Tuesday, November 19, 2013

ஶ்ரீராமனின் பாதையில் --சித்திரவதையுடன் சித்திரகூடப் பயணம்!

என் வாழ்நாளில் அவ்வளவு வேகமாக என்னிக்காவது ஓடி இருப்பேனா? சந்தேகமே! "தங்க மங்கை" பிடி. உஷா கூட தோத்திருப்பார்.  அவ்வளவு வேகமாய் ஓடி முதலில் கைப்பையை எடுத்துக் கொண்டு சுற்றும் முற்றும் பார்த்தேன்.  எல்லாரும் அவரவர் வேலையிலே கவனமாக இருந்தார்கள்.  ஆனால் ரங்க்ஸ்? கைப்பையை எடுத்துக் கொண்டு சுற்றி வந்தப்போ எதிரே இருந்த கான்டீனில் தெரிஞ்ச முகமாத் தெரியவே, சாமானை விட்டுத் தள்ளியும் போகாமல் அங்கே இருந்தே உற்றுப் பார்த்தேன்.  அதுக்குள்ளாக அந்த முகமும் என்னைப் பார்த்து, "இரு, வரேன்!" என்று ஜாடை காட்டியது. சீ, எனக்கிருந்த குழப்பத்தில் அந்த முகம் ரங்க்ஸுக்குச் சொந்தம் என்று புத்தியில் உறைக்கவே ஒரு நிமிடம் ஆயிற்று.  உடனே வந்தது பாருங்க ஒரு கோபம்.  சாமான் எங்கே இருக்கு?  அப்படியே போட்டுட்டு அங்கே போய் என்ன செய்யறார்?  வரட்டும், இரண்டு கையாலேயும் பார்த்துடுவோம்.

சற்று நேரத்தில் கையில் தண்ணீர் பாட்டிலுடன் ரங்க்ஸ் வந்து சேர்ந்தார்.  "எங்கே போனீங்க?"  "தண்ணியே இல்லை! வாங்கப் போனேன்!" "அது சரி, என்னோட ஹான்ட் பாக் எங்கே?"  "ஹான்ட் பாகா?" திரு திரு திரு திரு!

நான், "க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், உங்களை நம்பிப் பையைக் கொடுத்துட்டுப் போனா வீசி எறிஞ்சுட்டுப் போயிருக்கீங்க!" குற்றம் சாட்டியாச்சு.  அவருக்குத் தன்னிடம் ஹான்ட் பாக் இருந்ததோ, அதைக் கீழே இறக்கியதோ எதுவுமே மனதில் படவில்லை. ஹான்ட் பாகும் வெயிட்டாக இருந்ததால் எல்லா சாமான்களையும் இறக்கி வைச்சாப்போல் வைச்சுட்டேன் என்றார். முறைச்ச நான் "இனி ஹான்ட்பாகை உங்க கையிலே கொடுக்கவே போறதில்லை.  நானே வைச்சுக்கறேன்."என்று அவசரச் சட்டத்தை உடனடியாக நிறைவேற்றி விட்டு, "எந்த நடைமேடை?" என்று கேட்டேன்.  ஆறாவது நடைமேடையாம்.  அங்கே போனோம்.  இந்த மாதிரி ஒரு கூட்டத்தை என் ஜன்மத்தில் பார்த்தது இல்லை.  அதோடு  நடைமேடை அந்தக் கால எழும்பூர் நடைமேடையை ஒத்திருந்தது.  அருகே கார், வண்டிகள் வந்து நிற்கும் பாதை.  அங்கே நடை மேடையின் ஒரு ஆரம்பத்திலிருந்து இன்னொரு பக்க முடிவையும் தாண்டி பெட்டி, படுக்கையோடு வரிசையாக ஆட்கள் அமர்ந்திருந்தனர்.  படம் எடுக்க முடியவில்லை.  காமிராவை உள்ளே வைச்சுட்டேன்.  செல்லைக் "கு" ரங்கார் கேட்டுட்டு இருந்தார். அந்தக் கூட்டத்தைப் பார்த்ததுமே வயிற்றைக் கலக்கியது.  முன் பதிவும் இல்லாமல் எப்படி ஏறப் போறோம்?

சிறிது நேரத்தில் பின்னால் வரிசை கட்டி நின்றவர்கள் இரவு ஒன்பது மணிக்கு லக்னோவிலிருந்து மும்பை செல்லும் வண்டிக்குக் காத்திருந்தவர்கள்(முன் பதிவில்லாமல் ஏறுவதற்கு) என்பது புரிந்தாலும் இந்த நடைமேடையில் எக்கச் சக்கக் கூட்டம்.  அதோடு உட்கார எங்கேயும் பெஞ்சோ, உட்காரும் மேடைகளோ இல்லை.  நிற்க வேண்டி வந்தது.  சும்மாவே வீங்கிக்கும் என்னோட கால் நிற்க ஆரம்பிச்சதும் தள்ளாட ஆரம்பிச்சது.  ஏற்கெனவே முதல் நாள் அலைச்சல் வேறே.  போர்ட்டர் ஒருத்தர் வண்டியில் சாமான்களைக் கொண்டு வந்து இறக்கிவிட்டு அந்த வண்டியிலேயே உட்கார அவரிடம் கேட்டுக் கொண்டு நானும் போய் உட்கார்ந்தேன்.  ஐந்தரைக்கு வண்டி வந்தது.  லக்னோவிலிருந்து தான் கிளம்புகிறது.  ஆனால் சித்ரகூடம் வரை மட்டும் சென்று கொண்டிருந்த வண்டியை ஜபல்பூர் வரைக்கும் நீட்டித்திருப்பதால் கூட்டம் தாங்கவில்லை.

பொதுப்பெட்டியில் ஏறக் கும்பல்.  அந்தக் கும்பலில் என்னால் ஏறவே முடியவில்லை.  ரங்க்ஸ் மட்டும் இரண்டு பைகளை வைத்துக் கொண்டு எப்படியோ ஏறிவிட்டார்.  அங்கே எனக்கும், அவருக்கும் அந்தப் பையை வைத்து உட்கார இடம் போட்டுவிட்டு, என்னை அழைக்க வந்தார்.  சரினு நானும் சாமான்களை ஏற்றிவிட்டு, ஏறப் பார்த்தால் ஏற விடாமல் தள்ளு, முள்ளு.  கீழே விழ இருந்தேன்.  தள்ளிவிட்டு எல்லாரும் அவரவர் காரியத்தில் கண்ணாக ஏற ஆரம்பிக்கின்றனர்.  ரங்க்ஸ் எப்படியோ முண்டி அடிச்சுண்டு வந்து என்னிடம் இருந்து சாமானை வாங்கிக் கொண்டு உள்ளே வைத்துவிட்டு என்னையும் அழைத்துச் சென்றார்.  ஒடுங்கிய வண்ணம் உட்கார இடம் கிடைச்சது.  உட்கார்ந்தோம்.  சாதாரணமாக ஸ்லீப்பர் க்ளாஸ் எனில் மூன்று பேர் உட்காரும் இடம்.  ஆறு பேர் அமர்ந்திருந்தோம்.  மேலும், மேலும் ஜனங்கள் வந்து கொண்டிருந்தனர்.  ஒரே குட்கா வாசனை, சிகரெட், பீடி வாசனை.

சொகுசாய்ப் பயணம் செய்து பழக்கப்பட்டுப் போன உடம்பும், மனமும் பலமாக ஆக்ஷேபிக்க, அதை அடக்கத் தெரியாமல் அழுகையும், கோபமும் முட்டிக் கொண்டு வந்தது.  இத்தனைக்கும் நடுவில் யார் ஏறினாங்க, யார் ஏறலைனு கவலையே இல்லாமல் வண்டி கிளம்பி வேகம் எடுத்தது.  ஒவ்வொரு ஸ்டேஷனாக நின்று நின்று போச்சு.  ஒவ்வொன்றிலும் பதினைந்து பேர் இறங்கினால் முப்பது பேர் ஏறினார்கள். மேலும் நெரிசல். பாத்ரூம் போகக் கூட வழியில்லை. கான்பூரில் சாப்பிட ஏதேனும் வாங்கலாம் என்றால் தண்ணீர் பாட்டில் கூட வாங்க முடியலை.  வண்டிக்குள்ளேயே சமோசா கொண்டு வந்ததை ரங்க்ஸ் மட்டும் வாங்கிக் கொண்டார்.  அவருக்கு மாத்திரை சாப்பிட ஏதேனும் உணவு எடுத்துக் கொண்டாகணுமே!  வேறே வழியில்லை.

மதியம் பனிரண்டு மணிக்குச் சாப்பிட்ட தவா ரொட்டியெல்லாம் ஜீரணம் ஆகிவிட்டது.  வயிறு கூவியது.  தேநீர் வாங்கிக் கொடுத்தார். பத்து ரூபாய் வாங்கிக் கொண்டு.  தேநீர்ப் பாத்திரத்தைக் கழுவிய நீரைக் கொடுத்தார் அந்தத் தேநீர் விற்பவர்.  என்ன இருந்தாலும், என்ன அவசரம்னாலும் ராஜஸ்தான், குஜராத்தில் இந்தத் தேநீர் விஷயத்தில் ஏமாத்தவே மாட்டாங்க. வண்டியோட ஓடி வந்து கொடுப்பாங்க என்பதோடு நல்ல தேநீராகவும் கிடைக்கும். அடுத்து மஹாராஷ்ட்ரா!  இந்த மூணு மாநிலத்தையும் விட்டால் மற்ற எங்கேயும் நல்ல தேநீரே கிடைக்காது(தமிழ்நாடு உட்பட). வாங்கியதை அப்படியே கொட்டினேன்.  தண்ணீர் குடிக்கவும் பயம்.  நம்பர் ஒன் வந்தால் போக வழியில்லை.  மணி ஏழுக்கு மேல் ஆகவும் ஏறினவங்க அப்படி அப்படியே படுக்க ஆரம்பிச்சாங்க.  கழிவறை போகணும்னா அவங்க மேலே ஏறிக் குதிச்சுத் தான் போகணும்.  அவ்வளவு ஏன்? இறங்கணும்னாக் கூடக் கஷ்டம்.  ஒரு ஸ்டேஷன் முன்னாடியே போய் வாசல் கிட்டே நின்னுக்கணும்.  கீழே காலை எல்லாம் வைச்சுக்கவே முடியலை.  காலடியில் மனிதர்கள் உட்கார்ந்திருந்தார்கள்.  மேலே சாமான்கள் வைக்கும் இடத்திலும் காலைத் தொங்கப் போட்ட வண்ணம் அமர்ந்திருந்தனர்.  இத்தனைக்கும் மேல் ஒவ்வொருத்தரும் கொண்டு வந்த சாமான்கள் வேறே!

இரவு பத்தேகாலுக்குச் சித்ரகூடம் போகும் னு சொன்ன வண்டி ஒரு மணி ஆகியும் போகலை.  அதுக்குள்ளே வண்டியில் வந்த இரண்டு பண்டிட்கள் எங்களுக்குச் சிநேகமாக அவங்க சித்ரகூடத்தில் இறங்குவதால் எங்களுக்கு உதவி செய்வதாகவும் சொன்னார்கள்.  அதே போல் நட்ட நடு இரவில் இரண்டரை மணிக்கு வண்டி சித்ரகூடத்தை அடைந்ததும், எங்களையும் இறக்கி சாமான்களையும் இறக்கி ஒரு ஆட்டோ பார்த்து அமர்த்தி, போக வேண்டிய ஹோட்டலையும் சொல்லி அனுப்பி வைத்தார்கள்.  இது வரை எல்லாம் நல்லாவே நடந்தது.  ஆனால் போன இடத்தில் அந்த ஹோட்டலில் இடம் கிடைச்சதா?  ம்ஹ்ஹும், ஹோட்டலில் அழைப்பு மணியை அழுத்த, அழுத்த யாருமே வந்து திறக்கவே இல்லை.  ஆட்டோக்காரருக்கு அந்த இரவில் மீண்டும் ரயில்வே ஸ்டேஷன் செல்ல அழைப்பு மேல் அழைப்பு வருது.  ஆனால் நாங்களோ சாமான்களோடு வண்டியில்.  அவருக்கோ போயாகணும்!

மறுபடி வேறே ஹோட்டலைத் தேடி ஆட்டோ சென்றது! நல்ல ஹோட்டலாகக் கிடைத்திருக்கக் கூடாதோ!

25 comments:

  1. // பத்து ரூபாய் வாங்கிக் கொண்டு. தேநீர்ப் பாத்திரத்தைக் கழுவிய நீரைக் கொடுத்தார் அந்தத் தேநீர் விற்பவர்//

    :))))))

    அப்படித்தான் நம்ம ஊர்லயும் இருக்கு. அம்மாடி ரயிலில் வர்ணனைகளுக்கு அகப் படாத கூட்டமா இல்லே இருக்கு! அப்படி இருந்தால் எனக்கு பயங்.......கர அலர்ஜி!

    ReplyDelete
  2. //என் வாழ்நாளில் அவ்வளவு வேகமாக என்னிக்காவது ஓடி இருப்பேனா? சந்தேகமே! "தங்க மங்கை" பிடி. உஷா கூட தோத்திருப்பார். அவ்வளவு வேகமாய் ஓடி முதலில் கைப்பையை எடுத்துக் கொண்டு சுற்றும் முற்றும் பார்த்தேன். //

    இதை மட்டும் நான் .. நான் .. நான் .. நான் .. நம்பவே மாட்டேன்.

    >>>>>

    ReplyDelete
  3. //என் வாழ்நாளில் அவ்வளவு வேகமாக என்னிக்காவது ஓடி இருப்பேனா? சந்தேகமே! "தங்க மங்கை" பிடி. உஷா கூட தோத்திருப்பார். அவ்வளவு வேகமாய் ஓடி முதலில் கைப்பையை எடுத்துக் கொண்டு சுற்றும் முற்றும் பார்த்தேன். //

    இதை மட்டும் நான் .. நான் .. நான் .. நான் .. நம்பவே மாட்டேன்.

    ஏதோ துளியூண்டு வேகம் கொடுத்து [அதாவது ஒரேயடியாக ஆமை வேகத்தில் இல்லாமல் நத்தை வேகத்தில்] நகர்ந்திருப்பீர்கள். ;)

    சரியா ?

    >>>>>

    ReplyDelete
  4. //சரினு நானும் சாமான்களை ஏற்றிவிட்டு, ஏறப் பார்த்தால் ஏற விடாமல் தள்ளு, முள்ளு. கீழே விழ இருந்தேன்.//

    அச்சச்சோ, அட ராமா !

    நல்லவேளை போங்கோ ! ;)

    தாங்கள் விழாததால் அங்கு ஏற முயன்ற அனைவரும் தப்பினரோ ! ;)

    >>>>>

    ReplyDelete
  5. I really appreciate your passion to visit those places even after these kind of struggles... Waiting for the next post :)

    ReplyDelete
  6. //சொகுசாய்ப் பயணம் செய்து பழக்கப்பட்டுப் போன உடம்பும், மனமும் பலமாக ஆக்ஷேபிக்க, அதை அடக்கத் தெரியாமல் அழுகையும், கோபமும் முட்டிக் கொண்டு வந்தது. //

    இது மிகவும் இயற்கை தான்.

    நானும் இதை சிலமுறை அனுபவித்துள்ளேன்.

    இப்போதெல்லாம் எங்காவது பயணம் என்றாலே அலர்ஜியாகி விட்டது.

    தீராதபக்ஷத்தில் லோக்கல் என்றால் ஆட்டோ, சற்றே நீண்ட பயணம் என்றால் தனியாக ஒரு ஏ.ஸி. கார் மட்டுமே.

    >>>>>

    ReplyDelete
  7. //பத்து ரூபாய் வாங்கிக் கொண்டு. தேநீர்ப் பாத்திரத்தைக் கழுவிய நீரைக் கொடுத்தார் அந்தத் தேநீர் விற்பவர். //

    இது மிகவும் கொடுமையான விஷயம் தான். ;(

    ReplyDelete
  8. //நம்பர் ஒன் வந்தால் போக வழியில்லை.//

    இது மஹா மஹா கஷ்டமாச்சே ;(((((

    இந்த ஒரு செளகர்யத்ட்துக்காகக்தானே இரயில் பயணம் செய்ய விரும்புகிறோம்.

    //மணி ஏழுக்கு மேல் ஆகவும் ஏறினவங்க அப்படி அப்படியே படுக்க ஆரம்பிச்சாங்க. கழிவறை போகணும்னா அவங்க மேலே ஏறிக் குதிச்சுத் தான் போகணும். அவ்வளவு ஏன்? இறங்கணும்னாக் கூடக் கஷ்டம். ஒரு ஸ்டேஷன் முன்னாடியே போய் வாசல் கிட்டே நின்னுக்கணும். கீழே காலை எல்லாம் வைச்சுக்கவே முடியலை. காலடியில் மனிதர்கள் உட்கார்ந்திருந்தார்கள். மேலே சாமான்கள் வைக்கும் இடத்திலும் காலைத் தொங்கப் போட்ட வண்ணம் அமர்ந்திருந்தனர். இத்தனைக்கும் மேல் ஒவ்வொருத்தரும் கொண்டு வந்த சாமான்கள் வேறே!//

    கொடுமையின் உச்சக்கட்டம் தான்.

    >>>>>

    ReplyDelete
  9. //இரவு பத்தேகாலுக்குச் சித்ரகூடம் போகும் னு சொன்ன வண்டி ஒரு மணி ஆகியும் போகலை. அதுக்குள்ளே வண்டியில் வந்த இரண்டு பண்டிட்கள் எங்களுக்குச் சிநேகமாக அவங்க சித்ரகூடத்தில் இறங்குவதால் எங்களுக்கு உதவி செய்வதாகவும் சொன்னார்கள். அதே போல் நட்ட நடு இரவில் இரண்டரை மணிக்கு வண்டி சித்ரகூடத்தை அடைந்ததும், எங்களையும் இறக்கி சாமான்களையும் இறக்கி ஒரு ஆட்டோ பார்த்து அமர்த்தி, போக வேண்டிய ஹோட்டலையும் சொல்லி அனுப்பி வைத்தார்கள். இது வரை எல்லாம் நல்லாவே நடந்தது. //

    ஸ்ரீராமர் + லக்ஷ்மணர்கள் இருவருமே நள்ளிரவில் பண்டிட்ஜீக்களாக வந்து உதவியுள்ளனர்.

    >>>>>

    ReplyDelete
  10. //ஆனால் போன இடத்தில் அந்த ஹோட்டலில் இடம் கிடைச்சதா? ம்ஹ்ஹும், ஹோட்டலில் அழைப்பு மணியை அழுத்த, அழுத்த யாருமே வந்து திறக்கவே இல்லை. ஆட்டோக்காரருக்கு அந்த இரவில் மீண்டும் ரயில்வே ஸ்டேஷன் செல்ல அழைப்பு மேல் அழைப்பு வருது. ஆனால் நாங்களோ சாமான்களோடு வண்டியில். அவருக்கோ போயாகணும்!

    மறுபடி வேறே ஹோட்டலைத் தேடி ஆட்டோ சென்றது!//

    நல்ல விறுவிறுப்பான பயணக்கட்டுரை. பாராட்டுக்கள்.

    //நல்ல ஹோட்டலாகக் கிடைத்திருக்கக் கூடாதோ!//

    நல்லதொரு செய்தியுடன் முடிக்கக்கூடாதோ !

    மீண்டும் ஒரு சஸ்பென்ஸ் ;)))))

    -oOo-

    ReplyDelete
  11. ஶ்ரீராம், கூட்டம் எனக்கும் அலர்ஜி தான். சொல்லப் போனால் மருத்துவர்கள் கூட்டமாய் இருக்கும் இடங்களுக்குப் போகாதேனு தான் சொல்லி இருக்காங்க. :(

    மற்றபடி பொதுவாகவே யு.பியில் மக்கள் நிறையவே ஏமாத்துவாங்க. செல்லும் பயணிகள் ஏமாறுவாங்க. நல்லவங்களும் இருப்பாங்க. தேடிக் கண்டு பிடிக்கணும். அயோத்தியில் எல்லாருமே நல்லவங்களா இருந்தாங்களே!

    ReplyDelete
  12. ஹாஹா, வைகோ சார், கைப்பையை எடுத்துக்க ஓடத்தான் வேண்டி இருந்தது. :)))

    ReplyDelete
  13. சரியில்லையாக்கும்! :)))

    ReplyDelete
  14. நீங்க வேறே, ரயிலின் இடுக்கில் நான் விழாமல் இருந்ததே பெரிய விஷயமாக்கும். :(

    ReplyDelete
  15. பிங்கோ, இதெல்லாம் ஒண்ணுமே இல்லைங்கற மாதிரி எங்களுக்கு வேலையில் மாற்றல் வரச்சே மூணு நாள் பயணமெல்லாம் செய்திருக்கோமாக்கும். இதெல்லாம் ஜூஜூபி!

    என்னன்னா இப்போ உடம்பும், மனமும் சொகுசுக்குப் பழகிப் போச்சு! :( அதோடு வயசும்! :)))

    ReplyDelete
  16. ஆமாம், நாங்களும் திருச்சிக்கு மலைக்கோட்டைக்கு வந்தால் கூட ஆட்டோ தான்! :( இப்போ அப்படி ஆகிவிட்டது.

    ReplyDelete
  17. தேநீரா அது! வெறும் சூடான வெந்நீர். அதுவானும் கொஞ்சம் நீரின் சுவை இருக்கும். இதிலே!.....

    ReplyDelete
  18. ஆமாம், இதுக்காகவே மத்தியானத்திலிருந்து தண்ணீர் கூடக் குடிக்காமல் இருந்தேன். :(

    ReplyDelete
  19. உண்மை தான், ஶ்ரீராம, லக்ஷ்மணர்கள் போல் தான் வந்து உதவினார்கள். ஆனால் முழுதும் உதவி இருக்கலாமோ? :(

    ReplyDelete
  20. ஹாஹா, சஸ்பென்ஸ் இருந்தால் தானே சுவை!

    ReplyDelete
  21. திட்டமிட்டுப் பயணம் மேற்கொண்டால் இத்தனை இடையூறுகள் இருக்காதோ?இப்படிப் பயணம் செய்வதிலும் ஒரு த்ரில் இருக்கத்தானே செய்கிறது.

    ReplyDelete
  22. பெரும்பாலான வட இந்திய நகரங்களில் இந்த நரக வேதனை தான்..... பேருந்துகளில் இன்னும் மோசம்.....

    பல முறை பயணப்பட்டாலும் நமக்கு நிச்சயமாய் பிடிக்காது/பழகாது!

    ReplyDelete
  23. ஜிஎம்பி ஐயா, பயணம் என்னமோ திட்டமிடப் பட்டதே. ஆனால் சித்திரகூடப் பயணம் தான் முன் கூட்டி டிக்கெட் வாங்க முடியலை. ஏனெனில் அயோத்தி தரிசனம் முடிச்சு நாங்க பிட்டூர் தான் போறதா இருந்தோம். வண்டி கிடைக்காததால் போக முடியலை. சித்ரகூடத்துக்கே வண்டியிலே போயிருக்கலாம் தான். காட்டுப்பாதை. நாங்க ரெண்டே பேர்தான் பயணிக்கணும். ஒரு குழுவாக இருந்தால் பிரச்னை இல்லை. எல்லாவற்றையும் யோசித்தே ரயிலில் சென்றோம்.

    ReplyDelete
  24. வாங்க வெங்கட், அதான் பேருந்துப் பயணத்தை முற்றிலும் தவிர்த்தோம். :(

    ReplyDelete
  25. சோதனைமேல் சோதனையான பயணம்.:(

    ReplyDelete