Tuesday, November 13, 2012

துலாக்காவிரியில் ஸ்நானம்!


ஐப்பசி மாதத்தைத் துலா மாசம்னு சொல்வாங்க.  காவிரி (இ.கொ.கவனிக்க) பிறந்த மாதம்.  இந்த மாதம் முழுதும் காவிரி ஸ்நானம் விசேஷமானது.  நம்பெருமாளுக்குக் கொள்ளிடக் கரையிலிருந்தே திருமஞ்சன தீர்த்தம் போகும் தினம் தினம்.  ஆனால் இந்தத் துலா மாதம் மட்டும் அம்மாமண்டபம் காவிரிப் படித்துறையில் இருந்து காலையிலே ஐந்தரை மணிக்கு ஆண்டாளம்மாள் தலையிலே தங்கக் குடத்திலே நீர் எடுத்துட்டுப் போவாங்க. இந்த ஆனை ஆண்டாளம்மா இல்லை.  அவங்க இன்னிக்குக் கோயிலில் நம்பெருமாளோட பிசியா இருக்காங்க. இவங்க வெளியிலே இருந்து வந்திருக்காங்க. 

நடுவிலே காவிரியில் தண்ணீரை நிறுத்தி இருந்தாங்க.  அதனால் காவிரி ஸ்நானக் கூட்டம் கம்மியாக இருந்தது.  இப்போ மீண்டும் காவிரியில் தண்ணீர் திறந்துவிடப் பட்டிருக்கிறது.  நாளைக்குக் கடைமுகம் என்பதால் என நினைக்கிறேன்.  இன்னிக்கு நம்ம ரங்க்ஸ் அங்கே தான் குளிப்பேன்னு பிடிவாதம் பிடிச்சுக் கிளம்பிட்டார்.  நான் வீட்டிலேயே கங்கா ஸ்நானம் பண்ணிட்டேன்.  ஆனாலும் விடாப்பிடியாகக் கூடப் போய்ப் படங்களை எடுத்துட்டு வந்தேன்.  துலாபுராணம், கடைமுழுக்கு, முடவன் முழுக்கு போன்றவை பற்றிய செய்திகள் பின்னர்.  இன்னிக்கு இது வரை மின்சாரமும் போகலை.  அதிர்ஷ்டமோ அதிர்ஷ்டம். :)))))




காவேரி தான் சிங்காரி! (இ.கொ.ஸ்பெஷல்) சிங்காரி தான் காவேரி!  கண்ணால் கண்டவள் காவேரி, கருத்தில் நின்றவள் சிங்காரி!

16 comments:

  1. அப்பாடா... இங்கும் மின்சாரம் இருக்கு... முடிவில் நல்ல பாடல்...

    ReplyDelete
  2. Aiiii current!!!! :D :D

    Absolutely delighted to see the pics! :)

    ReplyDelete
  3. 3 வே பெரிய எழுத்தில் ஏன்?! மதுரையிலும் தொடர் மின்சாரம்!

    ReplyDelete
  4. வாங்க டிடி, அங்கும் மின்சாரம் இருப்பது குறித்து சந்தோஷம்.

    ReplyDelete
  5. வாங்க மாதங்கி, தீபாவளி வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. வாங்க ஸ்ரீராம், இ.கொ. இப்போத் தூங்கிட்டு இருப்பார். காலம்பர எழுந்து பார்த்துட்டார்னா உடனே வருவார். அப்போப் புரியும் பாருங்க. அவரை வெறுப்பேத்தறதுக்காகப் போட்டிருக்கேன். :))))))

    ReplyDelete
  7. காவெறி!!

    நமஸ்காரம்ஸ்!!

    ReplyDelete
  8. தீபாவளி அன்று செலவில்லாமல் துலா ஸ்நானம் ஆயிற்று.

    இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

    ReplyDelete


  9. தீபாவளித்திருநாள் வாழ்த்துகள் ..!

    ReplyDelete
  10. ஹாஹா, இ.கொ. நல்வரவு. தீபாவளி வாழ்த்துகள் கிடையாதா? அப்புறமா வாழ்த்துக்க்க்க்க்க்க்க்கள்னு போடுவேன், பரவாயில்லையா? :))))))

    நமஸ்காரம்ஸ்!!//

    ஆசீர்ஸ்!!!! :))))

    ReplyDelete
  11. அப்பாதுரை,

    இ.கொ. வந்துட்டாரு பாருங்க. என்ன நீங்க, இவரைத் தெரியலைனா வலை உலகிலே யாரையுமே தெரியலைனு அர்த்தம். :)))))

    ReplyDelete
  12. நன்றி ரஞ்சனி.

    ReplyDelete
  13. ராஜராஜேஸ்வரி, நன்றிங்க.

    ReplyDelete
  14. இன்று இதுவரை மின்வெட்டு இல்லை! :)))

    துலாஸ்நானம் செய்ய காவிரி செல்ல வில்லை!

    ReplyDelete
  15. ஓ.. இவரா? மறந்தே போச்சு!

    ReplyDelete