Thursday, November 28, 2013

சித்திரவதையுடன் சித்திரகூடத்தில் --தொடர்ச்சி!

முன் பதிவு

அந்த ஆட்டோக்கள் எல்லாமே ஷேர் ஆட்டோக்கள் தான். நாங்க அதிலே போய்க் கடைத்தெருவிலே இறங்கிக்கலாம்னு தெரியாம ஒவ்வொருத்தரையாக் கூப்பிட்டோம்.  கடைசியிலே ஒருத்தர் கடைத்தெருப்பக்கம் போன ஒரு ஆட்டோவை நிறுத்தி எங்களுக்கு ஏற்பாடு பண்ணிப் பேசிக்கொள்ளச் சொன்னார்.   ரங்க்ஸ் சர்க்கரை நோய்க்காக மாத்திரைகள் சாப்பிடணும்ங்கறதாலே முதல்லே நாங்க காலை உணவு எடுத்துக்க வேண்டி ஒரு ஹோட்டலுக்குக்கூட்டிப் போகச் சொன்னோம்.  அங்கிருந்து சித்திரகூடத்தின் சார் தாம் என அழைக்கப்படும் நான்கு இடங்களுக்கும் கூட்டிச் செல்லச் சொன்னோம்.

சித்திரகூடத்து மலையடிவாரத்தையே கிரி வலமும் வருகின்றனர்.  அதைப் பரிக்ரமா என்று சொல்கிறார்கள்.  நாங்கள் இருந்த பகுதியும் சித்திரகூடத்தில் சுற்றிப்பார்க்க வேண்டிய இடங்களும் மத்தியப் பிரதேசப் பகுதியில் இருந்தன. சார்தாமில் முதலில் அனுமான் தாரா என்னும் மலை.  600 படிகளுக்கு மேல் ஏறிப் போய் அனுமனைப் பார்க்கணும்.  துளசி இங்கே தான் ராம் சரித மானஸ் எழுதினதாகவும் சொல்கிறார்கள்.  ஆனால் எங்களைப் பார்த்ததுமே அனைவரும் அனுமான் தாராவுக்கு நீங்க போக முடியாது.  மலைப்படிகள். ஏறுவதும் கஷ்டம்;  இறங்குவதும் கஷ்டம் என்று சொல்லிவிட்டார்கள்.  சரினு மத்த மூணு இடங்களுக்கு ஆட்டோக்காரரிடம் பேசினோம்.  வழக்கம் போல் "ரிஜர்வ்ட்" என்று கேட்டு ஆட்டோவை அவங்க சட்டப்படி எங்களுக்கு மட்டுமே பேசிக் கொண்டோம். ஆட்டோக்காரப் பையருக்கு 20 வயதுக்குள் தான் இருக்கும். எல்லா இடமும் கூட்டிப் போய் விட்டு மதியம் சாப்பாட்டுக்கும் ஹோட்டலுக்குப் போய்ப் பின்னர் அங்கிருந்து மறுநாள் கிளம்புவதற்கு ரயிலில் முன்பதிவு செய்யணும்னு அதையும் கேட்டுக் கொண்டோம். எல்லாவற்றுக்கும் அழைத்துச் செல்வதாய்ச் சொன்னார் அந்தப் பையர்.  நாங்களும் நம்பியதால் வேறு யாரிடமும் இதைப் பத்திக் கேட்கவே இல்லை.

அவர் அழைத்துச் சென்ற ஹோட்டலில் காலை ஆகாரம் எடுத்துக் கொண்டோம்.  நான் வழக்கம் போல் சாப்பிடப் படுத்த, ரங்க்ஸோ, சாப்பிட்டால் தான் எல்லாத்தையும் பார்க்கத் தெம்பு வரும்.  ஒழுங்கா சாப்பிடுனு மிரட்ட, நாஷ்டா தட்டில் சூடான ஜிலேபிகளோடு பூரி, சப்ஜி, தயிர், ஊறுகாய் இத்தனையும் வர, ஜிலேபிகளைப் பார்த்த பரவசத்தில் நானும் நாஷ்டானு கூவ. நாஷ்டாவும் வந்தது.  சாப்பிட்டுவிட்டுக் காஃபி இங்கே சாப்பிட்டுப் பார்க்கலாம்னு (கொழுப்புத் தானே னு என் ம.சா. கேட்குது) காஃபி ஆர்டர் பண்ணினோம்.  சகிக்காத காஃபி வர, அவர் எனக்கு உபசாரம் பண்ண, நான் அவருக்கு  உபசாரம் பண்ண கொடுத்த காசுக்குக் காஃபியைக் கொட்டாமல் (பின்னே?  காலம்பர காஃபி, டீ கிடைக்காமல் தவிச்ச தவிப்பு பாடம் கத்துக் கொடுத்துடுச்சே) குடிச்சு வைச்சுட்டு ஆட்டோவில் ஏறினோம்.  அப்போவானும் ஹோட்டல்காரரிடம் சார்தாமுக்கு ஆட்டோவுக்கு எவ்வளவு கொடுக்கணும், நாலும் ஒரே ஆட்டோவில் பேசிய பணத்துக்குத் தானே போகணும்னு எல்லாம் கேட்டிருக்கணும்.  என்னமோ ஒரு அலுப்பு, சலிப்பு.  இங்கெல்லாம் ஏமாத்த மாட்டாங்க அப்படினு ஒரு நினைப்பு.  ஆட்டோவில் ஏறிக் கொண்டு டிக்கெட் பார்க்கப்போனால் திறக்கவே இல்லை.

முதலில் அனுமான் தாரா தான் இல்லையே;  அடுத்து என்னனு பார்த்தால் சதி அநசூயா ஆசிரமம்.  அங்கே செல்லும் வழியில் ஒரு கோயிலையும், ஒரு பாறையையும் காட்டினார்கள்.  அங்கே தான் ஶ்ரீராமரும், சீதையும் தனித்திருந்தபோது காகாசுரன் வந்து சீதையைத் தொந்திரவு செய்த இடமாம். அங்கே ஒரு கோயிலும் இருக்கிறது இப்போது.  பாறையில் சிந்தூரப் பொடிகளைத் தூவி  ஒரு பண்டிட் உட்கார்ந்து காசு பண்ணிக் கொண்டிருக்கிறார். கொஞ்சம் மேலே ஏறிப் போகணும். போனோம்.


இந்தப் பாறை தான், ஶ்ரீராமர், சீதை அமர்ந்திருந்ததாகச் சொல்லப்படுகிறது.  சாய்ந்தாற்போல் உட்கார்ந்திருப்பவர் தான் பண்டிட்.  பின்னால் தெரிவது மந்தாகினி நதி.


அதே காட்சி  



 மந்தாகினி நதிக்கரையில் அமர்ந்திருக்கும் ஒரு தொழிலாளி. 

18 comments:


  1. "சித்திரவதையுடன் சித்திரகூடத்தில் "

    சிரமங்களையெல்லாம் ஒட்டு மொத்தமாகச் சொல்லும் தலைப்பு அருமை.

    >>>>>

    ReplyDelete
  2. // சதி அநசூயா ஆசிரமம் செல்லும் வழியில் ஒரு கோயிலையும், ஒரு பாறையையும் காட்டினார்கள்.//

    அச்சா!

    //அங்கே தான் ஶ்ரீராமரும், சீதையும் தனித்திருந்தபோது காகாசுரன் வந்து சீதையைத் தொந்திரவு செய்த இடமாம்.//

    பஹூத் அச்சா !!

    //அங்கே ஒரு கோயிலும் இருக்கிறது இப்போது. பாறையில் சிந்தூரப் பொடிகளைத் தூவி ஒரு பண்டிட் உட்கார்ந்து காசு பண்ணிக் கொண்டிருக்கிறார்.//

    அது சரி, ஆனால் நீங்க கொடுத்தீங்களா?

    //கொஞ்சம் மேலே ஏறிப் போகணும். போனோம்.//

    அடடா ... சுவாரஸ்யம் தான்.

    >>>>>

    ReplyDelete
  3. கீழிருந்து இரண்டாவது படத்தில் பண்டிட்ஜி கையில் குச்சி எதற்கு?

    விறுவிறுப்பான காக்கா கதையைக்கேட்டு விட்டு காசு கொடுக்காதவர்களை, காக்கா போல அடித்து விரட்டவோ!!

    சித்திரவதை ஸாரி சித்திரகூட தொடர் படிக்க மிகுந்த ஆவலுடன் ...

    அதைவிட

    //இங்கெல்லாம் ஏமாத்த மாட்டாங்க அப்படினு ஒரு நினைப்பு.//

    கடைசிவரை சஸ்பென்ஸ் !

    பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  4. சகிக்காத காஃபி வர, அவர் எனக்கு உபசாரம் பண்ண, நான் அவருக்கு உபசாரம் பண்ண கொடுத்த காசுக்குக் காஃபியைக் கொட்டாமல் (பின்னே? காலம்பர காஃபி, டீ கிடைக்காமல் தவிச்ச தவிப்பு பாடம் கத்துக் கொடுத்துடுச்சே) குடிச்சு வைச்சுட்டு ஆட்டோவில் ஏறினோம். //

    அனுமாரைப் பார்க்கலாம் பார்க்காமலும் போலாம்.
    ஆனா , காபியை பார்க்காம .....????

    இம்பாசிபிள்.

    சுப்பு தாத்தா.

    ReplyDelete
  5. ரிக்ஷாக்காரப் பையரிடம் எப்படி ஏமாந்திருப்பீர்கள் என்ற எண்ணமாகவே இருக்கிறது! :)))

    ReplyDelete
  6. அப்போவானும் ஹோட்டல்காரரிடம் சார்தாமுக்கு ஆட்டோவுக்கு எவ்வளவு கொடுக்கணும், நாலும் ஒரே ஆட்டோவில் பேசிய பணத்துக்குத் தானே போகணும்னு எல்லாம் கேட்டிருக்கணும். என்னமோ ஒரு அலுப்பு, சலிப்பு. இங்கெல்லாம் ஏமாத்த மாட்டாங்க அப்படினு ஒரு நினைப்பு. //
    என்னவாயிற்று?
    ஏமாத்தவில்லை தானே!

    ReplyDelete
  7. அப்போவானும் ஹோட்டல்காரரிடம் சார்தாமுக்கு ஆட்டோவுக்கு எவ்வளவு கொடுக்கணும், நாலும் ஒரே ஆட்டோவில் பேசிய பணத்துக்குத் தானே போகணும்னு எல்லாம் கேட்டிருக்கணும். என்னமோ ஒரு அலுப்பு, சலிப்பு. இங்கெல்லாம் ஏமாத்த மாட்டாங்க அப்படினு ஒரு நினைப்பு. //
    என்னவாயிற்று?
    ஏமாத்தவில்லை தானே!

    ReplyDelete
  8. இங்கே பல இடங்களில் இப்படித்தான் காசு வசூலிப்பு நடந்து கொண்டே இருக்கும்.... :(

    ReplyDelete
  9. வாங்க வைகோ சார், உண்மையிலேயே அங்கே பட்ட மனவேதனைகள்! :(

    ReplyDelete
  10. வைகோ சார், நாங்க கொடுக்கலை!

    ReplyDelete
  11. //கீழிருந்து இரண்டாவது படத்தில் பண்டிட்ஜி கையில் குச்சி எதற்கு?//

    ஹிஹிஹி, வைகோ சார், நம்ம முன்னோர்கள் தான் எங்கே பார்த்தாலும் சுத்திட்டிருக்காங்களே! அவங்க வந்து தொந்திரவு செய்தாங்க. கையில் குச்சியை வைச்சு விரட்டினார். :)))) ஒரு பெண்மணி கோயிலுக்குப் போகக் கையில் அங்கே விற்கும் (பிரசாதம்னு சொல்லுவாங்க) இனிப்புகளை வாங்கி வைச்சிருந்தாங்க. அவ்வளவுதான். அந்தப் பெண்ணின் தோள் மேலே ஏறி சவாரி செய்து பிடுங்கிட்டுப் போறவரைக்கும் விடலையே! :))) கையில் எதுவும் வைச்சுக்கக் கூடாது. எனக்குப் படம் பிடிக்கணும் அவங்களைனு ஆசை தான். எங்கே! விட மாட்டேனுட்டாங்க! :(

    ReplyDelete
  12. சூரி சார், ரைட்டு! :))))

    ReplyDelete
  13. ஶ்ரீராம், அந்த வயித்தெரிச்சல் இன்னும் ஒரு பதிவில் வந்துடும், பாருங்க! :( இப்போ நினைச்சாலும் எனக்குக் கோபமா வரும். நம்ம ரங்க்ஸ் தான் புத்தர், ஏசு, காந்திக்கு அடுத்ததாச்சே! அவர் போனாப் போறதும்பார்! :)))

    ReplyDelete
  14. கோமதி அரசு, பொறுத்திருக்கவும். :) ரொம்பநாள் கழிச்சு வந்ததுக்கு நன்றி.

    ReplyDelete
  15. achacho... did he get more money from you?

    Nice to know the details of your visit as it will help others with same interest.

    ReplyDelete
  16. I am trying to comment in Tamil. Probably in your next post :)

    ReplyDelete
  17. பிங்கோ, வரவுக்கும் கருத்துக்கும் நன்றிங்க. இ-கலப்பை டவுன்லோட் பண்ணினால் phonetic method லே தமிழ்த் தட்டச்சு செய்வது சுலபம். முயன்று பார்க்கவும்.

    ReplyDelete
  18. கண்டுகொண்டோம்.

    ReplyDelete