Monday, February 17, 2014

திரைப்படக்காதல் பாடல்களில் சிறந்தவை எவை? 2000-க்குப் பின்னரா? முன்னரா? பகுதி 4

காதலன் நினைவு மிகவும் அதிகம் ஆகிறது.  எப்படியானும் அவனுடன் சேர்ந்து வாழ ஏற்பாடு செய்ய வேண்டும் என நினைக்கிறாள்.  ஆகவே அவனைப் பார்த்துப் பேசி இதுக்கு ஒரு ஏற்பாடு செய்ய நினைக்கிறாள்.  ஆனால் அவள் காதலனைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. மீண்டும் மீண்டும் முயன்றும் அவன் ஊரில் இல்லை; எங்கேயோ போய்விட்டான் எனத் தெரிகிறது.  ஆஹா, நமக்குத் தெரியாமலா என எண்ணிக் கொண்டாள்.  யாரிடம் கேட்பது எனத் தெரியாமல் வீட்டுத் தோட்டத்தில் மலர்ந்து சிரிக்கும் பூக்களைப்பார்க்கிறாள்.  பூக்கள் வண்ணமயமாகச் சிரிப்பது அவள் உள்ளத்தில் சோகத்தை அதிகப்படுத்துகிறது.

http://www.youtube.com/watch?v=oCmKaOSY1Oc

சோலை புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன்
கண்ணாளனை கண்டாலென்ன என் வேதனை சொன்னாலென்ன
நல் வார்த்தைகள் தந்தாலென்ன
(சோலை..)

கண்ணா ஜோடிக்குயில் மாலையிடுமா இல்லை ஓடி விடுமா

என்றெல்லாம் கவலைப்படுகிறாள். அங்கே அவனும் அவள் நினைவில் சோகம் பொங்க

http://www.youtube.com/watch?v=LuvHFE-oivU


அடி என்னடி ராக்கம்மா என்னென்ன நினைப்பு
என் நெஞ்சு குலுங்குதடி
சிறு கண்ணாடி மூக்குத்தி மாணிக்கச் சிவப்பு
கண்ணீரில் நனையுதடி

கல்யாண மேளங்கள் மணியோசை
என் கவலைக்குத் தாளமடினு

சோக கீதம் இசைக்கிறான். இதற்கு நடுவிலே இவங்க இரண்டு பேரையும் பிரிக்க நினைச்சவங்க இரண்டு பேர் கிட்டேயும் சண்டையை மூட்டி விடறாங்க. இரண்டு பேருக்கும் சந்தேகம் வருது.  தன் மாமனுடன் சாதாரணமாப் பேசிட்டு இருந்தவளைப் பார்த்து அவனுக்குக் கோபம் பொங்குகிறது.  அதே போல் அவளைக் கண்டு அவனுக்குக் கோபம் பொங்க,  இரண்டு பேரும் தாங்கள் ஒரு காலத்தில் ரசித்த அதே நிலாவைக் கண்டு இன்று கோபத்துடன் பாடுகின்றனர்.

http://www.youtube.com/watch?v=VHntnPyW6YE

வாராயோ வெண்ணிலாவே
கேளாயோ எங்கள் கதையை

என ஆரம்பித்துப் பாடுகின்றனர்.  என்ன இருந்தாலும் கோபம் வந்தால் விட்டுட்டு ஓடிப் போக இந்தக் காலத்துக் காதல் நாயகியா நம் நாயகி? சமாதானம் ஆயிடறா.  இரண்டு பேரும் ஊட்டிக்குச் சுற்றுலா செல்கின்றனர்.  அங்கே இயற்கைக் காட்சிகள் கண்களையும் மனதையும் கவர,
ஆஆ.. ஆஆஆ ஓஹோஹோ.. ஆஹா ஹா. ஆஆஆஆஆஆ

இந்தப் பாடல் என்னமோ ஒரு வாரமாத் தேடியும் யூ ட்யூபில் கிடைக்கலை! :(

http://www.youtube.com/watch?v=LC5-vQtAQx4

இயற்கை என்னும் இளைய கன்னி
ஏங்குகிறாள் துணையை எண்ணி
இயற்கை என்னும் இளைய கன்னி
ஏங்குகிறாள் துணையை எண்ணி

பொன்னிறத்து மெல்லிடையில் பூவாட
பொட்டு வைத்த வண்ண முகம் நீராட
பொன்னிறத்து மெல்லிடையில் பூவாட
பொட்டு வைத்த வண்ண முகம் நீராட
தாமரையாள் ஏன் சிரித்தாள்
தலைவனுக்கோ தூது விட்டாள்

இயற்கை என்னும் இளைய கன்னி
ஏங்குகிறாள் துணையை எண்ணி

தலையை விரித்துத் தென்னை போராடுதோ
எதனை நினைத்து இளநீராடுதோ
கன்னி உன்னைக் கண்டதாலோ
தன்னை எண்ணிக் கொண்டதாலோ

இலைகள் மரத்துக்கென்ன மேலாடையோ
இடையை மறைத்துக் கட்டும் நூலாடையோ
கட்டிக்கொண்ட கள்வன் யாரோ
கள்வனுக்கும் என்ன பேரோ

இயற்கை என்னும் இளைய கன்னி
ஏங்குகிறாள் துணையை எண்ணி

மலையைத் தழுவிக் கொள்ளும் நீரோட்டமே
கலைகள் பழகச் சொல்லும் தேரோட்டமே
மஞ்சள் வெய்யில் நேரம் தானே
மஞ்சம் ஒன்று போடலாமே

தலையைத் தடவிச் செல்லும் காற்றோட்டமே
காலை மறைத்துச் செல்லும் ஆற்றோட்டமே
இன்னும் கொஞ்சம் நேரம் தானே
அந்திப் பட்டு பேசலாமே

இயற்கை என்னும் இளைய கன்னி
ஏங்குகிறாள் துணையை எண்ணி

ஹ ஹ ஹா லலல ல் லல்ல லல்ல ஹ ஹ ஹ...​

என்ன அழகான பொருள் பொதிந்த பாடல்.  பாட்டைக் கேட்கும்போதே தலை விரித்தாடும் தென்னையும் இலைகள் நிறைந்த மரங்களும் மரங்கள் காணக்கிடைக்கும் மலைகளும் மலையைத் தழுவிக் கொண்டோடும் நீர் விழ்ச்சிகளும், அப்போத் தெரிந்தும் தெரியாமலும் வரும் சூரியனும், அதன் மஞ்சள் நிற ஒளியும் கண்ணில், மனதில் காட்சியாக விரியுமே!  இப்படி இன்றைய நாட்களில் பாடப்படும் எந்தப் பாட்டுக்காவது இத்தகைய சக்தி இருக்கிறதா?  ம்ஹூம், இல்லவே இல்லை.


எனப் பாடி ஆடுகிறார்கள்.  இதிலே பாடல் வரிகளைப் பாருங்கள் எத்தனை அழகு கொஞ்சும்படியா இயற்கையை வர்ணிச்சு எழுதப் பட்டிருக்கு

10 comments:

  1. உண்மை... உண்மை... எனது கல்லூரிக்கால நினைவுகளும் வந்தது...

    தொடர வாழ்த்துக்கள் அம்மா...

    ReplyDelete
  2. முந்தின பகுதியையும் படிச்சுடுங்க டிடி. தப்பா பப்ளிஷ் ஆயிடுச்சு! இது வியாழக்கிழமைக்கான போஸ்ட்! கடைசியிலே ரெண்டு போஸ்டும் இன்னிக்கே வந்திருக்கு! :)))))

    ReplyDelete
  3. கதை பொருத்தமாக வருகிறது! இயற்கை என்னும் பாடலின் லிங்க் :

    http://www.youtube.com/watch?v=LC5-vQtAQx4

    ReplyDelete
  4. Aunty here is the link for 'iyarkai enum' song:

    http://youtu.be/rfdw0GQ7yhc

    ReplyDelete
  5. வாங்க டிடி, இந்தப் பதிவு அவசரக்குடுக்கையா நேத்தே ரிலீஸ் ஆயிடுச்சு! :)))

    ReplyDelete
  6. கேஜிஜி சார், நன்றி

    ReplyDelete
  7. ஶ்ரீராம், நன்றி. முன்னொரு தரம் இந்த லிங்க் கிடைச்சதுனு தான் பாடலையே சேர்த்தேன். அப்புறமாப் பார்த்தா லிங்க் கிடைக்கலை. அதான் முழுப்பாடலையும் போட்டேன். :)))

    ReplyDelete
  8. momsince27,

    சுட்டிக்கு நன்றி.

    ReplyDelete
  9. இப்பகுதியில் கொடுத்த அத்தனை பாடல்களும் ரசித்த பாடல்கள்.....

    இப்போதைய பாடல்களை ஏனோ கேட்கப் பிடிப்பதே இல்லை. கேட்டாலும் நினைவில் நிற்பதில்லை....

    ReplyDelete