Tuesday, June 04, 2013

கண்ணன் தடையின்றி வருவான்!

http://kannanvaruvan.blogspot.in/2013/06/blog-post.html


கண்ணன் கதைகளை மொழி பெயர்த்து வந்தாலும் உள்ளூரக் கொஞ்சம் நம நமவென இருந்தது.  எல்லாம் காப்பிரைட் குறித்தே.  ஏப்ரலில் வந்த சம்பந்தியும் அதையே சொல்ல, அதுக்கப்புறமா மேற்கொண்டு மொழி பெயர்ப்பையே நிறுத்தி வைத்துவிட்டு திரு திவாகரின் ஆலோசனையின் பேரில் பாரதீய வித்யா பவன் மும்பை அலுவலகத்தைத் தொடர்பு கொண்டேன்.  அவங்க தற்சமயம் முன்ஷிஜியின் 125 ஆவது பிறந்த நாள் கொண்டாட்ட ஏற்பாடுகளில் இருப்பதால் தங்களால் ஏதும் செய்ய இயலாது என்றும், சென்னை அலுவலகம் தான் தமிழ் மொழிபெயர்ப்புக்களைக் கவனிக்கணும் என்றும் சொல்லிச் சென்னை அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளச் சொன்னார்கள்.  சென்னை அலுவலகத்தைத் தொடர்பு கொண்டேன்.  காப்பிரைட் பிரச்னை பப்ளிகேஷன்ஸ் மூலமாகத் தான் வரும்னு சொன்னதோடு, மொழிபெயர்க்கத் தடை இல்லைனும் சொல்லிட்டார்.  தமிழில் பப்ளிஷ் பண்ணினால் மார்கெட்டில் விற்பனை ஆகுமானு தெரியலையேனு திரு ராமசாமி சொல்கிறார்.  அதே சமயம் சொந்தமாக என்னை பப்ளிஷ் பண்ணிக்கோ அதுக்கு அநுமதி தரோம்னு சொல்றார்.  மொத்தத்தில் மொழிபெயர்ப்புத் தொடரலாம் என்பதே எனக்கு சந்தோஷமான விஷயம்.  மற்றவை போகப் போக.  மொழி பெயர்த்ததை அவங்களுக்கு அனுப்பி வைக்கச் சொல்லி இருக்கார்.  அதுக்குக் கொஞ்சம் நகாசு வேலை இருக்கு. செய்துட்டு ஒரு வாரத்தில் அனுப்பி வைக்கிறேன்.   நேரிலேயும் வந்து பார்க்கச் சொல்கிறார்.  போகணும்.  கண்ணன் தொடர்ந்து உதவுவான் என்ற நம்பிக்கையுடன் இனி தொடர்ந்து கண்ணன் வந்து அனைவரையும் மகிழ்விப்பான் என்றும் சொல்லிக்கிறேன்.

12 comments:

  1. ஓ........ அதுதான் இடைவெளியா? ஆட்சேபணை இல்லை என்பதை எழுத்திலும் வாங்கிக் கொள்வது நல்லதோ?

    ReplyDelete
  2. //கண்ணன் தொடர்ந்து உதவுவான் //

    பாராட்டுக்கள், அட்வான்ஸ் வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. கண்ணன் உதவுவான். வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. வருக வருக கண்ணா.

    ReplyDelete
  5. ஶ்ரீராம், மும்பை அலுவலகத்திலிருந்து வந்த கடிதம் இருக்கு. அதன் ஒரு காப்பியை சென்னை அலுவலகத்துக்கும் அவங்களே அனுப்பி இருக்காங்க. இனி நான் ஜரூராக முதல் பாகத்தையாவது எடிட் செய்து அவங்களுக்கு அனுப்பி வைக்கணும். :))) நேரம் செலவு செய்யணும்.

    ReplyDelete
  6. நன்றி வைகோ சார்.

    ReplyDelete
  7. வாங்க "இ"சார், நன்றி

    ReplyDelete
  8. நன்றி வல்லி.

    ReplyDelete
  9. கடவுள் கதைகளுக்குக் காப்பி ரைட்டா.? அவைதான் அவரவர் கற்பனைக்கு எட்டியபடி வளைந்து கொடுக்குமே.

    ReplyDelete
  10. வாங்க ஜிஎம்பி சார், இது மொழி பெயர்ப்பு பத்தினது. :))))

    ReplyDelete
  11. மகிழ்ச்சி.

    ReplyDelete
  12. பிரச்சனை இல்லை எனத் தெரிந்து விட்டதே இனி தொடருங்கள் கீதாம்மா....

    ReplyDelete