Monday, February 18, 2013

வியாழனையும், சந்திரனையும் பாருங்க, சேர்ந்து இருக்காங்க!

சாயந்திரம்  மின்சாரம் இல்லாத நேரம்.  புத்தகம் படிக்கையில் கைபேசி அழைப்பு.  எடுத்துக் கேட்டால் எதிர்பாரா இடத்தில் இருந்து.  நண்பர் காளைராஜன் காரைக்குடியில் இருந்து அழைத்தார்.  "தலைக்கு மேலே சந்திரனும், வியாழனும் இருக்காங்க.  உடனே போய்ப் பாருங்க!" னு சொன்னார்.  உடனே நாங்க ரெண்டு பேரும் மொட்டை மாடிக்குப் போனோம்.  சந்திரன் அருகே வியாழன்.  சற்றுத் தள்ளி ரோகிணி நக்ஷத்திரம்.

பெரிசு பண்ண முயற்சித்தேன். முடியலை;  அதாவது எனக்கு வரலை.  ரேவதி சொன்னாப்போல் தான் முயன்றேன்.  வரலை.  நீங்க பெரிசு பண்ணிப் பார்த்துக்குங்க. :))))))

17 comments:

  1. வியாழன் சந்திரன்.. என்ன தெரிகிறது எனக்கு? புகைப் படம் பார்த்து ரசிக்கத் தெரிகிறது!

    ReplyDelete
  2. வானத்தில் மேகமூட்டம். பார்க்க முடியவில்லை. உங்கள் பதிவில் பார்த்தது சந்தோஷம் கீதா!
    பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  3. வியாழன் பார்க்கிறதுக்கு ரொம்ப கஷ்டம்.. உங்களால பார்க்க முடிஞ்சுதா? அதுவும் சந்திர ஓளியில? great!

    ReplyDelete
  4. அட சின்ன புள்ளியாக இருப்பது வியாழனா?

    நாங்களும் பார்த்து விட்டோம் - உங்கள் புகைப்படம் மூலமா!

    ReplyDelete
  5. வியாழனையும் சந்திரனையும் பார்தோம்
    பெரிது செய்ய முடியவில்லை .இருந்தாலும் நன்றாக தெரிகிறது.
    பகிர்வுக்கு நன்றி.
    மிந்தடையால் நன்மை, புத்தகம் வாசித்தல், நிலவை பார்த்தல்.

    ReplyDelete
  6. வாங்க ஸ்ரீராம், சின்னப் புள்ளியாகத் தெரியறதே வியாழன். காலை சூரியோதயத்துக்கு அரை மணி முன்னே மொட்டை மாடி இருந்தால் அங்கே போய்க் கிழக்கே பாருங்க சுக்கிரனைப் பார்க்கலாம். மேற்கே அஸ்தமனம் ஆகும் சனி கிரஹத்தைப் பார்க்கலாம்.

    ReplyDelete
  7. வாங்க ரஞ்சனி, இங்கே வானம் தெளிவாகவே இருக்கு. :))))

    ReplyDelete
  8. வாங்க டிடி, ஆமா இல்ல?? :))))

    ReplyDelete
  9. வாங்க அப்பாதுரை, இப்போக் கொஞ்ச நாட்களாச் சந்திரனோடு சேர்ந்து உதயம் ஆகிறது. அதுக்கு முன்னால் வியாழன் முன்னால் உதயம் ஆனப்போவும் பார்த்தேன். எங்களுக்கு மொட்டை மாடிக்குப் போனால் இப்படித்தான் கிரஹங்களின் சஞ்சாரத்தைத் தெரிந்து வைத்துக் கொண்டு கண்டுபிடிப்பது ஒரு பொழுது போக்கு. :)))))

    ReplyDelete
  10. வாங்க வெங்கட், ஆமாம் சின்னப் புள்ளியாகத் தெரியறது தான் வியாழன்.

    ReplyDelete
  11. வாங்க கோமதி அரசு, ரேவதி ரைட் க்ளிக் பண்ணினால் படம் பெரிசாகும்னு சொன்னாங்க, நானும் பலமுறை பண்ணிப் பார்த்துட்டேன். பெரிசா ஆகலை. சரினு விட்டுட்டேன். இங்கே பிகாசா ஆல்பத்திலே பெரிசாத் தான் இருக்கு. பதிவிலே போடறதுக்குனு சின்னது பண்ணினா அப்புறமாப் பெரிசு பண்ண வர மாட்டேங்குது. அதாவது எனக்குத் தெரியலை. :)))))))

    ReplyDelete
  12. மின் தடை இருந்தாலும் இல்லாட்டாலும் புத்தகம் படிக்கிறது தினமும் இரண்டு, மூன்று மணி நேரமாவது உண்டு. இல்லைனா அன்னிக்குப் பொழுது பொழுதாக இருக்காது. மொட்டை மாடிக்கும் போவோம். அரை மணியாவது உட்கார்ந்து சுற்றிலும் ரசித்துவிட்டுக் காற்றும் வாங்கிக் கொண்டு வருவோம். இப்போத் தான் உடம்பு சரியில்லாமல் போனதிலே இருந்து எல்லாமே நின்னு போச்ச்ச்ச்ச்ச்! :))))

    ReplyDelete
  13. இங்கேயும் நிலாவைப் பார்க்க முடியவில்லை:(
    மொட்டை மாடிக்குப் போணும்னால் தனியாப் போக பயம்.அஞ்சாவது

    மாடி மொட்டைமாடி.ஸ்விம்மிங் பூல்.அஹனால் போகக் கூச்சம்.
    உங்கப் அதிவில சந்திரனையும் வியாழனையும் பார்த்தாச்சு,. முழுநிலவு
    நாளாச்சா? நாளைக்குப் பார்த்துடறேன். நன்றி கீதா,

    ReplyDelete
  14. வாங்க வல்லி, புது இடத்தில் போவது என்றால் யோசனைதான் யாருக்குமே. உடல் நலம் சரியில்லைனு எழுதி இருந்தீங்க. தேவலையா? கவனமாக இருங்கம்மா. :(

    ReplyDelete
  15. ஆகா! வியாழனையும் சந்திரனையும் கண்டுகொண்டோம். நன்றி.

    ReplyDelete
  16. வாங்க மாதேவி, தவறாமல் வந்து கருத்துப் பதிப்பதற்கு நன்றிம்மா.

    ReplyDelete