Thursday, January 16, 2014

கேள்வி கேட்கும் முன்னர் ஒரு சின்ன "கலகலப்பான" இடைவேளை!

அப்பாடா, ஒரு வழியா கடைசியிலே ஒரு படம் புதுசு அதுவும் 2012 ஆம் ஆண்டிலேயே வந்ததைப் பார்த்துட்டேனே.  பொங்கல் அன்னிக்கு மதியம் தொலைக்காட்சியிலே (எந்தத்தொலைக்காட்சி??) இந்தப் படம் ஓடிட்டு இருந்தது.  வழக்கம்போல் படம் ஆரம்பம் பார்க்கலை. ஆனாலும் ஆரம்பிச்சு ரொம்ப நேரம் ஆகலைனு நினைக்கிறேன்.  படம் பெயர் கலகலப்பு.  படம் முழுக்கவே கலகலப்புத் தான். படத்தில் ஹெல்த் இன்ஸ்பெக்டராக வரும் அஞ்சலி, (இவரை எங்கேயும், எப்போதும் படம் பார்த்ததால் அடையாளம் தெரிஞ்சது), சந்தானம், மனோபாலா, ராகவன் ஆகியோரைத் தவிர மத்தவங்களை யார்னு தெரியலை.  தாத்தாவின் பேத்தியாக நடிக்கும் பெண்ணுக்குப் பாவாடை, சட்டை மட்டும் போதுமா? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், தாவணி அல்லது சல்வார், குர்த்தா போட்டிருக்கலாம்.  இதான் கவர்ச்சினு விட்டுட்டாங்க போல. தொலையட்டும்.  அஞ்சலி ஒரே மாதிரியான நடிப்பை இந்தப் படத்திலும் காட்டுகிறார் அல்லது அவங்களுக்கு இப்படி ஒரு முத்திரை குத்திட்டாங்களானு தெரியலை.

'எங்கேயும் எப்போதும்' படத்திலே நடிச்ச மாதிரி அதே விறைப்பு, காதலனை ஓட ஓட விரட்டுவதுனு அஞ்சலி இந்தப் படத்திலும் நடிச்சு இருக்கார்.  மத்தபடி அவருக்கு வேலை ஏதும் இல்லை.  கதாநாயகனாக நடிக்கும் நபர் இயல்பாகவே அசமஞ்சமாத் தான் இருப்பார் போல!  அவர் தம்பியாக நடிக்கும் குண்டு நடிகர் (அடிக்கடி பார்த்திருந்தாலும் பேர் தெரியலை)  ஜெயில்லேருந்து வராராமே! எதுக்கு ஜெயிலுக்குப் போனார்??  அவரோட அண்ணன்,  சீனுவாக நடிக்கும் நடிகர் பாரம்பரிய ஓட்டல் ஒண்ணை மிகுந்த நஷ்டத்தோடு நடத்தி வரார்.  அந்த ஓட்டலை அது இருக்கும் முக்கியமான கடைத்தெரு இடத்துக்காக ஒரு தொழிலதிபர் குறி வைக்கிறார்.  என்ன கஷ்டம்னாலும் விற்க மாட்டேன்னு அடம்பிடிக்கும் சீனு, அவர் தம்பியான ஜெயில் ரிடர்ன் குண்டர், குண்டரைக் காதலிக்கும் தாத்தாவின் பேத்தி, ஒரு வழியாய் விறைப்பைக் குறைத்துக் கொண்டு சீனுவைக் காதலிக்கும் ஹெல்த் இன்ஸ்பெக்டர் ஆன அஞ்சலி இவங்க ஒருத்தருக்கொருத்தர் கல்யாணம் செய்துண்டாங்களானு தான் படமே.

கதையா?? அதெல்லாம் பெரிசா ஒண்ணும் இல்லை.  வெறும் சிரிப்புத் தான்.  நல்லவேளையா இரட்டை அர்த்த வசனங்களை சந்தானம் கூடப் பேசலை. அதுக்கு பதிலா நடிகைகளை ஓவராக் கவர்ச்சியாக் காட்டிட்டுத் திருப்தி அடைஞ்சுட்டாங்க போல! அது என்ன காதலி கோவிச்சுண்டா எல்லாருமே டாஸ்மாக்கைத் தேடிப் போறாங்க?? இந்தப் படத்திலேயும் அண்ணனும், தம்பியும் அவரவர் காதலி கோபத்தினால் டாஸ்மாக்கை நாடுகிறார்கள். தேவையில்லாமல் ஒரு பாட்டும், நடனமும்.  தலை எழுத்து!  இந்த குண்டுத் தம்பி செய்யும் ஒவ்வொண்ணும் காமெடியாப் போகுதுன்னா, அசமஞ்சம் அண்ணனும் லஞ்சம் கொடுக்கப் போய் அடி வாங்கிட்டு வரார்.  இடுப்புப் பிடித்துக் கொண்டு அவர் படும் அவஸ்தை ஜூப்பரு!  அட, இதைச் சொல்லலையா?  ஹோட்டலை நல்லா நடத்தத் தாத்தாவின் ஆலோசனையின் பெயரில் இயற்கை உணவுத் திட்டத்துக்கு மாற அது சூடு பிடிக்கிறது.

படத்தில் ரொம்ப நல்லா நடிச்சிருப்பது அந்த நாய் தான். அழகா வைர பாக்கெட்டை,    இதுக்குள்ளே வில்லன் ஒருத்தன் (காமெடியாகவா? தேவையா இந்த வில்லன்?) அசட்டு வில்லன், அசட்டுத் தனமாக ஐந்து கோடிக்கு மேல் மதிப்புள்ள வைரத்தை அடியாள் கிட்டேக் கொடுக்க அது எப்படியோ நம்ம அசமஞ்சம் ஹீரோவிடம் வர, காமெடி சைட் ட்ராக்கில் கொஞ்ச நேரம் பயணிக்கிறது.  இதுக்குள்ளே ஊருக்குப் போன அஞ்சலிக்கு முறை மாப்பிள்ளை சந்தானத்தோட கல்யாணம் நிச்சயம் ஆகக் காதலனோடு ஓடிப் போறதுக்காக அவனை ஊருக்கு வரவழைக்கிறார் அஞ்சலி.  சந்தானத்தை வாத்தியார்னு சொல்ல, வாத்தியார்னா ஸ்கூல் வாத்தியாரா?? சந்தானத்தை ஸ்கூல் வாத்தியார்னு நினைச்சுப் போனால் சிலம்பாட்ட வாத்தியார்னு தெரிஞ்சதும், அசமஞ்சம் அதிர்ச்சி அடைகிறார்.

பாதிக்கதையில் சந்தானம் வந்தாலும் எடுபடலை. அந்த குண்டுத் தம்பி நடிகர் தான் வெளுத்துக் கட்டுறார்.  ஆனாலும் குண்டுத் தம்பி சீட்டாட்டத்தில் தோற்போம்னு தெரிஞ்சே தோத்துட்டு ஹோட்டலை அடமானம் வைச்சு அண்ணனுக்கு துரோகம் பண்ணுவது கொஞ்சம் உருக்கிங்ஸ் ஆஃப் இந்தியா. முட்டாள்த் தனமாக ஹோட்டலை வைத்துச் சீட்டாடித் தோற்கிறார்.  ஆனால் வைரத்தைக் கொடுத்துட்டு அண்ணன் அதை மீட்டுவிடுகிறார் என்றாலும் மறுபடியும் குண்டுத் தம்பியின் காதலியைக் காப்பாற்ற வேண்டி இன்னொரு பத்து வைரத்தையும் கொடுத்துட்டு, கடைசியில் அமைச்சர் ஷண்முக சுந்தரத்தைக்கைது செய்யப் போய் அங்கே நடக்கும் காமெடியைப் பல தரம் பார்த்தாச்சு. அதுக்கப்புறமா ஹோட்டலில் மறுபடி கிளைமாக்ஸ். கிளைமாக்ஸ் குழப்பம், கலாட்டா அவ்வளவு நேரம் நீடிக்கணுமா என்ன? வைரம் அங்கே இங்கேனு மாறிக் கடைசியில் முற்றத்தின் கம்பிகளில் மாட்டிக்கொள்ள, அதை எடுக்கப்போட்டா போட்டி.  இங்கேயும் சந்தானம் எப்படியோ வரார்.  சந்தானம் பெருமையா விட்டுக் கொடுக்கறதாச் சொல்றார். அப்புறமாக் கொஞ்ச நேரம் அவரும் காமெடி பண்ணறார். வைரம் அங்கே இங்கே போய்க் கடைசியில் எப்போதும் போல் தாமதமாகப் போலீஸார் வராங்க.  வைரத்தைக் கைப்பற்றி விடுகிறார்கள். எல்லாம் சுபம்.

எங்கேப்பா அந்த ஹெர்குலின்??? வாங்க, ஓடி வாங்க, அறிவுஜீவித்தனம் இல்லாமல் இந்தப் படம் பரவாயில்லைனு சொல்லி இருக்கேனே! :)))))

22 comments:

  1. நோ லாஜிக்.. பார்த்து சிரிக்க மட்டுமே

    ReplyDelete
  2. அடடா...! இப்போது தான் பார்த்தீர்களா...? ரசனையான விமர்சனம் அம்மா...

    ReplyDelete
  3. இடைவெளி சரி! ஆனால் ஏன் கேள்விகள் என்ற கேள்வி மனத்தைக் குடைகிறதே.... சும்மா கேட்கிறா மாதிரியும் தெரியவில்லையே? :)))

    அந்த குண்டுத் தம்பி பேரு சிவா. முன்னாள் ரேடியோ ஜாக்கி! மிர்ச்சி சிவா என்று பெயர். படம் ரொம்பச் சுமார். விளக்கெண்ணெய் ஹீரோ பெயர் விமல்!

    ReplyDelete
  4. ஆமாம், எல்கே, சிரிப்பு என்னமோ வந்தது தான்! :))))

    ReplyDelete
  5. வாங்க டிடி, நமக்கு இதுவே சீக்கிரம். 2012 ஆம் ஆண்டு தான் வந்ததாமே! என் மைத்துனர் பையர் சொன்னார். :)))) அவர் அன்னிக்கு ஜில்லா பார்க்கப்போயிருந்தார். நாங்க இங்கே இதைப் பார்த்தோம். :)))))

    ReplyDelete
  6. வாங்க ஶ்ரீராம், குடையட்டும், குடையட்டும், நல்லாக் குடையட்டும்.

    குண்டுத்தம்பியோட ஒரிஜினல் பேரு சிவாவா? படம் நல்லா இருந்ததுனு சொல்லலை. நல்லாச் சிரிக்க முடிஞ்சது. அம்புடுதேன். நம்ம ஹெர்குலின் கோவிச்சுக்கப் போறாங்களேனு நல்லா இருக்குனு சொல்லிட்டேன். :)))))

    ReplyDelete
  7. விமல்னு ஒரு ஹீரோவா? இப்போவும் நடிக்கிறாரா? நேத்திக்கு நம்ம ரங்க்ஸ் யாரையோ சிவகார்த்திக் னு காட்டினார். அவர் மூஞ்சியும் இந்த விமல் மூஞ்சியும் ஒண்ணா இருக்காப்போல் இருக்கே! ரெண்டு பேரும் வேறே வேறேயா? :)))))

    ReplyDelete
  8. ரெண்டு பெரும் வேற வேற.... சி.கா கூட விஜய் டீவில வேலை பார்த்தவர்தான்.

    ReplyDelete
  9. "ரெண்டு பேரும்" என்று திருத்திப் படிக்கவும். நோ இம்போசிஷன்! (எழுத மாட்டேன்) விமல் இப்பவும் நடிக்கறாராவா? இதுவே போன வருஷம் வந்த படம்தானே... என்ன ரிடையரா ஆகியிருக்கப் போறார்? :)))

    ReplyDelete
  10. படம் பேர் சொன்னா தவிர்க்க வசதியாக இருக்கும்.

    ReplyDelete
  11. @அப்பாதுரை, இது ஆனாலும் அநியாயம். படம் பேரு தான் முதல் பாராவிலேயே வந்திருக்கே! இருங்க, கொட்டை எழுத்திலே போட்டுடறேன்.:)))

    ReplyDelete
  12. ஸ்ரீராம், விஜய் டிவியிலா?? சரிதான். எங்கே பார்க்கிறேன். ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் அதுவும் சாயங்காலம் மட்டும் தொலைக்காட்சி பார்த்தால் பெரிய விஷயம்! :)))) விஜய், ஜெயால்லாம் பார்க்கிறதே இல்லை. ஜெயாவில் மார்கழி மஹோத்சவம் மட்டும் போடுவோம். :)))

    ReplyDelete
  13. விமல் நடிச்சு சமீபத்திலே படம் வந்திருக்கா?

    ReplyDelete
  14. எனக்கென்னமோ இப்போ வர நடிக, நடிகையர் முகமெல்லாம் ஒரே மாதிரியாத் தெரியுது! :))))

    ReplyDelete
  15. @அப்பாதுரை, ஹைலைட் பண்ணிட்டேன். :))))

    ReplyDelete
  16. ;) பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  17. கலகலப்பான விமர்சனம்..!

    ReplyDelete
  18. அந்த பயம் இருக்கணும்!! ஏதாவது நல்லதா எழுதணும்னு இந்த மொக்க படத்தையும் நல்ல படம்னு எழுதி இருக்கிங்களே !உங்க டேஸ்ட் என்னன்னு புரிஞ்சுடுத்து.

    ReplyDelete
  19. வாங்க வைகோ சார், நன்றி.
    :)

    ReplyDelete
  20. நன்றி ராஜராஜேஸ்வரி.

    ReplyDelete
  21. வாங்க ஹெர்குலின், இந்த மொக்கைப் படம் நல்லா இருக்குனு எங்கே சொன்னேன்?? பரவாயில்லை ரகம் தான். என்ன சோகத்தைப் பிழியலை! ஏதோ கொஞ்சம் நேரம் சிரிச்சோம், அம்புடுதேன்,

    இந்த மொக்கை விமரிசனத்துக்கு நேத்திக்கு ஹிட் லிஸ்ட் எகிறி இருக்கு! அதுக்கு என்ன சொல்றீங்க! எல்லாம் அஜித் லெட்டர்! :))))

    ReplyDelete
  22. அட நீங்க பார்த்துட்டீங்களா? ரொம்ப ஃபாஸ்ட்!

    நான் இன்னும் பார்க்கலை! :)

    ReplyDelete