Tuesday, September 30, 2014

அம்பி கிட்டே சொல்லாதீங்க யாரும்! :P

நேற்று என்ன பண்ணறதுனு ம்ண்டையை எல்லாம் உடைச்சுக்கலை.  ஏனெனில் வெளியே போக வேண்டிய வேலை இருந்தது.  இந்த நாள் இனிய நாள், சே, இப்படித் தான் இருக்கும்னு முன்னாலேயே தெரியும் என்பதால் சுண்டலுக்காக எதையும் முன் கூட்டி நனைக்கவில்லை.  வெளியே போயிட்டு  மணிக்கு வந்தாச்சு. இதுக்கு மேலே பாசிப்பருப்புச் சுண்டல்னாக் கூட ஊற ஒரு மணி நேரமாவது தேவை.  ஆகையால் இனிய நாளாகவே இருக்கட்டுமே எனக் கேசரி செய்தேன்.  அதான் நேத்து நிவேதனம்.  ஆனால் நோ போணி! :(  மாடியிலே கம்யூனிடி ஹாலிலே யார் வீட்டிலோ ஏதோ விசேஷம்.  எல்லோரும் அங்கே போயிட்டாங்க.  நம்ம கேசரி இன்னைக்கும் இருக்கு.  இன்னைக்கு வரவங்களுக்குக் கொஞ்சம் கொஞ்சமாக் கொடுத்துடலாம்.  அதுக்காக இன்னைக்குச் சுண்டல் பண்ணாமல் முடியுமா?  பண்ணிட்டோமுல்ல!

முதலில் கேசரி.  படத்தைப் பார்த்துட்டு எல்லோரும் எடுத்துக்கலாம்.  கேசரி இன்னைக்கும் நல்லாவே இருக்கும். ஆனால் யாரும் அம்பி கிட்டே மட்டும் போய்ச் சொல்ல வேண்டாம்.  அம்பிக்கு நோ கேசரி! :P :P :P :P :P :P :P

 

கேசரியைச் சுடச் சுட நிவேதனம் பண்ணியாச்சு. முந்திரிப்பருப்புத் தான் இல்லை.  தீர்ந்து போச்சு.  பரவாயில்லைனு திராக்ஷைப்பழத்தை நிறையப் போட்டுட்டேன்.  பல் திடம் இல்லாதவங்களுக்கு சௌகரியமா இருக்குமே!  ப்ளீஸ், ப்ளீஸ், அம்பி கிட்டே போய்ச் சொல்லாதீங்க.









சும்மா கொலுவை மறுபடி ஒரு படம் எடுத்தேன்.






இன்றைய சுண்டல் வேர்க்கடலைச் சுண்டல்.  அது கீழே. அநேகமா போணி இருக்கும். :)))





இப்போல்லாம் பண்ணும்போதே நினைவாப் படம் எடுத்துடறோமுல்ல!





வேர்க்கடலைச் சுண்டல்.  இன்னும் நிவேதனம் பண்ணலை.  நாலரைக்குப் பண்ணணும்.   அதனால் கொஞ்சம் பொறுத்து எடுத்துக்குங்க. :)

14 comments:

  1. //பல் திடம் இல்லாதவர்களுக்கு//

    க்ர்ர்ர்ர்ர்...

    கேசரி சுண்டலா... ம்ம்... ஜமாயுங்க!

    ReplyDelete
  2. 4-35 ஆச்சு! எடுத்துண்டேன்!

    ReplyDelete
  3. சுண்டல் படம் பார்த்தாலே நாக்கெல்லாம்..

    ReplyDelete
  4. //கேசரியைச் சுடச் சுட நிவேதனம் பண்ணியாச்சு. //

    முதல் படத்தைப் பார்த்த பொழுது நினைத்ததை இரண்டாம் படத்தில்
    சரி பண்ணியிருக்கிறீர்கள்.

    வாணலியில் போட்டது போட்ட படி இருக்கும் அந்த கிடுக்கிப் பிடியைச் சொல்கிறேன்.

    ReplyDelete
  5. என்னா ஒத்துமை?!.. நானும் நேத்து கேசரி!.. காரணம் அதே!..

    ReplyDelete
  6. வாங்க ஶ்ரீராம், ஹிஹிஹிஹி! நேத்து வந்தவங்களுக்குக் கேசரியும் கிடைச்சது. :)

    ReplyDelete
  7. வா.தி. கொலுவுக்கு முத முதல்லே வந்திருக்கீங்க. எடுத்துக்குங்க, எடுத்துக்குங்க. :))))

    ReplyDelete
  8. அப்பாதுரை, இந்தியா வந்துட்டு இங்கே வரலை. அதனால் உங்களுக்கு நோ சுண்டல். :(

    ReplyDelete
  9. வாங்க பார்வதி, அப்போ உங்களுக்கு நோ கேசரி! :))))

    ReplyDelete

  10. யாரந்த அம்பி,,,?,. உங்களை இவ்வளவு பயமுறுத்தும் யார் அந்த அம்பி.?

    ReplyDelete
  11. ஹிஹிஹி, ஜீவி சார், சுடச் சுடக் கொண்டு வந்தேன். இடுக்கியை உடனே கீழே வைத்தால் அதில் எங்காவது கேசரி ஒட்டிக் கொண்டிருக்கும். தரையில் பட்டதுன்னா எறும்பார் எங்கேனு காத்துட்டு இருக்கார். அதை எடுத்துட்டு வைக்கணும்னு இருக்கிறதுக்குள்ளே, படம் எடுக்க ஆரம்பிச்சுட்டேன். அப்புறமா நினைவு வந்து இடுக்கியை அகற்றிவிட்டுப் படம் எடுத்தேன்.

    இரண்டையும் போட்டுட்டேன். :))))

    ReplyDelete
  12. வாங்க ஜிஎம்பி சார், அம்பியைப் பார்த்து நானாவது, பயப்படறதாவது! அம்பிக்குப் பிடிச்சது கேசரி. அதான் அம்பிக்குக் கிடையாதுனு சொல்லிட்டேன். :)))) அம்பி டாம்னா நான் ஜெரியாக்கும்! :)

    ReplyDelete
  13. சிறந்த வழிகாட்டல்
    தொடருங்கள்

    ReplyDelete
  14. ஆகா! நிலக்கடலை சுவைத்தது.

    ReplyDelete