Monday, May 06, 2013

எங்கள் சம்பந்தி சாப்பிடவே மாட்டாள்! முழுப்பாடலும், வெங்கட் நாகராஜுக்கு நன்றியுடன்!


சம்மந்தி சாப்பிடவே மாட்டாள்
     எங்கள் சம்மந்தி சாப்பிடவே மாட்டாள் 
வெகு சங்கோஜக்காரி எங்கள்
சம்மந்தி சாப்பிடவே மாட்டாள் 
வெகு சங்கோஜக்காரி எங்கள்
சம்மந்தி சாப்பிடவே மாட்டாள்

இட்டிலியில் இருநூறு, ஜாங்கிரியில் முந்நூறு,
மைசூர்பாகில் நானூறு, தயிர்வடையில் ஐந்நூறு
சம்மந்தி சாப்பிடவே மாட்டாள்
இட்டிலியில் இருநூறு, ஜாங்கிரியில் முந்நூறு,
மைசூர்பாகில் நானூறு, தயிர்வடையில் ஐந்நூறு
சம்மந்தி சாப்பிடவே மாட்டாள்

புளியோதரையும் வெண்பொங்கலும் காராசேவும் கைமுறுக்கும்
     திரட்டுப்பாலும் தேன்குழலும் விதம் விதமாகவே ஒரு கை பார்ப்பாள்
சம்மந்தி சாப்பிடவே மாட்டாள்
புளியோதரையும் வெண்பொங்கலும் காராசேவும் கைமுறுக்கும்
     திரட்டுப்பாலும் தேன்குழலும் விதம் விதமாகவே ஒரு கை பார்ப்பாள்
சம்மந்தி சாப்பிடவே மாட்டாள்

குலைகுலையாக வாழைப்பழமும் கூடைகூடையாக திராட்சைப் பழமும்
     டசன் டசனாக ஆப்பிள் பழமும் தட்டுத் தட்டாக ஆரஞ்சு பழமும்
     போதாக்குறைக்கு பலாப்பழங்களும்
தின்னுத்தின்னு தீர்ப்பாள் அலுக்கவே மாட்டாள்
சம்மந்தி சாப்பிடவே மாட்டாள்

குலைகுலையாக வாழைப்பழமும் கூடைகூடையாக திராட்சைப் பழமும்
     டசன் டசனாக ஆப்பிள் பழமும் தட்டுத் தட்டாக ஆரஞ்சு பழமும்
     போதாக்குறைக்கு பலாப்பழங்களும்
தின்னுத்தின்னு தீர்ப்பாள் அலுக்கவே மாட்டாள்
சம்மந்தி சாப்பிடவே மாட்டாள்

அமெரிக்க பாதாம் அரேபியா பேரீச்சை இந்திய முந்திரி
     ஈராக்கி பிஸ்தா காஷ்மீர அக்ரூட் உலர்ந்ததிராட்சை
குங்குமப்பூப் போட்ட கற்கண்டுப் பாலை
குடம்குடமாக குடித்தேத் தீர்ப்பாள்
தின்னாலும் கொண்டாலும் திருப்தியில்லாத
சம்பந்தி சாப்பிடவே மாட்டாள்

அமெரிக்க பாதாம் அரேபியா பேரீச்சை இந்திய முந்திரி
     ஈராக்கி பிஸ்தா காஷ்மீர அக்ரூட் உலர்ந்ததிராட்சை
குங்குமப்பூப் போட்ட கற்கண்டுப் பாலை
குடம்குடமாக குடித்தேத் தீர்ப்பாள்
தின்னாலும் கொண்டாலும் திருப்தியில்லாத
சம்மந்தி சாப்பிடவே மாட்டாள்

வறுவறு சீவலும் வாசனைப்பாக்கும்
கவுளி கவுளியாய் கும்பகோண வெற்றிலையும்
ஜாதிக்காய், ஏலக்காய், கத்தைக்காம்பும்
புட்டிபுட்டியாகவே கோலி சோடாவும்
சம்மந்தி சாப்பிடவே மாட்டாள்

வறுவறு சீவலும் வாசனைப்பாக்கும்
கவுளி கவுளியாய் கும்பகோண வெற்றிலையும்
ஜாதிக்காய், ஏலக்காய், கத்தைக்காம்பும்
புட்டிபுட்டியாகவே கோலி சோடாவும்
சம்மந்தி சாப்பிடவே மாட்டாள்
வெகு சங்கோஜக்காரி எங்கள் சம்மந்தி
எங்கள் சம்மந்தி
ஆமா சம்மந்தி சாப்பிடவே மாட்டாள்
            எங்கள் சம்மந்தி சாப்பிடவே மாட்டாள்


வெயில் காரணமாவோ என்னவோ ஒரே வயிற்று வலி. அதோடு மின்சாரப் படுத்தல், இன்வெர்டரே உயிரை விட்டுடுச்சு. ஹிஹிஹி, வேறே மாத்தறாப்போல் ஆயிடுச்சு. நேத்திக்கு ஒரே அமர்க்க்க்க்க்க்க்க்க்களம்! :)))) ராத்திரி உங்களை எல்லாம் மின்சாரத்தைக் கொடுத்துத் தூங்க விடமாட்டோம்னு ஒரே அடம். கேட்டால் ஆங்காங்கே கொள்ளை, கொலை, திருட்டுனு நடப்பதால் மக்கள் விழிச்சுட்டு இருக்கட்டும்னு இப்படி ஒரு ஏற்பாடுனு சொல்றாங்க. :)))))))))))))))))

32 comments:

  1. ஆமா சம்மந்தி சாப்பிடவே மாட்டாள்... நம்புகிறோம்...

    அதனால் தான் வயிற்று வலியா...? ஹிஹி...

    ஏற்பாடு அமர்க்க்க்க்க்க்களம்...!

    ReplyDelete
  2. வெங்கட் ரசித்தபாடல் என்று பகிர்ந்த போது கேட்டு மகிழ்ந்து இருக்கிறேன்.
    என் பேரன் இந்த பாடலை பயங்கர வெக்கப்படும் முகபாவத்துடன் பாடி களுக் என்று சிரிப்பான். அவனுக்கு பிடித்த பாடல்.

    வயிற்றுவலிக்கு கொஞ்சம் வெந்தயத்தை வாயில் போட்டுக் கொண்டு, நீர் மோர் அல்லது தண்ணீர் குடித்தால் சிறிது நேரத்தில் வயிற்றுவலி சரியாகி விடும்.
    வெயிலுக்கு இதமாய் இருக்கும்.

    ReplyDelete
  3. ஆஹா... மீண்டும் இன்று ஒரு முறை கேட்க வைத்துவிட்டீர்கள்....

    :)

    கல்யாணம் பற்றிய பகிர்வுகள் படிக்கணும்.... படிக்கிறேன்.

    ReplyDelete
  4. very funny.

    எனக்கும் ஜிஎம்பி போல சந்தேகம் இருந்தது.. நையாண்டிப் பாட்டா? கேட்டதே இல்லை.

    ReplyDelete
  5. டிடி, க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :))))) வெயிலினால் வயிற்று வலியாக்கும். ஹிஹிஹி, ஏற்பாடுகள் நல்லா இருக்கா? தாங்கீஸ்..

    ReplyDelete
  6. நீங்க அனுப்பின இந்தப் பாடலின் சுட்டியை அப்போப்போ போட்டுக் கேட்பேன் எல்கே. நன்றி உங்களுக்கும் தான். :))))

    ReplyDelete
  7. கோமதி அரசு, இந்தப் பாடல் ஒரு காலத்தில் எல்லார் வீட்டுக் கல்யாணங்களிலும் ஒலித்திருக்கிறது. :)) இப்போ இருக்கும் இடம் தெரியவில்லை.

    வெயிலினால் வயிற்று வலினு நினைக்கிறேன். வயிற்றில் தண்ணீர் போனாலே வலி வருது. :))) ஒண்ணும் போடலைனா நல்லா இருக்கு. தினம் தினம் முளைக்கட்டிய வெந்தயத்தின் நீரை நெல்லிக்காய்ச் சாறோடு குடித்து வருகிறோம். முளைக்கட்டிய வெந்தயத்தைக் கஞ்சியில் சேர்த்துடுவேன். :)))

    ReplyDelete
  8. வாங்க வெங்கட், விலாசம் தெரிஞ்சு சரியான இடத்துக்கு வந்துட்டீங்கனு நினைக்கிறேன். :)))

    மெதுவாப் படிங்க. அவசரம் ஒண்ணும் இல்லை.

    ReplyDelete
  9. அப்பாதுரை, ஒரு காலத்தில் இந்தப் பாடல்கள் நிறைய ஒலித்திருக்கின்றன. இது நையாண்டிப் பாட்டுத் தான். இந்தப் பாடல் ஒரு வரி பாட, நாதஸ்வரம் இன்னொரு வரி பாடத் தொடர்ந்து பாடுவாங்க.

    ReplyDelete
  10. கேட்டிருக்கிறேன். அருணா சாய்ராம் கூட இந்தப் பாட்டுப் பாடி இருக்காரோ....!

    ReplyDelete
  11. ஒரு வரி வாய்ப்பாட்டு, ஒரு வரி நாதசுரம்னதும் இன்னும் ஆர்வம் கூடிப்போச்சு. எங்கயாவது கேசட் சிடி கிடைச்சா எடுத்துப் போடுங்களேன்? நானும் தேடிப் பார்க்கிறேன். நன்றி.

    ReplyDelete
  12. வெங்கட்டுக்கு இதெல்லாம் தெரிஞ்சிருக்கே.
    இங்கேயும் நேத்துப் பூராவும் இன்வர்ட்ட்ர் இல்லமல் வெந்து கொதித்தது.
    நேற்று இரவு வயிறு சரியில்ல்லாமல் போய் அவஸ்தை. ஏண்டா ராமான்னு போச்சு.என்ன செய்யலாம் நமக்குக் கீழே இன்னும் எத்தனைபேர் கஷ்டப் படுகிறார்களோ.
    சம்பந்திப் பாட்டு படு அமர்க்களம். கோமதிக்கும் தெரிந்திருக்கே. ஒரு பாட்டி இல்லையே இதையெல்லாம் பாடிக்காட்ட:(

    ரொம்ப நன்றாக இருந்ததுமா கீதா.
    இன்வர்ட்டர் புதுசு நன்றாக வேலை செய்யும் என்று நம்புகிறேன்.

    ReplyDelete
  13. வாங்க ஸ்ரீராம், அருணா சாய்ராம் பாடி இருக்காங்களானு தெரியலை. :))) ஆனால் வானொலியில் இதன் காசெட்டுகள் விற்பனைக்குக் கிடைத்தன. இப்போத் தெரியலை.

    ReplyDelete
  14. எல்கே அனுப்பினது சுட்டி இருந்தது. தேடினாக் கிடைக்கலை. மறுபடி பார்க்கிறேன் அப்பாதுரை.

    ReplyDelete
  15. டிடி, போய்ப் பார்த்துட்டேன், நன்றிப்பா.

    ReplyDelete
  16. வாங்க வல்லி, கை தேவலையா? புது இன்வெர்டர் நல்லாத் தான் வேலை செய்யறது. விலைதான் நல்லா இல்லை. :))))))பொதுவா இந்தப் பாடல் எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும்னு நினைச்சேனே!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

    ReplyDelete
  17. இப்போக் கூடப் பாடலைப்போட்டுக் கேட்டேன். அப்பாதுரை, ரேவதி, ஜிஎம்பி சார் ஆகியோருக்கு அனுப்பி இருக்கேன். :))))

    ReplyDelete
  18. மத்தவங்களும் விருப்பப் பட்டால் அனுப்பி வைக்கிறேன்.

    ReplyDelete
  19. பாடலை இங்கேயும் கேட்கலாம்....

    http://rasithapaadal.blogspot.com/2010/12/blog-post_25.html

    ReplyDelete
  20. //கோமதி அரசு, இந்தப் பாடல் ஒரு காலத்தில் எல்லார் வீட்டுக் கல்யாணங்களிலும் ஒலித்திருக்கிறது. :)) //

    ஆம், நீங்கள் சொல்வது போல் நானும் கேட்டு இருக்கிறேன், கல்யாணவீடுகளில் நலுங்கில் பாடப் படும்.
    வெங்கட் அவர்களின் ரசித்தபாடல் பாடல் என்ற பதிவில் கேட்கலாம்

    என்று சொல்லலாம் என்று நினைத்தேன் அவரே தந்து விட்டார்.
    மாம்பலம் சிஸ்டர் பாடி இருப்பார்கள்.

    வெயிலினால் வயிற்று வலினு நினைக்கிறேன்.//
    அதற்கு, விளக்கெண்ணெய், அல்லது நல்லெண்ணெய் வயிற்றில் தடவலாமே.


    ReplyDelete

  21. பாடல் கிடைக்கப் பெற்றேன். நன்றி.

    ReplyDelete
  22. நெட்டுல கிடைக்குது - எல்கே எப்பவோ பதிச்ச லிங்க் தேடிப் பார்த்துக் கேட்டேன். மாம்பலம் சிஸ்டர்ஸ்னு இன்னொரு வெர்ஷன். எப்படி இதைக் கேட்காமலே விட்டேன் என்று புரியவில்லை. very funny.

    ReplyDelete
  23. நன்றி வெங்கட்,

    ReplyDelete
  24. நன்றி கோமதி அரசு, வானொலியில் மாம்பலம் சிஸ்டர்ஸ் இல்லைனு நினைக்கிறேன் . யார் பாடினாங்கனு மறந்துட்டேன். :))))

    ReplyDelete
  25. அப்பாதுரை, ப்ரொஃபைல் படம் மாத்தி இருக்கிறதை இப்போத்தான் கவனிச்சேன். :)))))

    பாடல் நல்லாவே இருக்கும்.

    ReplyDelete
  26. ஜிஎம்பி சார், நன்றி.

    ReplyDelete
  27. http://tinyurl.com/4x8rnlm

    மேற்கண்ட சுட்டியில் இன்னும் சில பாடல்களைக் காணலாம். சுட்டிக்குப் போக முடியாதவர்களுக்காக இங்கே காப்பி, பேஸ்டும் செய்கிறேன். :))))

    ReplyDelete
  28. மாம்பலம் சகோதரிகள், விஜயலக்ஷ்மி மற்றும் சித்ரா அவர்களால் பாடப்பெற்ற “சம்மந்தி சாப்பிடவே மாட்டாள்” என்ற பாடலின் வரிகள் //

    வெங்கட் அவர்கள் ரசித்த பாடலுக்கு ஒரு வலைப்பூ வைத்து இருக்கிறார் அதில் பதிவு போட்டு இருந்தார்.
    இந்த பாடலை பாடியவர்கள் மாம்பலம் சகோதரிகள், விஜயலக்ஷ்மி, சித்ரா என்று சொல்லி இருக்கிறார்.
    அவர் பதிவின் லிங்
    http://rasithapaadal.blogspot.com/2010/12/blog-post_25.html

    ReplyDelete
  29. பாட்டு கேட்டேன்.
    வெகு நன்றாக இருந்தது கீதா. மிக நன்றி.

    ReplyDelete
  30. தகவலுக்கு நன்றி கோமதி அரசு,

    வல்லி பாடலை ரசித்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  31. பாடல் ரசித்தேன்.

    ReplyDelete