Thursday, October 24, 2013

எல்லாருக்கும் வணக்கம்!

முதல்லே எல்லார் கிட்டே இருந்தும் மன்னிப்பு வேண்டுகிறேன்.  அதுவும் என் உடன் பிறவாச் சகோதரி ரேவதியை மிகவும் தவிக்க வைத்ததுக்கு, மீண்டும், மீண்டும் மன்னிப்பு.  இந்தப் பிரயாணத் திட்டம் போடும்போதே இணையத்துக்கு வர முடியாது என்பது தெரியும்.  அதே போல இணைய நண்பர்கள் கிட்டேயும் சொல்லாமல் போயிட்டு வந்ததும் ஒரு ஆச்சரியமாகக் கொடுக்க நினைச்சேன்.  ஆரம்பத்திலேயே ஒரு முடிவு (யோசிச்சுத் தான்) எடுத்துட்டா அதிலிருந்து மாறாமல் இருப்பது நமக்கு வழக்கமாச்சே.  அதனால் அப்படியே சொல்லாமல் கொள்ளாமல் கிளம்பிப் போயிட்டும் வந்தாச்சு.


காட்டு வாழ்க்கை.  அதிக நடை.  போற இடத்திலே எல்லாம் செல்ஃபோன் சிக்னல் கிடைப்பதும் கஷ்டம். :))) கிடைச்சாலும் விட்டு விட்டு வரும். சாப்பாடும் முன்னைப் பின்னே தான்.  கூடிய வரை காட்டு வாழ்க்கைக்கு ஏற்றாற்போல பால், பழம், மோர் என்றே சாப்பாடு.   ஒரு நாளைக்கு ஒரு தரம் மட்டுமே ஏதேனும் சிற்றுண்டி என இருந்து எல்லாம் வல்ல ஶ்ரீராமன் கிருபையில் அனைத்தையும் பூரணமாக முடித்துவிட்டு இன்று காலை வந்து சேர்ந்தோம்.


என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்ட அஷ்வின் ஜிக்கும்
ரேவதிக்கும் மிகவும்  நன்றி.  அவரின் மன உளைச்சலுக்கு நான் பொறுப்பானது குறித்து வருத்தமா இருக்கு.  மேலும் மெயில்கள் மூலம் விசாரித்த ஶ்ரீராம், ஜீவி சார் மற்றும் யார்னு இனி தான் பார்க்கணும்.  நிறைய இருக்கிறதாலே இன்னும் பார்த்து முடியலை. எல்லாருக்கும் முன் கூட்டிய நன்றி.  ஓரளவுக்குத் தெரிஞ்சிருக்கும் எங்கே போனேன்னு.  அப்படித் தெரியாதவங்க நாளை வரை பொறுத்திருக்கவும்.



நாங்கள் சென்ற பாதைகள் அனைத்துமே!!!!!!!!!!!!

24 comments:

  1. இனி தொடருங்கள் அம்மா...

    ReplyDelete
  2. ஓ! அன்று எங்களிடம் பேசிக் கொண்ட இடமா? போயிட்டு நல்லபடியாக வந்து சேர்ந்தது குறித்து மகிழ்ச்சி. பொறுமையாக எழுதுங்க....

    ReplyDelete
  3. உங்கள் பதிவைப் பார்த்ததில் சந்தோஷம்.

    அவசரமில்லை. நிதானமாய் எழுதுங்கள்.

    ReplyDelete
  4. மாதிரி வனவாழ்க்கை? அமெரிக்காவில்தானே இந்த வழக்கமெல்லாம்? அப்பாதுரை கூடப் போய் வருவார்? இங்கேயுமா? எங்கே? என்ன செய்தீர்கள்? மெதுவாக ஒவ்வொன்றாகச் சொல்லுங்கள்.

    ReplyDelete
  5. செளகர்யமாகப் பயணம் சென்றுவிட்டு செளக்யமாக வந்தது கேட்க சந்தோஷம்.

    நானும் உங்கள் பதிவுகளைக் காணோமே என நினைத்துக் கொஞ்சம் கவலை கொண்டேன்.

    ReplyDelete
  6. தங்கள் ஆன்மீகப் பதிவுகளின்
    அதீத ரசிகன் நான் என்பதால்
    நாளைய பதிவு குறித்து
    அதிக எதிர்பார்ப்புடன் இருக்கிறேன்
    வாழ்த்துக்களுடன்....

    ReplyDelete
  7. எங்கே காணோமே என்றிருந்தேன். நலமாய் இருக்கிறீர்கள் என்று அறிந்து மகிழ்ச்சி.

    ReplyDelete
  8. ராமன் நடந்த பாதையில் நடந்து வந்தீர்களா?
    புண்ணியம்.
    பகிர்வை படிக்க ஆவல்.
    ஆன்மீக பயணம் போய் இருப்பீர்கள் என்று நினைத்தேன்.
    வனவாசம், நல்ல தெம்பை கொடுத்து இருக்கும் என நினைக்கிறேன்.

    ReplyDelete
  9. அஹொபிலம்
    பத்ராசலம்,
    குற்றாலம்,சதுரகிரி

    ம்ம்.சொல்லுங்க சொல்லுங்க:)

    ReplyDelete
  10. ஓ போய்விட்டு வந்தாச்சா? நடுவில் இணையம் இல்லாது கிட்டத்தட்ட 15 நாட்கள் இருந்துவிட்டேன் நானும்! :)

    பயணமும் அனுபவங்களும் இனிமையாக இருந்திருக்கும் என நினைக்கிறேன்.....

    பயணக் கட்டுரைகளில் சந்திப்போம்....

    ReplyDelete
  11. என்னா பில்டப்பு எனா பில்டப்பு..
    வருக வருக.. நல்லா இருக்கீங்க தானே?

    ReplyDelete
  12. வாங்க டிடி, நன்றிப்பா.

    ReplyDelete
  13. வாங்க ஆதி, உங்களுக்குப் புரியும்னு தெரியும். :)))))

    ReplyDelete
  14. வாங்க ஜீவி சார், எல்லாருடைய அன்பான விசாரிப்புக்கும் மிகவும் கடமைப்பட்டிருக்கேன். ரொம்ப நன்றி.

    ReplyDelete
  15. வாங்க ஶ்ரீராம், ரொம்ப நன்றி தேடினதுக்கு. தொலைபேசி இருக்கலாம். தொந்திரவாயெல்லாம் இருந்திருக்காது. ஆனால் சிக்னல் கிடைக்கணும். அதான் பிரச்னை! :)))

    ReplyDelete
  16. வாங்க வைகோ சார், கவலைப்பட்டதுக்கு ரொம்ப நன்றி.

    ReplyDelete
  17. வாங்க ரமணி சார், தங்கள் பாராட்டுகளுக்கு நன்றி. அதற்குத் தகுதியாக என்னை மாற்றிக் கொள்கிறேன். உங்கள் அனைவருக்கும் மிகவும் கடமைப்பட்டிருக்கேன். ரொம்ப நன்றி.

    ReplyDelete
  18. நன்றி ரஞ்சனி.

    ReplyDelete
  19. வாங்க ஜிஎம்பி சார், சொல்லாமல் போனதுக்கு மன்னிக்கவும். :))) என்னமோ அப்படி ஒரு எண்ணம். :)))

    ReplyDelete
  20. வாங்க கோமதி அரசு, வனவாசம் தெம்பையும் கொடுத்தது, தெம்பையும் கெடுக்கப் பார்த்தது. என்றாலும் தேறி வந்து விட்டோம். :))))

    ReplyDelete
  21. வாங்க வல்லி, குற்றாலம், அஹோபிலம் எல்லாம் போயிட்டு வந்து எழுதிட்டேனே! :))))சதுரகிரி போக ஆசைதான். முடியுமா தெரியலை. பார்க்கலாம். :)))

    ReplyDelete
  22. வாங்க வெங்கட், ஆமாம், ஒரு வழியாப் போயிட்டு வந்துட்டோம். இணையம் வந்துட்டது குறித்து மகிழ்ச்சி.

    ReplyDelete
  23. அப்பாதுரை, இந்த பில்ட் அப் இல்லைனா ருசிக்காதே! நலமாகவே இருக்கோம். :)))

    ReplyDelete