Saturday, February 02, 2013

பார்த்து, மெல்ல, கவனமா ஏறவும்!

மாணிக்க விநாயகரிடம் எங்களை மலை ஏற்றிவிடப் பிரார்த்தித்துக் கொண்டோம்.  மேலே போனதும் உச்சிப் பிள்ளையாருக்கு உடைக்க வேண்டி என் கணவர் ஒரு தேங்காயும், அவரின் அண்ணா(பெரியம்மா பிள்ளை) ஒரு தேங்காயுமாக வாங்கிக் கொண்டனர். மன்னியும் என்னை விடவும் உடல்நலம் முடியாதவர்களே. எப்படி ஏறப் போறோம்னு எங்களுக்கே பிரமிப்புத் தான்.  ஆனால் அஹோபிலத்தில் எங்களை மேலே வர வேண்டாம்னு தடுத்தாப்போல் இங்கே யாரும் தடுக்கவில்லை.  மெல்ல, பையப் பைய, பார்த்துப் பதனமாப் போங்க என எதிரிட்டவர்கள் அனைவரும் ஒருமுகமாகச் சொன்னார்கள்.   படிகளில் ஏற ஆரம்பித்தோம்.



இங்கே தான் ஏற ஆரம்பிக்க வேண்டும்.



கொஞ்ச தூரம் ஏறியதும் தெரியும் மெளனசுவாமிகள் மடம்.  இவர் தாயுமான சுவாமிகளின் குரு.  தாயுமான சுவாமிகள் குறித்து அறிய  இங்கே பார்க்கவும்.
http://geethasmbsvm6.blogspot.in/2011/11/blog-post.html#comment-form

லிங்க் ஆகக் கொடுக்க முடியலை.  அது என்னமோ செட் ஆக மாட்டேன்னு பிடிவாதம்.  இதைக் கடந்து மேலே இன்னும் கொஞ்சம் ஏறியதும் நூற்றுக்கால் மண்டபம் வந்தது.  அந்த மண்டபத்தில் சனி, ஞாயிறுகளில் தேவாரம், திருமுறைகள் கற்றுக் கொடுப்பதாக அறிவிப்புப் பலகையைப் பார்த்ததும் சந்தோஷமாக இருந்தது.  பெரும்பாலும் கோயில்களில் தேவாரம், திருமுறைகள் பாடுவதில்லை என்பதே எங்கும் பேச்சாய் இருக்க, நான் செல்லும் பல கோயில்களிலும் இம்மாதிரியான அறிவிப்புப் பலகையைக் காண நேர்ந்திருக்கிறது.  அதோடு கால பூஜைகள் நடக்கையில் அபிஷேஹ, அலங்காரங்கள் முடிந்து அர்ச்சனைகள் முடிந்ததும், பெரிய தீபாராதனை எடுக்கும் முன்னர் பல கோயில்களிலும் ஓதுவா மூர்த்திகளால் திருமுறைகள் பாடப்பட்டதுமே தீப ஆராதனைகள் நடக்கின்றன.  இப்போதெல்லாம் பெரும்பாலான கோயில்களில் பெண் ஓதுவார்களும் காணப்படுகின்றனர். 

நூற்றுக்கால் மண்டபம்.  பெயர் முழுதும் தெரியறாப்போல் எடுக்கணும்னா கொஞ்சம் பின்னாடி போகணும்.  பின்னால் படி ஏறுபவர்கள், இறங்குபவர்கள் என்பதால் கொஞ்சம் பயம்! :))))))


மண்டபத்தின் ஒரு சிறு பகுதி உள்பக்கம் ஜன்னல் வழியாகத் தெரிவதைப் பார்க்கலாம்.  கீழே அறிவிப்புப் பலகையைக் காண முடியும்.


கொஞ்சம் மெதுவா, ஹிஹிஹி, ரொம்ப ரொம்ப மெதுவாத் தான் ஏறினேன்.  படிகளுக்கு இடையே ஒரு அடிக்கும் மேல் இருக்கும்னு நினைச்சதுக்கு அவ்வளவு இல்லை என்றாலும் சில இடங்களில் ஒன்றரை அடி இருந்தது.  என்பதோடு சில இடங்களில் பிடிமானம் இல்லாமல் இருந்ததால் படிகளில் ஏறுகையில் முன்னால் குனிந்து கொண்டு ஏற வேண்டி வந்தது. அதிலேயும் ஒரு ரிஸ்க்; அப்படியே மல்லாக்கச் சாயந்துவிட்டால்??? செங்குத்துப் படிகள் வேறே. அடுத்த பாகம் அடுத்த பதிவில். மெதுவாவே போவோமே! :))))

27 comments:

  1. அப்பனே பிள்ளையாரப்பா நீதான் காப்பத்தினாய்.
    நான் நினைத்துக் கொண்டே இருந்தே கீதா. நல்லபடியாப் போய்விட்டு வரவேணுமே என்று.
    அவர் நினைத்தால் முடியாத காரியமா.சீக்கிரம் அடுத்த பதிவு:0)

    ReplyDelete
  2. இங்கேயும் அதேதான்! அதனாலே மெ....து....வா.......வே......
    போவோம்.
    அவசரமில்லை.
    செங்குத்துப் படிகளைப் பார்த்தாலே பயம் தான்!

    ReplyDelete
  3. எங்க ஊருக்கு வந்துட்டு என்னை பாக்காம போனா என்ன அர்த்தம்?

    ReplyDelete

  4. பிள்ளையாரப்பனை வேண்டிக்கொண்டு மலையெற்த் துவங்கியது படித்தேன். நாங்கள் ஒவ்வொரு வருடமும் யாத்திரையாக திருச்சி கும்பகோணம், வைத்தீஸ்வரன் கோயில். சிதம்பரம் என்று போவது வழக்கம். 2011-ம் ஆண்டு அமெரிக்காவிலிருந்து என் நண்பன் வந்திருந்தான் உச்சிப் பிள்ளையார் கோயிலுக்குப்போக என் மனைவி தடை விதித்தாள். எப்படியோ அவளை சமாதானம் செய்து மலை ஏறினோம். நிதானமாகத்தான். அதில் ஒரு திருப்தி. மலை ஏறியதில் மட்டுமல்ல . என் மனைவியையும் ஏற வைத்ததில் உங்கள் பதிவு நினைவுகளை உசுப்புகிறது. நாங்கள் திருச்சியில் இருந்தபோது உத்தியோக நிமித்தமாக ஒரு ஜெர்மானியர் வந்திருந்தார். அவரைக் கூட்டிக் கொண்டு உச்சி பிள்ளையார் கோயிலுக்குப் போகும் போது அயல் நாட்டவர் , வேற்று மதத்தவர், அனுமதி இல்லைஎன்றனர். நான் மிகவும் வேண்டிக் கேட்டுக் கொண்டதற்கிணங்க அவர் தன் நெற்றியில் விபூதி அணிய சம்மதித்தால் அனுமதிக்கிறோம் என்றார்கள். அவர் பட்டையாக விபூதியும் அதன் நடுவில் குங்குமமும் அணிந்து கொண்டு வாயெல்லாம் பல்லாக எங்களுடன் வந்து தரிசனம் செய்தார். நினைவுகளைப் பகிர வைத்த உங்களுக்கு நன்றி.

    ReplyDelete

  5. பிள்ளையாரப்பனை வேண்டிக்கொண்டு மலையெற்த் துவங்கியது படித்தேன். நாங்கள் ஒவ்வொரு வருடமும் யாத்திரையாக திருச்சி கும்பகோணம், வைத்தீஸ்வரன் கோயில். சிதம்பரம் என்று போவது வழக்கம். 2011-ம் ஆண்டு அமெரிக்காவிலிருந்து என் நண்பன் வந்திருந்தான் உச்சிப் பிள்ளையார் கோயிலுக்குப்போக என் மனைவி தடை விதித்தாள். எப்படியோ அவளை சமாதானம் செய்து மலை ஏறினோம். நிதானமாகத்தான். அதில் ஒரு திருப்தி. மலை ஏறியதில் மட்டுமல்ல . என் மனைவியையும் ஏற வைத்ததில் உங்கள் பதிவு நினைவுகளை உசுப்புகிறது. நாங்கள் திருச்சியில் இருந்தபோது உத்தியோக நிமித்தமாக ஒரு ஜெர்மானியர் வந்திருந்தார். அவரைக் கூட்டிக் கொண்டு உச்சி பிள்ளையார் கோயிலுக்குப் போகும் போது அயல் நாட்டவர் , வேற்று மதத்தவர், அனுமதி இல்லைஎன்றனர். நான் மிகவும் வேண்டிக் கேட்டுக் கொண்டதற்கிணங்க அவர் தன் நெற்றியில் விபூதி அணிய சம்மதித்தால் அனுமதிக்கிறோம் என்றார்கள். அவர் பட்டையாக விபூதியும் அதன் நடுவில் குங்குமமும் அணிந்து கொண்டு வாயெல்லாம் பல்லாக எங்களுடன் வந்து தரிசனம் செய்தார். நினைவுகளைப் பகிர வைத்த உங்களுக்கு நன்றி.

    ReplyDelete
  6. வாங்க வல்லி, நல்லபடியாப் போயிட்டு வந்து அப்புறமா நல்லபடியாப் படுத்தும் எழுந்தாச்சு! :)))))

    ReplyDelete
  7. வாங்க ரஞ்சனி, மெதுவாத்தான் ஏறியாகணும். :)))))வயசு ஆனதே அப்போத்தான் நினைவில் வந்தது! :))))))))

    ReplyDelete
  8. வாங்க ஜேஜே, முதல் வரவுக்கு நன்றி. உங்க ஊரா? ஹிஹிஹி, இப்போ எங்க ஊராக்கும்! :))))

    ReplyDelete
  9. வாங்க ஜிஎம்பி சார், நல்வரவு. எப்படியோ ஏறிட்டோம். எல்லாம் பிள்ளையார் தயவு தான். :))))ஆனால் எல்லாருக்கும் உள்ளூர நடுக்கம் தான். எனக்கு பயம் இல்லை என்றாலும் பாதியிலே திரும்பறாப்போல் ஆயிடுமோனு நினைச்சேன். ஆனால் சமாளிச்சுத் தாயுமானவரையும், மட்டுவார்குழலியையும் பார்த்து உத்திரவு வாங்கிக் கொண்டு மேலே பிள்ளையாரப்பனையும் பார்த்துட்டுப் பின்னர் வயலூருக்குப் போய்த் தம்பியாரையும் பார்த்துட்டு வந்தோம்.

    ReplyDelete
  10. சிறுவ்யதில் வருடாவருடம் சிரித்துக்கொண்டே அநாயசமாக ஏறிய படிகள் .. இன்று ..
    படிப்பினை தருகின்றன ..

    ReplyDelete
  11. இப்போதெல்லாம் பெரும்பாலான கோயில்களில் பெண் ஓதுவார்களும் காணப்படுகின்றனர். //

    நல்ல செய்தி சொன்னீர்கள். எந்த கோவிலில் பார்த்தீர்கள்? அறிய ஆவல்.

    அண்ணன், தம்பி இருவரையும் பார்த்து விட்டீர்களா ? ஸ்ரீரங்கம் வந்தபின் தெய்வ தரிசனங்கள் அடிக்கடி கிடைக்கிறது மகிழ்ச்சி.


    ReplyDelete
  12. சிரமம் தான். பெண் ஓதுவார்கள் பார்த்ததே இல்லை.

    ReplyDelete
  13. வாங்க ராஜராஜேஸ்வரி, என்னை விட வயதானவர்களெல்லாம் ஒரே ஓட்டமாக ஏறுவதையும் பார்த்தேன். :))))

    ReplyDelete
  14. சிதம்பரம் கோயிலில் கடந்த இரண்டு, மூன்று வருடங்களாகப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். இங்கேயும் தாயுமானவ சுவாமி கோயிலில் பார்த்தேன். ஆனால் இவர் நியமிக்கப்பட்டவரா என்பதை அறிய முடியவில்லை. சிதம்பரம் கோயிலில் தருமை ஆதீனத்தால் நியமிக்கப்பட்டவர்கள் என தீக்ஷிதர்கள் மூலம் அறிந்து கொண்டேன். இன்னும் சில கோயில்களிலும் பார்த்தேன். சீர்காழியிலேயா?? சரியாக நினைவில் இல்லை. தாழ்த்தப்பட்ட அல்லது பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒரு பெண்மணியும் ஓதுவார் பயிற்சி பெற்று அரசால் ஓதுவாராக நியமிக்கப் பட்ட செய்தியைப் படித்த நினைவும் உள்ளது. எந்தக் கோயிலில் என்பது தான் தெரியவில்லை. நான் பார்த்தது சிதம்பரம், திருச்சி தாயுமானசுவாமி கோயில் தவிர இன்னும் ஓரிரு கோயில்கள்.

    ReplyDelete
  15. வாங்க கோமதி அரசு, இன்னும் பார்க்கப் பெரியதொரு லிஸ்டே இருக்கு. உடல்நிலையைக் கவனிக்க வேண்டி இருக்கு. அதான் அதிகம் போக முடியலை. :(

    ReplyDelete
  16. வாங்க அப்பாதுரை, எது சிரமம்?? :))) பெண் ஓதுவார்களா? இப்போல்லாம் நிறைய வராங்க.

    மக்கள் தொலைக்காட்சியில் இரண்டு பெண்கள் திருமுறைகள் பாடுவதைக் கேட்டால் வியப்பாக இருக்கும். அவ்வளவு அருமையாகப் பாடுகின்றனர். உச்ச ஸ்தாயியில் குரலெடுத்து, இவர்களை ஓதுவார்களாக நியமிக்கலாமே எனத் தோன்றும். :))))

    ReplyDelete
  17. பெண் ஓதுவார்கள் - ஆச்சர்யம்.
    படிகளில் ஏறுவது பற்றிச் சொல்லி பயத்தையும் சொல்லும்போது பயமாகத்தான் இருக்கிறது.

    ReplyDelete
  18. கீதா, உடல் நிலையை கவனித்துக் கொள்ளுங்கள். மூச்சு பயிற்சி (பிராணாயமம்)செய்தால் ஆஸ்துமா கட்டுபடுமே! நீங்கள் செய்து பார்த்து இருக்கிறீர்களா? செய்து பாருங்களேன்.
    ஏதாவது தப்பாக சொல்லி இருந்தால் மன்னித்துக் கொள்ளவும்.
    அன்புடன்
    கோமதி அரசு.

    ReplyDelete
  19. //இவர்களை ஓதுவார்களாக நியமிக்கலாமே எனத் தோன்றும். :))

    absolutely right. ஆண் புரோகிதர்கள் போலவே இதுவும் ஏதாவது விவகாரமாக இருக்கும்னு நினைச்சேன்.
    (படியேறிப் போனது சிரமம்னு சொன்னேன் :-)

    ReplyDelete
  20. மெதுவாகவே போகலாம் மாமி. படங்கள் எல்லாம் நன்றாக இருக்கு.

    ReplyDelete
  21. வாங்க ஸ்ரீராம், பெண் ஓதுவார்கள் எனக்குத் தெரிந்து நாலைந்து பேர் இருக்கின்றனர். ஒரு சிலரே நல்ல குரல் வளத்தோடு பாடுகின்றனர். மற்றவர் ஆர்வம் காரணமாகவும், பக்தி மேலிட்டினாலும் பாடுகின்றனர். நன்கு தமிழ் உச்சரிப்போடு பாடக் கூடிய பெண்கள் முன்வர வேண்டும்.

    ReplyDelete
  22. கோமதி அரசு, மறு வரவுக்கு நன்றி, கிட்டத்தட்டப் பனிரண்டு வருடங்களாக யோகாசனப் பயிற்சியும், பிராணாயாமம் எனப்படும் மூச்சுப் பயிற்சியும் செய்து வருகிறேன். அதனாலேயே ஓரளவு கட்டுப்பாட்டில் இருக்கிறது. முன்னெல்லாம் படுத்தால் மாசக்கணக்குத்தான். மற்றபடி நீங்கள் தவறாக எதுவும் சொல்லவில்லை. :)))))

    ReplyDelete
  23. வாங்க அப்பாதுரை, ஒரு முறையாவது இந்தியா வந்தால்/அல்லது யு,எஸ்ஸில் உங்களுக்குத் தமிழ் நிகழ்ச்சிகள் காணும் சந்தர்ப்பம் கிட்டினால் மக்கள் தொலைக்காட்சியில் இந்த இரு பெண்களின் பாடலைக் கேட்டுப் பாருங்கள். மிக அருமையாகப் பாடுவார்கள். உ.பி. கோயிலில் ஏறுவது என்பது சிரமம் தான். :))))

    ReplyDelete
  24. வாங்க ராம்வி, மெல்லவே தான் போறோம். :))))

    ReplyDelete
  25. ஏழெட்டு வருஷம் முன்னாடி உச்சிப்பிள்ளையாரைத் தரிசிக்க மலையேறுனது ஞாபகம் வருது..

    ReplyDelete
  26. வாங்க சாரல், நாங்க கிட்டத்தட்ட 26 வருடம் கழிச்சு உச்சிப் பிள்ளையாரைப் பார்க்க வேண்டி ஏறி இருக்கோம். :)))

    ReplyDelete
  27. நானும் மெதுவாகவே ஏறி வருகின்றேன்.:))

    ReplyDelete