Friday, August 09, 2013

Peek a Bhoo! மழை காணுமே, காணுமே காணுமே இட்டாச்ச்ச்சு!




ஶ்ரீரங்கத்தில் மழையா? ம்ஹ்ஹும்!  வாய்ப்பே இல்லை.  மழை வருது, வருது, வருது, இதோ வந்துடுச்சு, இட்டாச்சு!

ஓடிப் போயிடுச்சு!

ஹாஹாஹா, நல்ல நாளிலேயே வெந்நீரில் குளிக்கும் நம்பெருமாளுக்கு இந்த மழைக்கே ஜலதோஷம் பிடிச்சுக்கும்! :P:P:P:P:P   இன்னிக்குக் காலங்கார்த்தாலே ரெண்டு, ரெண்டுனா ரெண்டு தான்  தூற்றல் போட்டுது.  நம்பெருமாள் வருணனைப் பார்த்தார்.

காணுமே, மழை காணுமே, இதோ இங்கிருக்கு, இட்டாச்சுனு வருணன் சொன்னதும் பெருமாளுக்குச் சமாதானம் ஆயிடுச்சு! மழையும் நின்னது, சீச்சீ, தூற்றல் நின்னது.  பெருமாளும் ஆண்டாளைப் பார்க்கப்போனார். 

15 comments:

  1. இந்த சிறு தூற்றலுக்கே பெருமாள்

    “குளிரடிக்குதே .... கிட்டவா .... கிட்டவா” ....... ன்னு

    பாட்டுப்பாடிக்கினே ஆண்டாளிடம் போய் இருப்பாரோ? ;)

    ReplyDelete
  2. வான் பொய்த்தது. காவிரி வந்தாள்.இவர் ஏன் ஆண்டாளைத்தேடிப் போகணும்?
    கோவிலுக்குள் அவள் இல்லையோ:(

    ReplyDelete
  3. வாங்க வைகோ சார், நம்பெருமாளுக்கென்ன, பாட்டும் பாடுவார், ஆடவும் செய்வார்! :)))

    ReplyDelete
  4. வல்லி, கோயிலுக்குள்ளே கண்ணாடி அறையில் நேத்திக்கு! இன்னிக்கு வெளி ஆண்டாள் சந்நிதியில்னு நினைக்கிறேன். உள் ஆண்டாள் சந்நிதி வேறே இருக்கு! அங்கே எப்போனு தெரியலை. யாரையானும் கேட்கணும். :)))

    ReplyDelete
  5. மழை பெய்யாமலும்
    வெய்யில் இல்லாமலும் இருந்தால்தான்
    பெருமாள் உலாவுக்கு நல்லது இல்லையா

    ReplyDelete
  6. காவிரியில் வெள்ளம், மேட்டூர் நிரம்பியது, 10 டி எம் சி தண்ணீர் வீணாகக் கடலில் கடந்தது என்றெல்லாம் செய்திகள் சொன்னாலும் சென்னையில் பல இடங்களில் தண்ணீர்க் கஷ்டம். கிணற்றில் தண்ணீர் இல்லை என்ற புலம்பல்கள் கேட்டவண்ணம் உள்ளன.

    ReplyDelete
  7. தூறல் போட்டாலும் பட்டாடை நனைந்திடும் என்று நினைத்தாரோ :))

    ReplyDelete
  8. அப்போ எங்கேதான் மழை வெள்ளம்?

    ReplyDelete
  9. திருவரங்கத்தில் மழை எங்கே பெய்யும்.... பிடிக்காதே!

    ReplyDelete
  10. வாங்க ரமணி சார், பெருமாளுக்குக்கொஞ்சம் காத்தடிச்சாலே குளிருமே! :))))

    ReplyDelete
  11. வாங்க ஶ்ரீராம், சென்னையின் தண்ணீர்க் கஷ்டம் தீரவே தீராத ஒன்று. :(

    ReplyDelete
  12. ஆமாம், கடைமடைக்குத் தண்ணீரே போகாத நிலை இருக்கிறது. அதுக்குள்ளே அவசரப்பட்டுக் கொண்டு எல்லாத் தண்ணீரையும் கொள்ளிடத்தில் விட்டுட்டாங்க! :( என்னத்தைச் சொல்றது! செக் டாமாவது கட்டி இருக்கலாம். தண்ணீர் இல்லாத நேரமாகப் பார்த்து இதை எல்லாம் முடிச்சு வைச்சுட்டு இருக்கணும். எங்கே! :(

    ReplyDelete
  13. ஹாஹா, வாங்க மாதேவி, நம்பெருமாள் அதி சொகுசு!:)))

    ReplyDelete
  14. வாங்க அப்பாதுரை, எல்லாம் வட இந்தியாவிலே தான். ஆந்திரா வரைக்கும் மழை, வெள்ளம், தமிழ்நாட்டில் நோ! :)))

    ReplyDelete
  15. வாங்க வெங்கட், ஆமாம் நம்பெருமாளுக்குத் தான் மழை, வெயில், குளிர் எதுவும் ஒத்துக்காதே! :))))

    ReplyDelete