Friday, November 15, 2013

இனி என்ன?? :(((((

நேற்று மடலைப் படிக்கையில் கூட ஏதோ ஹாக் செய்யப்பட்ட மின் மடல் என்றே நினைத்தேன்.   ஏனெனில் இன்னொரு தோழியின் ஐடி ஒரு வாரம் முன்னர் ஹாக் செய்யப்பட்டு அவங்களோட பெயரில் எனக்கெல்லாம் வேண்டாத மடல் வந்திருந்தது.  பின்னர் தோழியைத் தொடர்பு கொண்ட பின்னரே உண்மை தெரிந்தது.  ஆனாலும் உடனே ரேவதியைத் தொடர்பு கொண்டேன், அவங்களோட பேச முடியலை. அவங்க சகோதரர் பிள்ளை பேசினார்.  செய்தியை உறுதி செய்தார்.  அப்போவே மனம் உடைந்து விட்டது.  ஆனாலும் இது பொய்யாய் இருக்கக் கூடாதோ என்ற எண்ணமே தொடர்ந்து என் மனதில்.  சிறிது நேரம் கழித்து மீண்டும் ரேவதியுடன் தொடர்பு கொண்டேன்.  இம்முறை ரேவதியுடன் பேச முடிந்தது.  அவங்களால் பேசவே முடியலை.  அழக் கூடத் தெம்பில்லை.  சாதாரணமாக இரவு படுக்கும் முன் கழிவறை சென்றவர் திரும்பி வந்ததும் கீழே விழுந்துவிட்டார்.  அந்தக் கணமே உயிர் சென்றிருக்கிறது.  கொடுத்த வைத்த புண்ணியாத்மா என்றாலும் ரேவதிக்கு இனி என்ன?  என்ன செய்வது? என்ற குழப்பம், கவலை,

இத்தனை நாட்கள், வருடங்கள் கூடப் பழகிக் கூடவே நடந்தவர் இன்று இல்லை.  இன்றைய ஆங்கில தினசரி ஹிந்துவிலும் அறிவிப்பு வந்துவிட்டது.  அதன் பின்னரே என் மனதிலும் செய்தி உண்மை தான் என்ற எண்ணமே வந்திருக்கிறது. நேற்றிலிருந்து சமையல், சாப்பாடு எல்லாமே இயந்திரத்தனமாகச் செய்கிறோம். உப்பும், நீரும் சேரச் சேர மறக்கும் தான். வடு மறையுமா? சந்தேகமே. மனதில் ஒரு பெரிய பள்ளம் விழுந்து விட்டது.  என்னைத் தனிமடலில் தொடர்பு கொண்ட நண்பர்களுக்கு எல்லாம் ரேவதியின் சார்பில் நன்றி.

இரண்டு நாட்களாக எதுவும் எழுத முடியவில்லை. :((( பதிவுகள் கொஞ்சம் தாமதமாக வெளிவரும். 

6 comments:

  1. மிகவும் தாமதமாகவே வரட்டும்... நன்றி அம்மா...

    From Friend's LT

    ReplyDelete
  2. துணையை இழந்தவருக்கு என்ன ஆறுதல் தரமுடியும் ..??!

    அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப்பிரார்த்திப்போம்..!

    ReplyDelete
  3. நேற்று முகநூலில் இந்த செய்தி எங்கள் ப்ளாக் கௌதமன் ஸார் மூலம் கேள்விப்பட்டு ரொம்பவும் இடிந்து போனேன். இரண்டு நாட்கள் முன்பு கூட எனக்கு வாழ்த்துகள் சொன்னாரே, கணவருக்கு உடல்நிலை சரியில்லைஎன்றால் எப்படி இணையத்திற்கு வரமுடியும்? திடீரென ஏதோ ஆகியிருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். உங்கள் பதிவு இதை உறுதி செய்தது.

    ஒருமுறை தான் வல்லியைப் பார்த்திருக்கிறேன். அந்த சிரித்த முகம் மறக்கவே முடியவில்லை. சிங்கம் சிங்கம் என்று அவர் எழுதுவதைப் படிக்கும்போதே அதில் அன்பு சொட்டுமே, எப்படி விட்டுவிட்டுப் போனார்?

    ஸ்ரீரங்கத்து திவ்ய தம்பதிகள் அவருக்கு மனோதிடத்தைக் கொடுக்கட்டும்.

    ReplyDelete
  4. //இரண்டு நாட்களாக எதுவும் எழுத முடியவில்லை. :((( பதிவுகள் கொஞ்சம் தாமதமாக வெளிவரும். //

    பழகியவர்கள் என்னும்போது செய்தி கேட்க மிகவும் வருத்தமாகத்தான் இருக்கும். ;(

    ReplyDelete
  5. மிகுந்த சோகம்.

    காலம் மனதை ஆற்றட்டும்.

    ReplyDelete
  6. காலையில் தொடர்பு கொண்டபோது என்னுடனும் அழுத படியே தான் பேசினார்..... அவரது இழப்பு ஈடு செய்ய முடியாதது.....

    எல்லாம் வல்லவன் அவருக்கு மனோதைரிய்த்தினை கொடுக்க எனது பிரார்த்தனைகளும்....

    ReplyDelete