வல்லி, மின்சாரம் இல்லைனதுக்காக ப்ளேடை எடுக்கலை; தைத்துக் கொண்டிருக்கையிலே கத்திரிக்கோலுக்குப் பதிலாக ப்ளேடால் நூலை அறுத்தேன். அது கையை அறுத்துவிட்டது. அப்போப் பேச்சு மின்சாரம் குறித்து! :))))

    ReplyDelete
  9. நிச்சயமா, இப்போ இரண்டு நாட்கள் முன்னாடி கூடப் போட்டிருக்கேன். இன்னும் ஊறவில்லை. காய வைக்கணும். :))))

    ReplyDelete
  10. அப்பாதுரை, ஏற்கெனவே ஆங்காங்கே நடக்கும் திருட்டுகளைப் பற்றிக் கேட்கும்போதே கலக்கமா இருக்கு. :(((இனி என்ன குற்றங்கள் வளரணும்? குற்றங்கள் செறிந்த நாடு னு தான் பாடணும். இன்னிக்குப் பாருங்க, தப்பே செய்யாத ஒரு அப்பாவி லாரி டிரைவரை அடிச்சே கொன்னுட்டாங்க. :(((( எங்கே போகிறோம்னு நினைச்சால் ஒண்ணும் புரியலை.

    ReplyDelete
  11. வாங்க ஸ்ரீராம், எங்க அபார்ட்மென்டுக்கு மேலே கம்யூனிடி ஹால். இல்லைனா இந்த நாலாவது மாடிக்கு நான் வர மாட்டேன்னு ரங்க்ஸ் ஸ்டிரைக் பண்ணிட்டிருந்தாரே. கம்யூனிடி ஹால் இருக்கோ, பிழைச்சேன். :))))

    நான் சொன்னது எல்லாருக்கும் மேலே உள்ளவனை! அந்த அரங்கனை. :))))

    ReplyDelete
  12. வாங்க மாதேவி, விசாரிப்புக்கு நன்றிம்மா.

    ReplyDelete
  13. வாங்க கோவை2தில்லி, மழை பெய்யலைனா தண்ணீருக்கு என்ன செய்வோம்னு புரியலை யாருக்கும்.

    விரல் தேவலை. ஆனால் இன்னிக்குக் காலங்கார்த்தாலே பெருக்கறச்சே வண்டு கொட்டி விட்டது இடது உள்ளங்கையிலே. இரண்டு நாளாகக் காலை வேளையில் இப்படி ஏதானும் நடக்கிறது. :)))) கடுப்பும், வீக்கமும் இப்போத் தான் கொஞ்சம் பரவாயில்லை. :))))

    ReplyDelete
  14. கை பத்திரம. Electrical appliances use பண்ணிண்டு இருக்கறச்சே கரண்ட் போனா அவைகளை ஞாபகமா அணைக்கணும். main ஆ மிக்சி. இல்லைனா திரும்ப வரச்சே எல்லாம் விட்டத்துல இருக்கும். :((( அனுபவம்!!
    ஊருக்கு வரவா வேண்டாமா?:(
    புழுக்கமோ கிழுக்கமோ நம்ப ஊரு நம்ப ஊரு தான் இல்லை?

    ReplyDelete
  15. வாங்க ஜெயஶ்ரீ, என்னமோ இரண்டு நாட்களாக விபத்து நேரம். :))) இன்னிக்கு நான் தான் தூங்கிண்டிருந்த வண்டைக் கவனிக்காம எழுப்பிட்டேன் போல. படுக்கை அறை ஜன்னலில் நேத்திலே இருந்தே தூங்கிண்டு இருந்திருக்கு. நான் கவனிக்கலை. ஜன்னல் கம்பிமேலே கையை வைச்சுக் குனிஞ்சு பெருக்கினா, கையைக் கொட்டி விட்டது. அப்புறமா அதைத் தாஜா பண்ணி வெளியே அனுப்பினோம். :))))

    ReplyDelete
  16. நான் மிக்சி போடுவதெல்லாம் மின்சாரம் இருந்தாத் தான். மற்ற நேரங்களில் போட மாட்டேன். ரொம்ப அவசியமாத் தேவை என்பதை இன்வெர்டர் மூலமா அரைத்துக் கொண்டு உடனடியாக நிறுத்திடுவேன். அதனால் அதெல்லாம் ஒண்ணும் பயம் இல்லை. :)))))

    கனிவான விசாரிப்புக்கு நன்றிம்மா.

    ReplyDelete
  17. தாராளமாய் ஊருக்கு வரலாம். நீங்க இருக்கப் போறது சென்னையிலே, அங்கே இரண்டே மணி நேரம் தான் மின் வெட்டு. ஆகவே அதனால் உங்களுக்குப் பாதிப்பு இருக்காது. இந்த முறை ஸ்ரீரங்கம் வராப்போல ப்ளான் பண்ணுங்க. இங்கே இன்வெர்டரில் மின் விசிறி ஓடும். :))))) அதுக்குள்ளே கொஞ்சமானும் சரியாகாதா? நம்பிக்கை தானே வாழ்க்கை! :))))

    ReplyDelete
  18. இது ரொம்ப கொடுமைங்க. நேத்திக்கு அம்மாகிட்ட பேசும்போது அவங்க கூட சொன்னாங்க. வீட்ல அண்ணாவும் ஒரு இன்வெர்ட்டர் வாங்கி இருக்கார். நீங்க எழுதி இருக்கா மாதிரி சிறு தொழில் பண்றவங்க எல்லாம் எவ்வளவு கஷ்டபடுவாங்க. வேதனையா இருக்கு. சில கஷ்டங்களுக்கெல்லாம் விடிவே வராது, கிடையாது. நம்பி நம்பி ஏமாந்து போறதுதான் மிச்சம்.

    நீங்க ஜாக்கிரதையா இருங்க.

    ReplyDelete
  19. அடடா... முதல் நாள் பிளேடால் கையில் காயம். இரண்டாம் நாள் வண்டு கொட்டு... பார்த்து இருங்க....

    மின்சாரம்... என்னத்தை சொல்ல, சீக்கிரமே நல்ல முடிவுகள் எடுத்தா தான் நல்லது... இல்லையெனில் உத்திரப் பிரதேசம், பீஹாரை விட நாம் மோசமாக ஆகிவிடும் நிலைமை தான்!

    ReplyDelete
  20. கவனம் தேவை...

    இனி அடுத்த மாதம் முதல், வாரம் ஒரு நாள் தான் மின்சாரம்...!!!

    ReplyDelete
  21. டிடி, நீங்க சொல்றது உண்மையா? அதுக்குத் தான் இன்னிக்கு மீட்டிங்க் போடறாங்களா?

    அப்பாதுரை, உங்க மூன்றாம் சுழி பக்கத்திலே எனக்கு ஏன் எதுவுமே தெரியவில்லை?? பழைய பதிவுகள் கூடத் தெரியலையே! :(

    ReplyDelete