Sunday, September 01, 2013

கல்யாணத்தில் முஹூர்த்தம் முடிந்ததும் விருந்து மெனு!

அரிசி, தேங்காய் சேர்த்து அரைத்த வெல்லப்பாயசம்

தயிர்ப் பச்சடி

ஸ்வீட் பச்சடி

வாழைக்காய் கறி(பாரம்பரிய முறையில்)

பீன்ஸ் பருப்பு உசிலி

அவியல்

வாழைக்காய்  வறுவல்/சேனை வறுவல்

அப்பளம்

பதிர்பேணி சுண்டக் காய்ச்சிய குங்குமப் பூப் போட்ட பாலோடு

முட்டைக்கோஸ் வடை

லட்டு

வாழைப்பழம்

மாங்காய் ஊறுகாய்

சாதம், பருப்பு, நெய்

கத்திரிக்காய், பறங்கிக்காய், பூஷணிக்காய், குடைமிளகாய் சாம்பார்

மோர்க்குழம்பு, வெண்டைக்காய் போட்டு

பைன் ஆப்பிள்  ரசம்

மோர், தயிர் மண் குடுவைகளில்

படத்துக்கு நன்றி: கூகிளார்!

எல்லாரும் இருந்து நல்லா வயிறாரச் சாப்பிட்டுட்டுப் போங்கப்பா


கன்னூஞ்சல்  ஆடி  இருந்தார்(2)
காஞ்/ச/ன   மாலை  மன மகிழ்ந்தார் (2)
பொன்னூஞ்சலில்  பூரித்து  பூஷணங்கள் தரித்து(2)
மன்னாதி  வேங்கடேஷன்  அலமேலு  மங்கையுடன்  (கன்னூ)
(ஈஸ்வரனார்  இடத்தில்   ஆ/சை/கள்  ரொம்ப  வைத்து

அசைந்து  சங்/கி/லி   ஆட  உசந்து  ஊர்வசி  பாட
இசைந்து  தாளங்கள்  போட/ஈஸ்வ/ர/னார்  கொண்டாட (கன்னு)

உத்தமி  பெற்ற  குமாரி/நித்ய ஸர்வா/லங்காரி
பக்தர்கள்  பாப  ஸம்ஹாரி  பத்ம  /முக/ஒய்/யாரி     (கன்னூ

லாலி   சாரங்கேச   லாலி   சாரங்கேச

லாலி  ஜகதீசா  லாலி   ஜகதீசா
லாலி  கோ/மள   வல்/லீசா

சாம முதல்   வேதங்களை (2)  சங்கிலியால்  கட்டி(2)
தாளமுத்து  மாலைகளை   (2) சரம் சரமாய் பூட்டி     (லாலி)

ஓங்கார  ப்ரணவம்தனை   (2)  ஊஞ்சலாய்  அமைத்து
உத்தமர்க்கு  உத்தமராம்(2)  ஆடீர்   ஊஞ்சல்

பிள்ளை  --இந்த  பிள்ளை தனை(2)  பெற்றோம்  என்று  களிக்க
பெருமையில்  யசோதை   இன்னும்   (2)  ஒரு  சுற்று  பெருக்க   (லாலி)

 அரவன்  முடி  மேல்  நின்று  அபிநயங்கள்  பிடிக்க(2)
அரங்க மா நகரி ல் , வந்து  (2)  காலை  நீட்டி  படுத்தான்  ( லாலி)

தண்ணார்தன்  வளைநிழலில்(2)
தலைவன்  முகம்   காண
தந்திரங்கள் கோ தை  செய்ய (2)  ஆடீர்  ஊஞ்சல்  (லாலி)

பாலாலே  காலலம்பி(2)  பட்டாலே  துடைத்து(
மணி தேங்காய்  கை கொடுத்து(2) மஞ்சள் நீர் சுழற்றி-----(லாலி)

கொத்தோடு வாழை மரம்(2) கொண்டு வந்து நிறுத்தி(2)
கோப்புடைய  பந்தலின் கீழ்(2) ஆடுவதைக் காணீர் (லாலி)

தங்கமய பந்தலிலே (2) வெள்ளி மணி ஊஞ்சல்(2)
ரங்கனுடன்  ஆண்டாளும்
(சொக்கனுடன் மீனாட்சி)   ஆடுவதைக் காணீர்  (லாலி)

முத்துமணி  பந்தலிலே /ரத்ன மய ஊஞ்சல்(2)
ஸ்ரீ ராமருடன் சீதையுமே (2) ஆடுவதைக் காணீர்  (லாலி)

ஜோதிர்மய பந்தலிலே(2) புஷ்ப மய ஊஞ்சல்
கோதையுடன் ஸ்ரீ ரங்கன் ஆடுவதைக் காணீர் லாலி

19 comments:

  1. மெனு மட்டும் ஒரு பதிவா?

    ReplyDelete
  2. ஐஸ் க்ரீம் குறைகிறது!

    ReplyDelete
  3. என்னவோ அவசரம். மெனு பிரமாதம் தான். ஒரு கறி கூட விடவில்லை.

    ஓ கூட நாலு வார்த்தைகள் உபசாரமா எழுதலியே அதனாலயோ:)))))

    ReplyDelete
  4. அதுக்கு ஒரே அவசரம் பப்ளிஷ் ஆயிடுச்சு!:))))

    ReplyDelete
  5. மெனுவோடு கூடப் போட்ட பாடல் சையா காப்பி, பேஸ்ட் ஆகலை. :))) அதான் வரலை. :)

    ReplyDelete
  6. ஶ்ரீராம், ஐஸ்க்ரீம் ராத்திரி ரிசப்ஷன் முடிஞ்சு டின்னரில்! :)))

    ReplyDelete
  7. வாங்க வல்லி, அதான், அதான், உபசாரமா சொல்லவோ, எழுதவோ தெரியறதில்லை தான். :)))

    ReplyDelete
  8. முதலில் பாட்டைக் காணோமே.... இப்போ திடீரென அசரீரியா பாட்டு கேட்டதேன்னு வந்து பார்த்தேன்!

    இப்போ எல்லாம் எப்போ சாப்பாடு போட்டாலும் கடைசியில ஐஸ்க்ரீம் தர்ராங்களாக்கும்..! என்ன சிக்கனம்! :)))

    ReplyDelete
  9. what is பாரம்பரிய முறையில்?

    ReplyDelete
  10. விருந்து பிரமாதம்.

    ReplyDelete
  11. ஶ்ரீராம், கல்யாணத்தில் முஹூர்த்தம் முடிஞ்சு மத்தியானம் பாரம்பரியச் சாப்பாடு தான் போடுவாங்க. ஐஸ்க்ரீம் எல்லாம் ரிசப்ஷனுக்குத் தான். நாம் நடத்தற கல்யாணத்தில் கல்யாணத்தன்னிக்குத் தானே ரிசப்ஷன்! அதனால் அதுவரை நோ ஐஸ்க்ரீம். :))))

    ReplyDelete
  12. வாங்க அப்பாதுரை, இப்போல்லாம் வாழைக்காய்க் கறிப் பாரம்பரிய முறையிலே செய்து போடறதில்லை. அதுக்குப் பதிலாக உ.கி. காரக்கறி போடறாங்க. அதான் பாரம்பரியமா இருக்கட்டுமேனு வாழைக்காயை வாங்கி நீர்க்கக் கரைத்த புளித்தண்ணீரில் உப்பு,மஞ்சள் பொடி சேர்த்து வேக வைச்சு, மி.வத்தல். கொ.மல்லிவிதை, கடலைப்பருப்பு, தேங்காய் வறுத்துப் பொடி செய்து போட்டுச் செய்யச் சொன்னேன். இதான் பாரம்பரிய வாழைக்காய்க் கல்யாணக் கறி. :))))

    ReplyDelete
  13. வாங்க கோமதி அரசு, மெனு மட்டும் தான் கொடுத்திருக்கேன். விருந்துக்குக் காத்திருக்கணுமாக்கும். :))))

    ReplyDelete
  14. ரெசிபிக்கு தேங்க்ஸ் (தமிழ்ல பின்னூட்டம்).

    ReplyDelete
  15. அப்பாதுரை, தமிழ்லே பின்னூட்டம்?? புரியலையே? ம.ம. தானே! :))))

    ReplyDelete
  16. அப்பாதுரை/ரெசிபிக்கு தேங்க்ஸ்/ வாழைக்காய் பாரம்பரிய முறையில் செய்முறைக்கு நன்றி...? சரிதானே...

    ReplyDelete
  17. மெனு சூப்பர்.

    ReplyDelete
  18. ரெசிபிக்கு தேங்க்ஸ் (ரெண்டுமே இங்கிலிபிசு). ஜிஎம்பி சார் சொன்னாப்புல செய்முறைக்கு நன்றினு அழகா தமிழ்ல சொல்ல வேண்டாமோனு என்னை நானே.. மனசுல தோணினது இங்கிலிபிசு தான்.

    ReplyDelete
  19. அசத்தலான விருந்து. அருமை. ருசியோ ருசி. பாராட்டுக்கள்.

    ReplyDelete