Tuesday, January 15, 2013

அண்ணன்மார்களே, தம்பிமார்களே, சீர் கொடுக்க வாங்க


படத்துக்கு நன்றி கூகிளார்.  நம்ம கணுப்பிடி மஞ்சள் இலையிலே வைச்சாச்சு.  காமிரா எடுத்துட்டுப் போகலை. படம் எடுக்கணும்னு தோணலை! அதே!

யாரது அங்கே மந்திரி, வலை உலகத் தலைவி வந்தா நீ எந்திரி!
வணக்கம், வணக்கம், தலைவியாரே, இங்கு எனக்கிட்ட கட்டளை என்னவாக்கும்?

அன்புடனும், பாசத்துடனும் அண்ணன்மாருக்கும், தம்பிமாருக்கும்
வேண்டிக்கொண்டு கணுப்பிடி வைத்தேன் பாருங்க இங்கே

சீரனுப்பச் சொல்லி அண்ணன்மாரையும் தம்பிமாரையும் உசுப்பி விடுங்க மந்திரி

குறைந்த பக்ஷச் சீராக வஸ்த்ரகலா வாங்கிக்கப் படும். (மறக்கமாட்டோமுல்ல)


16 comments:

  1. //குறைந்த பக்ஷச் சீராக வஸ்த்ரகலா வாங்கிக்கப் படும். (மறக்கமாட்டோமுல்ல)//

    நீங்க உங்க நாத்தனாருக்கெல்லாம் வஸ்த்ரகலா அனுப்பிடீங்களா??

    பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. கணுப்பிடி வாழ்த்துகள்...

    ReplyDelete
  3. ஏற்கெனெவே ப்ளஸ் ல சீர் வெச்சாச்சு!

    ReplyDelete
  4. ஆஹா, ராம்வி,போட்டீங்களே ஒரு போடு! :)))))

    ReplyDelete
  5. வாங்க ராஜராஜேஸ்வரி, வாழ்த்துகளுக்கு நன்றி. உங்களுக்கும் எங்கள் வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. வா.தி. சீருக்கு நன்னிஹை. சீரைப் பார்த்தேன், பெற்றுக் கொண்டேன். :)))))

    ReplyDelete
  7. கணுப்பண்டிகை வாழ்த்துகள்!

    ராம்வி சூப்பரா ஒரு கேள்வி கேட்டிருக்காங்க!

    ReplyDelete
  8. வாங்க ரஞ்சனி, வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  9. வஸ்த்ரகலாவே தான் வேணுமா.... :)

    ReplyDelete
  10. சீர் வேலையெல்லாம் முடிஞ்சுது!

    ReplyDelete
  11. வாங்க வெங்கட், அதனால் என்ன வஸ்த்ரகலா இல்லைனா பரவாயில்லை. நான் ரொம்பப்பெருந்தன்மையாக்கும்! விவாஹா கலெக்‌ஷனோ, பிரைடல் 7 கலெக்‌ஷனோ இருந்தால் கூடப்போதுமே! ஹிஹிஹி, இது எப்பூடி இருக்கு????

    ReplyDelete
  12. ஸ்ரீராம், தொலைபேசியிலே சீரெல்லாம் அனுப்ப வசதி இல்லை! எனக்கு வந்து சேரலை! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    :)))))))

    ReplyDelete
  13. வஸ்த்ரகலா ஸ்டாக் இல்லையாம் மாமி வெறும் கலா தான் இருக்காம் ஒகேவா'னு அண்ணன் தம்பிகள் கேக்க சொன்னாங்க...;)

    ReplyDelete
  14. :)))

    உங்களுக்காக எத்தனைபேர் சீர் அனுப்பி இருக்கிறார்கள். :)))) வாழ்த்துகள்.

    நம்ம ஊரில் இந்த சீர் வழக்கம் ஒன்றும் இல்லையே :((

    இருந்திருந்தால் அலுமாரி நிறைந்திருக்குமே:)))

    ReplyDelete
  15. வாங்க ஏடிஎம், லேட்டா வந்ததோட இல்லாமல் அலம்பல் வேறேயா? ஹாஹா, ஹா என் அண்ணன், தம்பிங்க எனக்குப் பொன்னாலும் ப்ளாட்டினத்தாலும் அபிஷேஹமே பண்ணினாங்களாக்கும். எடைக்கு எடை பொன்னும் கொடுக்கப் போறாங்களே! :))))

    ReplyDelete
  16. வாங்க மாதேவி, சீர் அனுப்பினவங்களுக்கெல்லாம் நன்னி சொல்லியாச்சு. அதனால் என்ன, இந்த வருஷத்திலே இருந்து உங்களுக்கு நாங்க எல்லாரும் சேர்ந்து சீர் அனுப்பி வைக்கிறோம். :))))))

    ReplyDelete