Monday, January 06, 2014

கிருஷ்ணா வந்தாச்சே! நிலா வந்தாச்சே!



நேத்திக்கு சன் தொலைக்காட்சியில் தெய்வத்திருமகள் படம் போட்டிருந்தாங்க.  அந்தப் படத்தின் முக்கியமான மறுபாதியை ஏற்கெனவே ஹிந்தியில் பார்த்துட்டேன்.  சுஷ்மிதாசென் தான் அதில் வக்கீலா வருவாங்க. படம் பெயர் மறந்துட்டேன். ஆனாலும் ஹிந்தி தான் மூலம் னு நினைச்சுட்டு இருந்தா, க்ர்ர்ர்ர்ர்ர்ர் ஆங்கில மூலம்.  I am Sam  என்ற படத்தின் கதைக்கருவை மட்டும் எடுத்துக் கொண்டு ஹிந்தியிலும், தமிழிலும் இந்திய ரசிகர்களுக்கு ஏற்றாற்போல் மாற்றி இருக்காங்க.  ஆங்கிலத்தில் போட்டாலும் பார்க்கணும். பின்னே? மும்மொழித் திட்டத்தை ஆதரிக்க வேணாம்?


இப்போ தெய்வத் திருமகளுக்கு வருவோம்.  மனநிலை சரியில்லாத விக்ரமுக்கும், ஒரு பணக்கார முதலாளியின் முதல் பெண்ணுக்கும் பிறந்த குழந்தை நிலா.  பணக்காரப் பெண் எந்தச் சூழ்நிலையில் விக்ரமைத் திருமணம் செய்து கொண்டாள்? ஹிஹிஹி, நான் படம் பார்க்கையிலே விக்ரமுக்குக் குழந்தை பிறந்து ஆஸ்பத்திரிக்குப் பார்க்க வரார்.  அதெல்லாம் வழி நல்லா நினைப்பிலே இருக்கு.  போக்குவரத்து விதிகளைச் சுத்தமாக் கடைப்பிடிக்கிறார்.  ஆனால் குழந்தை அழுதால் பால் கொடுக்கணும்னு தெரியலை.  அதோடு வக்கீல் பாஷ்யமாக வரும் நாசரின் குழந்தைக்கு ஜுரம் வந்தப்போ என்ன மருந்து கொடுக்கணும்னு தெரிஞ்சு, டாக்டர் ப்ரிஸ்க்ரிப்ஷன் இல்லாமலேயே இவர் தன்னை அடைத்து வைத்த பாஷ்யத்தின் வீட்டிலிருந்து தப்பிச்சுப் போய் அந்த மருந்தை வாங்கி வந்து கொடுக்கிறாராம்.  டாக்டருக்கே ஆச்சரியமா இருக்காம்.  எனக்கும்!

எங்க டாக்டர் மட்டும் இருந்திருந்தா அந்த இடத்திலேயே எங்களை உதைச்சிருப்பார். ஹூம்! சினிமா டாக்டருக்குத் தெரியலை! :P தொலையட்டும்.  நிலாவாக நடிக்கும் குட்டிப் பொண்ணு அசப்பில் எங்க அப்பு போல இருந்தாள்.  படு சுட்டி!  கைகளாலேயே பேசிக் கொள்வதும், அப்பாவை நினைத்துக் கொண்டு அழுவதும், எல்லாம் படு இயல்பு.  ஊட்டியும், அவலாஞ்சியும் அழகாகப்படமாக்கப் பட்டிருப்பதற்கு ஒளிப்பதிவாளருக்கு ஒரு சபாஷ்!  ஹிஹிஹி, யாருக்கு வேணும் இரண்டு வருஷம் கழிச்சுனு ஒளிப்பதிவாளர் சொல்லுறது காதிலே விழுந்தது.  அதே போல் இசையும் ஓகே.

விக்ரம் ரொம்பக் கடுமையான முயற்சிகள் செய்து தன்னை மனநிலை பிறழ்ந்தவனாகக் காட்டிக் கொள்கிறார். என்றாலும் கடைசியில் பாஷ்யம் பயமுறுத்தலைக் கேட்டுக் கொண்டு, குழந்தையைத் திரும்பத் தன் மைத்துனியிடமே ஒப்படைப்பது கொஞ்சம் இல்லை, ரொம்பவே ஓவர்.  இந்த அளவுக்கு யோசிக்கத் தெரிஞ்சவரை மனநிலை பிறழ்ந்தவர்னு எப்படி ஒத்துக்க முடியும்?  கஷ்டகாலம்! அதோடு இல்லாமல் அவர் கேஸை எடுத்து நடத்தும் அநுஷ்கா(?) படத்தில் அநுராதாவாக வரும் வக்கீலம்மாவுக்கு விக்ரம் இடிக்குப் பயந்து கட்டிக் கொண்டதுமே காதல் பிறக்கிறது. தலை எழுத்து தான் போங்க!  நல்லவேளையாக இரண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிறதா எல்லாம் காட்டலை;  பிழைச்சோம்.  அதோட இடிக்குப் பயப்படும் விக்ரமைக் கொட்டும் மழையில் அநுஷ்கா அழைச்சுட்டு வருவதும், ஜன்னல் வழியாக் கைகளால் சைகை காட்டும் நிலாவும் ரொம்பவே ஓவரா இருந்தது.  அந்த மழையில் ஜன்னல் அதுவும் அந்தக் குறிப்பிட்ட ஜன்னல் வழியா நிலாவின் கைகள் தெரியும்னு விக்ரமுக்கு எப்படித் தெரியும்?  மழை சத்தத்தையும் மீறிக்கொண்டு, இடியையும் மீறிக்கொண்டு அவரோட விசில் சப்தம் நிலாவுக்குக் கேட்குதாமே!  கேட்குமா என்ன?

இப்படி நம்ப முடியாத சினிமாத்தனமான காட்சிகள் நிறையவே இருந்தாலும் ஓகே சொல்லலாம். ஆனால் இப்போ என்னோட தலையாய சந்தேகம்! விராட் நடிக்கும்  விளம்பரத்தில் வரும் அநுஷ்காவும், இந்தப் படத்தில் வரும் அநுஷ்காவும் ஒருத்தரே தானா? இல்லை அவங்க வேறே, இவங்க வேறேயா?  ஆங்கிலத்தில் வக்கீலின் குடும்பச் சிக்கல்கள் சாமால் தீருவது போலக் காட்டி இருக்காங்களா!  இதிலே அநுஷ்காவும் ஒய்.ஜி.யும் ஒருத்தரை ஒருத்தர் முறைச்சுட்டு இருந்தவங்க விக்ரமால் மனம் மாறி ஒருத்தர் மேலே இன்னொருத்தர் பாசத்தைப் பொழிய ஆரம்பிச்சுடறாங்க.

என்றாலும் கோர்ட் சீனில் சுற்றிலும் இருப்பவர்களை எல்லாம் மறந்து அந்தக் குழந்தை நிலாவும், விக்ரமும் கைகளாலேயே பேசிக் கொள்வதும்,  விக்ரம் குழந்தை தன்னை விட்டுட்டுப் போய்விட்டாள்னு கோவிப்பதும், குழந்தை சமாதானம் செய்வதும் கண்ணையும், மனதையும் நிறைத்த காட்சி.  போனால் போகுதுனு தொலைக்காட்சியிலே போடறச்சே பார்த்து வைக்கலாம். ஆனால் ஹவுஸ்ஃபுல்லாக ஓடியதுனு  கேள்விப் பட்டேன். நிஜம்ம்ம்ம்ம்மாவா?

அதோடயா?  இந்தப் படத்தை ஆறரைக்கு ஆரம்பிச்சாங்களா?  இதைப்பார்த்து முடிக்கிறதுக்காகவே என்னோட ஒன்பது மணித் தூக்கத்தைத் தியாகம் செய்துட்டுப் படம் முடியறவரைக்கும் முழிச்சுட்டு இருந்தேன்னா பாருங்களேன்!  பத்தேகால் ஆச்சு படம் முடிய : (ஒன்றரை மணி நேரம் தான் படம், பாக்கி நேரம் விளம்பரம்! :(  சகிப்புத் தன்மை கொஞ்சம் அதிகமாவே இருந்திருக்கு!

24 comments:

  1. இப்படி எல்லாம் படம் பார்க்கணுமா? குஷ்டம்!

    ReplyDelete
  2. அட படம் பாக்கறதுக்கு தூக்கத்தினை தியாகம் செய்தீர்களா? நல்லது!

    நான் இந்தப் படம் பார்க்கலை! கடைசியா படம் பார்த்து ரொம்ப மாசம் ஆச்சு!

    ReplyDelete
  3. பத்தேகால் நடுநிசியா...? (!)

    ReplyDelete
  4. வாங்க இ.கொ. அதென்ன குஷ்டம்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!

    ReplyDelete
  5. வாங்க வெங்கட், திடீர்னு ஒரு தன்னிரக்கம் வரும். படமே பார்க்காமல் இருக்கோமேனு. உடனே என்ன படம் தொலைக்காட்சியில் வருதுனு ஆராய்ச்சி நடத்திட்டுப் பார்க்க ஆரம்பிப்பேன். ஆனா ஒண்ணு ஒரு படத்தையும் முழுசாப் பார்த்ததில்லை. ஒண்ணு பாதிப்படம் ஆரம்பிக்கிறச்சே பார்க்க ஆரம்பிப்பேன். இல்லைனா பாதிப்படம் பார்த்துட்டு அணைச்சுடுவேன். :))))அநேகமா பாதிப்படத்திலே அணைச்சால் ரொம்ப உருக்கிங்க்ஸான படமா இருக்கும். :)))) அதெல்லாம் பார்க்க சிப்பு, சிப்பா வரும். :))))

    ReplyDelete
  6. ஹிஹிஹி டிடி, நடு நிசியே தான். சாதாரணமா எட்டரைக்குப் படுக்கப் போயிடுவேன். காலங்கார்த்தாலே மூணு மணிக்கு எழுந்து குடைய ஆரம்பிக்கிறதாலே இப்போ நேரத்தை மாத்தி ஒன்பது ஆக்கி இருக்கேன். இப்போ நாலு, நாலரைக்குள்ளாக விழிப்பு வரும். கொஞ்ச நேரம் காலைத் தூக்கத்தை அனுபவிச்சுட்டு நாலேமுக்கால் ஐந்துக்குள்ளாக எழுந்துப்பேன். :))))

    பத்தேகால் என்பது நட்டநடு நிசியாச்சே. :))))

    ReplyDelete
  7. பாவம் அந்த டைரக்டர்.....
    உங்களின் இத்தனைக் கேள்விகளுக்கு என்ன பதில் சொல்வார் அவர். பேசாமல் படமே எடுக்க வேண்டாம் என்று அவர் முடிவு எடுத்தாலும் ஆச்சர்யப் படுவதற்கில்லை.

    ReplyDelete
  8. ஏற்கனவே சன் டீவியில் இரண்டு மூன்று முறை போட்டுட்டாங்க... நான் முதன் முறை பார்த்ததோடு சரி...

    சில விஷயங்களை நம்ப முடியலை..ஒத்துக் கொள்ளவும் முடியலை...:))

    ReplyDelete
  9. வாங்க ராஜலக்ஷ்மி, இவ்வளவு சீக்கிரமா நான் பார்த்துட்டு எழுதின இந்த விமரிசனத்தைப் படிச்சப்புறமும் அந்த டைரக்டருக்கு சினிமா எடுக்க தைரியம் வரும்????

    அது!!!!!!!!!!!!!! அந்த பயம் இருக்கணுமில்ல! :))))

    ReplyDelete
  10. வாங்க ஆதி, காதுலே பூ சுத்தறதுனு முடிவு செய்துட்டாங்க. :))) எத்தனை முழமானால் என்ன! :)))))

    ReplyDelete
  11. முழம் முழமா காதுல பூ சுத்தி இருப்பாங்க...! எங்கள் ப்ளாக் விமர்சனம் படிச்சுருக்கீங்களோ!

    ReplyDelete
  12. வாங்க ஶ்ரீராம், படிச்சதில்லை, சுட்டி கொடுங்க, படிக்கலாம். :))))

    ReplyDelete
  13. http://engalblog.blogspot.in/2011/08/blog-post_09.html

    ReplyDelete
  14. பாவம். விக்ரமுக்கு நல்ல படங்கள் வாய்க்கவில்லை.

    ReplyDelete
  15. உங்களுக்கு எந்த படம் தான் பிடிக்கும்? எல்லா படமும் சுமார் தான்னு ஒரு அறிவு ஜீவித்தனமான விமர்சனம் எழுதறீங்க. நீங்க படம் பாக்கறது இல்லைங்கறது பெருமை தான்.
    உங்க ப்ளாக் போஸ்டுக்கு கமெண்ட் வரலைன்னா, மொக்கை போஸ்டுக்கு எல்லாம் கமெண்ட் வர்றதுன்னு பொலம்பரீங்கல்ல, அத கொஞ்சம் நெனச்சு பாருங்க.

    நீங்க பேசாம ஜெமினி கணேசன் படத்துக்கு விமர்சனம் எழுதுங்க. உங்க வயசுக்கு அதுதான் உங்களுக்கு பிடிக்கும். தப்பா நினைச்சுக்காதீங்க, உங்கள கஷ்டபடுத்தனும்னு சொல்லல. கொஞ்சம் ந்யுட்ரலா எழுதுங்க. நன்றி.

    ReplyDelete
  16. உங்களுக்கு எந்த படம் தான் பிடிக்கும்? எல்லா படமும் சுமார் தான்னு ஒரு அறிவு ஜீவித்தனமான விமர்சனம் எழுதறீங்க. நீங்க படம் பாக்கறது இல்லைங்கறது பெருமை தான்.
    உங்க ப்ளாக் போஸ்டுக்கு கமெண்ட் வரலைன்னா, மொக்கை போஸ்டுக்கு எல்லாம் கமெண்ட் வர்றதுன்னு பொலம்பரீங்கல்ல, அத கொஞ்சம் நெனச்சு பாருங்க.

    நீங்க பேசாம ஜெமினி கணேசன் படத்துக்கு விமர்சனம் எழுதுங்க. உங்க வயசுக்கு அதுதான் உங்களுக்கு பிடிக்கும். தப்பா நினைச்சுக்காதீங்க, உங்கள கஷ்டபடுத்தனும்னு சொல்லல. கொஞ்சம் ந்யுட்ரலா எழுதுங்க. நன்றி.

    ReplyDelete
  17. படிச்சாச்சு ஶ்ரீராம். :))))

    ReplyDelete
  18. வாங்க கடைசி பெஞ்ச்! கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  19. நன்றி வைகோ சார்.

    ReplyDelete
  20. ஹெர்குலின், முதல் வரவுக்கு நன்றி. படங்கள் பார்த்தால் மனதிலே நிற்கணும். அப்படி நின்ற ஒரு சில படங்கள் குட்டி, வீடு, காஞ்சிபுரம் போன்றவை.

    அதோடு எங்கேயும், எப்போதும் படம் நல்லா இருந்ததுனு எழுதி இருந்தேனே, அந்த விமரிசனம் படிக்கலையா?

    ஹிஹிஹி, என்னை அறிவு ஜீவினு சொன்ன முதல் ஆள் நீங்க தான். அதை நினைச்சுச் சிப்புச் சிப்பா வருது! ஹிஹிஹிஹி!

    அறிவே இல்லாதவ கிட்டேப்போய் அறிவு ஜீவினு சொல்றதை நினைச்சால்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! ஹெஹெஹெஹெஹெஹெ

    ReplyDelete
  21. ஜெமினின்னா படம் பிடிக்கணும்னு கட்டாயமா என்ன? படத்தோட கதை, நடிப்பு, இயக்கம், ஒலி, ஒளிப்பதிவுகள்னு எல்லாமே இயல்பாக் கதையோடு பொருந்தி இருந்தால் தான் நடிச்சது ஜெமினியோ, சிவாஜியோ, எம்ஜிஆரோ நல்லா இருந்ததுனு சொல்லலாம்.

    ReplyDelete
  22. //உங்க ப்ளாக் போஸ்டுக்கு கமெண்ட் வரலைன்னா, மொக்கை போஸ்டுக்கு எல்லாம் கமெண்ட் வர்றதுன்னு பொலம்பரீங்கல்ல, அத கொஞ்சம் நெனச்சு பாருங்க.//

    கமென்ட் வரலைனு எழுதறதை நிறுத்திடுவோமா என்ன??? ஒரு கை பார்த்துட மாட்டோம்? நான் அதிகம் பார்க்கிறது கமென்டை விட ஹிட் லிஸ்டை. அதில் தான் மொக்கைக்கு ஜாஸ்தி ஹிட் லிஸ்ட் வருது! என்னத்தைச் சொல்ல! மக்கள் ரசனை மாறிடுச்சா? இல்லைனா என்னோட பார்வைக் கோளாறா?

    ஒண்ணுமே பிரியலை உலகத்திலே! :))))

    ReplyDelete
  23. நீங்க காஸ் ஏஜன்சி எடுத்திருக்கிறீர்களோ.
    ஹ்ம்ம் கொடுத்து வைத்தவர்கள் இந்த ரசத்தைக் சாப்பிடுங்கப்பா:)

    --
    அன்புடன்,
    ரேவதி.நரசிம்ஹன்

    ReplyDelete
  24. ரேவதி, பின்னூட்டம் ஏதோ மாறி வந்திருக்குனு நினைக்கிறேன். :)))) எங்கள் ப்ளாகுகுப் போட வேண்டியதோ? அங்கேயும் பார்த்த நினைவு. :))))

    ReplyDelete