Wednesday, January 01, 2014

வருக, வருக புத்தாண்டே வருக! எல்லாரும் சாப்பிட்டதை வந்து பாருங்க!

இந்த ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாடும் வழக்கம் இப்போல்லாம் ரொம்பவே அமர்க்களமா இருக்கு.  சின்ன வயசிலே ஆங்கிலப் புத்தாண்டுனு அப்படி விசேஷமாக் கொண்டாடாவிட்டாலும், ஒரு விதத்தில் முக்கியமாகவே இருந்தது.  ஏன்னா அன்னிக்குத் தான் அப்பா எங்களை ஏதானும் ஒரு ஹோட்டலுக்கு டிஃபன் சாப்பிட அழைத்துச் செல்லுவார். அன்னிக்கு டிஃபன் சாப்பிடற செலவுக்குக் கணக்கும் பார்க்க மாட்டார்.  ஹிஹிஹி, ஒரு வாரம் கழிச்சுப் பார்த்துட்டுப் புலம்பிப்பார்ங்கறது தனியா வைச்சுக்கலாம்.  ஆனால் அன்னிக்கு ஒண்ணும் சொல்ல மாட்டார்.


இதுக்காக நாங்க ஒரு மாசம் முன்னாடியே தயார் பண்ணிப்போம்.  எப்படினு கேட்கறீங்களா? ஒருத்தருக்கொருத்தர் நீ என்ன சாப்பிடப் போறே, நீ என்ன சாப்பிடுவே, ஸ்வீட் என்ன ஆர்டர் கொடுக்கறது? மூணு பேரும் சேர்த்து ஒரே மாதிரியா ஆர்டர் கொடுக்கறதா?  அல்லது அவங்க அவங்க விருப்பத்துக்கு ஏற்றாற்போல் ஆர்டர் கொடுக்கிறதானு பேசிப்போம்  ஒவ்வொருத்தர் ஒவ்வொரு ஆர்டர் கொடுத்தால் அப்புறமா அப்பா என்ன சொல்லுவாரோ, விலை எல்லாம் ஜாஸ்தி இருக்குமோனு யோசிச்சுப்போம்.  அப்புறமா ஒரு வழியா முடிவு பண்ணி எல்லாருமா ஒரே ஸ்வீட் ஆர்டர் கொடுக்கலாம்னு முடிவு செய்துப்போம்.

அது ஜிலேபியா, மைசூர்பாகா, அல்வாவானு அடுத்த விவாதம்.  இதெல்லாம் வீட்டிலே பண்ணறது தானே.  வீட்டிலே பண்ணாத ஸ்வீட்டா வாங்கிக்கணும்னு நான் சொல்லுவேன்.  எப்போவுமே ஹோட்டலுக்குப் போனால் வீட்டிலே பண்ணற இட்லி சாம்பார் வாங்கிச் சாப்பிடறது எனக்குப்பிடிக்காது! :)))) புதுசா ஏதானும் போடுவாங்க அதை வாங்கிக்கணும்னு நினைச்சுப்பேன்.  அதே போல் ஸ்வீட்டும் புதுசா வாங்கணும்னு தோணும்.  அப்போல்லாம் சோன் பப்டி கேக் கடைகளில் கிடைக்காது.  வாசலில் மணி அடிச்சுண்டு ராத்திரிக்குக் கொண்டு வருவாங்க.  கம்பி, கம்பியாக இருக்கும்.  அதை வாங்கிச் சுருட்டி ஒரே வாயில் போட்டுக்கலாம்.  அதிலே என்ன ருசி இருக்கும்?  ஆகவே ரசிச்சுச் சாப்பிடறாப்போல யோசிச்சுக் கடைசியில் குலாப் ஜாமூன் இல்லைனா பாசந்தினு முடிவு பண்ணுவோம்.

இது எதுவும் இல்லைனா ஏதேனும் பாலில் செய்த இனிப்பு வாங்கலாம்னு நினைப்போம்.  ஹோட்டலுக்குப் போனதும் அங்கே முதல்லே ஒரு நோட்டம் விடுவோம்.  எது புதுசாச் செய்திருப்பாங்க?  அநேகமா அல்வா தான் தினம் தினம் புதுசாப் பண்ணுவாங்க.  அப்பாவோட ஓட் எப்போவுமே அல்வாவுக்குத் தான்.  அப்பா அல்வா ஆர்டர் கொடுக்க, நாங்க மூணு பேரும் குலாப் ஜாமூன் இல்லைனா பாசந்தினு சொல்லுவோம்.  குலாப்ஜாமூன் சாப்பிடத் தெரியுமானு அப்பா கேட்பார்.  அப்போல்லாம் குலாப் ஜாமூனை ஜீராவில் ஊற வைச்ச மாதிரியே அப்படியே ஜீராவோடு கொடுப்பாங்க.  ஆகவே அதைச் சாப்பிடறது அப்போ ஒரு புதுமை!


(அப்போக் கொடுக்கும் ஜாமூனை ஜீராவோடு சேர்த்து  உதிர்த்துக் கலந்துக்கணும். அதுக்கப்புறமாச் சாப்பிடணும்.  இந்த குலாப்ஜாமூன் செய்யும் வித்தையெல்லாம் கல்யாணம் ஆகி முதல் முதல்லே ராஜஸ்தான் போனப்புறம் தான் நல்லாவே புரிஞ்சது.   ஜீராவில் ஊறிய ஜாமூன்களைத் தனியே வைக்கலாம் என்பதே அப்போப் புதுமையா இருந்தது.  அதோடு ஸ்டஃப் பண்ணின ஜாமூன் வேறே பண்ணுவாங்க. அப்போ குழந்தையிலே ஜாமூன் சாப்பிட்டதை நினைச்சுப் பார்த்துச் சிப்பு, சிப்பா வரும்.  அது தனியா ஒரு நாள் பார்த்துப்போம். ) அல்வா சூடா இருக்கு, அதைச் சாப்பிடாமல் என்னனு அப்பா முறைப்பார்.  உடனே நான் இன்னிக்கு எங்க இஷ்டத்துக்குச் சாப்பிடலாம்னு சொல்லிட்டு, இப்போ மாத்தறீங்களானு கேட்டுடுவேன்.  முறைப்போடு இருக்கும் அப்பாவுக்கு பதில் சொல்ல முடியாது.  கடைசியில் ஜாமூன் வரும்.


நானும், தம்பியும் அதை ஜீராவோடு கலக்க, அண்ணாவோ அதைத் துண்டாக்கித் தனியாகச் சாப்பிட்டுவிட்டு, ஜீராவைத் தனியாகக் குடிக்க முயல்வார்.  துண்டாக்க முடியாமல் வழுக்கிக் கொண்டு போகும் ஜாமூன். பின்னே?  இங்கே எல்லாம் என்ன பால் காய்ச்சின கோவாவிலா ஜாமூன் பண்ணறாங்க?  ஜாமூன் பவுடர் தானே!  இதெல்லாமும் அப்புறமாத் தான் புரிய வந்தது. :)))) ஒரு வழியா ஜாமூனைப் பிடித்து வெட்டிச் சாப்பிட்டுவிட்டு அடுத்து மசால் தோசை அல்லது சாம்பார் வடை அல்லது ஸ்பெஷல் வடை ஆர்டர் கொடுப்போம்.  ஸ்பெஷல் வடை கிட்டத்தட்ட ஒரு தோசை அளவுக்கு இருக்கும் என்பதோடு முந்திரிப்பருப்பெல்லாம் போட்டிருப்பாங்க.  அந்த மாதிரி வடை இப்போல்லாம் எங்கேயுமே பண்ணறதில்லை.

{அப்போல்லாம் ஹோட்டலில் அடை, அவியல் எல்லாம் கிடையாது.  முதல் முதல்லே ஹோட்டலில் அடை அவியல் கொடுத்து நான் பார்த்தது எங்க மாமா கல்யாணம் முடிந்து திருநெல்வேலியில் இருந்து திரும்புகையில் கோவில்பட்டியில் ஒரு ஹோட்டலில் தான்.  அட, ஹோட்டலில் அடை அவியலானு ஆச்சரியமா இருந்தது அப்போ. } இப்படியாகத் தானே எங்க ஹோட்டல் மகாத்மியம் நடைபெறும்.  சில சமயம் அப்பாவுக்கு முடியலைனா ஹோட்டலில் இருந்து டிஃபன் வரவழைப்பார்.

அப்போ பின்னாடி மேலச் சித்திரை வீதி, வடக்குச் சித்திரை வீதி முடுக்கில் இருக்கும் கோபு ஐயங்கார் கடையிலிருந்து தூள் பஜ்ஜியும் , சட்னியும் கட்டாயம் இடம் பெறும்.  அதைத் தவிர நாகப்பட்டினம் அம்பி கடை அல்வாவும், உருளைக்கிழங்கு மசாலாவும் இடம் பெறும்.  இந்த அல்வாவும் , உருளைக்கிழங்கு மசாலாவும் மதியம் ஒரு மணிக்குள்ளாக வாங்கிடணும். கோபு ஐயங்கார் கடை பஜ்ஜியோ மதியம் ஒரு மணியிலிருந்து மூணு மணிக்குள்ளாக வாங்கிடணும்.  கொஞ்சம் லேட் ஆனாலும் தீர்ந்து போயிடும்.

ஆக மொத்தம் புத்தாண்டை நாங்க வரவேற்பதே இந்த ஹோட்டலில் சாப்பிடலாம் என்ற ஒரே காரணத்துக்காகவே.  இப்போல்லாம் புத்தாண்டு என்பது எல்லா நாட்களில் ஒன்றாக ஆகிவிட்டது. :)))))


வலை உலக நண்பர்கள் அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.

36 comments:

  1. தங்களுக்கும், தங்களின் குடும்பத்தார் உட்பட அனைவருக்கும் எனது மனமார்ந்த 2014 இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    அன்புடன் DD

    ReplyDelete
  2. ஹோட்டல் அதிசயமா இருந்த நாட்களில் என்ன ஆர்டர் கொடுப்பது என்பது ஜாலியான பிரச்னையாக இருந்தது. இப்பவும் பிரச்னைதான் 'என்னத்தைச் சாப்பிடறது' என்று!

    ReplyDelete


  3. இந்த சாப்பாடு இருக்கே, அதை எந்த ஹோட்டலில் சாப்பிட்டாலும் ஒரே ருசியா இருக்கறமாதிரி பீலிங். ஹோட்டல் பெயர் சொல்லாமல் வாங்கி வந்து சாப்பிட்டால் எந்த ஹோட்டல் என்றே சொல்ல முடியாது. எல்லாவற்றிலும் வெங்காயம். சாம்பார் கூட தித்திப்பாய்... ஒரே மாதிரி ருசி...

    ReplyDelete
  4. அ ஆங்...மறந்துட்டேனே... உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும், சக நண்பர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  5. கிட்டத்தட்ட எங்கள் அப்பாவும் இப்படித்தான். எங்களை கூட்டிக் கொண்டு போகமாட்டார். அவரே மசால் தோசை ரத்னா கபேயிலிருந்து வாங்கி வருவார். அவர் வருவதற்கும் நாங்கள் படும் பாடு.....!

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  6. அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்..

    ReplyDelete
  7. சோலா படூரா என்று சித்தானை சைசில் ஒரு பூரி தருவார்கள்.. சின்ன வயசில் அது தான் ஹோட்டல் போவதற்கு பெரிய மோடிவேசன். அதுவும் சென்னையில் அந்தப் பெயரைச் சொல்லிக் கேட்பதற்கு வெட்கப்பட்ட தமிழர்களை நினைத்தால்... சிரிப்பு வருகிறது. எக்மோர் ரயில்வே ஸ்டேஷன் எதிரே ஒரு பிரபல ரெஸ்டாரென்ட் அந்த நாளில்.. பெயர் மறந்து விட்டது.. அங்கே சாப்பிட்டால் சுகமாக இருக்கும். வெளியே போய் சாப்பிட நினைத்தது இரண்டே ஐட்டம் தான் - ஒன்று பரோட்டா சாப்ஸ், இன்னொன்று சோலா படூரா.

    புத்தாண்டில் நலமும் வளமும் உங்களைச் சுற்றட்டும்.

    ReplyDelete
  8. வீட்டில் எல்லோரும் நலமா?
    உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும், இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. அப்பொழுதெல்லாம் நமக்கு அத்தி பூத்தாற் போல் தான் ஹோட்டல் விசிட். அதை அழகாய் உணர வைத்தது உங்கள் பதிவு. நான் பல வருடங்கள் சின்னவளாகி விட்டேன் படிக்கும் போது.

    ReplyDelete
  10. Geetha amma, Happy new year wishes to you :)

    ReplyDelete
  11. Wiah you & the Family a Very Happy new Year
    Shobha

    ReplyDelete
  12. நன்றி டிடி. உங்களுக்கும் எங்கள் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

    ReplyDelete
  13. வாங்க ஶ்ரீராம், வடக்காவணி மூலவீதியில் ஸுமுஹ விலாஸ்னு ஒரு ஹோட்டல் இருந்தது. அந்த ஹோட்டல் சாம்பார் மாதிரி இன்னி வரை எங்கேயும் சாப்பிட்டதில்லை. :)

    ReplyDelete
  14. ஆமாம், இப்போல்லாம் ஹோட்டல்லே சாப்பிடறதிலே உள்ள ஆசையோ, ஆர்வமோ, ருசியோ முன்னை மாதிரி இல்லை தான். :( வாங்கி வந்து எல்லாம் சாப்பிடறதில்லை. அடிக்கடி வெளியே போறச்சே வேறே வழியில்லாமல் சில சமயம் ஏதானும் ஒரு வேளையாவது சாப்பிட்டாகணும். :)))) மத்தபடி என்னைப் பொறுத்தவரை பழங்கள்,ஜூஸ்னு ஓடிடும்.

    ReplyDelete
  15. நன்றி ஶ்ரீராம், உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள். உங்களுக்குப் பிடிச்ச ஐடமாக, பிடிச்ச மாதிரி உங்கள் பாஸ் செய்து கொடுக்கவும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  16. வாங்க ரஞ்சனி, வாங்கறதுனா அப்போல்லாம் ஒரு மாமா வீட்டிலேயே இட்லி போடுவார். அந்த இட்லியை அவர் வீட்டிலேயும் போய் வாங்கிக்கலாம். காலம்பர எட்டு மணி ஆச்சுன்னா தோளிலே ஒரு தூக்கிலே இட்லியும், இன்னொரு தோளிலே, சட்னி, மிளகாய்ப் பொடியோடும் வீடுகளுக்கு வந்து கேட்பார். எனக்குத் தெரிஞ்சு ஒரணாவுக்கு இரண்டு இட்லினு கொடுத்தவர் என் கல்யாணம் ஆனப்போ என் ரங்க்ஸுக்கு அவர் கிட்டே வாங்கறச்சே ஒரு இட்லி 15 காசில் இருந்து 25 காசுக்குள் இருந்தது. இட்லினா அதான் இட்லி. மல்லிகைப்பூ இட்லி எல்லாம் சும்ம்ம்ம்ம்ம்ம்மா! :))))

    ReplyDelete
  17. நன்றி ஆதி. உங்களூக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

    ReplyDelete
  18. வாங்க அப்பாதுரை, சோளே பட்டுரா! ஹிஹிஹி, இதெல்லாம் கடந்த முப்பது வருடங்களில் வந்தது. முன்னெல்லாம் பூரி, கிழங்கு வாங்கினாலே பெரிய அதிசயம்! :)))) சோளே, பட்டுரா எல்லாம் எண்பதுகளில் வர ஆரம்பிச்சது. ஆனால் இங்கே கொடுக்கும் பட்டுரா மாதிரி எல்லாம் பஞ்சாபில் பண்ண மாட்டாங்க. இத்தனை பெரிசாக எல்லாம் இருக்காது. :))) நான் சோளே, பட்டுரா கடைகளில் எல்லாம் வாங்கிச் சாப்பிடுவது இல்லை; சாப்பிட விடுவதும் இல்லை. வீட்டிலேயே பண்ணிடுவேன்.

    ReplyDelete
  19. இந்த முறை தான் பையருக்காக பட்டுரா பண்ண மைதாவும் சனாவும் வாங்கி வைச்சு அப்படியே இருக்கு! :(

    ReplyDelete
  20. வாங்க கோமதி அரசு, வீட்டில் அனைவரும் நலம். உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

    ReplyDelete
  21. வாங்க ராஜலக்ஷ்மி, சின்ன வயசு ஞாபகம் எல்லாம் வரணும்னு தானே எழுதினேன். :))))

    ReplyDelete
  22. //Vasudevan Tirumurti has left a new comment on your post "வருக, வருக புத்தாண்டே வருக! எல்லாரும் சாப்பிட்டதை...":

    deja vu! முன்னேயே படிச்ச மாதிரி இருக்கு!//

    வா.தி. உங்க கமென்டை பப்ளிஷ் பண்ணினேன். ஆனாலும் என்னமோ சதி வேலை நடந்திருக்கு போல! இந்த கமென்ட் no longer exists னு வருது. ஹிஹிஹிஹி!

    மீ கமிங் டு ஃபார்ம்! :)))))

    ReplyDelete
  23. வா.தி. இது ஏற்கெனவே படிச்சிருப்பீங்க தான். உங்களுக்கு நினைவில் இருக்கா, எந்த அளவுக்கு என்னோட பதிவுகளை நினைவு வைச்சிருக்கீங்கனு ஒரு சின்ன பரிக்ஷை வைச்சேன். பாஸாயிட்டீங்க! :)))))))) ஹிஹிஹிஹி!

    ReplyDelete
  24. வாங்க தன்யா, நன்றி, உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.

    ReplyDelete
  25. வாங்க ஷோபா, இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

    ReplyDelete
  26. இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!

    ReplyDelete
  27. புத்தாண்டு வாழ்த்துக்கள்.
    நாக்கு ஊற வைத்த பதிவிற்கு நன்றி

    ReplyDelete
  28. அருமையான பதிவு. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  29. இனிய நினைவுகள்.....

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் மனமார்ந்த ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  30. ஓஹோ.. நான் ஏதோ சோழர் பாண்டியர்னு..

    ReplyDelete
  31. வாங்க மாதேவி, நன்றிம்மா.

    ReplyDelete
  32. கடைசி பெஞ்ச், நாக்கிலே ஜலம் ஊறத்தானே இந்தப் பதிவே! :)

    ReplyDelete
  33. வாங்க வைகோ சார், நன்றி.

    ReplyDelete
  34. வாங்க வெங்கட், எங்கே இருக்கீங்க? டெல்லி? ஶ்ரீரங்கம்? :)))

    ReplyDelete
  35. @அப்பாதுரை, சோழன், பாண்டியன்லாம் இல்லை. :P :P :P என்னோட சமையல் பதிவுகளிலே எழுதின நினைவு இருக்கு. தேடிப் பார்க்கிறேன். :))))

    ReplyDelete

  36. சோளே பட்டுரா பற்றி என் பூவையின் எண்ணங்கள் பதிவில் எழுதி இருந்தேன். உங்கள் கமெண்டும் இருந்த நினைவு.........!!!

    ReplyDelete