Sunday, December 22, 2013

நைமிசாரண்யத்தில் ஒரு நாள் 1

"வாணிலாமுறுவல் சிறு நுதல் பெருந்தோள் மாதரார் வன முலைப்பயனே
பேணினேன், அதனைப் பிழையெனக் கருதிப் பேதையேன் பிறவி நோயறுப்பான்,
ஏணிலேனிருந்தேனெண்ணினேனெண்ணி இளையவர்க் கலவியிந்திறத்தை
நாணினேன், வந்துன் திருவடியடைந்தேன் நைமிசாரணியத்துளெந்தாய்

சிலம்படியுருவிற்கரு நெடுங்கண்ணார் திறத்தனாயறத்தயேமறந்து
புலம்படிந்துண்ணும் போகமே பெருக்கிப் போக்கினேன் பொழுதினைவாளா,
அலம்புரி தடக்கையாயனேமாயா, வானவர்க்கரசனே., வானோர்
நலம்புரிந்திறைஞ்சுன் திருவடியடைந்தேன் நைமிசாரணியத்துளெந்தாய்."

திருமங்கை ஆழ்வார் பெரிய திருமொழி.

திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 திவ்ய தேசங்களில் ஒன்று நைமிசாரண்யம். நாங்கள் லக்னோ சென்ற மறுநாள் காலை கிளம்பினோம்.  லக்னோவில் இருந்து கிட்டத்தட்ட நூறு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது  நைமிசாரண்யம்.  இது கிட்டத்தட்ட காடு எனலாம். காட்டையே இங்கு கடவுளாக வழிபடுகின்றனர்.  இங்கே பெருமாளின் சக்கரம் உருண்டு வந்து காட்டில் தவம் செய்யச் சிறந்த இடத்தைக் காட்டியதாகத் தல வரலாறு கூறுகிறது.



சக்ரதீர்த்தம் செல்லும் வழி







எவ்வித இடைஞ்சலும் இன்றித் தவம் செய்யச் சிறந்த இடத்தை முனிவர்கள் திருமாலிடம் இறைஞ்ச அவர் தன் சக்ராயுதத்தை உருட்டி விட அது வந்து இங்கே நின்றது என்கிறது தலவரலாறு.  பெருமாளால் காட்டப்பட்ட இந்த இடத்தையே பெருமாளாகக் கருதி வழிபடுகின்றனர்.  இந்தச் சக்கரம் நின்ற இடத்தில் தற்போது ஒரு தீர்த்தம் உள்ளது.  இதைச் சக்ரதீர்த்தம் என்று அழைக்கின்றனர்.


இங்கே பார்க்க வேண்டிய இடத்தில் சக்ர தீர்த்தம்,  ஹநுமான் காடி,  ஜானகி குண்டம்,  லலிதா தேவி மந்திர், ததீசி குண்டம், ஸ்வயாம்புவ மநு வந்த இடம், சூத முனிவர் பாரதம் சொன்ன இடம், சுகர் பாகவதம் சொன்ன இடம் எனப் பல இடங்கள் இருக்கின்றன.  இவற்றில் நாங்கள் பார்த்தவற்றை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

மேலே காண்பது சக்ரதீர்த்தம்.  இங்கே இறைவன் ஶ்ரீஹரி என்னும் திருநாமத்தோடும், இறைவி ஶ்ரீஹரிலக்ஷ்மி என்னும் திரு நாமத்தோடும் காடு வடிவில் காட்சி தருகின்றனர்.  விமானம் ஶ்ரீஹரிவிமானம் என்கின்றனர்.  ஆழ்வார்கள் காலத்தில் வழிபட்ட சிலைகள் இப்போது காணப்படவில்லை. :(

வால்மீகி எழுதிய ராமாயணக் காவியத்தை லவ, குசர்கள் இங்கே தான் அரங்கேற்றம் செய்ததாகவும் செவிவழிச் செய்திகள் கூறுகின்றன.   இந்த ஊர் கோமதி நதிக்கரையில் உள்ளது.  கோமதி நதியை ஆதி கங்கை என்று அழைக்கின்றனர். கோமுகி  என்றும் சொல்கின்றனர்.


14 comments:

  1. சக்கரதீர்த்தம் அழகாய் உள்ளது.

    ReplyDelete
  2. சிறப்பான தகவல்களுக்கு நன்றி அம்மா... தொடர்கிறேன்...

    ReplyDelete
  3. நைமிசாரண்யம் பற்றிய படங்களும் தகவல்களும் நன்று.

    பகிர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  4. கோமதி நதியில் நீராடினிர்களா?
    திருமங்கையாழ்வார் பாடல் என்ன அழகு!

    ReplyDelete
  5. படங்களும் தகவல்களும் அருமை. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  6. வாங்க ஶ்ரீராம், நன்றி.

    ReplyDelete
  7. நன்றி வெங்கட்.

    ReplyDelete
  8. கோமதி நதி மட்டும் இல்லை, எங்கேயுமே (சரயு தவிர)நீராடவில்லை ரஞ்சனி. தண்ணீர் என்னமோ சுத்தமாய்த் தான் இருந்தது. ஆனால் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு எதுக்கு வம்புனு இருந்துட்டோம். :))))

    ReplyDelete
  9. நன்றி வைகோ சார்.

    ReplyDelete
  10. ஓ.... இதுதான் நைமிசாரண்யமா...? இப்போதுதான் தெரிந்து கொண்டேன். நன்றி.

    ReplyDelete
  11. வாங்க ஜிஎம்பி சார். மிக்க நன்றி.

    ReplyDelete
  12. வரலைன்னு எல்லாம் வருத்தப்படக்கூடாது. ஒவ்வொரு பதிவையும் படிச்சு / பார்த்துக்கிட்டுதான் இருக்கேன்.

    ஆன்மிகம் சரியா எழுதறீங்க! :)

    ReplyDelete
  13. வாங்க இ.கொ. ஆ.அ.ச. னு எழுதி இருந்தேனே, என்னனு கண்டு பிடிச்சாச்சா? மண்டை உடையுது, உங்களுக்குப் புரிஞ்சதா இல்லையானு! :))))

    ReplyDelete