Tuesday, September 23, 2014

பறவைகளுக்கு மனச்சோர்வு உண்டா?

மனிதருக்கு மட்டும் தான் மனச்சோர்வு வரும் போல.  நமக்கெல்லாம் இனம்தெரியாச் சோர்வா இருக்கிறச்சே இந்தப் பறவைகள் மட்டும் எப்படி தினம் தினம் ஒரே மாதிரி உற்சாகத்துடன் சரியான நேரத்தில் குரல் கொடுக்கின்றனவோ, தெரியலை. அதுங்களுக்கு நம்மைப் போல் பல் தேய்க்கவேண்டாம்.  இயற்கை உபாதைகளைக் கழிக்க இடம் தேடி அலைய வேண்டாம். சாப்பாடு சமைக்க வேண்டாம்.  முக்கியமாக் காலை, மாலை, காஃபி, டீ வேண்டாம்.

அதுங்க பாட்டுக்குப் பறந்து எங்கே என்ன கிடைக்குதோ அதைச் சாப்பிட்டு, எந்த இடமா இருந்தாலும் கழிவுகளை வெளியே தள்ளி, கூடு கட்டி, முட்டையிட்டுப் பொரித்துக் குஞ்சுகள் வெளியே வந்ததுமே அவற்றைப் பறக்கவிட்டுட்டு, ஹூம், நாமெல்லாம் அப்படியா இருக்கோம்! குழந்தைகளையும் பாதுகாக்கறோம். குழந்தைங்க நம்மளைப் பாதுகாக்கணும்னும் எதிர்பார்க்கிறோம்.   பறவைங்களுக்கு அதெல்லாம் இல்லை. இஷ்டத்துக்கு இருக்கே!  பெரும்பாலான பறவைகள் ஒரு தரம் கட்டின கூட்டில் இரண்டாம் முறை முட்டை இடறதில்லைனு நினைக்கிறேன்.

கொஞ்சம் பொறாமையாக் கூட இருக்கு.  பறவையாய்ப் பிறந்தால் நல்லா இருந்திருக்கும் தான்.  ஆனால்  மனுஷங்களான நாம்  அதோட வாழ்விடங்களையும் அழிச்சுட்டு வரோமே.  ஆனாலும் பறவைங்க அதுக்காகவும் கவலைப்பட்டுக்கலை. இன்னிப்பாடு இன்னிக்கு;  நாளைப்பாடு நாளைக்குனு இருக்குதுங்க. இன்னிக்கு என்ன டிஃபன், என்ன சமையல்னு தலை சுத்தல் எல்லாம் கிடையாது. ஜாலியா இருக்கும் போலிருக்கே!


பி.கு: இன்னிக்குக்  காலம்பர   வெளியே பக்ஷிகள் எல்லாம் கோலாகலமாக ஒரே கூவல்.  என்னோட மனச்சோர்வுக்கும் , இதுக்கும் நேர் எதிராக இருக்கவே, அப்போ யோசிச்சதன் விளைவு இது. உடனே எண்ணங்களைப் பகிர முடியாமல் மின்சாரம் ஒரு மணி நேரம் தான் இருந்தது.  காலம்பர பத்து மணிக்குப் போயிட்டு இப்போ இரண்டு மணிக்குத் தான் வந்திருக்கு.

இதிலேயும் பாருங்க பறவைங்களுக்கு மின்சாரம் இருந்தாலும் ஒண்ணுதான்;  இல்லாட்டியும் ஒண்ணு தான்.  நமக்கு அப்படி இல்லையே!



படம் வழக்கம் போல கூகிளார் தயவு!

18 comments:

  1. நான்கைந்து நாட்களாக வலைப் பக்கமே வர முடியவில்லை. உங்கள் இந்தப் பதிவைப் படித்ததும் நான் எழுதி இருந்த “தனிமைப் பறவை என்னும் பதிவு நினைவுக்கு வந்தது சுட்டி தருகிறேன் நேரம் கிடைத்தால் வாசித்துப் பாருங்கள்
    gmbat1649.blogspot.in/2011/09/blog-post.html

    ReplyDelete
  2. // மின்சாரம் ஒரு மணி நேரம் தான் இருந்தது. காலம்பர பத்து மணிக்குப் போயிட்டு இப்போ இரண்டு மணிக்குத் தான் வந்திருக்கு.//

    அதே அதே, இங்கும் அதே !

    காலை 9 மணிக்கே போயிடுச்சு.

    கம்பரசரம்பேட்டை துணை மின்நிலையத்தில் மாதாந்தர பராமரிப்பாம். நல்லவேளையாக நேற்றே தினமலரில் வெளியிடப்பட்ட இந்த செய்தி, என் கண்களில் பட்டுவிட்டது.

    கொஞ்சம் உஷாராக முடிந்தது.

    ReplyDelete
  3. வாங்க ஜிஎம்பிசார், ரொம்ப நாளாக் காணோமேனு நினைச்சேன். வருகைக்கும் சுட்டிக்கும் நன்றி. போய்ப் பார்க்கிறேன்.

    ReplyDelete
  4. வைகோ சார், பராமரிப்புக் காரணமான மின்வெட்டுப் போன வாரம் தான் வந்துட்டுப் போச்சு. இன்னிக்கு அறிவிக்கப்படாத மின் வெட்டுப் போலிருக்கு! :))) ஒரு வழியா இரண்டு மணிக்காவது கொடுத்தாங்களே. போன வாரம் ஐந்தரை வரைக்கும் வரலை. :))))

    ReplyDelete
  5. பறவைகள் ஓர் அற்புத பிறவி! மின் தடை எங்கும் நீக்கமற மீண்டும் நிறைந்துவிட்டது! நம்ம ஊரிலும் ஒரு நாலுமணிநேரம் பீஸை பிடுங்கிட்டாங்க!

    ReplyDelete
  6. அதோ அந்த பறவை போல வாழ வேண்டும் !
    ஆசை ஆசை.

    மின்வெட்டு இங்கும்.

    பறவைகளுக்கு மின்வெட்டு கவலை இல்லைதான். எதிர்பார்ப்புகள் இருக்காது என்பது உண்மைதான்.
    ஆனால் அவைகள் படும் துன்பம் அதுகளுக்கு தான் தெரியும்.


    ReplyDelete
  7. பறவைகளுக்கென்ன... ஜாலியாக இருக்கின்றன. அவைகளின் கஷ்டங்களை அவைகளின் பாஷையில் அவைகளுக்குள் பேசிக் கொள்ளும். நமக்கெங்கே புரியும்?

    ReplyDelete
  8. நானும் உங்களைப் போல் நினைப்பதுண்டு. எந்தக் கவலையும் இல்லாமல் பாரதியார் சொன்னது போல் சிட்டுக் குருவியைப் போல் விட்டுப் பறந்திடுவாய் என்றுப் பறக்கத் தான் ஆசை. ஆனால் முடியவில்லையே.....

    ReplyDelete
  9. கீதாம்மா!

    பதிவைப் படிக்கும்போது மகாகவி பாரதியின் "விட்டு விடுதலை ஆகி நிற்பாய் இந்த சிட்டு குருவியைப் போலே" என்ற கவிதையே நினைவுக்கு வருது!

    http://jeevagv.blogspot.com/2005/03/vittu-vidhuthalai-mahakavi-bharathi.html

    அதே சமயம் மானிடராய் பிறத்தல் அரிதல்லவா!
    http://jeevagv.blogspot.com/2005/03/blog-post_21.html

    ReplyDelete
  10. உங்க ஏக்கம் புரியுது. அதுங்களைக் கேட்டால் ஆயிரம் சொல்லுமோ...:))

    ReplyDelete
  11. வாங்க தளிர் சுரேஷ், இன்னிக்கும் மின்சாரம் போச்சு. தொடரும் னு நினைக்கிறேன். :) கட்டணம் வேறே உயர்த்தறாங்க. :(

    ReplyDelete
  12. வாங்க கோமதி அரசு, மின்வெட்டு அநேகமா எல்லோரும் சொல்றாங்க.

    பறவைகளுக்கு எதிர்பார்ப்பு இல்லைங்கறது உண்மை தான். பணம், காசுனு இல்லாட்டியும் கூட நமக்கும் சில எதிர்பார்ப்புகள் இருக்கத் தான் செய்கின்றன! :(

    ReplyDelete
  13. ஆமாம், ஶ்ரீராம், நமக்கெல்லாம் புரியாது தான்.

    ReplyDelete
  14. வாங்க ராஜலக்ஷ்மி, சிட்டுக்குருவி போல இருக்கத் தான் ஆசை. அதையே ஒழிச்சுட்டோமே! :(

    ReplyDelete
  15. வாங்க ஜீவா, வருகை மகிழ்ச்சி அளிக்கிறது. சுட்டிகள் இரண்டையும் ஏற்கெனவே பார்த்தேனானு நினைவில் இல்லை. போய்ப் பார்க்கிறேன். :)

    ReplyDelete
  16. வாங்க நிலாமகள், அபூர்வமான வருகைக்கும், கருத்துக்கும் நன்றிங்க.

    ReplyDelete
  17. அதுதான் எழுதி இருந்தேனே. நான்கைந்து நாட்கள் வலைப்பக்கமே வரவில்லை அதற்கு ஒரு பதிவு உண்டு. தவறாமல் வருபவரைக் காணாவிட்டால் இம்மாதிரி எண்ணங்கள் தோன்றும் நானும் அப்படி நினைப்பவன்தான்

    ReplyDelete
  18. பறவைகளுக்கு இருக்கும் கஷ்டங்கள் நமக்குப் புரிவதில்லையோ....

    “எங்க கஷ்டம் உங்களுக்குப் புரியாதா?” என்று அவற்றின் பரிபாஷையில் கேட்குமோ?

    ReplyDelete