Thursday, July 10, 2014

கிழக்கே போன ரயிலில் நானும்!

மருத்துவப் பரிசோதனைக்காகச் சென்னை சென்றிருந்தோம்.  இங்கேயே நேர்முகத் தேர்வில் ஃபெயில்.  இதோடு இரண்டு தரம் ஃபெயில் ஆகிட்டதாலே மருத்துவர் எனக்கும் மாத்திரை கொடுக்க ஆரம்பிச்சுட்டார்.  ஆகவே நானும் குழுமத்தில் சேர்ந்தாச்சு வருத்தத்துடன்.  ஆனால் ரொம்பவே வீரியமான மாத்திரைகள் அல்ல என்பதோடு காலை, இரவு இரண்டே வேளைக்குத் தான் மாத்திரைகள். பத்து நாளில் மறு தேர்வு இங்கேயே செய்துட்டு அதன் முடிவை மருத்துவரிடம் தொலைபேசியில் சொல்லணும்.  வீட்டுப்பாடம் எல்லாம் கொடுத்துட்டார்.

இம்முறை ரயில் பயணத்தில் சென்ற முறை கடைசியாக விசா ரினிவலுக்குப் போனப்போ இருந்ததை விடவும் பயணம் சுகமாக இருந்தது.  ஏ.சி.யின் குளிர் சீராக இருந்ததோடு ரயில் பெட்டி சுத்தமாக இருந்தது.  வேகம் இருந்தாலும் தூக்கித் தூக்கிப் போட்டு நிற்கவே முடியாமல் வண்டி குதிக்கவில்லை. கழிவறை சென்றால் நிற்க முடியாமல் வண்டி ஆட்டத்தில் பலமுறை கீழே தள்ளும், முக்கியமா அது இல்லை. குறிப்பிட்ட பெட்டிகளின்  உதவியாளர்கள் பெட்டிக்கு வெளியேயே உட்கார்ந்திருந்தார்கள் என்பதோடு அவரைத் தேடிக் கொண்டு அலைய வேண்டி இருக்கவில்லை.   வெளியிலிருந்து விற்பனை செய்பவர்களை அனுமதிக்கவில்லை.  எல்லோருமே சுத்தமான உடையுடன் அவங்க அடையாளம் உள்ள பெயர்ச்சீட்டைக் கழுத்தில் கட்டாயமாக மாட்டி இருந்தனர்.  இம்முறை வீட்டிலிருந்து சாப்பாடு கொண்டு போக முடியாததால் ரயிலிலேயே பயத்தோடு வாங்கினோம். என்ன ஆச்சரியம்! பொங்கல் சூடுன்னா அப்படி ஒரு சூடு.  சுவையும் நன்றாகவே இருந்தது. காஃபி, டீ வாங்கினவங்களுக்கு எல்லாம் அந்தக் கப்பில் முக்கால் கப் வரை காஃபி, டீ கொடுத்தாங்க.  ஆங்காங்கே ஒரு சிலர் முன்னை மாதிரி அரைக் கப் கொடுக்கிறாங்க தான்.  என்றாலும் அவங்களும் விரைவில் மாறுவாங்கனு எதிர்பார்ப்போம்,  குறிப்பாக ரயில் சேவையில் முன்னேற்றம் தெரிய ஆரம்பித்து விட்டது.  மெல்ல மெல்லத் தான் சூடு பிடிக்கணும்.  டிக்கெட் இதுவரை விலையேற்றியதை நியாயப் படுத்தலாம்.  ஆனால் தொடர்ந்து அடிக்கடி ஏறும் என்பதை ஏற்கத் தான் முடியவில்லை.


ஆம்னிப் பேருந்துக்கோ, தனியார் சிறப்புப் பேருந்துகளிலோ, தனியார் வோல்வோ பேருந்துகளிலோ பயணம் செய்ய 500 ரூபாய்க்கும் மேல் அல்லது ஆயிரம் ரூபாய் வரை கொடுக்க வேண்டி இருக்கிறது.  அதைக் கொடுத்துப் பயணம் செய்கின்றனர் தானே.  அதில் கால் வாசி கூட ரயில்வேயில் விலை ஏற்றம் இல்லை.  மேலும் நமக்கு வசதிகளும் வேண்டும், ரயில் டிக்கெட்டும் விலை ஏறக்கூடாதுன்னா அரசாங்கம் எங்கிருந்து வசதி செய்து தர முடியும்? முக்கியமாய் டிக்கெட் பரிசோதகர்களை நிறைய நியமனம் செய்ய வேண்டி இருக்கிறது.  ஒரே டிக்கெட் பரிசோதகர் 4,5 பெட்டிகளில் டிக்கெட் பரிசோதனை செய்ய வேண்டி இருக்கிறது.  இதிலே இப்போது பெண் டிக்கெட் பரிசோதகர்களும் வருவதால் அவங்களாலே நிச்சயமா முடியறதில்லை. இதை ஒரு குற்றமாய்ச் சொல்லவில்லை.  குறிப்பிட்ட நேரத்துக்குள்ளாக 2 பெட்டியின் 150 பயணிகளின் டிக்கெட்டை மட்டும் தான் பரிசோதிக்க இயலும். ஆகவே புதிதாக நியமனம் செய்தால் அவங்களுக்குச் சம்பளம் கொடுத்தாகணும்.  இந்தியா முழுமைக்கும் இப்படி எத்தனையோ நியமனங்கள் செய்யப் பட வேண்டும்.

பராமரிப்புச் செலவு போன்ற முக்கியமான செலவுகளுக்கும் பணம் தேவை. இன்னும் எத்தனையோ வழித்தடங்கள் ஆரம்ப கட்டத்திலேயே இருக்கிறது. அவை எல்லாம் முடிக்கணும்.  எல்லாவற்றிலேயும் சலுகையைக் கொடுத்தால் அப்புறமா ரயில்வேக்கு வருமானம் எங்கிருந்து வரும்?  நமக்கு வசதி வேண்டும்னா இம்மாதிரியான சின்னச் சின்ன விலை ஏற்றங்களை ஏற்கத் தான் வேண்டும்.  இப்போதெல்லாம் அரசாங்கம் எல்லாத்தையும் இலவசமாக் கொடுக்கணும்;  அதுவும் தரமாக இருக்கணும் என்னும் மனப்பானமை பெருகி விட்டது.  வருமானத்துக்கு வழியில்லாத அரசால் எதைச் சாதிக்க முடியும்?

சென்னை போன அன்னிக்கு மாம்பலத்தில் இறங்குகையில் ஒரு சிறு நிகழ்வு. கொஞ்சம் அசட்டுத்தனம்,,கொஞ்சம் மறதி எல்லாம் கலந்த அந்த நிகழ்வு குறித்துப் பின்னால் பார்ப்போமா? :)

கை இன்னும் சரியாகவில்லை. :( வலக்கைப் பயன்பாட்டுக்கு வர இன்னும் ஒரு வாரமாவது ஆகும் போல் இருக்கு! வீக்கம், வலி குறைந்துள்ளது. 

19 comments:

  1. என்னது வருமானத்துக்கு வழியில்லையா...?

    உடல்நலத்தை முதலில் கவனியுங்கள் அம்மா...

    ReplyDelete
  2. இதை எதிர்பர்த்துத்தான் 'புல்லட் ரயில்வே பட்ஜெட் - ஒரு 'சட்புட்' அலசல்' எழுதினேன். ரயில்வேக்கு நல்ல காலம் வருகுது.

    நீங்கள் சென்னை வந்த் என்னை தொடர்பு கொள்ளவில்லை. நானும் ஶ்ரீர்ங்கம் வந்திருந்தேனே!

    ReplyDelete
  3. கை காயம் விரைவில் ஆற வாழ்த்துக்கள்.
    ரயிலில் இறங்கும் போது ஏதாவது சாமானை மறந்து விட்டுவிட்டீர்களா?
    அது அடுத்த பதிவில் வரும் இல்லையா?

    ReplyDelete
  4. விலையேற்றம் கொஞ்சம் தேவைதான்! விரைவில் கை காயம் குணமாகி நலம்பெற வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. ரயில்வேயில் மாற்றம் ஏற்பட்டுள்ளது குறித்து மகிழ்ச்சி.

    அது என்ன நிகழ்வோ? தொடர்கிறேன்.

    ReplyDelete
  6. நியாயமான வாதம். அடுத்தடுத்து கட்டணம் ஏறிக்கொண்டே இருக்கும் என்பதை ஏற்க முடியவில்லை. உடல் நலத்தில் கவனம் வைக்கவும்.

    ReplyDelete
  7. ஆமாம் டிடி, ரயில்வே நஷ்டத்தில் தான் நடந்து வருகிறது. உடம்பு பரவாயில்லைப்பா.

    ReplyDelete
  8. வாங்க "இ" சார், கிளம்பறச்சயே கையில் எண்ணெய் கொட்டிக் கொண்டு ஒரே பதட்டம், அதோடு அங்கே திங்களன்று கிளம்பி மாம்பலத்தில் இறங்கறச்சே மறுபடி பதட்டம். நினைச்ச காரியம் நடக்கலை. சாயந்திரம் மருத்துவரிடம் ஏகக் கூட்டம். செவ்வாயன்று கல்யாண வீடு போக இருந்ததைக் கூட ரத்து செய்துட்டு வீட்டிலேயே ஓய்வு எடுத்துட்டோம். புதன் கல்யாணம் முஹூர்த்தம் முடிஞ்சதும் கிளம்பியாச்சு! :(

    ReplyDelete
  9. உண்மையைச் சொல்லணும்னா நீங்க சென்னையில் இருப்பதே நினைவில் இல்லை. :(

    எப்போ வந்தீங்க ஶ்ரீரஙகம்? சொல்லவே இல்லையே?

    ReplyDelete
  10. வாங்க கோமதி அரசு, கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  11. நன்றி சுரேஷ்.

    ReplyDelete
  12. நன்றி ஶ்ரீராம்.

    ReplyDelete
  13. என்ன மருத்துவப் பரிசோதனை?routine one.?

    ReplyDelete
  14. முதலில் உங்கள் கையைக் கவனியுங்கள். நீங்கள் சொல்வது போல் ரயில்வேயில் செய்ய வேண்டியது நிறைய இருக்கிறதே.

    ReplyDelete
  15. ஜிஎம்பி சார், ஆமாம், ரொடீன் செக் அப் தான்.

    ReplyDelete
  16. வாங்க ராஜலக்ஷ்மி, நன்றிங்க.

    ReplyDelete
  17. நிறைய மாற்றங்கள் தேவை.... அதற்கான முயற்சிகளும் தேவை. பார்க்கலாம்.....

    கை இப்போது தேவலையா?

    ReplyDelete
  18. ரயில்வே மகிழ்ச்சி.

    ReplyDelete