Tuesday, July 01, 2014

குரங்காரின் கொட்டம் !

நம்ம வீட்டுக்கு நாலுகால் பிராணிகள் ஆன பசுக்கள், கன்றுகள், நாய்கள், பூனைகள்னு தான் வந்துட்டு இருந்தன.  இதெல்லாம் அம்பத்தூரில் இருக்கிறச்சே.  நாயும், பூனையும் குடித்தனமே இருந்ததுங்க.  எல்லாம் எழுதி இருக்கேன்.  அதோட சுப்புக்குட்டிங்க வேறே. விதம் விதமா வருங்க.  இப்போ இங்கே வந்தப்புறமா ஒரே ஒருநாள் எலியைப் பார்த்துப் பயமுறுத்தியதோடு சரி.  அவ்வப்போது ஹால்லே இருக்கும் பால்கனியில் தேன்சிட்டு வந்து உட்காரும்.  அதைப் படம் பிடிக்கணும்னு எழுந்தா ஓடிப் போயிடும்.

இப்போப் போன வாரத்திலே இருந்து கு"ரங்கார்" வந்துட்டு இருக்கார்.  போன வாரத்திலே ஒருநாள் வாசல் வராந்தாவுக்கு வந்து பால் வாங்கிட்டேனானு செக் பண்ணிட்டுத் திரும்ப நினைவா பாத்திரத்தை அதே போல் மூடி விட்டுப் போனார்.  மறுநாள் பிள்ளையாருக்கு மட்டுமா கொழுக்கட்டை? எனக்கு வடைகிடையாதானு வந்து கேட்டுட்டுப்போனார்.  அதுக்கப்புறமாக் கொஞ்சம் வரவு குறைந்திருந்தது.  ஞாயிறன்றிலிருந்து எல்லாக் கதவுகளையும் வழக்கம் போல் திறந்து வைக்க ஆரம்பித்தோம்.  நேத்து மத்தியானம் உள் அறையில் மேசைக்கணினியில் வேலை செய்யும்போது சமையலறைப் பக்கமிருந்து சத்தம் வரவே, சமையலறையின் வெளி வராந்தாக் கதவை இழுத்துச் சார்த்தினேன்.  அப்புறமா ஏதுமில்லை.

இன்னிக்குக் காலம்பரக் கஞ்சி தான்போட்டுட்டு இருந்தேன்.  சமையலறைக்கு வெளியே வாளியை யாரோ எடுக்கும் சப்தம்.  ரங்க்ஸோ மும்முரமான வேலை எதிலோ கவனமாக இருந்தார்.  ஆகவே அவர் இல்லை.  சந்தேகமா எட்டிப்பார்த்தா நம்ம நண்பர்.  நல்லவேளையா வாளியில் போட்டிருந்த துணிகளை எல்லாம் அலசிக் கிரில் கம்பியில் காய வைத்திருந்தேன்.  அதுக்கு ஏதும் கிடைக்கலை.  என்னைப் பார்த்ததும் உள்ளே வரலாமா என்கிறாப்போல் என்னையும் பார்த்து சமையலறையின் உள்ளேயும் பார்த்தது.  ரங்க்ஸைக் கூப்பிட்டேன்.  ஆனால் அவர் எழுந்து வரதுக்குள்ளே என்ன நினைச்சதோ ஒரே தாவு தாவி கிரில்லுக்கு வெளியே புகுந்து ஜன்னல் கைப்பிடியில் உட்கார்ந்து கொண்டு உலர்த்தி இருந்த துணிகளை எல்லாம் எடுத்துட்டு மறுபடி உள்ளே வரலாமானு யோசிக்க ஆரம்பிச்சது.

அதுக்குள்ளே ரங்க்ஸ் வந்து பார்த்து அதைச் செல்லமாகப் போடானு சொல்ல அது பல்லைக்காட்டியது.  பல்லைக் காட்டி பயமுறுத்தி இருக்குனு நினைக்கிறேன். அப்புறமா கம்பைத் தூக்கவும் ஒரே தாவாத் தாவிப் போய் விட்டது.  மறுபடி எல்லாக் கதவுகளையும் சார்த்திட்டு உட்கார்ந்துக்கறோம். :( நேத்திக்கு அம்மா வந்ததாலே இதை எங்கானும் கொண்டு விட்டிருந்தாங்களா இல்லாட்டி இதுவே அம்மாவுக்குப் பயந்துண்டு வெளியே தலைகாட்டலியா தெரியலை.  இன்னிக்கு மறுபடி வந்திருக்கு.


கொசுறு:  அம்மா வந்ததாலே நேத்திக்கு மின்வெட்டே இல்லைனு நினைச்சால் சாயந்திரம் ஆறரைக்கு வெட்ட்டிட்டாங்க.   இடியும், மின்னலும் இருந்ததும் ஒரு காரணம். :)


தடை செய்யப்பட வேண்டிய விளம்பரங்கள்:   Indian Men Wanted விளம்பரம் மற்றும் பார்லே மாரிகோல்டில் வரும் பெண்கள் பேசிக்கொள்ளும் அசிங்கமான கமென்ட்கள்!  ஃபேர் அன்ட் லவ்லி போட்டுக்கொண்டால் தான் தன்னம்பிக்கை பிறக்கும் என்னும் விளம்பரங்கள்.  ஆஃப்டர் ஷேவ் லோஷன் விளம்பரங்கள், ஒரு ஆண் செல்ஃபோனில் ஒரு பெண்ணைப் படம் பிடிக்கும் விளம்பரம், அதற்கு அந்தப் பெண் கொடுக்கும் மட்டமான காட்சிகள்.  காஜல் நடிக்கும் ஜெல்லி விளம்பரம்(இப்போ அதிகமா வரதில்லை) 

18 comments:

  1. நாங்கள் கோவை போய் இருந்த போது வீட்டுக்கு வீடு பழங்கள் பழுத்து தொங்கும் சீஸன் என்பதால் குரங்கார் தினம் விசிட் எல்லா வீடுகளுக்கும்.
    இங்கு மயிலாடுதுறையில் பக்கத்து வீட்டுக்குள் வந்து பொட்டுகடலை பாட்டிலை தூக்கி கொண்டு மொட்டைமாடி போய் அழகாய் மூடியை திறந்து சாப்பிட்டு விட்டு பாட்டிலை போட்டு விட்டு போனது.

    எனக்கும் சில தொலைக்காட்சி விளம்பரங்களைப் பார்க்கும் போது ஏன் இந்த விளம்பரங்களை தடை செய்யாமல் இருக்கிறார்கள் என்று நினைப்பேன்.

    ReplyDelete
  2. கு"ரங்கார்"
    :(((((((

    ReplyDelete
  3. இங்க குரங்கார் ஒரு 20 பக்கம் குடும்பமா மதில் மேலே போயிட்டு இருந்தது. பால்கனியில் உள்ள பைப்பை திறந்து தண்ணீர் குடிச்சிட்டு போவாங்க... அதனால எங்கே போனாலும் பக்கத்து வீட்டுல சாவி கொடுத்துட்டு தான் போவேன். அவங்க நிறுத்திடுவாங்க...:))இப்ப கொஞ்சம் கம்மி..

    ReplyDelete
  4. இப்போதான் மதுரை அழகர் கோவில்ல ஏகப்பட்ட நண்பர்களைச் சந்தித்து விட்டு வந்தேன். :))))))

    ReplyDelete
  5. நல்ல வேடிக்கை!அடுத்தமுறை வரும்போது குரங்கார் முகத்தில் கேமராவை ப்ளாஷ் செய்யுங்கள்! பதிவிற்கு ஒரு போட்டோவும் கிடைக்கும்! குரங்காரும் இனி வர யோசிப்பார்!

    ReplyDelete
  6. விளம்பரங்களைப் பத்தி நீங்க சொன்ன அத்தனையும் உண்மையோ உண்மை..பொதுவாவே சில விளம்பரங்களைப் பார்த்தா கடுப்பு தான் மிஞ்சுது!.... அழகாயிருந்தா மட்டுமே தன்னம்பிக்கை பிறக்கும்/ஜெயிக்க முடியும் என்கிற மாதிரியான அர்த்தத்துல வர்ற விளம்பரங்கள் எங்கே கொண்டு போய் விடும்னு தெரியலை..ஒரு பக்கம், பெண்களை தூக்கற மாதிரி தூக்கிட்டு, ஆண்களை அட்ராக்ட் பண்றதுதான் பெண்களோட வேலையேங்கற மாதிரி விளம்பரமும் போடுறாங்க.. என்னா செய்ய?!

    ReplyDelete
  7. விளம்பரங்கள் - :((((( பல விளம்ப்ரங்கள் இப்படித்தான்.....

    குரங்கார் - தில்லியில் முந்தைய அலுவலகத்தில் நிறைய உண்டு! :)

    ReplyDelete
  8. உங்கள் குரங்கார் விசிட் பற்றியப் பதிவு அருமை.
    பெண்கள், குசந்தைகள், இவர்கள் இருவருமெ பெரும்பாலான விளம்பரங்களின் இலக்கு.

    ReplyDelete
  9. குரங்கார் இங்கு இல்லை...

    விளம்பரங்கள் கொடுமை...

    ReplyDelete
  10. வாங்க கோமதி அரசு, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  11. வா.தி. என்ன ஆச்சு????

    ReplyDelete
  12. வாங்க ஆதி, அங்கேயும் வராங்களா? ஹெஹெஹெஹெ! இப்போக் கூட ஹாலில் சோஃபாவுக்குப் பின்னாடி இருக்கும் ஜன்னல் விளிம்பில் உட்கார்ந்துட்டு இருந்தார். வெளியே நடைபாதை ஜன்னல் வழியா யார் வீட்டுக்குள்ளேயானும் போகணும்னு ஆசை. யாரும் விடலை. :)

    ReplyDelete
  13. வாங்க ஶ்ரீராம், அங்கே இல்லாதவங்களா. படம் கூட எடுத்திருந்தது போட்டிருக்கேன். தேடினேன் கிடைக்கலை.

    ReplyDelete
  14. ஆஹா, தமிழ் இளங்கோ ஐயா, ஒரு காமிரா கானன் அல்லது சோனி வாங்கி அனுப்புங்க. குரங்கார் பிடுங்கிக்கலைனா ஃபோட்டோ எடுத்துட்டு வைசுக்கறேன். :))))

    ReplyDelete
  15. வாங்க பார்வதி, விளம்பரங்கள் இன்னும் எத்தனையோ இருக்கு. முக்கியமா நிஜாம் பாக்கு விளம்பரம். அதிலே சின்னக் குழந்தைகளை எல்லாம் பாக்கு மெல்வது போல் காட்டறாங்க. :(

    ReplyDelete
  16. வாங்க வெங்கட், விளம்பரங்களுக்கும், சீரியல்களுக்கும் கட்டுப்பாடு விதிக்கணும். :( நேத்திக்குப் பாருங்க கோவா மந்திரி பெண்கள் உடைக்கட்டுப்பாடோடும் இருக்கணும். பப் போகக் கூடாதுனு சொன்னதுக்கு மீடியாவிலே எதிர்ப்பு. :(

    ReplyDelete
  17. வாங்க ராஜலக்ஷ்மி, பெண்களே அதுக்கு இடம் கொடுப்பது தானே இன்னமும் கொடுமை.

    ReplyDelete
  18. வாங்க டிடி, விளம்பரங்களுக்குக் கட்டுப்பாடு வரணும். :( அதிலும் சில பிட்சா விளம்பரங்கள், அப்புறமா பாம்பே டையிங் விளம்பரம்! மஹா மட்டம்.

    ReplyDelete