Sunday, January 05, 2014

சட்டி சுடாது, தைரியமாப் பாருங்க! :)

மவுன்ட்பேட்டன் குறித்த எங்கள் ப்ளாக் பதிவில் நான் எழுதிய பின்னூட்டத்தில் சீனாச்சட்டியும், இரும்புச் சட்டியும் குறித்துச் சொல்லி இருந்தேன்.  கீழே காண்பது சீனாச்சட்டி.  இது இட்லி வார்க்கவேண்டி வைத்தது.  இதிலும் எண்ணெய் விட்டோ விடாமலோ  வறுக்கலாம். காய்கள் வதக்கலாம். எல்லாம் செய்யலாம். 




இங்கே கீழே பார்ப்பது இரும்புச் சட்டி.  இதிலேயே காது வைத்த சட்டியும் உண்டு.  அதையும் ஒரு நாள் படம் எடுத்துப் போடறேன்.  இப்போவும் அந்த இரும்புச் சட்டியிலும் கீழே காணப்படும் இந்தச் சின்ன இரும்புச் சட்டியிலும் தான் சமையலுக்கு முக்கியமானவைகள் வறுப்பது, கறி வதக்குவது போன்றவை எல்லாம். உடல் நலத்திற்கு நன்மை தரும்.   அதோடு இரும்பு வாணலியில் ஒட்டாமலும் வரும்.



  



18 comments:

  1. இன்றைக்கு(ம்) பயன்படுத்துகிறீர்களா...?

    ReplyDelete
  2. இட்லிப்பானையும்
    இலுப்பச்சட்டியும்
    இரண்டும் காண
    இயற்கையாகவும்
    இதமாகவும் உள்ளது.
    இவன்
    இப்போது
    இன்பம் அடைந்தான்

    ReplyDelete
  3. http://www.2tamil.com/newsmainpics/29z171.jpg

    இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!

    ~ உங்க வாய்க்கு சக்கரை போடணும், இத்தனி பேச்சுரிமை கொடுத்ததுக்கு. கீதா திசை மாத்றாரு. அதை அண்ணாண்டே மேலும் மாத்துறாரு, சுப்பு.

    தாத்தா என்ன தாத்தா? நானும் தாத்தா தான்.

    ஒக்கடி: பார்த்தசாரதியும் மலையப்பனும் ஒண்ணு. அதான் மவுண்ட்டு;

    இரண்டு: மன்னார்குடி ராஜகோபாலன் மாட்டுக்காரன்; குச்சி வச்சுருந்தான். இவரு தேரோட்டி, தப்பா பேடன் வச்சுருக்காரு. அவ்ளவு தான்.

    மூடு: புணர் புளி ரசம் குடிக்கணும் ரசாபாசமா பேசறா? பக்கத்திலெ டாஸ்மேக் இருக்கோ!?

    நாலுகு: சீனாச்சட்டி, இரும்புச் சட்டி படம் போட்டிருக்கேன் என்கிறார். கீதா. நேனு குண்டூர் சட்டி போட்டுட்டேன்.

    அன்புடன்,
    இன்னம்பூரான்

    ReplyDelete
  4. இந்தச் சட்டிகள் எங்கள் வீட்டிலும் இருக்கிறது. நாங்களும் உபயோகிக்கறோம்! ஆனால் புணர், மன்னிக்கவும், புனர்புளி ரசம் எல்லாம் வைத்ததில்லை. உடம்பு சரியில்லாமல் இருந்தபோது பாட்டி புனர்பாகம் செய்து தந்ததுண்டு!

    ReplyDelete
  5. சுவிஸ் வங்கிக் கிளை முகவரிக்கு இரண்டு சட்டிகள் அனுப்பி வையுங்க
    தோழி நானும் பயன்படுத்த ஆவலுடன் உள்ளேன் :))

    ReplyDelete
  6. எங்கள் வீட்டிலும் இருக்கிறது! இரண்டாம் வாணலி!

    ReplyDelete
  7. சீனாச்சட்டியை இன்று கண்டுகொண்டேன்...

    இரும்பு வாணலி நானும் இரண்டு வைத்திருக்கிறேன். தாளிக்க சின்னதும், அப்பளம் பொறிக்க, காய் வதக்க பெரிதும்...:)

    ReplyDelete
  8. எங்கள் வீட்டில் இருந்தது இது போன்ற இரும்பு சட்டிகள், என் மாமியார் அதை இன்னும் பயன்படுத்தி வருகிறார்கள்.
    புனர்புளி ரசம் தெரியாது தெரிந்து கொண்டேன்.
    புளியை, சுட்டு, அல்லது சட்டியில் போட்டு வறுத்து உபயோகபடுத்துவோம் அதற்கு அழகான புனர்புளி என்று பெயர் இருக்கிறது என்று தெரியாது.
    நன்றி.

    ReplyDelete
  9. வாங்க டிடி, இப்போவும், இன்னிக்கும் பயன்பாட்டிலே தான் இருக்கு. :))))

    ReplyDelete
  10. வாங்க வைகோ சார், நன்றி. இரும்பு தோசைக்கல்லில் தான் தோசை, அடை, கரைச்ச தோசை, சப்பாத்திக்குச் சுட்டு எடுக்கனு தனியா இரும்புக் கல் என்று வைச்சிருக்கேன். தோசை வார்க்கும் கல்லில் சப்பாத்தியைப் போட மாட்டேன். :))))

    ReplyDelete
  11. வாங்க இ சார், ஹிஹிஹி, குண்டுச் சட்டியையும் பார்த்துட்டேன், நன்றி, நன்றி.

    ReplyDelete
  12. வாங்க ஶ்ரீராம், புளியைச் சுட்டே எப்போதும் சமைக்கணும்னு சித்த மருத்துவர்கள் சொல்லுவாங்க. :))) ஆனால் அதெல்லாம் பண்ணறதில்லை தான். மிளகு குழம்பு, மாங்கொட்டைக் குழம்பு, கருகப்பிலைக்குழம்புனு வைக்கையில் புளியை இரும்புச் சட்டியில் போட்டுப் பிரட்டிப்பேன். :))))

    ReplyDelete
  13. அம்பாளடியாள், ஸ்விஸ் வங்கிக்கா?? சரியாப் போச்சு போங்க, அங்கேருந்து இல்ல இந்தியாவுக்கு வரணும்? :))))

    ReplyDelete
  14. வாங்க வெங்கட், பழைய நாளைய வாணலி என்றால் நல்ல கனமாக இருக்கும். இப்போதெல்லாம் அவ்வளவு கனமாக வருவதில்லை. :( அதைத் தூக்குவதற்கும் இப்போது யாராலும் முடியவில்லை.

    எங்க வீட்டுக்கு வந்த ஒரு சமையல் செய்யும் பெண்மணியிடம் சீனாச்சட்டியைக் காட்டி அதில் வறுத்துக்கோங்கனு சொன்னால் அந்த அம்மா அதைத் தொட்டுப் பார்த்துட்டு அசைக்கக் கூடத் தன்னால் முடியாதுனு சொல்லிட்டு கல்கத்தா அலுமினியம் வாணலியில் தான் எல்லாம் செய்தாங்க! :))))

    ReplyDelete
  15. வாங்க ஆதி, சீனாச்சட்டி பெரும்பாலும் மதுரையில் தான் நானும் பார்த்திருக்கேன். என் மாமியாரிடமும் ஒண்ணோ, ரெண்டோ இருந்ததுனு நினைக்கிறேன். :) இரும்பு வாணலி ஒண்ணு கட்டாயம் தேவை.

    ReplyDelete
  16. தாளிக்கனு இரும்புக் கரண்டி கூட வைச்சிருக்கேன். குழந்தைங்க பயந்துட்டா அதில் தான் கொழுமோர் காய்ச்சுவது. புண்ணுக்கு மாவு கிளறிக் கட்டுவதுனு எல்லாம் ஒரு காலத்தில் செய்திருக்கோம். :)

    ReplyDelete
  17. வாங்க கோமதி அரசு, இரும்புச் சட்டியில் சமைப்பது உடல் நலனுக்கு நன்மை தரும். :)

    ReplyDelete
  18. மவுண்ட்பேட்டனும் இருப்புச்சட்டியும்...

    கேட்டாலே கிறுகிறுப்பா வருகிறது.

    எதில செய்தாலும் சரி. சாப்பிடத்தான் எங்களுக்குத் தெரியும்

    இவண்
    18வது வட்ட சாப்பாட்டு இராமன்கள் சங்கம்

    ReplyDelete